Wednesday, September 5, 2012

சிவவாக்கியர் சித்தர்..


நண்பனிடம் சற்று முன் தொலைப்பேசி உரையாடல் போது பேச்சு அப்படியே சமீபகாலத்தில் ஊடகங்களுக்கு செய்திகளை வாரி வழங்கும் ஆன்மீகவாதி ஒருவர் பற்றி [கதவைத் திற ] பேச்சு தொடர்ந்தது..! [ 09-05-2012 ]

அப்படியே...  “சிவவாக்கியரை”  பற்றி அறிமுகப்படுத்தினால்... அக்காலச் சித்தர்களில் சிவவாக்கியரின் பாடல்களை உடனே தேடிப்படித்து தொலைப்பேசி உரையாடலினூடே.. வியந்து கலந்துரையாடினோம்!



சிவவாக்கியரை ஒரு சித்தர் எனச்சொல்லுவதை விட பெரியாரின் முன்னோடி எனச்சொல்லலாம்! அவரின் பாடல்களில் அவர்ச்சாடாத சமூக மூடநம்பிக்கைகளே இல்லை  எனச் சொல்லலாம்!


சிலை வழிபாடு பற்றி

 “நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

சமைத்த பாத்திரம் சுவையை உணருமா என்ன? உள்ளிருக்கும் கடவுளை அறியாமல் நட்டுவைத்த கல்லை நாலு புஷ்பம் சாத்தி வணங்கி நிற்கிறாயே என்கிறார்.!

ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை [?]  ஒரு கட்டுக்கோப்பிற்குள்
கொண்டுவர,  நல்வழிப்படுத்த  உருவ  வழிபாடு  தேவைப்படுகின்றது.

சட்டத்துக்கும்,  சான்றோர்  உரைகளுக்கும்  கட்டுப்படாத   சிந்தைத்
தெளிவில்லாத  மனிதர்களுக்கு,  ஒரு  வடிவத்தைக்  காட்டி இதுதான்
கடவுள்,  இவர்  உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை
தரக்  காத்திருக்கின்றார்.

ஆகவே  தவறு  செய்யாதே என்று கண்டிப்போமானால்  அந்தக்  கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில்கடவுள்  கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்; கடவுளின் கட்டளை என்று  சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்
படுகிறார்கள்.

அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில்பயனாகிறது.  பலரை  நல்வழிப்படுத்த  உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர்.

     ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.உருவ  வழிபாடு ஒரு  மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம் ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில் இருப்பதாகவும்,   மண்ணில்  இருப்பதாகவும்,    மரத்தில்   இருப்பதாகவும்,
உருவமைத்துக்    காட்டுவது    கடவுளையே   அவமதிப்பதாகும்  [ஆனாலும் கடவுளை **கடவுள்ச் சித்தாந்தத்தை** இவர்களும் விட்டுவிடவில்லை]  என்று
வாதிடுகின்றனர். சிவ வாக்கியர் சாடியதெல்லாம் மூடப்பழக்கவழக்கங்களை...

   “ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
     தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
     ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
     பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”

-பாடலின் அர்த்தம் அதிகம் விளக்கத்தேவையில்லை.. *ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை..!* யாரென்றறிந்திட முடியாத ஆதி சித்த நாதரை பேதை மனிதர்கள் செய்யும் கூற்றுக்களை பார் உலகமே என்கிறார்..!

எச்சில் பண்டங்கள் இறைவனுக்கில்லை என்கிறீர்களே.. உங்கள் வாய் முணுமுணுத்த வேதங்களில் எச்சில் படவில்லையா? கன்று எச்சில் பசு மடியில் கறந்து நீங்கள் அபிஷேகிக்கும் பாலில் இல்லையா?

[அவர் இன்னும் ஆழமாய் மனிதனின் பிறப்பில் கூட கை வைத்து இருக்கிறார்... விந்து எச்சில் பற்றியும்  நான் தவிர்த்தமைக்கு மன்னிக்கவும்]

மீன் இறைச்சி தின்பதில்லை என கூறும் வேதர்களே மீன்வாழும் நீரைக்குடித்துக் கொப்பளித்ததில்லையோ, மானுரித்த தோலைனை மார்பில் சூடியதில்லையோ,  ஆட்டிறைச்சி தின்னதில்லை என்போரே.. உங்கள் யாகங்களில் ஊற்றும் நெய்யில் உள்லதென்னவோ? என்கிறார்.

 “மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
     மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159)

இவ்வளவு தூரம் வந்தவர் சாதியைச் சாடாமல் போவாரா என்ன? ம்ம்ம் அதையும் துவைத்து தொங்க விட்டிருக்கிறார்.

 “சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ
     பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோகாதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ
     சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே” (47)

 பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
     இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ
     பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
     பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாடு மும்முளே” (40)


ஒருவர் பலரிடத்தும்  பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம்,
ஞானியாகவும்   இருக்கலாம்,   யோகம்  செய்து  கொண்டும்   இருக்கலாம்,
நாட்டைத்  துறந்து  காட்டிலே போய்க்கூட வாழலாம்.  ஆனால் உள்ளத்தில்
தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன
விரதங்கள்  யாவும்  பாழாய்  முடியும்.  உள்ளத்திலே குற்றங்களை வைத்துக்
கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.
     அப்படியானால்  உண்மையான  கடவுள்தான்  யார்? என்ற வினாவுக்கு
அறிவுதான்  இறைவன்  என்று  விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவு
தான்  இறைவன் என்றால்  அறிவாளிகள் மட்டும்தான்  இறைவனைத் தொழ
இயலுமோ?  என்ற  வினாவும்  எழுகிறது.  இல்லை  பாமர  மக்களும்  தம்
அன்பினால்  இறைவனைத்  தரிசிக்கலாம்   என்றும்   இறைவன்   எங்கும்
நிறைந்திருக்கிறான்  என்ற  கருத்தையும்   சிவவாக்கியர்  தம்  பாடல்களில்
நிறைத்துக் காட்டுகின்றார்.



-தேடல் தந்த தளங்களில் இருந்து

கவிதைக்காரன்.

2 comments:

முத்தரசு said...

அப்பாலிக்கா
வாரேன்

முத்தரசு said...

அப்பாலிக்கா
வாரேன்