திசைகள் எனக்கு வேண்டாம்...!
தினம் ...இரவு பகல்
எதுவும் வேண்டாம்..!
நீலவானுக்கும்
அலையில்லா கடலுக்கும் நடுவே பச்சையாய்ப்
பூத்திருக்கும்
சிறு மண் மேட்டில்...!
சிறகடித்துத் திரியும்..
சிட்டுக்குருவி கூட்டில்..-வாழ
ஒற்றைக்குரலில்
ஓர் வரம் வேண்டும்..!
பசி தூக்கம்
வேண்டாம்,
பகை நட்பும்
வேண்டாம்..!
கள்ளம் வைத்துப்
பேசும் உள்ளங்கள்
எப்போதும் வேண்டாம்...!
அன்பும் ஆசையும்
வேண்டாம் ; அவையெல்லாம்
அரவணைக்கிறேன் பேர்வழி -என
என்னைப் பதம் பார்த்துப்போன
காயங்கள் இன்னும்
ரணப்பட்டே கிடக்கின்றன...!!
வேண்டியதெல்லாம் நான் பெருங்குரலெடுத்து
அழும் போது.. வழியும்
அந்த கண்ணீர்த்துளி
இந்தக் கடலுக்குள் விழுந்து
காணாமல் போவது போல்...!
என் கவலையும் எதிரொலியும்
எனக்கே கூட கேட்காமல் போகவேண்டும்..!
இப்படியோர் இடத்தில்...!
-கவிதைக்காரன்!
No comments:
Post a Comment