ஆசிரியர் தினம் - கவிதைக்காரன்!
- ஆண்டுகள் தோறும் ஆசிரியர் தினம்
- வந்து போய்க்
- கொண்டிருப்பதென்னவோ
- வாடிக்கை..!
- அன்றெல்லாம்
- உங்களை தாழ்ந்து
- பணிந்து...!
- கவிதையில் நனைத்து
- கண்ணீர் மொழி பேசும்
- முரட்டுக் குழந்தைகள் நாங்கள்..!
- இந்த முரணை
- நினைத்துப்பார்க்கையில்
- எங்களுக்கே வேடிக்கையாகி இருக்கும்
- உங்கள் பேரில் கேலிகளும்
- நாங்கள் செய்ததுண்டு..!
- அதனை கொஞ்சமும்
- பொருட்படுத்திக்கொள்ளா
- பக்குவம் உங்கள் போல
- யாருக்குண்டு...!
- சொன்னதை எப்போதும்
- சத்தியமாய்ச் சரியாய்
- செய்ததில்லை..!
- கற்றுக்கொடுக்கும் போதெல்லாம்
- எங்கள் கவனம்..கடற்கரை
- தக்கை போல் கவனிப்பற்றுக்
- கிடந்ததும் உண்டு..!
- தேர்வென்று வரும் போது
- மட்டும் மாய்ந்து
- மாய்ந்து படிக்கும் மேதாவிப்
- பிள்ளைகள் நாங்கள்..!
- இன்று மட்டுமாய்
- மேல்பூச்சுக்காய்
- உங்களை புகழ்ந்து
- புகழ்மாலை சூட்டுவிக்க
- எங்களுக்கும் விருப்பமில்லை..!
- ஏனென்றால் நாங்கள்
- உங்களிடம் தானே! இப்படி
- மனதின் வார்த்தைகளை
- உண்மையாய்ப் பேசக்
- கற்றுக்கொண்டோம்!
- ஆம்!
- உண்மையில் நாங்கள்
- உங்களுக்கு ஒப்பாய்
- எப்போதும் நடந்ததே
- இல்லை..!
- ஆனால்!
- வாழ்க்கையின்
- நீரோட்டத்தில் நதி எல்லா நாளும்
- தேக்கங்களாய் இருந்திடாதென்பதை..
- சில நேரம் வெள்ளமெடுத்தது
- போல் உணர்த்திப்போகும்
- உங்களின் வார்த்தைகள்..!
- அந்த வெள்ளத்தில் விழுந்து
- எதிர்நீச்சல் போட
- எப்படியும் பயிற்றுவித்து
- விடுகிறீர்கள்..!
- இங்கே வரும் போது
- நாங்கள் எப்படியெல்லாமோ
- தான் வந்திருந்தோம்!
- மறுத்தாலும் அதுவே
- உண்மையென்றானது..!
- ஆயினும் வெறுத்திடாமல்
- பேதமின்றி அனைவருக்கும்
- வேதம் கற்பித்தீர்கள் நீங்கள்!
- இது...இன்று
- நேற்றுமட்டுமில்லை
- நாளையும் எங்களைப்போல்
- இன்னொருவர்..!
- மீண்டும் மற்றொருவரென..!
- கடந்துகொண்டே போகிறது...!
- நாங்கள் உங்களின்
- நிழலில் நீச்சல் கற்று..
- நடந்து கொண்டே போய்விடுகிறோம்..
- எந்த நன்றியுமில்லாமல்..!
- எப்போதும்
- அதை நீங்கள்
- எதிர்ப்பார்த்ததில்லை..!
- என்பது இப்போது புரிந்திருந்தோம்!
- என்றாவது எங்களின்
- வருங்கால வசந்தங்களில்
- உங்கள்
- நினைவு நாடாக்கள்..!
- எங்களின்
- இசைப்பேழையினில்
- இசைக்கப்பட்டிருக்கும்..,
- அன்றெங்கள் கண்களில்
- துளிர்த்திருக்கும்
- அந்த ஒற்றைத்துளி
- “கண்ணீர்” தான் உங்களுக்கான
- நன்றியைச்சுமந்திருக்கும்..!
- ஆசிரியர்களே... உங்கள் அன்பிற்கு
- முன்னால் நாங்கள் நாணல் தான் எப்போதும்..!
- என் ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்!
-கவிதைக்காரன் !
2 comments:
நல்ல ஆசான்கள் கிடைக்க பெற்றவர்களே.."பிறந்தவர்களில்...வரம்பெற்றவர்கள்" ஆகிறார்கள்.!
நல்ல ஆசான்கள் கிடைக்க பெற்றவர்களே.."பிறந்தவர்களில்...வரம்பெற்றவர்கள்" ஆகிறார்கள்.!
Post a Comment