Thursday, April 28, 2011

சகுனமாய் பார்க்கவில்லை...!!!

விடியல் பொழுதுகளில்
ஈரம் சொட்டும்..
காலைப்பனியோடு கொஞ்சம்
காலார நடை கொள்கின்ற
தருணம்..

புலரும் பொழுதுகளில்
மெல்லனே விரிந்து
வெட்கம் சிந்தும்
பொன்னிற பூக்காடு..

குயில்களா?
குருவிகளாவென
தெரியாது..!
கொஞ்சும் குரலில் தூரத்து
கானம் பாடி...!
எதையோ தேடி..

இருள்...மெல்ல
எதிர் வீட்டு இளைஞனை
கண்ட குமரிப்பெண் போல
பார்வை விளக்கி
நாணத்தால்
மிளிர்கிறது..!

இன்னும் எத்தனையோ
செய்திகளை
தாங்கியே எதிரே கடந்து போன..
பேப்பர்காரர்..

பிள்ளைக்கு பால்
வாங்கசெல்லும்
பெண்மணிகள்..
இவர்களை எல்லாம் கடந்து..
அனுபவித்து வந்தேன்

என் காலையை..

அலுவலகம் புறப்படும் போது..
எதிர்வீட்டுக்காரர்
சகுனம் பார்க்கிறாராம் !
வீட்டுக்குள்
முடங்கியே கிடக்கிறாள்
விதவையான அன்னை..!

இயற்கை இதுவரை
என்னை காலை வேளையில்
சகுனமாய் பார்க்கவில்லை..!
மனைவி இழந்த கணவன்!...
-..............................ராஜா

Saturday, April 16, 2011

சென்னையில் மழை... ?!!.

சிங்கார சென்னை சீண்ட ஆளில்லாமல்
கிடந்த சாலைகளாகிப்போனது ஓர் மழை நாள்
அன்று கப்பல் விட்டு விளையாடிக்கொண்டே
இருந்த சிறுவர்களை கடந்து

காததூரம் ரெக்கை விரித்து பறக்க துடிக்கும்
கைகளை பத்திரமாய் விரித்து
வில்லின் அம்பாய்..சீறிபாய்ந்த..
மழைசாலை இருசக்கரவாகனம்
இரண்டும் என்னிடம் ..
ஆனால் கனவினில் மாத்திரம்..
சென்னையில் இதெல்லாம் சாத்தியம்...



லண்டன் 1990

கல்யாணப் பந்தியை,
எட்டிப் பார்க்கும்,
ஏழைச் சிறுவனின்
ஏக்கத்தை
இன்று...
உணர முடிந்தது...!
*வீடு கிடைக்கும் வரை
26 நாட்களை
ஒரு கெஸ்ட் ஹவ்ஸில்,
மகன்,மகளுடன்
ஒண்டுக்குடித்தனத்தில்
முடங்கிக் கிடந்த
வேளையில்
எங்கள் உணவு
காலையில் ரொட்டி ஜாம்
மதியம் ரொட்டி ஸாஸ்
இரவு ரொட்டி சீஸ்
என்று வகை வகையாய்
நளபாகத்தில்..காய்ந்திருந்தேன் என்று*
1990செப்டம்பர்
லண்டன் சென்று வந்த சித்தியின்
வார்த்தைகளை கல்யாணவீட்டில் கேட்டபோது....

மழை மாலை...

செந்தேனை மேற்திசையில் தெளித்தார்
போல்மேகம் சிவந்த மேகம்...
சில்லென்று காற்று..
சிறிது தென்றலை குழைத்து
அலுவலகம் வெளியே
ஆனந்த மாரிக்கு
தயாராகிட உள்ளிருந்து
வெளிமட்டும் காணும் கண்ணாடிமீது
படிந்த நீர்த்திவலைகளை ரசித்தபடியே..
தயாரானது இந்த வரிகள் ......
-கார்த்திக் ராஜா....

Friday, April 15, 2011

இந்த கவிதை (?) புரியாமல் போன நண்பர்களுக்காக!
நண்பர் ராயபுரம் ரிக்ஸாரவிகிட்ட கொடுத்து சென்னை தமிழில்
மொழிபெயர்ப்பு செய்த இடுகை கிழே.....

சேர வளப் பெருநாட்டின் =நம்ம கேரளா பக்கத்துல
கொற்றைவன் மேலவளக்காட்டின்..=மேற்கு தொடர்ச்சி மலைக்கு அப்பாலிகா
வானுயர்காட்டில் அன்றோர் = கொச கொசன்னு பெரிய காடு
பதிகம் வேட்டைக் = க்ரூப்பா
கணட்டியர் புரவியாலோடி=ஒரு ராசா குதிரைய இஸ்த்துகினு
மாலம் சொற்ற நின்றான் ..=வேட்டைக்கு போய்கினான்

தனித்துவ மானொன்றை = டிப்ப்றேண்டா கீதேன்னு ஒரு மான பார்த்து
தணிக்கையாய் துரத்திட..= சிங்குலா போய் மிங்க்ல் ஆய்கிட்டான்
தடம் மறந்த தலைஞ்சனுமானன்= pathavera மண்டைல புர்ர்யல..
கொற்றவனின் உடைவும் = ராசாவோட வாழும்
மற்றாண்டை புரவியுமாய் = அரேபியால இர்ந்துஇஸ்த்துகினுவந்தகுதுரையுமா

மருதக்காட்டில் தனித்திடலுற்றான் = காட்டுகுள்ள சிக்கிகுனான்

செரப்பைபூ திலுமிய..= இன்னமோ புதுசாகிற பூவா தெரியுற காட்டுல

சோழவளக்காட்டில் தனித்து திரியும் = போம்போது
பொழுதினில் புங்கை மாற வேர்த் = சவுக்கு மரமாண்ட..
திட்டில் விரைவாய் துடித்த சிறகாய் = ரெக்கைய ஆட்டிகினே
நீலாட்டில் குருவியோ ன்றுவேடனொரூ = குருவி ஒன்னு கிடன்துச்சா
துளைத்த அம்போன்றில் = எதோ ஒரு கஸ்மாலம் குருவிக்காரன் அம்புபட்டு

நீர்த்திருந்த உயிரைக் கண்டு உளமதில் = சாவ போற கண்டிசன்ல
துடித்த தலைஞ்சன் தன்க்குறு = மன்சு கேக்காம
வாழ் கொண்டு துளைத்த அம்பை = கைல இருந்த தம்மாதுண்டு கத்திய வச்சி
தழித்தேடுத்து உயிர்த்துடிக் = நெம்பி எடுத்து
கும்பறவையொன்றின் உயிர் காத்த = காப்பாத்தி புட்டான்பா
உயருள்ளலாய் ஆகியதுணர்ந்தே = இன்னாமா வேல செயஞ்சன் தெர்யுமா..

நீர்தாடகை தேடி விரைந்தே..பெயர்ந்தானன் = அப்பாலிகா தண்ணிகாவ
நீரும் கண்டு வழிகாட்டிப்பறவையான = போய் கண்டுக்கினான்
நீலாட்டின் குருவி கொற்றவனின் = அந்த குர்வி சொக்க வலி சொல்லும்பா
உய்வால் நெய்வுரப்பெருகிறது = அத வைசுகினே நம்மாளு எஸ்ஆகிட்டான்போ

அன்டிலோர் கட்டை கடந்திட்ட = அப்பிலருந்து
மன்னான் அன்றிருந்து அம்பேய்திட = மவராசன் உண்டிவில்ல
திடமில்லா தீரனுமாணன். = கைலையே தொடலா
எத்துணையே உயிர் பிரித்து = இத்தன..அனிமல்ஸ கொன்னவன்
விளையான்டிட்ட காட்டில் = தெரியுமா..காட்டுகுள்ள

மனமாற் பெற்றிடவோர் காரணமாய் = மன்சு மாரிடான்பா
அமைந்த அக்குருவி-க்கு மன்னவனின் = அந்த சொக்கா போலச்ச குருவிக்கு
மைந்தைப்போல் ஒற்றைக்கால் இலுப்பை = நம்ம தல-யோட மவன் மாதியே

கால்ல சோர்ஸ் இல்லபா..



-கார்த்திக் ராஜா = இந்த பேஜார் புட்ச்சவந்தான் இத எழுதுனாணமாம்....
சேர வளப் பெருநாட்டின்
கொற்றைவன் மேலவளக்காட்டின்..
வானுயர்காட்டில் அன்றோர்
பதிகம் வேட்டைக்
கணட்டியர் புரவியாலோடி
மாலம் சொற்ற நின்றான் ..

தனித்துவ மானொன்றை
தணிக்கையாய் துரத்திட..
தடம் மறந்த தலைஞ்சனுமானன்
கொற்றவனின் உடைவும்
மற்றாண்டை புரவியுமாய்

மருதக்காட்டில் தனித்திடலுற்றான்

செரப்பைபூ திலுமிய..
சேரவளக்காட்டில் தனித்து திரியும்
பொழுதினில் புங்கை மாற வேர்த்
திட்டில் விரைவாய் துடித்த சிறகாய்
நீலாட்டில் குருவியோ ன்றுவேடனொரூ
துளைத்த அம்போன்றில்

நீர்த்திருந்த உயிரைக் கண்டு உளமதில்
துடித்த தலைஞ்சன் தன்க்குறு
வாழ் கொண்டு துளைத்த அம்பை
தழித்தேடுத்து உயிர்த்துடிக்
கும்பறவையொன்றின் உயிர் காத்த
உயருள்ளலாய் ஆகியதுணர்ந்தே..

நீர்தாடகை தேடி விரைந்தே..பெயர்ந்தானன்
நீரும் கண்டு வழிகாட்டிப்பறவையான
நீலாட்டின் குருவி கொற்றவனின்
உய்வால் நெய்வுரப்பெருகிறது

அன்டிலோர் கட்டை கடந்திட்ட
மன்னான் அன்றிருந்து அம்பேய்திட
திடமில்லா தீரனுமாணன்.
எத்துணையே உயிர் பிரித்து
விளையான்டிட்ட காட்டில்



மனமாற் பெற்றிடவோர் காரணமாய்
அமைந்த அக்குருவி-க்கு மன்னவனின்
மைந்தைப்போல் ஒற்றைக்கால் இலுப்பை
-கார்த்திக் ராஜா

எனக்கென ஒரு.............

எனக்கென ஒரு போர்
எனக்கென ஒரு நிழல்
எனக்கென ஒரு நண்பன்

எனக்கென ஒரு காகிதம்
எனக்கென ஒரு கவிதை

எனக்கென ஒரு காதல்...