தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம்மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.
மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.
மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.
தமிழில் பெயர்க்கப்பட்டு 1723இல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்டவிவிலியத்தின்முதல் நூலாகியதொடக்க நூலின் முதல் அதிகாரம்.- தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர்பகுதிகளில் "இங்க" என்றும், யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும்திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்றும் வழங்கும் சொற்கள் "இங்கே" என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது "இங்கணே" அல்லது "இங்கனே" என்பதன் மாற்றமும் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்பது "இங்கட்டு" என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். "கண்" என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: "Place, site; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)". கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக் கேட்கலாம். "இங்கன்" அல்லது "ஈங்கன்" என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப்பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இது ஒரே சொல்லே பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்கியதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும்.
செவ்வியல் நூல்கள் என வரையறுக்கப்பட்டவை அனைத்தும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியவை. தனித்தன்மை கொண்டவை. 41 செவ்வியல் நூல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
தொல்காப்பியம்
எட்டுத்தொகை
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
கார் நாற்பது
களவழி நாற்பது
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமொழி ஐம்பது
திணைமாலை நூற்றைம்பது
பழமொழி
சிறுபஞ்சமூலம்
திருக்குறள்
திரிகடுகம்
ஆசாரக்கோவை
முதுமொழிக்காஞ்சி
ஏலாதி
கைந்நிலை
சிலப்பதிகாரம்
மணிமேகலை
முத்தொள்ளாயிரம்
இறையனார் களவியல்
மே 2010 தர அளவீடுகள் ஒப்பீடு - இந்திய மொழிகள்
மொழி Wikipedians Off count > 200 Char Mean bytes Length 0.5K Length 2K Size Word image தமிழ் 398 23 k 22 k 3320 83% 28% 200 MB 8.6 M 15 k இந்தி 450 58 k 35 k 1476 42% 11% 213 MB 13.3 M 14 k வங்காளி(மே 2010) 319 21 k 16 k 1536 60% 16% 94 MB 4.7 M 9.4 k மராத்தி 231 29 k 11 k 852 26% 7% 73 MB 3.3 M 6.1 k தெலுங்கு 358 45 k 17 k 1120 23% 9% 130 MB 6.3 M 10 k மலையாளம் 458 13 k 12 k 2699 84% 34% 97 MB 3.8 M 10 k கன்னடம் 176 8.6 k 7.3 k 4497 56% 21% 98 MB 4.6 M 7.8 k குசராத்தி 79 15 k 14 k 1267 34% 5% 50 MB 2.9 M 1.4 k பஞ்சாபி 25 1.7 k 0.479 k 1071 20% 11% 6.7 MB 0.335 M 0.645 k சமசுக்கிருதம் 39 4.0 k 0.379 k 201 5% 1% 6.9 MB 0.165 M 0.125 k
பல தர அளவீடுகளில் தமிழ் முதலிலோ, அல்லது இந்திக்கு அடுத்ததாகவோ உள்ளது. கன்னட விக்கியின் மொத்த பை'ட் அளவு 98 மெகா பை'ட் உள்லதை நோக்குங்கள். மலையாள விக்கி முன்னேறி இருந்தாலும் அத்தனை முன்னேற வில்லை. குசராத்தியும் நல்ல விரைவில் இப்பொழுது முன்னேறி வருகின்றது. சராசரி பை'ட் அளவும், 0.5கி அளவு உள்ள கட்டுரைகளின் விகிதமும், 2 கி.பைட் கட்டுரைகளின் விகிதமும் முக்கியம். தமிழின் முன்னேற்றம் நன்றாக உள்லது ஆனால் இதுவே சனவரியின் நிலை சனவரி 2010 தர அளவீடுகள் ஒப்பீடு - இந்திய மொழிகள்
மொழி Wikipedians Off count > 200 Char Mean bytes Length 0.5K Length 2K Size Word image தமிழ் 330 21 k 21 k 2574 82% 25% 148 MB 6.2 M 13 k இந்தி 393 53 k 34 k 1275 43% 10% 181 MB 11.0 M 11 k வங்காளி 285 21 k 15 k 1407 57% 15% 86 MB 4.2 M 8.7 k மராத்தி 203 27 k 11 k 800 27% 7% 67 MB 2.9 M 5.0 k தெலுங்கு 336 44 k 16 k 915 22% 8% 107 MB 5.0 M 8.8 k மலையாளம் 416 12 k 12 k 2740 84% 35% 93 MB 3.5 M 9.4 k கன்னடம் 158 7.8 k 6.7 k 2806 55% 17% 59 MB 2.7 M 5.2 k குசராத்தி 70 13 k 11 k 1099 20% 5% 37 MB 2.1 M 1.4 k பஞ்சாபி 23 1.5 k 0.338 k 759 16% 8% 4.1 MB 0.230 M 0.390 k சமசுக்கிருதம் 36 3.9 k 0.362 k 197 5% 1% 6.8 MB 0.163 M 0.080 k
தமிழில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இந்திக்கு அடுத்தபடியாக தமிழ் உள்ளது. நேப்பாள மொழி, மணிப்புரி ஆகிய இரண்டையும் விட்டுவிட்டுப் பார்த்தால். இவ்விக்கிகளில் முறையே 15 பேரும் 20 பேரும் மட்டுமே இயங்கி உருவாக்குதால், தானியங்கி வழி செய்கிறார்களா எனத் தெரியவில்லை. கீழே இவற்றின் தரவுகளையும் தந்துள்ளேன்.
எல்லாத் தரவுகளும் விக்கிமீடியாவின் தளத்துல் இருந்து எடுத்தவை. எடுத்துக்காட்டாக தமிழுக்குண்டான தரவுகளை இங்கிருந்து] பெறலாம்.
No comments:
Post a Comment