பூத உடல் நோகும் கண்ணா...
நாதன் காண ஏங்குவதில்...
காதல் வந்து தேங்கும் நெஞ்சம்
காத்திருந்தும் காலமென்ன...
ஆதலினால் வந்துவிடு ஆவிபற்றிக் கொண்டுவிடு
ஊதல் வந்து வீசுதுகாண்
உயிரின் சப்தம் மாயுதல் கேள்..
ஏனுனக்குப் புரியவில்லை
இதுவரைக்கும் பதிலுமில்லை...
கோமறுத்த கன்றினைப் போல் கோதை உள்ளம் கனன்றதே பார்....
பார்த்திபன் தோள் கொண்டவனே பாவைதேடி வாராயோ...
ஊழிநிறங் கொண்டவனே
உனது மாரில்ச் சாயேனோ
ஆதிஷேசன் மீது ஆடும்
ஆநிறைக் கோனே...
என் நாதமென்னும் துகில் விரித்தேன் தாவி ஓடிவா...
உன் கூர்விழியால் குமைந்த பெண்ணை கூதல் வந்து வீசும் முன்னே
குலம்வளர்க்கச் சேராயோ...
- கவிதைக்காரன்

1 comment:
ஆழிவாசனின்
மதுர கீதம் காதினில் பாயுது கேள்
தித்திக்கும் திருப்பாவையால்
மாயோன்வேள் மங்கையிடத்து தோயுது காண்
பதிபக்தி நோற்றோளே
அதிபக்தி சுடர்கொடி மீரா அறியாயோ
கூதற்கால கூந்தலழகியே ஏனுனக்கு புரியவில்லை
ஓர் சந்திரதிங்கள் காத்திரு
நாதன் உனக்கே
தினம் பூத்திரு
நா..ரா..யணா… நா..ரா..யணா…
புது சொல்லிலக்கணம் படைக்க காத்திருக்கும் புலவனே
ஈசனவையில் உன் பெயரொலிக்க
உத்தமம் உத்தமம்
நா..ரா..யணா… நா..ரா..யணா…
பெருவுடையான்
Post a Comment