இன்னைக்கு காலை ஏன் இவ்வளவு மோசமா இருக்குன்னு நினைச்சுகிட்டே
எழுந்திச்சேன்.
அதி காலையிலே அதாங்க 8 மணிக்க்கு காஃபி டம்ளர் சத்தம் போட்டு எழுப்ப எழுந்து பார்த்தா நேற்று பார்த்த வலைப்பூவில் இன்னும் அண்ணன் முகில் சிரிச்சுகிட்டு இருக்கார். அட ஆமாம் படிச்சுகிட்டு இருக்கும் போதே தூங்கிட்டோமே...ன்னு நினைச்சு கண்னாடியத்தேடி எடுத்தா கண்ணாடில லேசா ஸ்க்ராச்சஸ்... இப்போ தான் புதிது மாத்தினேன்றதால... டக்குன்னு மண்டைக்கு கோபம் “காலையிலே ஏண்டா சத்தம் போடுறே”-ன்னு அம்மா சொல்லிடக்கூடாதேன்னு... அமைதியா கண்ணாடியைத்தொடைச்சுட்டு லேப்டாப்பில் முன்னால் காதலி பெயரை காலையிலே தட்ட
அது “வெல்க்கம் குட் மார்னிங்” சொல்லி அப்பாவின் புகைப்படத்தோட சிரிச்சது...
எஃப்.பி பக்கம் போனா நம்ம “ராஜ் குமார் இனிய காலை வணக்கம்” மெஸேஜ் போட்டிருக்கார். வழக்கம் போல அதையே காப்பி பண்ணி அவருக்கு அனுப்பிட்டு காஃபி-யைச்சுவைக்க எழுந்து போய் ஃப்ரெஸ் பண்ணிட்டு வந்து குடிச்சா சர்க்கரை அதிகமா இருந்தது... குறைய இருக்குன்னா போட்டுக்கலாம் அதிகமென்றால் அம்மாகிட்ட பேச முடியாது... சைலண்டா முழுங்கிட்டு...!
சார்ஜ் பார்க்கிறேன் 10% அலர்ட் காமிக்குது அடடா கேபிள் மாட்டி இருக்கு ஸ்விட்ச் போடாமல் விட்டுட்டேனே..ன்னு அலட்டிக்கிட்டே ஸ்விட்ச் போட்டா கரண்ட் இல்லை சரி ஆஃபீஸ் போய் ஏத்திக்கலாம்ன்னு ... குளிச்சு முடிச்சு 8:30-க்குள் அடிச்சு புடிச்சு புறப்பட்டு அம்மா சுட்ட தோஷையை எனக்குப் பிடித்த வேர்க்கடலைச் சட்னியோடு உள்லதள்ளிட்டு..
அண்ணன் வாங்கிக்கொடுத்த “ப்ளேபாய் கேப்”- தெடி தலியில் மாட்டிகிட்டு
பைக் ஸ்டார்ட் பண்ணா செல்ஃப் ஸ்டார்ட் பலிவாங்குது... சரி கிக்கர் அடிக்கலாம்ன்னு உதைச்சேன். கட்டவிரலுக்கு வேலை கொடுத்து கொடுத்து கிக்கர் மறந்து போய் விட்டது கிட்டதட்ட... இக்னீஷியனை உசுப்பி
பக்கத்து வீட்டு ரங்கா அண்ணா எனக்கு டைம் ஆச்சு காலேஜில் விட்றுங்கன்னு ஒட்டிக்கிச்சு... சரி அவளையும் ஏத்திகிட்டு கிளம்பினால்..
ஜாண்சன் டிம்பர்க்கு ஆப்போஸிட்டில் ட்ராஃபிக் சார்ஜெண்ட் நிக்குறார் “கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமல் காலை எட்டரைக்கே வந்திருக்கிறாங்களே ” ஏன்?-ன்னி யோசிச்சுக்கிட்டே வண்டியை எதிர்திசைக்கே யூ- டர்ன் போட ரங்கா கேட்டா... என்னாச்சி அண்ணா-ன்னு
இல்லம்மா பர்ஸ வீட்டில் வைச்சுட்டு வந்துட்டேன். லைஸன்ஸ் கைல இல்லை போலீஸ் நிக்குறாங்கன்னு...
#பாவம் என்னிடம் லைஸன்ஸ் இல்லைன்னு அந்த பிள்லைக்கு தெரியாது போல ஹஹ# பாதி தூரம் திரும்பினால் மார்க்கெட் கேட்ல வழி திருப்பி விட்றாங்க ... ஒன் வே-ன்னு அட அது தெரியாதா எங்களுக்கு பொறந்ததுல இருந்து இது ஒன் -வே தான் இதே ரோட்டிலதானே தினமும் போறேன்னு மனசுக்குள் திட்டிகிட்டே வேற வழியே இல்லைன்னு மறுபடியும் ஜாண்சன் டிம்பர் கடந்து அங்கே நின்ற காக்கி- கண்ணில் மண் தூவி எஸ் ஆகி போனா..
அடுத்து வாட்டர் டேங்க் கிட்ட மறிக்குறாங்க வண்டிய... அடப்பதறுகளா
இவ்ளோ போலிஸ் எங்கடா போனீங்க இத்தன நாளான்னு.. மழைக்கு பறந்து வந்த ஈசல் போல பொல பொலன்னு சிட்டில பொழக்குறீங்களே ஏன்- இன்னைக்கு என்கிட்ட தெண்டம் வாங்காம விடமாட்டீங்களான்னு மறுபடியும் தைரியமா மனசுக்குள்ல மட்டும் திட்டிகிட்டு குறுக்க பாஞ்சி போனா... சமாதானபுரத்தில் கடுமையான ட்ராஃபிக்...
தூத்துக்குடி வண்டி பாதில மரித்து நின்று ஆள் இறக்குறான்... மேட்டுத்திடல்
பஸ் வர்ரதும் போறதும் கூட சாலையை மறிச்சு நிக்க ஒன்றும் புரியாமல் நடுவில் சிக்கிய ஆம்புலன்ஸ் புண்ணியத்தில பின்னாடியே வண்டிய விரட்டி தப்பிச்சு சேவியர்ஸ் காலேஜ் வந்தா....
மணி 9=ஆக 3 நிமிடம் அடங்கோ... இன்னைக்கு 9 மணிக்க்கு ஒருவரை சந்திக்க வருவதாகச்சொல்லி இருந்தேனே.. ந்னு மறுபடியும் கிக்கரை உதைச்சால் கிக்கர் பலி வாங்குது ... வண்டி ஸ்டார்ட் ஆகலை..
பெட்ரோல் இருந்தாதானே ஸ்டார்ட் ஆகும் . நேற்று இரவே போகும் போது போட்டிருக்கலாம், ச்சே-ன்னு இருந்தது... காலையில போட்ரலாம்ன்னு விட்டது எவ்ளோ பெரிய தப்பா போச்சு .. இனி பல்க்குக்கு அந்தபக்கம் 3 கீ.மீ
இல்ல இந்தபக்கம் 2 கீ .மீ போகனுமே..ன்னு நினைத்ததும் தலை சுற்றல்.
பெட்ரோல் விலைய சொன்னால் மயங்கியே விழுந்துடுவேன்.
சரி சந்திக்கவேண்டிய நபர் முக்கியமென்பதால் ஆட்டோ பிடித்துப்போய் அவரை சந்திப்பதாகச்சொன்ன இடத்தில் காத்திருந்தால் ஆளைக்காணோம் சரி போனில் பிடிக்கலாம்ன்னு கூப்பிட்டா... காலையிலே பக்திப்பாடல் ... ஒழிக்க சிரிச்சுகிட்டே நாளைக்கு பார்ப்போம்ன்னு சொல்ல நான் எரிஞ்சுகிட்டே அடச்சே முதல்லயே போன் செய்து கன்ஃபார்ம் பண்ணிருக்கலாமேன்னு நொந்துகிட்டு கிளம்பினேன்
ஆட்டோ ஏறி பல்க் போனா பெட்ரோலுக்கு பாட்டில் கேட்கிறார்... பட்டிலுக்கு எங்க போக வேற வழி இல்லாம ஒரு லிட்டர் அக்வாஃபினா- வாங்கி குடிச்சு ஆட்டோக்காரருக்கும் கொடுத்து அந்தக்கேனில் பெட்ரோலோடு மீண்டும் ஆட்டோ ஸ்டார்ட்..
