நேற்று ஒரு தோழியை அழைத்தேன்.
செல்போனில்....
"நீங்கள் டயல் செய்த எண் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது"
"நீங்கள் டயல் செய்த எண் சுவிச் ஆப் செய்யப்பட்டுள்ளது"
என்று இரண்டுதரம் சொல்லி முடித்தவுடன் எதிர்முனையில் தோழி "ஹல்லோ" என்றாள்.
நான் அதிரிந்து போனேன். விசாரித்ததில் அது அவளது காலர் டியூனாம்.
என் காது கழன்டு கம்மாயில் விழுந்தது.
பழைய உதவாக்கரை பாய் பிரண்டுகளை கழட்டிவிட பிரத்தேகமாக
வடிவமைக்கப்பட்டது என்ற கூடுதல் தகவலோடு சிரித்தாள்.
"தி ஸ்மெல் ஆப் சென்னை"
என்றால் எப்படி கூவம் பிரத்தேக இடம் பிடிக்குமோ அது போல
"தி சவுண்ட் ஆப் சென்னை" என்றால் அப் கோர்ஸ் அதே தான்
"த்தா....பெரிய பரு....நீ...ம#ரு....த்தா...ல..க..புடு...சாவுகிராக்கி..." .
இவற்றோடு சேர்ந்து கோரஸாக முழங்கும் சென்னையின் இன்னொரு நேட்டிவிட்டு சவுண்டு
மாஹூ....மஹூ...மஹூ.மஹூ....மாஹூ.....
ஆட்டோ. ஆட்டோகாரர்களின் சைக்காலஜி சிலருக்கு அத்துப்படி.
சில டிப்ஸ்.
நீங்க பைக்கிலோ காரிலோ சென்னையில் பயணித்தால்,
சவாரி இல்லாத ஆட்டோவுக்கு பின்னால் பயணிப்பதை தவிர்க்கவும். பின்னால் எத்தனை வண்டிகள் அணிவகுத்து வந்தாலும் அது பத்து கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் நகரப்போவதில்லை. பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருக்கும் யாரோ ஒருவர் கொஞ்சம் ரிலாக்ஸாக கையை உயர்த்தி கொட்டாவிவிடும் பட்சத்தில் அட்டோ சடன் பிரேக் அடித்து அங்கேயே நின்றுவிடும். நீங்கள் அப்பாவியாய் போய்.... பிரேக் பிடிக்காமல் பின்னால் முட்டினால் சென்னையின் முதல் நேட்டிவிட்டி சவுண்ட் கிளம்பிவிடும். அதேதாங்க "த்தா....பெரிய பரு....நீ...ம#ரு....த்தா...ல..க..புடு...சாவுகிராக்கி..." .
இப்படி ஆட்டோக்களின் ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகி இம்சித்து வரும் நிலையில் நாம் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை பொத்தானை அழுத்தி தேர்ந்தெடுத்த ஒரு பித்தான் சட்டசபையில் "சிட்டியில் ஷேர் ஆட்டோ பெர்மிட்டுகளை அதிகப்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கை வைத்துள்ளார்.
கே.என். நேருவோ ஷேர் ஆட்டோக்ளுக்கு பதிலாக மினி பஸ் அறிமுகப்படுத்தப்படும் என்றார். அவர் சொன்னது கொஞ்சம் அறிவார்த்தமான பதிலாக இருந்தது. ஆனால் அது செயல்வடிவம் பெறும் போது தான் சிக்கலே இருக்கிறது. எந்தெந்த பகுதிகளில் மினி பஸ்கள் இயக்கலாம் என்ற விவாதம் வரும்பொழுது ஏற்கனவே ஷேர் ஆட்டோவின் தயவிலும் கட்டுப்பாட்டிலும் இயங்கி வரும் பகுதிகளில் மினி பஸ் இயக்க அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் நமக்கு தெரிந்த அரசியல்விதிகளின்படி அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். காரணம் பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களும் மீட்டர் ஆட்டோக்களும் அரசியல்வாதிகளுக்கும் செல்வாக்கு மிக்க அதிகாரிகளுக்கும் ரௌடிகளுக்குமே சொந்தமானது என்பது ஊரறிந்த உண்மை.
எனவே ஆட்சியாளர்களின் வருமானம் பாதிக்கும்படியான எந்த ஒரு நடவடிக்கையிலும் அவர்கள் இறங்கமாட்டார்கள். மினி பஸ் வந்தென்ன நாம் வழக்கம்போல் ஷேர் ஆட்டோவையும் மீட்டர் ஆட்டோவையும் துரத்திக்கொண்டே ஓடவேண்டியது தான்.
அரசியல்வாதிகள் மக்களை எந்த அளவுக்கு முட்டாளாக நினைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஒரு சின்ன சான்று.
1. எல்லா ஆட்டோக்களிலும் கட்டாயமாக மீட்டர் பொருத்தியிருக்கவேண்டும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஆனால் அவர் எல்லா ஆட்டோக்களும் இனி மேல் மீட்டர் கட்டணத்தை தான் வசூலிக்கவேண்டும் என்பதை கண்டிப்பாக சொல்லவில்லை.
2. ஆட்டோக்காரர்களின் இந்த அராஜகத்தை எப்படி அரசாங்கம் ஒடுக்கப்போகிறதாம்?
இன்னும் நிறைய ஆட்டோ பெர்மிட் கொடுப்பதன் மூலமாம். நிறைய ஆட்டோ பெர்மிட்டுகள் வழங்குவதால் ஆதாயமடைய போவது யாரென்று சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை.அதாவது நிறைய ஆட்டோ பெர்மிட்டுகள் கொடுத்தால் சென்னை நகரமெங்கும் ஆட்டோக்களாக நிறைந்திருக்கும். அப்போது போட்டி அதிகமாகும். போட்டி அதிகமானால் கட்டணம் தானக குறைந்துவிடும்.
இது அரசாங்கத்தின் வாதம். இப்படி ஒரு அறிவார்த்தமான அரசியல் உலக அரங்கிலே எங்கும் காண கிடைக்காதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதே ஸ்ட்ரேட்டஜியை பின்பற்றி தமிழக அரசியலை தூய்மைபடுத்தவேண்டுமென்றால் ஒரே வழி.
234 பதிலாக 2000 தொகுதிகளாக பிரித்து 2000 எம்.எல்.ஏக்களுக்கு பெர்மிட் வழங்கவேண்டும். எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் சுருட்டுவதில் போட்டி நிலவும். போட்டி வந்தால் பொறாமை வரும். போட்டி பொறாமை வந்தால் சுருட்டுவது ஆட்டோமேட்டிக்காக குறைந்துவிடும். இது எப்படி இருக்கு?
இந்த மேன்மையான திட்டத்தை மிக்கியிடம் தெரிவித்தேன். அவன் சிரித்தான்.
'2000 பேருக்கு பெர்மிட் கொடுத்தா தமிழ்நாடு பத்தாது. அது பத்தாம ஆந்திரா கேரளான்னு கைவச்சிடுவாங்க"
"அங்கேயும் அதே மாதிரி பிரிச்சுட்டா சரியான போட்டி தானே"
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஓட்டு போடுகிறோம். அதை தவிர இந்த அரசாங்கத்தின் மீது நமக்கு என்ன அதிகாரம் இருக்கிரது? இந்தியாவின் ஜனநாயகம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் சர்வாதிகார ஆட்சி. நான் எந்த கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.