Sunday, December 8, 2013

ரௌத்திரம்

சப்தமிடாத ஓர் ஊமை மௌனம்... உள்ளிருந்து எண்ணங்களை உருட்டும்..

போதிமரம் தேடிச்செல்லும் ஞானவாக்குகள் குப்பைத்தொட்டியெங்கும் இரைந்து கிடக்கும்

வேற்றுகிரகம் போலே சுற்றியிருக்கும் தொடர்பில்லாத மனிதனை தற்செயலாயேனும் கவனிக்கத் தோன்றும்

அடுத்தது என்னவென்ற கேள்விகள் தாகத்தைக் கொடுக்ககாலிக்
குடுவைகள் எக்காளமாய்ச் சிரிக்கும்.

கவனமாயிறுவென்னும் கருணைப்பட்டோர் வாக்குகள் போலானதோர் பசி தீர்க்கும் மந்திரம் வேறில்லை...

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

இச்செகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

பாரதி மெல்ல மெல்ல உள்ளிருந்து ரௌத்திரம் விதைக்கிறான்.. கூச்சலிட்டமனம் அமைதிப்பட்ட குளமாகுது!

அதன் கள்ள மவுனத்துக்கடியில் ஏதுகுடியிருக்குதென்று யாரறிவார்.

-கவிதைக்காரன்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தோல்விகளை ஏணிப் படியாக்கி கொள்ள வேண்டும்...

நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...