Thursday, June 23, 2011

மும்பை அருங்காட்சியகத்தில் ...

150 வருட சரித்திரத்தில் முதல் முறையாக மும்பையில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் அரிய வகையாக கருத்தப்படும் இருதலைமணியன் எனப்படும் மண்ணுளிப்பாம்பு திருட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அறிய வகை பாம்பின் வால் மிகவும் மழுங்கியும் உருண்டையான முனையும் கொண்டு விளங்குவதால் தலையைப் போல தோற்றம் அளிக்கிறது; ஆகையால் இப்பாம்பிற்கு இரண்டு தலைகள் உள்ளன என்ற பெரும் பாலான மக்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாம்பாட்டிகள் கண் போலத் தெரிவதற்காக இதன் வாலை சற்றுக் காயப்படுத்திவிடுவார்கள் பிறகு இரட்டைத்தலை கொண்ட பாம்பு என்று கூறி மக்களை ஏமாற்றி பிச்சை எடுப்பார்கள். இந்த பாம்பிற்கு அமெரிக்காவில் அதிகமாக கிராக்கி உள்ளது. இது நச்சுத்தன்மை அற்ற பாம்பு என்பதால் அமெரிக்காவில் அதிக விலை கொடுத்து வாங்கி செல்லமாக வளர்ப்பார்கள். மேலும் மாடலிங் துறையிலும் நிர்வான அழகிகளுக்கு இந்த பாம்பை அதிகம் பயன்ப்படுத்துவதும், சூதாட்ட விடுதி, சாராய கடைகளிலும் அழகிற்காக அலங்கரிக்க இந்த பாம்பை கண்ணாடி பெட்டிகளில் வைத்திருப்பார்கள். நம்ம ஊரில் மீன் தொட்டிகள் வைத்திருப்பது போல. சமீப காலமாக இந்த பாம்பிற்கு அங்கே அதிக கிராக்கி ஏற்ப்பட்டுள்ளது. ஆதலால இது அதிகம் காணப்படும் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் இதை வாங்கி அமெரிக்கா கடத்துவதற்காக நிறைய உள்ளூர் ஏஜெண்ட்கள் அலைகிறார்கள். இந்த நிலையில தற்போது தேசிய அளவில் புகழ்பெற்ற மும்பை விலங்குகள் சரணாலயத்தில் திருட்டு போயிருப்பது பெரும் அதிர்ச்சியை விலங்குகள் நல விரும்பிகள் மத்தியிலும், 150 வருட சரித்திரத்தில் இதுவரை எந்த விலங்கினங்களும் காணாமல் போகத நிலையில் இந்த திருட்டு பொது மக்கள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

21 ஹெக்டர் நிலபரப்புள்ள மும்பை அருங்காட்சியகத்தில் 10 பாம்புகள் உட்பட 600 விலங்கினங்கள் உள்ளன. இந்த பாம்பு வைரம் கக்கும் என்று கற்பனை இதிகாசங்களில் வரும் பொய்யே இது திருட்டு போனதற்கு காரணம் என்று தானேவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்த பாம்பு வைக்கப்பட்டிருந்த கூண்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதே இந்த பாம்பு தப்பாமல் திருடு போய் உள்ளது என்று சரணாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: