Tuesday, November 8, 2011

மிகப்பெரிய சிலைகளும், ஆலயங்களும் ....இன்னும் சில...


இயேசு கிறிஸ்து:

 உலகின் மிகப்பெரிய ஏசுநாதர் சிலை போலந்து நாட்டில் உள்ள மேற்கு மாகாணமான சுவிபோட்டிசன் மலைப்பகுதியில் நிறுவப்பட்டது. போலாந்து நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான இந்த பகுதியில் இந்த சிலை நிறுவப்பட்டு்ள்ளதால்.
 




ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 33 மீட்டர் உயரமு்ம், 17 மீட்டர் அகலமும் உடைய இந்த சிலையை அந்நாட்டின் தலைமை மதகுருவான சில்வைஸ்டர் சுவாட்ஸிகி என்பவர் வடிவ‌மைத்துள்ளார். நாட்டின் பெருமைமிக்க இந்த சிலை திறப்பு விழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட‌ோர் கலந்து கொண்டனர்.
சிலையின் பீடம் அருகே போலாந்து நாட்டு தேசிய ‌கொடி ஏற்றி வைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு பிரார்த்தனையும் நடந்தது. இதற்கு முன்பு மிகப்பெரிய ஏசு சிலை பிரேசில் நாட்டின் ரியோ-டி- ‌ஜெனிரோவில் உள்ளது. அதனை இந்த சிலை முறியடித்துள்ளது.


முருகன் :-
மலேசியாவில் தமிழர்களோடு சீனர்களும் அதிகம் வழிபடும் ஆலயம் பத்து மலை குகை முருகன் கோவில். இது மலேசியத்தலை நகர் கோலாலம்பூரை அடுத்த 13 கி.மீ தொலைவில் இருக்கிறது. பத்து மலைக்குகையில் உள்ள ஒரு சிறிய கற்பாறை வேல் வடிவத்தில் இருப்பதை கண்ட பக்தர் ஒருவர் ஒரு மூங்கிலை ஊன்றி வேலாக நினைத்து வழி பட்டு வந்தார், தமிழகத்தின் நாகப்பட்டினத்தைச்சேர்ந்த  கயோராகணம் பிள்ளை என்பவர் பின் ஆலயம்


எழுப்பினார். 





                                             

1891-ல் கோவில் எழுப்பப்பட்டது .1938-ல் 272 படிக்கட்டுகள் கொண்ட 3 வழிப்பாதை அமைக்கப்பட்டது. தற்போது இக்கோவிலின் வாயிலில் தங்க நிறம் பூசப்பட்ட மிகப்பெரிய வேல் தாங்கி நிற்கும் முருகன் சிலை நிறுவப்பட்டது. இதன் உயரம் 42.7 மீட்டர் அதாவது 140.09 அடிகள்.
  இந்திய ருபாய் மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் செலவழித்து 2003 -ஆம் ஆண்டில் தொடங்கி 2006 -ம் ஆண்டில் நிறைவுபெற்ற இந்த முருகன் சிலை உலகில் மிகப்பெரிய முருகன் சிலை..




நடராஜர் :-

அருள்மிகு நடராஜர் கோயில், நெய்வேலி -       கடலூர்மாவட்டம் அருகே அமைந்துள்ள நடராஜர் இங்குள்ள நடராஜரின் உயரம் 10 அடி 1 அங்குலம். அகலம் 8 அடி 4 அங்குலம்.

 எடை 2 ஆயிரத்து 420  கிலோ. இதுவே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை.
  (இதுவா? )

 இதை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற வைக்க முயற்சி நடக்கிறது. இச்சிலை ஐம்பொன்னால் ஆனது. நடராஜரின் அருகிலுள்ள சிவகாமி அம்பிகையின் சிலை 7 அடி உயரமும், 750 கிலோ எடையும் கொண்டது.




வவுனியாவில் அமைக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை




















உலகில் மிகப் பெரிய புத்தர் சிலையை சிறிலங்கா அரசாங்கம் வவுனியாவில் அமைக்கவுள்ளது.




சமாதி நிலையில் அமையவுள்ள இந்தப் புத்தர் சிலையை கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் நிறுவவுள்ளது.

சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் சேனாரத் திசநாயக்கவின் துணையுடன் இந்தப் பாரிய புத்தர் சிலையை அமைக்கவுள்ளதாக கல்வி, பண்பாடு, சமூக சேவைகளுக்கான அனைத்துலக நட்புறவு சங்கத்தின் நிறுவுனர் பிலப்பிட்டிய பஞ்ஞதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்ற சிறிலங்காப் படைவீரர்களைப் போற்றி கௌரவிக்கும் வகையிலேயே இந்தப் புத்தர்சிலை அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த புத்தர் சிலை அமைக்கும் திட்டத்துக்கு 1000 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

522 அடி உயரம் கொண்டதாக அமையவுள்ள இந்தப் புத்தர் சிலை உலகிலேயே அதிக உயரம் கொண்ட புத்தர் சிலையாக இருக்கும்.

உலகின் மிகப்பெரிய மசூதி :-


ஒரே நேரத்தில் 40 ஆயிரம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தவல்ல மிகப்பெரிய மசூதி, ஐக்கிய அரபு குடியரசின் தலைநகரில் ரூ. 4 ஆயிரத்து 600 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இது உலகில் உள்ள மிகப்பெரிய மசூதிகளில் மூன்றாவது இடத்தை பெறவுள்ளது. ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் தலைநகர் அபுதாபி. பிற குடியரசு நாடுகளில் இருந்து தலைநகர் அபுதாபி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் மக்தா முஸ்தபா பாலத்திற்கு அருகே மிகப்பெரிய மசூதி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மசூதியை அமைக்க முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஷேக் சையது பின் சுல்தான் அல் நகியான் விருப்பப்பட்டார். இது குறித்து அவர் தனது வாரிசுகளிடம் கூறியிருந்தார். அவரது கனவை நனவாக்கும் விதத்தில், தற்போது மசூதி அமைக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே, மிகப்பெரிய மசூதிகள் தற்போது முஸ்லிம்களின் புனித நகரான மெக்கா மற்றும் மதீனாவில் மட்டுமே உள்ளன.
முதல்கட்டப்பணிகள் வரும் செப்டெம்பர் மாதம் முடிவடைந்துவிடும். மீதமுள்ள பணிகளை ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேர் தொழுகை நடத்தக்கூடிய மிகப்பெரிய மசூதி அமைக்கும் பணிகள் ஆரம்பம் விரைவில் முடித்து விடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மசூதியின் சுற்றளவு 41 ஆயிரத்து 222 சதுரமீற்றர். ஒரே நேரத்தில் 40 ஆயிரம் பேர் தொழுகை நடத்தவும் விசாலமான இடம் உள்ளது. மசூதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ள தொகை 217 கோடி திர்ஹம் (4600 கோடி ரூபாய்).
முன் ஹாலில் தொழுகைக்கான சிறப்பு அரங்கில் 5 ஆயிரத்து 627 சதுர மீற்றர் பரப்பில் போடப்பட உள்ள தரை விரிப்பு (கார்பெட்) விசேஷமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தரைவிரிப்பை கையினால் நெய்யும் பணியில் ஆயிரத்து 200 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதும் இதற்கான செலவு மட்டும் 32 கோடி ரூபா என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலம் :- 

துருக்கியில் உலகின் மிகப்பெரிய தொங்குபாலம்

உலகின் மிகப்பெரிய தொங்கு பாலத்தை அமைப்பதற்கான வரைபடப் போட்டியில் டேனிஸ் நிறுவனமான கோவி லுங்புய் வெற்றி பெற்றுள்ளது. உலகத்தின் நான்கு பெரிய தொங்கு பாலங்களில் ஒன்றாக அமையவுள்ள இஸிமிற்பே பாலம் 1500 மீட்டர் நீளம் கொண்டது, மொத்த நீளம் மூன்று கி.மீ ஆகும். துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லுக்கும் – இஸ்மிற் நகரத்திற்கும் இடையே இது அமைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 2015ம் ஆண்டு இது அமைத்து முடிக்கப்படும்.

No comments: