Tuesday, June 7, 2011

இது அரசியல் பதிவல்ல....

இந்த வெளங்காத போலிசாமியாருங்க  மத்தில, எனக்கு டமாஷா தெர்ஞ்ச ஒரு மேட்டர எழுதுறேன். இன்னைக்கு காலைல ஒரு நியூஸ் பாத்தேன். "கோவையை அடுத்த ஆனைமலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து மிளகாய் அரைத்து அம்மனுக்கு பூசி வழிபாடு"ன்னு.
கோவை ஒரு வளர்ந்து வரும் தொழில் மாநகரம்! கோவை போதுமான அளவு வளர்ந்திட்டுதுன்னு சொல்றவங்க, ப்ளீஸ் வேணாம் நான் விரதத்துல இருகீன் ! அப்புரம் உங்களளுக்கு கான்ன கட்ட ஆரம்பிச்சுரும்! மத்தவங்க கீழ படிங்க.
ஒரு தொழில் நகரின் வளர்ச்சி என்பது அதன் தொழிற்சாலைகள், தொழிலாளர்கள், தொழில்நுட்பம், மற்றும் போக்குவரத்தை மையகப்படுத்தியதே.
தொழில் நகர வளர்ச்சியில் போக்குவரத்துக்கு மிகையான பங்குண்டு. ஆகாய மார்க்கம் முதலீட்டாளர்களின் வரப்பிரசாதம்ன்கறது என்னோட அபிப்பிராயம்.
அதை முடக்குவது தொழில்களை முடக்குவதற்கும், புது முதலீடுகளை மறுப்பதற்கும் சமம்.

இப்போ மேட்டர் என்னன்னா, பயபுள்ளைக  விமான நிலைய விரிவாக்கத்த எதிர்த்து நம்ம வால்பாறை போற பஸ்ஸ அதே ஆனமலைல நிப்பாட்டிருக்கலாம்.

இல்ல, ஏர்போர்ட் முன்னாடி உண்ணாவிரதம் இருந்திருக்கலாம். இதெல்லாம் விட்டுட்டு , மொளகாய் அரைக்கிறதும், பூசறதும்.........

எந்த காலத்துல இருக்கானுகன்னு தெரில.


நான் வாழ்ந்த  கோவைல இப்படியும் இருக்கானுகலே காமெடி பீசுங்க!

வெளங்கிரும்!

பி.கு:- அஜித் ஸ்டைல்ல(சிட்டிசன் கிளைமாக்ஸ்), "இது அரசியல் பதிவல்ல. எதற்கெல்லாம் எதிர்ப்பக் காட்டணும்னு தெரியாத ஒரு இனத்தின் நக்கல்ஸ்!"

No comments: