Saturday, October 29, 2011

கச்சத்தீவில்...கடலோடும் பிணமாய்..
விடிவெள்ளி விளக்காக... விரிகடலே வாழ்கையென..ஆர்ப்பரிக்கும் அலைகுள்ளே வாழ்க்கை கொள்ளும் கூட்டம்


பனிமூட்டத்தை போர்வையாக்கி.. 


பாய்ந்து செல்லும் கடலுக்குள்ளே
முழ்கினால் முத்தும்..!


விரித்தால் மீனுமாய்..!


வல்லத்தை நம்பி ஓர் வரையறை இல்லா வாழ்க்கை..!!
முழுநிலவு கரையில்லாத நாளில் வானத்து கண்ணாடி..!


ஊதக்காற்று..ஊர்போய் சேரும் வரை


உடனிருக்கும் தோழன்..!!!
ஒருநாள் நிலவில் நனைவோம் மறுநாள்


கதிரில் கருகுவோம்..! 


இருந்தும் கடலன்னை என்தாயின்


கரங்களில் மிதக்கின்றோமென..!


கவலை விடுத்த கம்பீரமாய் கட்டுமரம் தொடுவோம்..!
நேற்று மாலை புறப்பட்டோம்..! இதோ வலை கொடுத்த


வஞ்சிரம் பிரித்து குவிக்க கரை தொடும் நேரத்திற்காய்..


காத்திருக்கிறது கண்கள் ரெண்டும்...
தூரத்தில் வரும் போதே கையசைத்து தன் பட்டம் காட்டி 


மகிழும் என் ஆசைமகனை..! ஆழ்கடலுக்குள்லிருந்தே 


அதட்டலாய் ரசித்து மகிழ்ந்திருப்பேன்..!
கரைசேர்ந்ததும் அள்ளி அனைத்து கொஞ்சும் போது 


எதிர்பாராமல் அவன் கொடுக்கும் பிஞ்சு முத்த சுகத்தில் 


செத்து போய் தான் உயிர் பிழைப்பேன்..!
இப்படியான எங்கள் கடல் வாழ்க்கை 


புயலுக்கும் மழைக்கும் பலியானபோதும் கூட


வாரம் கடந்து போவதற்குள் வல்லம் கடல் தாண்டி இருக்கும்..!!
ஆசைமகன் வழக்கமாய் கொடுக்கும் முத்தத்தோடு


தொடுவானம் தொழுது என்றும் செல்பவன்.. எதோ நினைவில்


மறந்தே பிரப்பட்டேன்.. 
வங்கக்கடலின் அலையை விட அலைபாயும் மனத்தினூடே


பாடுக்கு வந்தும் பெரிசா ஒன்னும் சிக்கவில்லை


வலை எல்லாம் சுழுவம் விலுந்தது தான் மிச்சமாச்சு..
எட்டித்தொலைவில் கச்சதீவு இங்கே மீன் பிடிக்கவும்,


வலைகளை காயவைக்கவும், அந்தோணியாரை தொழுகவும் அனுமதி இருந்தும்


உசிருக்கு பயந்து யாரும் போறதில்லே..!


இருந்தும் வலை நீக்கலன்னா..! வந்த வழிபோகவும் கைமீன் தேராது..!
கட்டுப்பாட்டை பார்த்தா வயித்துபாடு ஆகாதுன்னு..அலைமீறி


கரை சேர்ந்தோம்..! புறப்படும் நேரம் பார்த்து..!


சுடப்பட்டு தரை வீழ்வோமென..நினைத்தும் பார்காத 


விரசல் பொழுது ..
எங்கிருந்தோ வந்த பழுப்புநிற படகு கடல் மேல் பெய்யும்


மழை போல குண்டுகளை துப்பி போக..!


வல்லக்கட்டைகளுக்கு நடுவே ! மீன் தின்ன உடம்பாய்..!


மீட்டெடுத்து போகுது..என் உடம்பு..!
உயிர் நாடி அடங்கிருச்சு எந்த நாட்டுக்காக 


போனது என் உயி்ரு...!!! கண்ணு அடங்கும் போதும்


என் கண்மணியின் கடைசி முத்தம் கிடைக்கள்ளியே !!


என்ற ஏக்கம் மட்டும்..! காத்தோட சுத்திவரும்..!
எம்மகனே உன் பட்டம் தேடி கூடவே வருமடா ..! என் மூச்சு..!

::::::::..கார்த்திக் ராஜா..:::::::::
No comments: