Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு....என் பார்வையில்...


ஒருநா நாள் ராத்திரி வந்து உங்க வீட்டு கதவ தட்டி நீ -(ங்க) தமிழன்னு சொல்லிக்க பெருமைப் படனும்ன்னு யாராவது சொன்னா எப்படி இருக்கும்..! ஒண்ணும் புரியாது ஆனா அதன் காரணத்தை ஒரு பிரமிப்பூட்டும் எடுத்துக்காட்டோட  நெற்றிப்பொட்டில் அடிச்சது போல் சொன்னா எப்படி இருக்கும் அது தான் ஏழாம் அறிவுப்ப(பா)டம்.

தமிழனாக நாம மறந்த, அல்லது மறக்கடிக்கப்பட்ட வீரத்தையும் 
உலகுக்கே நாகரீகம் கற்றுக்கொடுத்த தமிழனது அறியாமையையும் 
 கையிலெடுத்து கேமிராகோணத்தில் கதை ஒன்றை சொல்லி இருக்கார்  முருகதாஸ் ! 

ஏழாம் அறிவு:

              இந்ததமிழன் வரலாற்றுப்ப(பா)டத்தை பத்தி விமர்சனம் சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் எல்லாம் இல்லை. ஆனா !
ஒரு சின்னப்பையன் பள்ளிக்கூடத்தில் ஒரு போட்டியில் கலந்துகிட்டு ஜெயிச்சுட்டு வந்தா அவன் அப்பா அம்மாவிடன் தன் வெற்றிபத்தின மகிழ்ச்சியை எப்படி பகிர்ந்துக்குவானோ அது போலத்தான் நான் இத எழுதிட்டு இருக்குறதும்....

சர்க்கஸ் கலைஞர் சூர்யா காஞ்சீபுரத்தை ஆண்ட 3ம் பல்லவமன்னன் போதி தர்மனின்  வம்சா வழியைச்சேர்ந்தவர் . போதி தர்மர் எனும் அவதாரம் எடுத்திருக்கிறார் சூர்யா!  கம்பரமாயணம் படித்த சிவக்குமார் அவர்களின் மகனுக்கு மகுடாபிஷேகம் செய்யக்கூடிய அளவுக்கு இனி தமிழர் நாக்கில் உச்சரிக்கும் கதாப்பாத்திரம் அது..

பலவகை தற்காப்புக்கலையும் மருத்துவக்கலையும் ஐம்பூதங்களையும் அடக்கும் வித்தையும் நோக்கு வசீகரம் என பண்டைத்தமிழர் வீரத்தையும் கல்வியையும் ஒருங்கே பெற்றவர் போதி தர்மர் காஞ்சியிலிருந்து சீனதேசம் பயணிக்கிறார்.மகாயான புத்த மதத்தை பரப்புவதற்காக அது புத்தசமயம் பரவிய காலம் தென்னகத்தே, பயணிக்கும் முன் தான் எழுதிய சுவடியை தன் வம்சாவழியினரிடம் ஒப்படைத்துவிட்டுச்செல்கிறார். (வழியில் அவர் புத்தரை வழிபடுவதும் காட்சிகளில் வருவதால் புத்தமதத்தைபரப்பினார் அல்லது பரப்பச்சென்றாரா? எனக் கூட சிம்பாளிக்கா சிந்திக்க வைக்கக்கூடிய இடங்கள் ஆங்காங்கே! ) சில பல காட்ச்சிகளை நாமே யூகிக்க விட்டுவிடும் இடங்கள் கொஞ்சம் வித்யாசமாகத்தெரியுது.. ஃபாஸ்ட் ட்ராக்- ஆபீஸில்  அட்ரஸ் பெறும் இடம், பேராசிரியர் இரயில் விபத்து ..இப்படியான சில)  சீன மக்கள் தங்களை துர்சக்தி நெருங்குவதாய் நினைத்து அவரை துஸ்ட சக்தியாக பாவித்து வெளியேற்றுகிறார்கள்..

ஆனால் தூரதிஸ்ட வசமாக அவர்களை கொடிய நோய் ஒன்று தாக்க முதலில் பாதிக்கப்படுகிறாள் ஒரு சிறுமி , அவளை இனி காப்பாற்ற முடியாது என கிராம மக்கள் சாக்குத்திரியில் கட்டி மலைக்குகைக்குள் விஸிறி வர போதி தர்மர் அந்த சிறுமியின் நோயைகுணப்படுத்துகிறார். சிறுமிக்குப்பின் வரிசையாக கிராம மக்கள் பாத்திக்கப்பட   காப்பாற்றபட்ட சிறுமியோடு ஊருக்குள் வரும் போதி தர்மரை மக்கள் வணங்கி தங்களை காப்பாற்ற வேண்டுக்கிறார்கள். 

அனைவரையும் காப்பாற்றுகிறார் சீன மக்களுக்கும் இந்த மருத்துவ குறிப்புகளை கற்றுக்கொடுக்கிறார். அந்நேரம் மக்களுக்கு ஊறுவிளைவிக்க வரும் எதிரிகளிடம் தன் ஹிப்னாடிஸ முறைகலாளும் விரலாலே வீடுகட்டும் வித்தையாளும் அடித்து நொறுக்குகிறார் அவரது இன்னுமோர் அவதாரத்தை பார்த்த =சீன மக்கள் சிஸ்ய... சிஷ்ய என மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்பிக்க வேண்டுகிறார்கள்...

ஆனாலும் பேராசை யாரை விட்ட்து தன் தேசம் திரும்பும் காலம் வந்துவிட்டதாய் போதி தர்மர் சொன்னதும் மக்கள் அவர் உடல் சீனத்திலே புதைக்கப்பட்டால் தங்களுக்கு நல்லது என உணவில் விஷம் வைக்கிறார்கள் விஷமிருப்பது தெரிந்தும் அவர்கள் விருப்பத்திற்காக விஷமெடுக்கிறார் போதி தர்மர் இது அவர் வரலாறு . முதல் 20 நிமிடங்கள் போதி தர்மர் முழுவதுமாய் நம்மை ஆக்கிரமித்துக்கொள்கிறார். 

(திரை அரங்கில் இடையில் காதில் ஒலித்த வசனம் தசாவதாரம் ராமானுஜம் கேரக்டர் பாதிப்பு போல் இருக்கு என? எப்போ தான் மற்றத் தமிழ் படங்களோட  கம்பேர் பண்ணுவதை விடப்போறாங்களோ -ன்னு நினைத்தேன்.  ஆனால் போகப்போக அது கூட ஒத்துப்போனதுபோல்தான் திரைக்கதை  கமல் கிருமியைத்தூக்கிட்டு அலைவார் இங்கே கமல் பொண்ணு மருந்து சொல்லும் மருத்துவர் (போதிதர்மரின் டி.என்.ஏ ஒற்றுப்போகும் இரண்டாவது  சூர்யா) -ரை கூட்டிட்டு ஓடுறார்)

நேரே சென்னை வீதிகளுக்கு வரும் கதை சர்க்கஸ் கூடார இளைஞன் சூர்யாவின் கைக்குள்  ஸ்ருதிஹாசன் இளமை மிளிரும் தமிழ் பொண்ணு தமன்னாவையும் தபு-வையும் சேர்த்து பிணைந்த சிற்ப்பம் போல ஒரு சாயலில் தெரிந்தாலும் அப்பப்போ மறக்காமல் தன் தாயார் சரிகாவையும் நினைவு படுத்திடுறார். மருத்துவ ஆராய்ச்சியாளரான அவர் போதி தர்மரின் டி,என்,ஏ பற்றி அறியவர அவரின் வாரிசுகள் காஞ்சி புரத்தில் இருப்பது தெரிந்து தன் மருத்துவக்குழுவுடன் ஊரில அத்தனைபேரைன் டி என் ஏ சோதனை மேற்கொள்கிறார்.

 (எப்படி சாத்தியம் ?)

அவரின் 
தேடலில் சூர்யாவின் முக அமைப்பு போதி தர்மரை ஒத்ததாய் இருக்க அவர்கள் வீட்டாரிடமிருந்து சூர்யாவின் தலைமுடியைப்பெற்று அவரது டி,என்,ஏ-வோடு போதி தர்மரின் டி.என்.ஏ-வை ஒப்பீடு செய்கிறார் அது 83.7 % ஒற்றுப்போகிறது, அதனால் சூர்யாவைப்பின் தொடர்கிறார் அவருக்குத்தெரியாமலே .. அது தெரியாமல் சூர்யா அவரை காதல் கொள்கிறார்.

 சென்னை வீதியில் சர்கஸ் யானையில் காதலிக்கு லிஃப்ட் கொடுக்கும் முதல் காதலன். காதலியின் செல்போனையே ஆட்டைய போடும் முதல் காதலன்,- என சில முதல்கள் ! சூர்யா வசம் 

ஆராய்ச்சிக்காக பழகுவதை சொல்ல ஸ்ருதி முயற்சிக்கும் ஒரு நாள் முன் தன் உறவுக்காரர்கள் மூலம் ஸ்ருதி தன்னை பிந்தொடர்வது ஆராய்ச்சிக்காகத்தான் என அரவிந்துக்கு தெரிய வருகிறது (அரவிந்த் - இதுதான் சூர்யாவின் கதாப்பாத்திரம்) அதன் பலனாக இளசுகளுக்கு ஒரு காதல் சோகப்பாடல் ஹாரீஸ் இசையில் உபயம் யம்மா யம்மா காதல் பொன்னம்மா! இந்தப்பாடலில் வரும் “பொம்பளைய நம்பி கெட்டுப்போனவங்க ரொம்ப அந்த வரிசையில் நானும் கடைசியா ஆனேன் “- இந்த லைனுக்கு செம அப்ளாஸ் திரை அரங்கில்... 

உன்காதலை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு!- எனும் ஸ்ருதி மறுநாள் காலை ஒரு ஒருமணிநேரம் ஒதுக்கு எனக்காக என அழைத்துப்போகிறார் ! இடம் : அரசு அருங்காட்ச்சியகம் வில்லும் வாலோடு வீரத்தையும் பூட்டி வைத்த கதையையும் மரபணுவினால் எட்டு வயதுக்குழந்தைகளுக்கு கேன்ஸர்  வந்தக் கதையையும் சொல்வதின் மூலம் சூர்யாவிற்கு பல்லவ மன்னன் போதிதர்மனின் கதையோடு 1600 வருடம் முன்னால் டி,என் ,ஏ பற்றி அவர் எழுதியகதையையும் சொல்ல ஆச்சர்யத்திலும் தமிழனாய் பெருமை கொள்ள வைக்கிறார் இயக்குனர்.

9 கோள்களை இன்று டெலஸ்கோப் வைத்து 500 வருஷமாய் பார்க்கும் முன்னால் எப்படி 1000 வருஷத்துக்கு முன்னால் கோவில்களில் நவகிரகமாய் வழிபட்டார்கள் ? இவர்களை எல்லாம் கடவுளாய் பார்க்காமல் சைண்டிஸ்ட்டா பார்க்கணும் -எனும் வசனம் நச்...
ஒருவழியாக சூர்யா தன் ஆராய்ச்சிக்கு ஒற்றுகொள்கிறார், ஆராய்ச்சி என்னவெனில் போதி தர்மரின் டி,என்,ஏ-வை அரவிந்தின் டி,என்,ஏ-வோடு இணைத்து தூண்டப்பட்டு மீண்டும் போதி தர்மரை வரவழைப்பது! (எழுதும் போதே போதி தர்மன் எனும் வார்த்தை புல்லரிக்க வைக்குது)

ஆனால் தன் ஆராய்ச்சிக்கு இந்தியாவில் அனுமதி இல்லை! காரணம் இங்கு மனிதனை வைத்து சோதனை செய்ய அனுமதி இல்லை. எனவே ஏற்கனவே தன் ஆராய்ச்சிக்குறிப்புகளை யூ.எஸ் சீன நாடுகளுக்கு அனுப்புகிறார்.

இந்நேரத்தில் தான் கதைக்கு ஆதாரமான இரண்டாம் அத்யாயம் தொடங்குகிறது, சீனா இந்தியாவை பயோவார் தாக்குதலால் தன் வசப்படுத்த திட்டமிடுகிறது, அதாவது 16 -ம் நூற்றாண்டில் வந்த அதே கிருமியை மீண்டும் கண்டுபிடித்து அதை இந்தியாவில் பரவச்செய்தால் மருந்து கிடைக்காத புது வியாதிக்கு அல்லல் படுவார்கள் தான் மருந்தைகொடுக்கிறேன் . பேர்வழி8 என அடிமைப்படுத்திடலாம் என

 (மன்மோகன் சிங் சார் -க்கு தெரிந்தால் ஒருவேளை கொடுத்தாலும் கொடுத்திருப்பார்- ஒரே நாட்டுக்கு எத்தனை பெருய்யா அடிச்சுப்பீங்க)  

”ஆப்ரேஷன் ரெட் “ என ஒரு  திட்டத்தை செயல்  படுத்த கதையின் மற்றோரு கதாநாயகன் (வில்லன்) டாங் லீ- யை இந்தியா அனுப்புகிறது. டாங் லீ மார்ஷியல் ஆர்ட்ஸில் ஷாவ்லின் ஸ்கூலில் முதன்மை மாணவர் போதி தர்மர் சொல்லிக்கொடுத்த அத்தனைகலைகளையும் கற்றவர்.

 நோக்குவசியம் எனப்படும் ஹிப்னாட்டிஸம் மூலம் அதிர வைக்கிறார். சீன போலிஸ்காரணைக்கொள்கிறார், சென்னைபோலீஸ் காரணை கொல்கிறார் அல்லது கொல்லத்தூண்டுகிறார் வருசையா மனுஷன் பார்வையாளே கொல்கிறார் ! (நம்ம ஊர் அமலா பால் போல ஹிஹிஹ் சாரி -ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு) முதல் பாதியிலும் க்ளைமாக்ஸ் காட்சி தவிர்த்தும் ஹிப்னாடிஸம் ( நோக்கு வர்மம் – எதிரில் இருப்பவர்களை தன் வசம் வசீகரப்படுத்துவது ) என்கிற கலையை வைத்துதான் சண்டை போடுகிறார் வில்லன். ஹிப்னாடிஸம் கலையை உணர்ந்தவர்களாகவே இருந்தாலும், அதை படமாக்கிய விதம் எதோ காமெடித்தனமாகவே இருக்கிறது.

இரண்டாம் பாதியில் லாரி முதல் கார், ஆட்டோ எல்லாம் ரவுண்டுகட்டி பறப்பது தயாரிப்பாளரின் பர்ஸை காலி செய்ததைத் தவிர பிரம்மாண்டம் எதுவும் இல்லை… வீடியோ கேம்ஸ் தான் நினைவுக்கு வருகிறது.

கடைசிவரை அவர் பார்வைக்கு பதிலடி கொடுக்கும் ஒரே ஆள் அரவிந்த் மட்டும் தான் ஆமாம் போதி தர்மர் இல்லை அரவிந்த் !  ஹாஸ்பிட்டலில் நேருக்கு நேர் சந்திக்கும் போது சூர்யாவை வசியப்படுத்த முடியாமல் போகையில் தன் குருவைத்தொடர்பு கொள்கிறார் அவர் உடனே அங்கிருந்து புறப்படு என்க இவர் முடியாது ஏன்? எனகேட்க ஏன்னா அது தமிழ ரத்தம் எனச்சொல்ல 
சட்டைக்காலர் டாப்ல நிக்குது படம் பார்ப்போருக்கு..

இந்தியாவுக்குள் நுழைகிறார் டாங்லீ தெரு நாய் ஒன்றிற்கு வைரஸை ஊசி மூலம் பரப்புகிறார் (லாஜிக் இடிப்பது: வைரஸை எப்படி சீனாவிலிருந்து இந்தியா கொண்டு வந்தார்? இல்லை இந்தியாவில் உதவும் நபரிடமே இருந்தால் அதை செலுத்த எதற்கு டாங் லீ? ) அடுத்த கட்டமாய் அவருக்குத்தரப்படும் வேலை ஸ்ருதியைக்கொல்வது ஆம் அவர் போதிதர்மரை தன் ஆராய்ச்சி மூலம் திரும்பக்கொண்டுவந்தால் இந்தியாவிற்கு அந்த மருந்து தேவைப்படாமல் போகலாம் . என்பதால் அவரையும் அவர் ஆராய்ச்சியின் கருவான சூர்யாவையும் கொல்ல அவருக்கு ஆர்டர், 

இந்தியாவந்து சரமாரி கொலைகளை சாவகாசமாய் செய்து அல்லது செய்யவைத்து அராஜக ஆட்டத்தை அதிரடியாய் தன் உடல் மொழியால் லாவகம்கவனிக்கமுடியாத வேகத்தில் அடித்து நொறுக்குகிறார் தோற்றத்தில் ஜெட்லீயை நினைவுபடுத்தினாலும் ஜாக்கிசான் படங்களில் கூட பார்க்க்காத வேகம் சில காட்ச்சிகளில் வெல்டன் மிஸ்டர் டாங் லீ ! 


பின்னர் அவரது தேடல் விரட்டல்களில் தப்பித்து அவரால் நகரத்துக்குள் பரவிய நோய் பற்றியும் தகவல்களைப்பெருகிறார்கள் வழக்கம்போல தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு பணம் திண்ணி சீனக்கைக்கூலி ஆம அந்த கேரக்டர் பேராசிரியராகவே அமைவது இன்னோருமுறை தசவதாரம் டச்
பேராசிரியர் வீட்டைச்சோதனை போடும் போது ஸ்ருதி கணிணியில் கிளற இன்பாக்ஸ் செண்ட் மெயில் எதிலுமே எதுவுமில்லாமல் சூர்யா பக்கம் வர அவர் குப்பைத்தொட்டியை கிளறிகிட்டு இருப்பார். ஏன் என்பதற்கு நல்லவனைபத்தி தெரியனும்ன்னா அவன் படிக்கும் புஸ்தகத்தை பார்க்கனும் கெட்டவனை பற்றித்தெரியனும்னா அவன் குப்பைத்தொட்டியைத்தான் பார்க்கணும் என்க அளிக்கப்பட்ட ஈமெயில் குப்பைத்தொட்டியில்  
சீன விவகாரம் ஆப்ரேஷன் ரெட் 300-கோடி பணப்பறிமாற்றம் எல்லாம் திரை விலகுகிறது,,(கேப்ல ஸ்ருதி மெயில் ஐ.டி கிடைத்தது ஹிஹிஹ்)

ஆட்டம் ஓட்டமாகிறது விரட்டி விரட்டி டாங்க்லீ துரத்த இது தானா வீரம் இப்படி புறமுதுகு காட்டுவது தானா வீரம் என சூர்யா சீற 
 பக்கத்து நாட்டுல என்ன நடந்தது, வீரம் வீரம் என்று சொல்லி என்ன செய்தோம்… கடைசியாக எல்லோரும் செத்தது தானே மிச்சம் என்று ஸ்ருதி சொல்ல… வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு… ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்! என்று சூர்யா பேசும் வசனம் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இந்த வசனத்தை தைரியமாக உணர்வோடு படத்தில் வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு அடுத்து ஒரு சல்யூட்!

பின் மக்களை பிணியில் இருந்து காப்பாற்றுவது தான் முக்கியம் என சூர்யாவுக்கு போதி தர்மரின் டி,என்,ஏ தூண்டல் ஆராய்ச்சியை 12 நாட்கள் நடத்த சோதனைக்கூடத்தில் நுழைகிறது 5 இளைஞர் கூட்டம். 6-வது நபர் அவர் எங்கிருக்கிறார் எனத்தெரியாமலே அவருக்கு உதவ வெளியில் இருக்கிறார். ஹிப்னாடிஸம் செய்தாலும் இருக்கும் இடம் அவருக்கு தெரியாததால் சொல்லமுடியாது என சூர்யா மாஸ்டர் ப்ளான். ஆனால் அதுவும் 12ம் நாளில் முறியடிக்கப்பட்டு தாங்லீ சோதனைக்கூடத்துகுள் நுழைந்து ஆராய்ச்சியின் இறுதிபரிமானத்தில் இருக்கும் சூர்யாவை தூக்கிப்போட்டு பந்தாடுகிறார் வாங்கிய அடிக்கு இறந்தே போகவேண்டியவர் ஊண்றி எழுகிறார். போதிதர்மர் மீண்டும் டி.என்.ஏ தூண்டலாம் அரவிந்தனுக்குள் 

அடுத்து என்ன ரசிகர்கள் அனைவரும் சீட் நுனிதான் ஆட்டம் ஆரம்பம் பிண்ணனி இசை சலிப்ப்பை உண்டாக்குகிறது ஹாரிஸ் -க்கு அதிரடி இங்கு ஒத்துழைக்கவில்லை போல அடித்து நொறுக்கி மக்களிக்கு நோய் தீர்க்க மருந்துகொடுத்து காப்பாற்றுகிறார்.. செய்தித்தாள்கள் மூலம் அதை சொல்லிவிட்டு கடைசி டீ,வி-பெட்டியில் பேட்டி கொடுக்கிறார் சமகாலத்தில் போதி தர்மரே ந்ழுந்து வந்து கோபக்கணலாய் கொந்தளித்து அதே நேரம் உணரவைக்கும் விதமாய் வார்த்தைகள் வெல்டன் ஏழாம் அறிவு டீம் 

சூர்யா- உங்கள் மீது ஒரு வருத்தம் உண்டு பத்திரிக்கையாளர்களை சிலகாலம் முன் தரக்குறைவாய் பேசியகூட்டத்தில் உங்களதுபேச்சு ஆனால் அதன் களங்கம் பெட்ரோல் வாஸ் செய்யப்பட்டதுபோல் இந்த படம் ! ஒரு தமிழனாய் கர்வத்தோடு வீட்டுக்கு வந்தேன் படம் பார்த்து முடித்ததும்...

ஏ.,ஆர் முருகதாஸ் : தீனா-வில் அட! என கொஞ்சம் திரும்பி பார்க்கவைத்து அப்படியே ரமணாவில் , ஆந்திரா ஸ்லாலினில் ஹிந்தி கஜினியில்-ன்னு மிரடிட்டு வாழ்நாள் சாதனையாக தமிழனாய் ஒரு சிகரத்தின் மேல் நிற்கவேண்டியமக்கள் பள்ளத்தாக்கில்  உக்கார்ந்து இருக்கோம்ன்னு வலிக்குறமாதிரியும் வலிக்காத மாதிரியும் மண்டையில் குட்டிச்சொல்லி இருக்கீங்க ஹாட்ஸ் ஆஃப்

ஸ்ருதி: விஞ்சானிகள் கூட்டத்தில் தமிழில் பேசினதால் கிண்டல் செய்தது மட்டுமில்லாமல் ஆங்கிலம் இப்போ வந்தது தமிழ பழசுதான் ஆனா மனிதனுக்கு முன்னே குரங்கு இருக்கு அப்போ குரங்கு மனிதனைவிட பெருஷா ? அது மாதிரிதான் உங்க தமிழ் என சொன்னதும் வாண்டை வாண்டையா கெட்டவார்த்தை பேசும் காட்சி ?!  “இன்னோர்தரம்  தமிழைகுரங்குன்னு மட்டும் சொல்லிப்பாருங்க வாயிலயே நல்லா போடுவேன் “ சபாஸ் தமிழ்பொண்ணு அதும் எங்க கமல் பொண்ணு -ன்னு ஒரு அப்ளாஸ்!... தமிழ் மொழியை குரங்கு என்று ஒருவர் சொல்லிவிட அவரை வார்த்தைகளால் விளாசும் அந்த காட்சிக்கு வந்த அபாரமான கைதட்டல், இன்னும் நாம் உணர்வுள்ள தமிழர்களாய் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. வெள்ளைக்காரன் இங்க வந்து நம்மை அடிமைப்படுத்தினான், இப்போ நாம அங்க போய் அடிமையாய் இருக்கிறோம் என்ற வசனங்கள் நச்! வசங்களோடு நில்லாமல் ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கும் கைதட்டல்! வில்லனிடம் போனில் கண்ணீர்விடும் காட்சியில் ஸ்ருதி பின்னிட்டார். தியேட்டரில் ஹஹ நானும் கூட விசிலடித்தேன்பா ஹாஹா

உதயநிதி ஸ்டாலின் : உங்க தாத்தா என்ன பண்ணாரோ தெரியாது நீங்க எவ்ளோ சம்பாதிக்கபோறீங்கன்னு தெரியாது ஆனா இந்த படம் தயாரிச்சதன் மூலமா ஒரு ஷொட்டு ! உங்களுக்கு தமிழன்னு நான் கர்வப்பட நீங்களும் காரணம் !

ஹாரீஸ் : இன்னும் என்ன தோழா எனக்கு தேசியகீதம் போல் ஆகிட்டு ஆனால் இன்னும்க் கொஞ்சம் கம்பீரம் இருந்தா நல்லா இருந்திருக்குமோன்னு தோணுது யம்மா யம்மா சாங் சொல்லவே வேணாம் அதான் சிலகாலமா ரிங்டோண் ! மற்றபாடல்கள் அவ்வளவு ஈர்க்கலைன்னாலும் உங்க ஸ்கோப் கொஞ்சம் மிஸ் ஆனது போல ஒரு ஏக்கம் வெல்டன். போதிதர்மரால் காப்பாற்றப்படும் சிறுமியின் சிரிப்பும் அதன் பின்னணி இசையும் இதம்..
யூட்யூப்-ல பபா ப்ளேக் சீப்-பாடலோடு களீபகீரம் செய்யப்பட்ட இசை அல்ல-ன்னூ நிறுபிச்சுடுச்சி 

ஸ்ருதியின் தோழி : தாயீ உனக்கு சுத்திப்போடனும் கண்ணு நீ ஒரு வார்த்தை சொன்ன பார் அது எனக்கு வேதவாக்கு “இருட்டுல கூட தமிழன்னா மேல கை வைக்க பயப்படனும் எவனும்” - 

கேமிரா : சீனாவை காட்டும் காட்சில அய்யோ குளுமை கலக்கல் அதும் மேகம் அடர பல்லவ சாம்ராஞ்யத்தை காட்டும் காட்சி நன்று

வில்லன் நடிகர் டாங் லீ : என்னதான் இருந்தாலும் வில்லனாய்ப் போய்ட்டப்பா அதன் கட்டகடைசியா திட்ரேன் ச்சி பாராட்டுறேன் ஹாஹ ஜானி ட்ரி, பார்வைல  மிரட்டுறார். க்ளைமக்ஸ் காட்சியில் (தான்), நிமிர வைக்கிறார் இயக்குனர். பீட்டர் ஹென் அசாத்தியமான சண்டைக்காட்சியாகவே அதை உருவாக்கி இருக்கிறார். அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுது, இவருக்குப்போய்ச்சேரவேண்டிய பாராட்டில் பாதி பீட்டர் ஹெய்யனுக்கும் உண்டு 

எனக்குதெரிஞ்ச எல்லாரையும் என் பார்வையில் சொல்லிட்டேன் 

 இதை படமாகப் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் கஸ்டம் தான்!  
எவ்வளவு எதிர்பார்த்தாலும் அதைவிட மேலே மேலே மேலே இருக்கும் என்று சொன்னார் இயக்குனர். உண்மையை சொன்னால் அவர் சொன்னதை வைத்து எதிர்பார்த்ததைவிட படம் கொஞ்சம் மிடில் தான்!


மற்றபடி படத்துக்கு மார்க் அப்படி இப்படின்னு ஏதும் கிடையாது  ஏன்னா இது உங்க பரம்பரையை தப்பு தப்பு நம்ம பரம்பரையை  திரும்பி பார்க்க வைக்கவும் உங்க டி.என்.ஏ-வையும் தூண்டுற தமிழண்டான்னு மார்தட்டுற ஒரு வரலாற்றுப் பதிவு...


என்னடா மொத்தபடத்தையும் எழுதி தள்ளிட்டானேன்னு பார்க்குறீங்களா?
மன்னிக்கனும் இது பாடம் படிச்சா பாஸ் ஆகலாம் ! பாஸ் ஆகாட்டாலும் படிச்சா தப்பில்லை ! 






6 comments:

Anonymous said...

aha karthick.miga arumaiyana vimarsanam.paaratta vaarthaikal illai, tella telivana varigal.nadai iyalbu.ellam athi madhuramai inikkirathu.

ஷேர்கான் said...

கார்த்திக்...மிக தெளிவான "பார்வை".ஏ.ஆர்.முருகதாசின் இயக்கமும்,கதை சொல்லும் பாங்கும் அவரின் முந்தைய படத்தில் அறிந்த ஒன்றோ தான்.இருப்பினும்...இந்த படத்தில் ஒரு வரலாற்று (உண்மை) சம்பவத்தை கையில் எடுத்து..."திறமைசாலிகளை" (ரவி.கே.சந்திரன்,பீட்டர் ஹைன்,சூர்யா...) தேர்தெடுத்து "களமிறங்கி..கலக்கி இருக்கிறார்".சுருதியின் நடிப்பையும் "சுட்டி" காட்டிருந்திர்கள்.(விதை ஓன்று போட்டால்...சுரை ஒன்ற முளைக்கும்).தங்களின் விளக்கத்தில் (சுருதியே பற்றி) "அம்மா..சரிகா என்பதற்கு "சரிதா" என குறிப்பிட்டு இருந்திர்கள்..ஒரு சின்ன எழுத்து பிழை...திருத்த வாய்ப்பிருந்தால் ....திருத்திடவும்.

Unknown said...

ஹமிதண்ணா இன்னும் பார்க்கவில்லை ! அதனால் இந்த பதிவு உங்களுக்கு எப்படி உணர்கிறது. நான் கேபிள் சங்கர் அவருடைய விமர்சனம் படித்தேன் அவர் பொத்தம் பொதுவான விமர்சனமாய் ஒரு சினிமாவாகப்பார்க்கிறார். அதனால் படம் சரியில்லைன்னு சொல்வது மேதாவித்தனமாய்ப்படுகிறது
நல்ல முயற்சியை பாராட்டாவிட்டாலும் நெகட்டிவ் விமர்சனம் கொடுக்காமல் இருந்தாலே நல்லா இருக்கும்ன்னு தோணுது.. உங்களுக்கு இப்போ படம் பார்க்கும் ஆவல் எப்படி இருக்கு?

Unknown said...

உமா மேடம் நன்றி. ஹாஹ இது தான் நன் சினிமா பற்றி எழுதிய முதல் ரீவ்யூ... ஏற்கனவே ஒரு முறை தி.கராட்தே கிட்- (ஜாக்கிசான்,ஜேடன் ஸ்மித்) படம் பார்த்து பாதி எழுதி அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் என்ன ஒரு ஒற்றுமை இரண்டு படத்திலும் மார்ஷியல் ஆர்ட்ஸ்,ஷாவ்லின் டெம்பிள் முக்கியக்கரு என்பது எனக்கே வியப்பு

Anonymous said...

என்னால் படம் பார்க்க முடியாவிட்டாலும்,அதை சரியாய் புரிந்து கொண்ட திருப்தி உன் விமர்சனத்தை படிக்கும் போது ஏற்பட்டது. முதல் ரீவியூ வே அசத்தலா?அருமை.

Unknown said...

ஹாஹா இளங்கன்று பயமறியாது இல்லையா அப்படித்தான் இதுவும் மனசில் பட்டதை எழுதுகிறேன்