நிச்சயமாகச் சொல்வதென்றால் கிரிதரனுக்கு முன்னதாக நேரில் பார்த்த முகநூல் நண்பன் யாரென்றூ கேட்டால் இவனைத்தான் சொல்லனும்
சென்னைக்கு வந்திருந்தபோது அவனும் ஏதோ தேர்வுக்காக வந்திருந்தான்.
நான் சதீஷ் ரமேஷ் சரண் நால்வரும் தான் முதலில் சந்தித்துக் கொண்ட நன்பர்கள்.
கோவையில் அப்போது பணியில் இருந்தான் சரண்.
எங்க கூட்டத்திலேயே ரொம்ப நல்லவன் யார்ன்னு கேட்டா சரணைச் சொல்லலாம்.
அவ்ளோ கலாய்த்தாலும் சின்ன புன்னகையில் கடந்து போய்டுவான். அக்மார்க் நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அப்படி ஏதும் இருந்தா அது எங்களோடு சேர்ந்ததாகத்தான் இருக்கும்.
சரணும் நானும் சென்னை கோவைன்னு பைக்கில் ஊர்சுத்தியிருக்கோம். அதெல்லாமே கொண்டாட்டமான தருணங்கள்.
பசங்களூக்கு ஒரு பாதுகாப்பு வளையம் இருக்கும். அது என்னன்னா
மாமா,மச்சான்னு கூப்பிட்டுக்குவாங்க ஆனா! இந்த மாப்பிள்ளைன்னு கூப்பிடுவதற்கு கொஞ்சம் சங்கோஜப்படுவாங்க...
எங்க ஜில்லாவுலயே அதை உடைச்சது சரண்தான்.
"மாப்ள டேய்" -இப்படித்தான் ரொம்ப மரியாதையா கூப்பிடுவான். ரொம்ப மரியாதை தெரிஞ்ச புள்ளையாண்டான்.
முன்னாடில்லாம் அடிக்கடி முட்டிக்குவோம். பத்தாவது நிமிசம் ஒட்டிக்குவோம்.
எங்க friendship எல்லோரிடத்திலும் அதி உன்னதமான நம்பிக்கையும் ஒட்டுதலும் இருக்கும். ஆனா அது அவரவர் வரைக்கும் தான்.
இதை விளக்கமா சொல்லனும்ன்னா போனவாரம் சரண் சென்னை வந்திருந்தப்போ ரூம் புக் பண்ணும் போது நான் தான் அட்ரஸ் ஃபில் பண்ணினேன். அப்போதான் அவன் ஐடி-யில் "பாலக்காடுன்னு" போட்டிருந்தது.
அதுவரைக்கும் அவன் சொந்த ஊர் எதுன்னே தெரியாது...
சரண் பத்தி ஒரு வார்த்தையில் சொல்லனும்ன்னா ....!
தமிழ், மலையாள, தெலுங்கு கன்னடப் பெண்கள் எல்லாம் தயங்காமல் ராக்கி கட்டக் கூடிய ஒரு அக்மார்க் ஆஞ்சநேயர்.
எங்களோட என்சைக்கிளோஃபிடியா சரண்தான். எல்லா வீடியோ புகைப்பட ஆதாரங்களும் இவன் டேட்டாபேஸ்ல இருக்கும்
பேதங்கள் ஏதுமின்றி
பேரிரைச்சலோடு ஆரவாரம் செய்யும் ஆயிரம் வாரணங்களாய் ஆண்டுகள்
கடந்து நட்போடிருப்போம் ... வா நண்பா...
Ivan Saranraj
@ஆட்டோகிராஃப்_2013_(6)
கொடைக்கானல் சுற்றுலாவின் போது ... |
காதல் தோல்வியில் ரயிலுக்கு முன் பாயும் முன்பு எடுத்த படம். (அந்த ரயில் விபத்துக்குள்ளாகி பயன்படுத்த முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டது லேசான சிராய்ப்புகளோடு சரண் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்) |
பேதங்கள் ஏதுமின்றி
பேரிரைச்சலோடு ஆரவாரம் செய்யும் ஆயிரம் வாரணங்களாய்
|
சரண்ராஜ் |
No comments:
Post a Comment