Saturday, October 29, 2011

கண்ணீர் கண்ணீர்..!






வார்த்தைகள் வராது


வாயடைத்துப் போகையில்


கண்ணீர் மொழியாகும்.




அந்த மொழி -எல்லோரும்


அறிந்ததாய்...


தன் நினைவுகளால்


வாழ்ந்து கொண்டு


இருக்கும் சிலருக்காய்


உதிரும் மொழி அது..




நானும் உங்களைப் போல.


விலா நோகச் சிரிப்பவன்-தான்.


சிரிக்கையிலே அழுகையும்


வரும் சில நேரங்களில்.


அத்தனையிலும் சிறப்பு


கொண்டதாய் இருக்கும்


அந்த துளிர்த்திருக்கும் கண்ணீர்,




மனம் மிகவும் மகிழ்ச்சியடையும்


ஒரு சிறு சம்பவம் நடந்தாலும்,


அதை தந்தவருக்கு,


நன்றியின் அடையாளமாய்


ஒரு துளி கண்ணீர் என் இமைக்கரைகளை


உடைத்து உப்பு வெள்ளமாய்


கன்னங்களில் உருண்டோடும்.




எதிரமர்ந்து காண்பவருக்கு எப்படியோ?


எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் அதுவும் ஒன்று.




அதற்கு அழுகை என்று பெயரில்லை..!


அப்படி அழைத்தாலும் தவறில்லை..!!


அப்படி கண்ணீர் விட வைப்பவர்கள்..!!


என் இதயத்திற்கு -மிகவும்


நெருக்கமானவராகவே மட்டுமே


-இருக்க முடியும்.




எனது கண்ணீர் கண்டு, படித்து, ரசித்து


கருத்து சொல்லும் தோழமைக்கு


நன்றிகள் பல _கூறி..!! மதிப்பில்லா


உள்ளத்தை தவிப்புக்கு


ஆளாக்கவா..!என்று




ஏனோ இன்று கண்ணீர் பத்தி


எழுதி எல்லோரையும் அழ வைக்கிறீர்...


என குறுஞ்செய்திகள் தொடும் முன்னே!




நான் எனது தந்தையின் பிரிவிற்கே


கண்ணீர் சிந்த முடியாமல் தவித்ததை நினைவுகூர்கிறேன்?




.... ஆனாலும் கவிதை எனக்கு மிகவும்


பிடித்திருக்கும்


மனதை முழுமையாய் ஆக்ரமித்தது ...


ஒரெ நொடியில் இறுக்கமாய்


இருந்த மனதை மறுநொடியில்


நிலா தேடும் குழந்தையாய்.


கன்னக்குழி காட்டி கண்சிமிட்ட வைக்கும்..!!அது..




கண்ணீரும் சுகமானது என்பதைச்


சொல்ல வந்தேன்.


அது கவிதையை விட


சுகமானதா என எழுதும் போது


அறிந்து கொண்டேன்..




ஆனந்தக் கண்ணீர் அருமை.-ஆனால்




மனதை கரைக்க கூடிய, அழுத்தக் கூடிய




கண்ணீர் விடும் தருணங்களை நான் -தவிர்க்க விரும்புகிறேன்.


அதாவது அது போல் தருணங்கள் நிகழாதிருந்திருந்தால்


நன்றாக இருக்குமென்றேண்ணி..






கண்ணீரும் சுகமானது தான்.


சிந்தப் படுவது யாருக்காக என்பதைப் பொறுத்து.




உண்மையில் வெளியே ரொம்ப சந்தோஷித்து


நடமாடும் நபர்கள் உள்ளே ஏதோ ஒரு


விதத்தில் காயம் பட்டவர்களாக இருப்பார்கள்.


வெளியே சிரித்து நடமாடினாலும்,


காயம் பட்ட இதயம் கண்ணீர்


விட்டுக் கொண்டிருக்கும் சிலருக்கு.






பூவின் மீது நீர்த்துளி


மன கிறுக்கலின் வழி கண்ணீர்த்துளி


எனக்குப் பிடித்தது இந்த வழி





சிரிப்பில் அழுவதும் அழுகையில் சிரிப்பதும்.




-கார்த்திக் ராஜா!
 —






No comments: