Thursday, June 23, 2011

நாம் இயற்கையுடன் வாழ கற்றுக் கொள்ளவேண்டும்; இயற்க்கையைத் திண்று அல்ல...

ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரும் பூகம்பம் அணுமின் சக்தி பற்றிய விவாதத்தை மீண்டும் தொடக்கியுள்ளது. அணுசக்தியின் நிறம் நமக்கு காட்டப்பட்டிருப்பதைப் போல பச்சையல்ல; இரத்தச்சிவப்பு.

அணுமின் நிலையம் நிச்சயமாக வெடிக்கக்கூடிய டைம்பாம். தற்போதுள்ளவை ஹிரோஷிமா நாகசாகியில் வெடித்தவைகளைவிட பல லட்சம் படங்கு அழிவை ஏற்படுத்தக் கூடியவை. இயங்கு நிலையில் இருக்கும் (வெடிக்காமல்) ஒரு அணுமின் நிலையத்தின் ஏற்றுக் கொள்ளக்கூடிய கதிரியக்க அளவு என்பதே மிக அபாயகரமான அளவே.

இதுவரை வெடிக்கப்பட்டுள்ள இரண்டு அணுகுண்டுகளினால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விட அமெரிக்காவில் மட்டும் அணுமின் உலைகளினாலும் சோதனைகளினாலும் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

அனல்மின் / நிலவாயு மின் நிலையங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை விட அல்லது போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலை வெளியிட்டதை விட மிக அதிக சுற்றுச்சூழல் அபாயத்தை அணுமின் நிலையங்கள் ஏற்படுத்துகின்றன. அணுமின் நிலையங்கள் மீது ஒரு பூகம்பம் அல்லது தீவிரவாத தாக்குதல் போதும்; மனித குலத்தின் மிகப்பெரும் பகுதியை, மிருகங்கள் மற்றும் பசுமை உலகத்தை ஒரே வீச்சில் அழித்து முடிக்க.

இதற்கு ஒரே தீர்வு இனியொரு அணுமின் உலைகளை கட்டமைக்காமல் இருப்பதும், இருக்கும் உலைகளை உடனடியாக செயலற்று போகச்செய்வதும்தான். "நாம் இயற்கையுடன் வாழ கற்றுக் கொள்ளவேண்டும்; இயற்க்கையைத் திண்று அல்ல" என்ற காந்தியின் வார்த்தை இங்கு பொருத்தமாக இருக்கும்.
நமக்கு உண்மையிலேயே தேவைப்படும் அளவு வாழ்க்கை சாதனங்கள், சக்தி மற்றும் வசதிகளை மட்டுமே கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நுகர்வு கலாச்சார மோகத்தினால் உந்தப்பட்டு அணுசக்தி மட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு, உடல் திசுக்களை கொல்லும் செல்போன் பயன்பாடு போன்ற அனைத்தும் மனிதகுல நலனுக்கெதிராக நாமே குழி தோண்டிக்கொண்டுள்ளோம் என்பதையே காட்டுகிறது.

கே. ராஜ ராஜன்

நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

No comments: