மூத்தவன் கணேசன் வேகமாய் நுழைந்து
வடக்கன் குளம் நிலமும் , அப்பா விட்டுட்டுப்
போன பவுன் கணக்கை-யும் தனக்குன்னுசொன்னார்.
வானம் பார்த்து வெறித்திருந்த
சின்னண்ணன் சுப்பிரமணி அதுவரை காத்து வந்த அமைதியை -கலைக்கும்
விதமாய் ஒரு ஜோடி வளையல் கைகள்,
அவனை உசுப்பி விட்டது
அவன் பெண்ஞ்சாதி பாரிஜாதம் தான் அது;“என்ன இங்க படுத்துகிட்டு ?போய் நம்ம பங்கையும் ஒரு காதுல
போட்டு வைங்க போங்க’’.. என்று
பெரிய வீடு,நஞ்சை பாசன வயல் ,நகையில ஒரு அஞ்சுபவுனும்
எம்பங்குக்கு வந்திடனும்னார்,
நிலத்துக்கு அடி போட்டிருந்த காரைசேரியில்
கட்டிகொடுத்து போயிருந்த அக்காள்ஒருத்தி,
விளைச்சல் நிலம்,அம்மாவோட
பட்டு புடவ, வாய்க்கா பாத்த வீடும் வேணும்னா,
பக்கவாட்டில் கேட்டுக் கொண்டிருந்தரெண்டு வருஷம் முன் புருஷனை இழந்திருந்த
இன்னொரு அக்காள், "சவுக்கத் தோப்பும்வைக்கப்போர் வைக்கும் காலி இடமும்”
எனக்கு பார்த்துகிடுங்க,
அப்பொறம் அந்த ஆறுபவுன்
நகை வரல பாத்துக்கிடுங்க",என் பொட்ட
பிள்லைக்கு அப்பாரு
போடுதேன்னு சொன்னாவ...ஹ்ம்ம்..அவுக கையால பூட்டி விட வேண்டியது..
சேரி எங்கைப்பட மாட்டிக்க
சொல்லிட்டாக...போலஎன அரற்றினாள்’.
"ஆத்தா படமும் அய்யா படமும்இருந்தா
எனக்கொன்னு கொடுத்துடுவீகளா??’கனத்த மனதின் கடைசி சொட்டு நீருடன்
சிறு விம்மலோடு தொண்டையில்
இருந்து சத்தமே வராமல் ...கடைக்குட்டி தம்பி
தங்கராசு கேட்க,
ஆணீயில் மாட்டி கிடந்த முத்து ஸ்டூடியோஸ்போட்டோ பிரேமில்ஆத்தாவும் அய்யாவும்இன்னமும் புன்னகைத்தபடியேஇருந்தனர்...
மங்கலான விளக்கொளி அவர்கள் கீழே
மிணுக்க!எரிந்து கொண்டிருக்க! அட்டரப்பலகையில் புகை விடும்
ஊதுவத்தி அவர்கள் போன
வெள்ளிக்கிழமை இறந்து போனதை பவ்யமாய் பறை சாற்றுது.
அரும்பிய கண்ணீர் விரும்பாமலே
விழுந்து உடையுது..!
எழுத்து*********-கார்த்திக் ராஜா...
No comments:
Post a Comment