கொரில்லாக்கள் சில வினோதங்கள்!
பூமியில் வாழும் மிகப்பெரிய மனிதர்களின் மூதாதையர்கள் (Primates) கொரில்லாகள்தான். நன்கு வளர்ந்த கொரில்லாக்கள் சுமார் 6 அடி உயரமும் 150 கிலோ எடையும் இருக்கும். கொரில்லாக்கள் இரண்டு கைகளையும் விரித்தால் சுமார் 8 அடிகள் வரை நீளும். இவை பொதுவாக நான்கு முதல் எட்டு மனிதர்களின் பலத்திற்கு சமமான பலத்தினை பெற்றிருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண் கொரில்லாகளை விட உருவத்தில் பாதி அளவுதான் இருக்கும்.
கொரில்லாக்கள் மனிதர்களை போல் கை மற்றும் கால்களில் தலா பத்து விரல்களையும், கண்கள் மனிதர்களை போல் முன்னோக்கிய பார்வையும், 32 பற்களையும் பெற்றிருக்கும். ஆனால் கால்களை விட கைகள் மிக நீளமாகவும் அதிக தசைகளையும், கைகளில் உள்ள விரல்களை போல் கால்களிலும் இருக்கும். Adult கொரில்லாக்களின் (Age-15) முதுகில் உள்ள ரோமங்கள் வெளிர்நிறத்தில் (silverback) மாறிவிடும்.பூமியில் வாழும் மிகப்பெரிய மனிதர்களின் மூதாதையர்கள் (Primates) கொரில்லாகள்தான். நன்கு வளர்ந்த கொரில்லாக்கள் சுமார் 6 அடி உயரமும் 150 கிலோ எடையும் இருக்கும். கொரில்லாக்கள் இரண்டு கைகளையும் விரித்தால் சுமார் 8 அடிகள் வரை நீளும். இவை பொதுவாக நான்கு முதல் எட்டு மனிதர்களின் பலத்திற்கு சமமான பலத்தினை பெற்றிருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண் கொரில்லாகளை விட உருவத்தில் பாதி அளவுதான் இருக்கும்.


.jpg)





கொரில்லா குடும்பத்தில் ஒரு Silverback, பிரச்சனை செய்யாத தன்மையுடைய பலம் வாய்ந்த ஒரு ஆண் கொரில்லா, வயதுக்கு வாராத ஒரு ஆணும் (8-13 years old) மூன்று அல்லது நான்கு வயதுக்கு வந்த பெண் கொரில்லாவும், 5 -8 வயதுக்கு வராத பெண் கொரில்லாகளும் இருக்கும். சிலநேரங்களில் குடும்பங்கள் இதைவிட சிறியதாகவும், பெரியதாகவும் இருக்கலாம். சில நேரம் இளம் ஆண் கொரில்லாக்கள் கூட்டமாக தனியாகவும் சுற்றிகொண்டிருக்கும். கொரில்லாக்கள் இரவுநேரம் 13 மணி நேரமும், மத்திய வேளைகளில் சிறிது நேரமும் தூங்கும், மாற்ற நேரங்களில் உணவை தேடி உண்டுகொண்டிருக்கும். இவை பொதுவாக கிழங்கு, பழம், இலை, தளை, எறும்பு, கரையான் போன்றவற்றையும் உண்ணும். தூங்குவதற்கு வசதியாக சிறிய மரங்களில் படுக்கைகளை தயார் செய்து கொள்ளும், படுக்கைகள் springy platform போன்று இருக்கும்.



கொரில்லாக்கள் மிகவும் அமைதியானவைகள், இவைகளின் முதல் எதிரியே மனிதன்தான், இன்றும் ஆப்ரிக்காவில் இவை உணவுக்காக வேட்டையாட படுகிறது. பிற விலங்குகளை பிடிக்க இவற்றை கண்ணியில் பயன்படுத்துகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் விலங்கியல் பூங்ககளுக்காக பிடிக்கப்படும் குட்டி கொரில்லாகாக அதன் முழு குடும்பமும் அழிக்கபட்டுவிடும் ஏனென்றால் முழு குடும்பமும் அந்த குட்டிக்காக போராடுவதால்தான்.






1 comment:
அனைத்தும் நம்மை போன்றே குணத்தை தவிர நல்லாயிருக்கு கொரில்லா அறிவியல்
Post a Comment