Monday, October 31, 2011

என்னதான் வேண்டும் உனக்கு.....


கற்பனைப்பஞ்சம் என்னை வாட்டுதடி.. 
தமிழ் எழுத்துக்கள் எல்லாம் எட்டாத தூரமாய்...!
  
கண்காணும் இடமெங்கும் காதலால் 
உன் நினைவே பூக்குதடி...!


வேண்டாமடாவென விலகியே சென்றாலும் 
வீம்பென சட்டைபிடித்திலுக்கும் -உனக்கு 
இரக்கமே இருக்காதா..!


போனால் போகட்டுமென நானும் பொருத்து 
பொருத்துப்பார்த்தால்  
சொல்பேச்சுக் கேளாமல் சடாரென 


அடைமழையாய் அவதாரமெடுக்கும் 
இந்த  ஆவேசமும் உனக்கேன்.. 
நனைத்துப்போட்டு நீ-போய்விட்டாய் 


பட்டுப்போயிருந்த நினைவுகள் எல்லாம் 
எட்டித்துளிர் விட்டதை எப்படி நீயும் அறிவாயோ...


இனி நீர்த் தேடியே என் வேர்கள் ஆழ நினைவுக்குள் 
நுழையும் வலிகள் கத்தி கொண்டு கண்ணில் 


சொருகும் வலியென நீ உணரப்போவதுமில்லை 
ஏன் உனக்கிந்த வீண்வேலை...!


நானுண்டு வேலையுண்டென 
நடைகொண்டு போகிறவனை  


இப்படி நடுஇரவில் புலம்பவைத்த 
புண்ணியவதியே..! 


உனைக்காணும் 
அழுததாய் நினைவில்லை 
அரற்றல்களோடு அடங்கிடும் என் 
கவலைகள்..!   என்னை கோழையாக்கிய 


கொடுங்கோலனாய் நீ! ;  கூடவே சுமக்கவும் வைத்தாய் 
ஒரு நள்ளிரவுக் காதலை..! 


இன்று வான் பார்த்தே வீணாகிப்போகிறது-என் 
உறக்கம்... கேட்டால் சிரிப்பான் எவனும்

”நிலவும் நானுமென”  நாற்பதுக்கும் மேல் 
எழுதித் தள்ளீவிட்டேன் கவிதைகளை...


இனி எனக்கு கொடுக்க நிலவினிடமும் 
மிச்சமாய் இல்லை கவிதைகள்...!


எனக்குப் பயந்து 
இப்போதெல்லாம் அது என் வீட்டு
மொட்டைமாடிப் பக்கம் வருவதே இல்லை ...


சரி காதலை ஒளித்தெடுத்து சமுதாயக் கருத்தில்  
காலெடுத்து வைத்தேன் அங்கும் விடாமல்


துரத்தும் வேதாளமாய் ஏதாவது மூலையில் 
இரண்டு ஜோடிகள் காதல் காதலென கரைந்து ஒழுக 


அடுத்த நிமிடமே மீண்டும் அடைமழை..


இப்படியே போனால் என்னதான் முடிவென 
இன்று கேட்டேவிடலாமென எழுதிவிட்டேன் 


இந்த வரிகளை ...
ஆனாலும் மெல்ல அரும்பிய
துளிர்ப்புகளை ரசிக்க கண்கள் தவறுவதே இல்லை போ!


இன்று இரவும் பாழானதா...!  பாழாய்ப்போன 
உன் நினைவுகளில்...! ஒன்றுமட்டும் புரியவே இல்லை 


நான் உன்னை திட்டுகிறேனா!இல்லை என்னைத்திட்டுகிறேனா?

-கார்த்திக் ராஜா


3 comments:

Anonymous said...

பொருத்துப்பார்த்தால்
சொல்பேச்சுக் கேளாமல் சடாரென


அடைமழையாய் அவதாரமெடுக்கும்
இந்த ஆவேசமும் உனக்கேன்..
நனைத்துப்போட்டு நீ-போய்விட்டாய்


பட்டுப்போயிருந்த நினைவுகள் எல்லாம்
எட்டித்துளிர் விட்டதை எப்படி நீயும் அறிவாயோ...
நல்ல வரிகள். கார்த்திக்.நீ யாரை திட்டினாலும் எங்களுக்கு இன்பமே.வாழ்த்துக்கள்.

SathyaSudha said...

very nice dear

Unknown said...

ஹா ஹா இது திட்டுக்கள் அல்ல மேம்..!
வார்த்தைகள் முட்டுச்சந்தில் சிக்கிய வழியற்றப்போக்கனாகிப்போகும் மனக்குமுறலில் கடுப்பாகி அடப்போங்கையா நீங்களும் உங்க கல்யாணமும்ன்னு சொல்லுவாங்கள்ள அப்படி ஒரு எபெக்ட் ஹாஹா