அலட்சிய அட்டைகள்
நம் லட்சிய
உதிரத்தை
உறிஞ்சிப்போதல் கண்டு
எப்போது தான்
கொதித்திட்டோம்...!
நாளை
பார்த்துக்கொள்ளலாம்!
மறு நாள்
பார்த்துக்கொள்ளலாம்
அடுத்த வாரம்
பார்த்துக்கொள்ளலாம்
அடுத்த திங்கள்
பார்த்துக்கொள்ளலாம்-என
அடுத்து அடுத்து என்றே
படுத்தே கிடந்ததினால் தான்
பட்டினிக்கூட்டத்திற்கு
பஞ்சமே இல்லையோ..!
அழுது நின்ற கண்கள் கூட..!
கண்ணீரின்றி வற்றிப்போனதற்கு
உன் அலட்சியமுமோர் விடைதானோ!
இன்று மழையில்லை..!
உனக்கோ குடைகேடானது..!
நாளை விளைநிலமில்லை
உனக்கு அடுக்குமாடி வீடானது..!
மறுநாள் விதைக்க
விதையுமில்லை..!
நீ வித் அவுட் சீஸ்
பர்க்கரை வெண்ணையில்
தொட்டு விழுங்கிக்கிடக்கிறாய்..!
நாளை விவசாயமுமில்லை
விவசாயியுமுமில்லாமல்
போன பின், நீ எங்கள் சுடுகாட்டு வீதியில்
குலசம் விசாரிக்க வந்தென்ன பயன்.!
இங்கே புயலடித்தால் உனக்கென்ன?
பூகம்பம் வந்தால் உனக்கென்ன!?
உன் வீட்டுக் கண்ணாடிக்கோப்பை
விழுந்து உடைந்தால்
வீலென்று பதறும் நீ...
உன் கண் முன்னாடி மடிந்தே போகும்
சக மனிதனை கண்ணெடுத்தும் பாறாதது ஏனோ!
உன் அலட்சியத்திற்கும்
அவனுக்கும் சம்பந்தமில்லை
என்று மட்டும் சொல்லிவிடாதே..
அவன் வீழ்ந்து கிடப்பதின் சாரமே
உன் அலட்சியத்தின் அஸ்திவாரத்தினால்தான்
கதவிடுக்கில் நசுக்கப்பட்ட
கைவிரல் போல்...! அவன் துடித்ததெல்லாம்;
உன் ஒற்றை விரல்
கடமையை நீ செய்யாது போனதினால் தான்!
ஓட்டுப்போடும் சரிசையில் நீ
இல்லாது போனதினால்; ஆட்டிப்படைக்கும்
அறுகதை அற்றக்கூட்டத்தை அவையேற்ற காரணமாய்!
இயற்கைக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்
மழை இல்லாது போனதற்கும் மாண்டு உழவன் சாவதற்க்கும்
நானெப்படி பொறுப்பேவேனென்றா சிந்த்தாந்தம் பேசிடாதே...!
மண்ணை கடத்தி.. என் நிலத்தாயை
கற்பழித்தான்; மதிலைக்குடைந்து
எங்கள் கனிமத்தை கவர்ந்திட்டான்,
கன்னி வயிற்றில் கத்தியைச்சொறுகுதல்
போல- எம் நதியைக் கீறி நீரை கடத்திட்டான்..!
உரிமைப்போராட்டம் உளுத்துப்போய்
உணர்வுக் கொதிப்பலை..அடுப்பின் தீயை
அணைத்துப்போனது..
உழவுக்கு வழியில்லை.!
உணவுக்கு.. உரமில்லை..!
தானியங்கள் வீணாக்கி..!
தரணியை பாழாக்கி..!
கழநியை கட்டிடமாக்கி..!
ஊரெங்கும் மது ஊட்டி..
ஊழலில் ஊறித்திழைத்து..!
தான் மட்டும் வாழ்ந்து போகும்
தன்னாட்சி தறுதலைகளை
தனிப்பெரும்பான்மையினால்
அவையேற்ற உன் அலட்சியம் தான்
காரணமே..!
உன்னை மட்டும் கை நீட்டிச் சொல்லல்
தகுமோ! உன்னைப்போல் உணர்வுச்சோம்பேரிகள்
அலட்ச்சிய அரிதாரத்துடன்...! ஆயிரமாயிரமாய்..!
பின் நாடு பட்டுப்போகாமல்
பட்டாடைப்பொலிவாய்
திரிந்திடுமா என்ன?..!
மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும்
மக்களின் அரசில் மக்கள் பாடு மந்தை மாடாய்..!
இதுவரைக்கும் உணர்த்தியதுண்டா உனக்கு..!
ஏதேனும் உறுத்தல்கள்..!
மிச்சம் வைத்துக்கொள் நாளை ..அவ்வுறுத்துதலை..!
என் கேள்விகளுக்கு உன் அலட்சியம் பதிலாய்..
இல்லாது போகட்டும்...!
4 comments:
மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும்
மக்களின் அரசில் மக்கள் பாடு மந்தை மாடாய்..! /
அலட்சியத்தை
அலசிய
அவசியமான பகிர்வுகள்..
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html
நான் ஒரு விவசாயியின் மகன்தான், ஆனால் விவசாயி இல்லை. பல நேரங்களில் எனக்குள்ளே நானே குமுறிக்கொண்டுதான் இருப்பேன். எனது ஏக்கங்களை நான் எப்படி சொல்வேன். விவசாயிக்காக தங்களின் படைப்பிற்கு ஓராயிரம் நன்றிகள்!
Oru vivasaayin
Alachhhiyathin iniyavuthu mutrupulligal vaikatum
Post a Comment