Saturday, October 29, 2011

கடல் ரசிக்க கற்றுக்கொள்கிறேன்....



காற்றோட்டமாக..

கடற்கரையைக்

கால்கள் கடந்த ஒரு நாளில்

தற்செயலாகக் கவனித்தேன்

கடலோடு பேசிக்கொண்டிருந்தான்.ஒரு சிறுவன்....



தூரத்தில் அவன் நண்பர்களாய் அறியபட்டவர்கள்..

வானெங்கும் பட்டங்களை பறக்க விட்டுகொண்டிருக்க

நிறமாயிருந்த பட்டங்கள்

திக்கற்றுத் திரிந்தன...







சிறுவனின் வார்த்தைகளைப் போல


மெல்ல மெல்லஆர்பரித்துக்கொண்டிருந்த கடல்


பின் மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கியது.





அவன் தன் வீட்டுத் தோட்டத்தில்



நேற்று நட்டு வைத்து



இன்னும் வளரத் தொடங்கியிராத



ரோஜாசெடியயை பற்றி



அவன் கடலிடம் சொல்லத் தொடங்கியபோது



கரையெங்கும் ரோஜாவின் வாசம்..எனக்கு





அவன் அம்மா அவனை போனமாதம் அடித்ததாய்



குற்றச்சாட்டு ஒன்றை எடுத்து சொல்லும் அத்தியாயத்தில்



நூலறுந்து..வால் பிறண்டு..



தலைகுத்திக் கீழே விழுந்துகொண்டிருந்தது ஒரு பட்டம்..





மெல்ல இருட்டத் தொடங்கி வானில் நட்சத்திரங்கள் தோன்றின..



நான் இன்னும் அந்த கடல் சிறுவனை வேடிக்கை பார்ப்பவனாய்..





அவன் தன் கையிலிருந்த அந்த சிவப்பு பொம்மைக்கு நட்சத்திரங்களைக்



காட்டினான்..



தன் செல்ல பூணைகுட்டிக்கு சில முத்தங்களைக் கொடுத்தனுப்பினான்.





கரையோரம் இருந்த பாறைகளின்..இடுக்குகளையெல்லாம்



தன் மழழையால் நிரப்பிக் கொண்டிருந்தான்..





கடல் தன்னை மறந்து



அவனோடு மானசீகமாகப் பேசிக்கொண்டிருக்க





அலைந்துகொண்டிருக்கும் கடலின்



கரையில் கிடக்கும்..கிளிஞ்சலாக



மாறி கடலை ரசிக்க கற்றுக்கொண்டேன் அவனிடம் நான்.





::::::::கார்த்திக் ராஜா::::::

8 comments:

Unknown said...

Prabakaran Krishna நான் வளர்ந்த (வாழ்ந்த) ஊரில் கடல் இல்லை,. இப்போ தான் சென்னையில் வசிக்குறேன் பெரிதா கடல் மீது ஈர்ப்பு இல்லை இங்கே நாங்கள் வசிக்கும் அறையில் இருந்து ஜன்னல் விலக்கி நோக்கினால் அகண்டு விரிந்த அலைகள் அற்ற கடல் பெரிய பெரிய எண்ணை கப்பல்களும் , மிலிடரி கப்பல்களும், பணக்காரபசங்களின் உல்லாச கப்பல்களும், உல்லாச பைக்குகளும் சரசர என்று ஓடும்.,விடுமுறை நாட்களில் கையில் தேநீர் கோப்பையுடன் நெடு நேரம் நோக்கி நிற்ப்பேன் .,எதுவுமே சிந்திக்காமல் அந்த அலைகள் அற்ற கடல் போல மனசு சலனமற்று நிற்கும் ., ஆனாலும் இந்த சிறுவனை போல அலைகளோடு சலனமற்று என்னால் பேச முடியாதே என்னுள் தான் ஏகபட்ட சலங்களும் வன்மங்களும் இருக்கே .,என்ன செய்ய ? வேறு வழியே இல்லை புலவரே என்னையும் சேர்த்துகொள் நானும் ரசிக்கிறேன் அந்த அலையும் சிறுவனையும் ,..,

Unknown said...

Vimal Raj அருமை கார்த்திக் ... . நான் சிறுவனாக விளையாடிய போது பெரியவர்கள் யார் பார்த்தது என்று தெரிய வில்லை ... இப்போது சிறுவர்கள் விளையாடுவதை பார்க்கும் போது சிறுவனாக மாற துடிக்குது மனசு .. சிறு வயது பழைய நினைவுகள் பல வந்து போகின்றன....

Unknown said...

Rubiya Arsa கடல் தன்னை மறந்து
அவனோடு மானசீகமாகப் பேசிக்கொண்டிருக்க

அலைந்துகொண்டிருக்கும் கடலின்
கரையில் கிடக்கும்..கிளிஞ்சலாக
மாறி கடலை ரசிக்க கற்றுக்கொண்டேன் அவனிடம் நான். //

அழகான வரிகள் கார்த்திக் .............அருமையா இருக்கு !!!!!!!!!!

Unknown said...

Sivakasi Suresh அழகான ரசனை அற்புதமான கவிதையாய்....
கடலை ரசிக்க கற்று கொண்ட கவிஞரே,
உம்மிடமிருந்து கவிதையை ரசிக்க கற்று கொண்டேன் நான் ....

Unknown said...

Meera Jaya கடல் தன்னை மறந்து
அவனோடு மானசீகமாகப் பேசிக்கொண்டிருக்க....காலங்கள் கடந்தாலும் நினைவுகள் மரிப்பதில்லை

Unknown said...

Kanivudan Unkal Kavya ‎"அலைந்துகொண்டிருக்கும் கடலின்
கரையில் கிடக்கும்..கிளிஞ்சலாக
மாறி கடலை ரசிக்க கற்றுக்கொண்டேன் அவனிடம் நான்" உங்கள் எளிமையான கவி வரிகளில் நானும் கிளிஞ்சல்களாக மாறி கடலுடன் ஒன்றி விட்டேன் நண்பனே,அருமை,நன்றி..

Unknown said...

காவ்யா அவர்களே! உங்கள் பின்னுட்டங்களில்..! நான் என்கவிதைகளை அடையாளம் கண்டுகொள்கிறேன்!
(அதன் மதிப்பை ) நன்றி.

Unknown said...

தமிழ் அருவி அருமையான வரிகள்..............கடல் என்றால் நான் என்னைே௰ மறந்துவிடுவேன் சிறு குழந்தையை நான் மாறும் இனஂனொரு இடம் ......கடல்.