Saturday, October 29, 2011

எனக்காய் சில வரிகள்...!


வானெங்கும் கருந்திரள்கள்
நிறைத்திடும்
இரவொன்றின் நேர்க்கோட்டில்
அசையும் வளைவுகளென
நெளிகின்றன நதியோட்டம்


இருளின் இறுக்கத்தினில்
செவ்வானம் ஒன்றை
விற்பனைக்கு கொடடுத்திருந்த
மஞ்சள் வெயில் சில மணிதுளிகளில்
கரும்மென ஆகினதால்
பாதை முழுதும் ஒளியில்லா
இருளில் .நெருங்கும் மாலை...

இந்த இரவுக்கும் பகலுக்கும்
இடைபட்ட நேரத்தின் மடியில்
என் எழுத்தின்
சிறகு விரிக்கின்றன.

வண்ணத்துப்பூச்சிகள் சில..
வர்ணம் கொடுத்து என்னை
எழுதிடச் சொல்லி நிற்கையிலே
அது வண்ணத்து பூச்சிகளா?
யாதோரு வனத்து பூச்சிகளா?

தெரியாமலே..! நான்


வானவில்லின் நீளத்தில் பேசி தீர்க்க
ஆயிரம் இருப்பினும்
எழுதி தணிக்க எனக்கு
கவிதைமட்டும் இருளில்
தொலைந்த நிழலாய்
யாரும் அறியாமல் எனக்குள்..!

குளிர் தனலாய்
மழைவெயிலாய்..
பனிச்சூரியனாய்..
யாதென்று எழுதி வார்க்க?



ஒவ்வொரு வார்த்தையையும்
கோர்த்தெடுத்து
பதில் உரைக்கிறேன் நான்..
என் இருளுக்கு.

நிலாக்களைச் சிதறடித்து
விளக்குகளைத்
தனிமையின் இருப்பில் விட்டு
அருகருகே வந்து அமர்ந்துகொள்கிறது..
என் தாகம்..!

இரு இணை விழிகளில்
யாராவது வாசித்து போவதற்காய் அல்ல..
என்னையே நான் சுவாசித்து
போவதற்காய்..!

-கார்த்திக் ராஜா!
 —

No comments: