Tuesday, June 7, 2011

ஹாஹாஹா படிச்சதும் இப்படிதான் சிரிபீங்க!.....

ஹாஹாஹா படிச்சதும் இப்படிதான் சிரிபீங்க!...
மெயில்-சிலநேரத்துல கவலையையும் மறக்க செய்யுறாப்போல..மேட்டர்களை ..தட்டி விட்டுர்ர்ர்ராங்கப்பா! ஹாஹா..!
யாரோ ஒரு தோழி !யின் ஒரு நாள் வரலாறு..!
(அநேகமா இரத்திகா-வா கூட இருக்கலாம்!) எப்பவும் பஸ்க்கு கரெக்ட்டா அஞ்சு ரூபாய் சில்லரை எடுத்து வச்சுக்குவேன். (கண்டக்டர் கிட்ட திட்டு வாங்க முடிலப்பா..). இன்னைக்குனு பாத்து சில்லரை இல்லாம ஒரு இருபது ரூபாயும் ஒரு நூறு ரூபாயும் பர்ஸ்ல இருந்துச்சு. சரினு இருபது ரூபாய கைல எடுத்துகிட்டு நூறு ரூபாய பர்ஸ்ல வச்சு ஹேண்ட் பேக்ல போட்டுகிட்டேன்.
ஸ்டாப்புக்கு வந்து பக்கத்துல இருக்குற கடைல சில்லரை கேட்டேன். (காலங்காத்தால வந்து சில்லரை கேட்டா எதுக்கு தான் இப்டி முறைக்கிறாய்ங்களோ தெரில..) இல்லைனு சொல்லிட்டான். வேற வழியில்லாம பத்து ரூபாய்க்கு டாப்-அப் கார்ட் வாங்கினேன். (மிஸ்டு கால் குடுக்குறதுக்கு எதுக்கு டாப்-அப் பண்ணனும்னு கேக்காதீங்க.). மீதி ரெண்டு அஞ்சு ரூபாய் குடுத்தான். வாங்கிட்டு பஸ் ஏறினேன். என் நேரங்காலம், கொஞ்சம் லேட்டாய்டுச்சு.. ஆபீஸ் பஸ்ஸ விட்டுட்டேன். (அந்த டிரைவர் வாட்ச் நாசமாப்போக..) ஸ்டாஃப் பஸ் போய்டுச்சுனா, டவுன் பஸ்ல போய் ஆபீஸ் கேம்ப்பஸ்ல 20 நிமிசம் நடக்கணும்.
டவுன் பஸ்க்கு டிக்கெட் 4.50, அதுனால பேக்ல இருக்குற நூறு ரூபாய மாத்த தேவையில்ல, கைல தான் அஞ்சு ரூபாய் இருக்குதேனு நெனச்சு நம்ம்ம்ம்பி ஏறினேன். டிக்கெட் எடுத்தது போக மீதி அம்பது பைசாவ அப்புறம் தர்றேனு கண்டக்டர் சொல்லிட்டாரு.. (தருவாரா தரமாட்டாரா???). எல்லாம் நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு. பாதி தூரம் போனதுக்கப்புறம் திடீர்னு பஸ் நின்னுபோச்சு. வேறொன்னுமில்ல.. ப்ரேக் டவுனாம். பாதி வழில இறக்கி விட்டுட்டாங்க. உடனே, கூட வேலை செய்யுற பொண்ணுக்கு போன் பண்ணி, பஸ்ஸ விட்டுட்டேன் அதுனால அரைமணி நேரம் லேட்டா வருவேன்னு சொல்லி, முடிக்க வேண்டிய வேலையோட தகவலையும் சொல்லிகிட்டிருக்கும்போதே போன் பேலன்ஸ் காலியாயிடுச்சு.
வேற பஸ் பிடிக்கலாம்னு ஹேண்ட் பேக்குள்ள பர்ஸ தேடினேன். கெடைக்கலங்க.. அப்ப தான் தெரிஞ்சது.. காலேல இருபது ரூபாய எடுத்துட்டு மறந்துபோய் பர்ஸ வீட்லயே வச்சிட்டு வந்திருக்கேன்... (அவ்வ்வ்வ்). என் நிலைமைய கொஞ்சம் நெனச்சுப் பாருங்க. கைல சுத்தமா காசில்ல. தெரிஞ்சவங்க யாரும் பக்கத்துல இல்ல. போன் பண்ண கூட காசில்ல.
ப்ரேக் டவுனான பஸ்ஸோட டிக்கெட், வேற டவுன் பஸ்க்கு செல்லும்னு சொன்னாங்க. ஆனா என்னோட கெட்ட நேரம்... எந்த லோக்கல் பஸ்ஸும் நிக்கல. கூட வந்தவங்க சிலர், ஆட்டோல சேர் பண்ணி போகலாம் வறீங்களானு கேட்டாங்க.. ஹிஹிஹி“னு கேனத்தனமா ஒரு சிரிப்பு சிரிச்சுகிட்டே “கண்டக்டர்கிட்ட மிச்ச பணம் வாங்கணும். அதுனால நீங்க போங்க“னு சொல்லி சமாளிச்சேன். அவங்களும் போய்ட்டாங்க.
ஆனாலும் விடாம அந்த அம்பது காச கேட்டு வாங்கிட்டோம்ல.. (கண்டக்டர் தான் முறைச்சுகிட்டே குடுத்தார்.. நம்ம காச குடுக்குறதுக்கு என்னா கடுப்பு வருது இவுங்களுக்கு..)
ஏ.டி.எம் கார்டும் பர்ஸ்ல தான் இருந்துச்சு.. (ஹிஹி அக்கவுண்ட்ல பணமில்லங்குறது வேற விஷயம்..) காயின் போன்ல பேசணும்னா கூட ஒரு ரூபாய் வேணும். ரெண்டு பேர்கிட்ட, ஒரு கால் மட்டும் பேசிக்கிறேன்னு அவங்க செல்போன கேட்டேன். சொல்லி வச்சது மாதிரி பேலன்ஸ் இல்லங்க“னு சொல்லிட்டாங்க. (கெட்டெண்ணம் பிடிச்சவய்ங்க..)
இன்னைக்கு ஆபீஸ் போன மாதிரிதான்னு நொந்துகிட்டேன். திடீருனு அங்க ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சுச்சு பாருங்க.. என் தூஊஊஊரத்து சொந்தக்காரர் ஒருத்தர், அவர் மனைவியோட அந்தப் பக்கமா பைக்ல வந்தார். அத பாத்ததுக்கப்புறம் தான் எனக்கு நிம்மதியாச்சு. ஒருவழியா அவர் கிட்ட விஷயத்த சொல்லி அவர் பைக்லயே ட்ரிப்பில்ஸ் போயிட்டேன். வழக்கம்போல ஆபீஸ்ல திரு திருனு முழிச்சுகிட்டே திட்டு வாங்கினேன்.
இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ தெரில!! ஒரு வேளை கண்ணாடிய எதுவும் பாத்துட்டேனோ....!!! அவ்வ்வ்வ்வ்....