|
காற்றிலெழுதப்பட்டவை |
என்னை
உங்களுக்கு
அடையாளம்
தெரியாமலிருக்கலாம்
என் புலமென்ன
பிறப்பென்ன
மொழியென்ன
என்
வாழ்வென்ன
இறந்தால்
எரிப்பவரா
புதைப்பவரா
எதுவும்
உங்களுக்குத்
தெரியாது
ஜனசந்தடிகளில்
உங்களில் ஒருவராய்
உங்களோடே
வாழ்ந்திருக்கிறேன்
உங்களிலிருந்து
கிழக்கிலும்
மேற்கிலும்
வடக்கு
தெற்கு
என
எல்லா
திசைகளிலும்
பிறந்திருக்கிறேன்.
பர்மா
ஈழம்
அமிர்தசரசு
லாகூர்
இசுரேல்
பனாமா
இலத்தீன்
ஆப்பிரிக்கா
என
எல்லா
தேசங்களிலும்
என்
பிறப்பு
சம்பவித்திருக்கிறது
புலத்தினை
தாண்டி
புறப்பட்ட
வழியில்
அகதியாகவும்
ஆண்டபரம்பரையாகவும்
என்
வாழ்வு
அமைந்திருக்கிறது
இளைத்தவனை
அடித்து
அவன்
முதுகிலும்
பயணித்திருக்கிறேன்
ஏய்த்தவன்
பூட்சுக்கு
முதுகை
காட்டி
மண்டியிட்டுமிருக்கிறேன்
நாடு
பிடித்த
நாவுகளில்
தோய்ந்த
ரத்தரூசியும்
எனக்குத்தெரியும்
பழுப்பு
கம்பிகள்
பாய்ச்சி
தோலைக்கிழித்து
வழியும்
ரத்தகோரத்தின்
வலியும் எனக்கு
தெரியும்.
கைப்பற்றிய
நிலத்தை
என்னுடையதாக்கி
பெரும்
வரலாற்றையும்
திரித்திருக்கிறேன்
பிறந்த
தேசத்தில்
நீ
அடையாளமற்றவன்
என
விரட்டவும்
பட்டிருக்கிறேன்
எனக்கு
உபதேசிக்கப்பட்டதெல்லாம்
எது
உன்னுடையதோ
அது
நாளை
மற்றொருவனுடையது
மற்றொருநாள்
அது
வேறொருவனுடையது
என்பதே
வேடிக்கை
பாருங்கள்
உபதேசம்
செய்வோர்தான்
அனைத்துக்கும்
சொந்தம்
கொண்டாடுகின்றார்
இதுவரைக்கும்
ஏனென
கேட்டதுமில்லை
கேட்டபோதும்
போலிபகுத்தறிவாதி
என
முத்திரை
குத்தப்பட்டிருக்கிறேன்
தீவிரவாதி
என
சுட்டுத்தள்ளப்பட்டிருக்கிறேன்
துரோகி
என
நாடு
கடத்தப்பட்டிருக்கிறேன்
வீட்டுச்சிறையில்
அடைத்து
வைக்கப்பட்டிருக்கிறேன்
இளமையெல்லாம்
சிறையில்
கழித்திருக்கிறேன்
பயணீத்த
வாகனத்திலே
வெடித்து
உயிர்நீத்திருக்கிறேன்
கடைசி
வரைக்கும்
எந்த
தோட்டாவும்
என்
கேள்விகளை
சுட்டுத்தள்ளமுடிவதில்லை
-கவிதைக்காரன்.