Friday, January 28, 2011

இருசக்கர வாகனத்தின் பில்லியனில்..
அமர்ந்து சாக்லேட் கேட்கும் குழந்தைக்கு..
பிறகு என்று சொல்லும் மனம்..
சட்டென்று இளகி இரண்டொரு ரூபாய்களை 
தானம் செய்ய முன்வருகிறது...
          இருகரம் நீட்டி தர்மம் கேட்கும் 
          சாலையோர சிறுவனுக்கு....
                            


                      சிக்னல்களில் சில நேரம் மனிதனும் கடவுளாகிறான்....
 

தொலைவில் ஒரு தோழி....

அன்று என்னிடம் கேட்டாய் ...

காதல் என்று வந்ததும் ஆயிரமாயிரம் ...
கவிதைகள் செய்கிறாய்..!
தோழி எனக்கொரு கவிதை செய்ய ஏனடா?
இதனை தாமதம், என்கிறாய்..!

நான்


காதல் எனக்கு  கொடைக்கானல் மேகம்..
அதில் ஆயிரம் சாரல்களுக்கு இடமுண்டு ...!


தோழி உன் நட்பு  என் உள்ளங்கை ஏந்தும் 
ஒரு துளி தேன்...போல என்றேன்.