பெட்ரோல் போட்டுட்டு ஆட்டொ ஸ்பேர் கொடுக்க பர்ஸ் ஆறுமாத கர்ப்பத்திலிருந்து மூனுமாத கர்ப்பம் ஆகி இருந்தது.. அடுத்தி ஏ. ஆர் லைன் பிடித்து வேலைக்கு கிளம்பினா கன்யாகுமரி எக்ஸ்ப்ரஸ் கடந்து போகும் நேரம் லெவல்கிராஸிங்கில் காக்க வைக்க...
கடுப்பின் உச்சியில் வெயிலில் நான்.. அதையும் தாண்டி ஆஃபிஸ் போய் வேலையெல்லாம் ஆரம்பிக்கலாம் என்றால் பவர் இல்லை... பத்து முதல் பணி ரெண்டு அடுத்து நாலு முதல் ஆறு... அடுத்து ஏழு முதல் ஏழரை- ந்னு இரண்டரை மணி நேரம் பவர் கிடையாது.
லேப்-டாப்பிலும் சார்ஜ் இல்லை வெட்டியா வெறிச்சு உக்கார .. மொபைலில் பாட்டைப்போட்டு வேளைய ஆரம்பித்து மாலை வரை கடந்து வீட்டுக்கு பிடித்தால் ஸ்டார்ட் பண்ணி அஞ்சே நிமிஷத்தில் மறித்து நிப்பாட்டும் சார்ஜண்ட் என்ன ஹெல்மெட் போடலையான்னு,,,,
என்னா சார் திடீர்ன்னு கேட்டா கமிஸ்னர் மாறிட்டாங்கப்பா..! அடுத்தவாரமெல்லாம் கண்டிப்பா போட்ருக்கனும் .. இந்த வார்ன் ரிப்போர்ட்டில் கையெழுத்துப்போட்டு கொடுத்துடு கிளம்பு... என அவர் ஃப்லோவில் தன் தேவையையும் மெல்லாமலும் முழுங்காமலும் சொல்லிட்டார்.
நேற்றுதான் ட்வீட்டில் கமிஸ்னர் கருணா சாகர்- பற்றியும் ஹெல்மெட் பற்றியும் ட்வீட் போட்டேன் இன்னைக்கு எனக்கே ஆப்பா..
வேற வழி சிக்கினது விடாக்கொண்டன்கிட்ட.. லைஸன்ஸ் எங்கன்னு அவர் நோண்டாத வரைக்கும் நல்லதுன்னு. பர்ஸோட மூணுமாத கர்பத்தை அபார்ஸன் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து மீண்டும். வீட்டுக்குள் வர்ரதுக்குள்
ஆறு மிஸ்டுகால்... புது ஃப்ரெண்டுங்க நம்புங்க அவன் கிட்ட பேசிட்டு இரவுசாப்பாட்டுக்கு உட்காரும் போது ஏன் இத்தனை டென்ஸன் வாழ்க்கையில என்று நான் நினைச்சுக்கிட்டு இருக்கும் போது அம்மா காலையில் இருந்த அதே புத்துன்ணர்வு சுறுசுறுப்போடு ...உணவு பரிமாறுகிறார்..
எங்கிருந்து வருகிறது இவருக்கு இத்தனை எனர்ஜி.. ஸ்டாமினா.. இத்தனைக்கும் இவர் ரிலாக்ஸா உட்கார்ந்து டீ.வீ சீரியல் பெண்மணிகூட கிடையாது பொழுது போக்க.. காலை நாலு மணிக்கு எழுந்து காலைல் பம்பரத்தைக்கட்டிக்கொள்பவர் இரவு தூங்க மணி பணிரெண்டைத்தாண்டும் ஆனால் எப்படி முடிகிறது... இத்தனை புத்துணர்வு..
கேட்டுவிடலாமா ? என நினைக்கும் போது தண்ணீர் டம்ளர் முதல் கை துடைக்கும் டவல் வரை அத்தனையும் கச்சிதமாக டேபிளில் அதற்கான இடத்தை நிரப்பிக்கொள்கிறது.
“அந்தந்த வேலையை அப்பப்போ சரியா செய்யனும்” - என முகத்தில் அறைந்து யாரோ சொன்னது போல இருந்தது.

No comments:
Post a Comment