Friday, June 24, 2011

தேவதையின் முகத்தை.... சிறுப் பிள்ளையில்...கண்டேன்

சென்னைப் போக்குவரத்து..
பலருக்கு எரிச்சலையும்
எனக்கு சிறு சந்தோஷத்தை
தருகின்ற விஷயம்..
பலரிடம் சொல்கையில்
கிண்டலையும், கோபத்தையுமே
பரிசாய் பெற்று
வளைந்து வளைந்து
முந்தி அடித்து செல்லும்
வித்தியாசமான சந்தோசத்தை

இன்றுவரை ரசிக்கிறேன்..

காலை நேர போக்குவரத்தில்
அலுவலகம், பள்ளியென
அவசரமாய் அலறியடித்துச் செல்லும்
வாகன ஓட்டிகளைக் கண்டு
பரிதபமாய் பார்த்து, சிரித்து
என்னை மறந்து ரசித்து
வாகனம் ஓட்டி
சென்றுக் கொண்டிருக்கையில்
கருமேகத்தை விலக்கி
ஒரு அழகிய நிலவு
என் கண்முன்னில் பதிய
உற்று நோக்கிய போது
பேருந்தின் பின் இருக்கையில்
அமர்ந்திருந்த அம்மாவின் தோளில்
அனாயாசமாக நின்று
பேருந்தின் கண்ணாடித் தூசிகளை
பிஞ்சு கரங்களால் கிறுக்கி
மங்கலான கண்ணாடிகளை
வெளிச்சமாக்கி வெளிவந்த
அழகிய நிலவை ரசிக்காமல்
இருக்க முடியுமோ??

என்னைக் கண்டு
சிறு புன்னகை உதிர்க்க
எனக்குள் ஆனந்தம்..
என்னை மறைத்துச் செல்லும்
வாகனங்களுகிடையே
என்னை தேடியது ஒரு அழகிய தேவதை..
பேருந்தை பின்தொடர்ந்து
மறைந்து மறைந்து
கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு
பயணித்த போது
எல்லாம் மறந்து சொல்ல இயலா
சந்தோசம் என்னுள்..

நின்று நின்று வரும் பேருந்திற்காக
என் வேகத்தை குறைத்து
தேவதையை முன்னே செல்லவிட்டு
பின் தொடர்ந்து செல்கையில்
குழந்தையின் மகிழ்ச்சியை
விவரிக்க வரிகளில்லை
என்னிடம்..
முடியாத சாலையாக
முடியாத பயணமாக
தொடராதோ என எண்ணங்கள்
மனதில் ஓட
கனத்த இதயத்தோடு
கடைசி புன்னகையை
உதிர்த்துவிட்டு
கண்களால் கொஞ்சி
வேகத்தை கூட்டி
என்னை தேடப்போகும்
தேவதையை நினைத்து
மனம் கலங்கி
வீடு வந்து சேர்ந்தபோதும்
மறக்க முடியவில்லை
தேவதையின் முகத்தை....
சிறுப் பிள்ளையை
ஏமாற்றி விட்டேனோ??
மன பாரம் என்னுள்...

-தோழி கவிதாஸ்ரீ..

No comments: