Monday, December 16, 2013

ஆட்டோகிராஃப்_2013 @DrJeya Bharathi_(5)‬

"நான் : பாஸ் நான் கொஞ்சம் கூச்ச சுபாவம். பெண்கள்கிட்டே எனக்கு பேசவே வராது...
பிரபாகாரன் : அட என்ன சின்னப்புள்ளத்தனமா... போய் கேளுங்க புலவ்ஸ்.:

இப்படித்தான் ஒரு விபரம் தெரிந்து கொள்ள அவரிடம் பேசவே தயங்கி நின்றேன்.
பொதுவாகவே நாமதான் கூச்ச சுபாவமாச்சே
ஒரு விபரம் கேட்பதற்காக அலைப்பேசியிருந்தார் அந்த தோழி.
அது பற்றிய தெளிவிற்காக நேரில் வரமுடியுமா என்றார்.

நேரிலா ...ஆனா நான் திருநெல்வேலியில்லா இருக்கிறேன்னு தயங்க...
அட நான் மட்டும் என்னவாம்! நானும் திருநெல்வேலிலதான் இருக்கேன்.
போஸ்ட் ஆபீஸ்க்கு வாங்கப்பா... கிர்ர்ர்ர்...( இணைப்பு துண்டிக்கப்பட்டது)

ஆனாலும் நான் போஸ்ட் ஆபீஸ் போகவேயில்லை... ஹஹ..
பின் மாலையில் என் கடைக்கு அழைத்திருக்க அங்கே தான் அவரை முதன்முதலில் சந்தித்திருந்தேன்.

சின்ன பயம். நண்பன் வேறு கூட இருந்ததால் வந்தவரிடம் விபரங்களை கொடுத்துவிட்டு
"ஆங்... நன்றி ... பார்க்கலாம்ன்னு ஓடிட்டேன்.ஹஹ..
என்னடா இவன்னு நினைத்த்திருப்பார்... என் அலுவல் ரயில்வே கேட் அருகே அமைந்திருந்தது அப்போது
ரயில்வே ட்ராக் போட்டதால் ரயில் கடக்கும் வரை காத்திருந்தார். அந்த இடைவெளியில்தான்
பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

அவர்தான் . Dr.ஜெயபாரதி. 2012-ம் ஆண்டு தொடக்கமாக இருந்திருக்கும்... அது...
அப்படித்தானே டாக்டர். எனக்கு அப்படித்தான் நினைவு...

சில நாட்கள் கழித்து மீண்டும் சந்தித்தபோது வெறும் கையில் அனுப்பக்கூடாது என்று
மூன்று ஆப்பிள்பழம் வாங்கிக்கொடுத்திருந்தேன்.

மூணு ஆப்பிளை வாங்கிகொடுத்துவிட்டு மூவாயிரம் முறை சொல்லிக்காட்டிட்டான் யா...ன்னு சொன்னாலும் சொல்லியிருப்பாங்க... ஹஹா
ஒரே மாவட்டத்துக்காரர். (தி லி)
கூப்பிடு தூரத்தில் எம் அலுவலகமும். அவர் படிக்கும் மருத்துவமனையும்...

அப்போதிலிருந்து இதோ இன்றைக்கு வரைக்கும் டாக்டர்... டாக்டர்தான்.

முன்னாடியே facebook-ல் அறிமுகமிருந்தும்... நேர் சந்திப்பில் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது... ஹஹ அது ஏன்னே தெரியவில்லை இப்போதுவரைக்கும்...

டாக்டர்கிட்ட பொய் சொல்லக்கூடாதுன்னுவாங்க... நான் இவங்ககிட்ட சொல்லவே மாட்டேன். மீறி சொன்னாலும் மாட்டிக்குவேன். ஒவ்வொரு வார்த்தையையும் கூர்மையா கவனிப்பாங்க தப்பிக்கவே முடியாது...ஆகவே கூடியமட்டும்... மௌனவிரதம் இருந்துடலாம்..ஹஹ..

ரொம்ப அன்பானவங்க..
அதைவிட அக்கறையானவங்க.. நீளமான அறிவுரைகள் நிறைய கேட்டிருக்கேன். கொஞ்சம் திருந்தவும் செய்திருக்கேன்னா பார்த்துக்கோங்களேன்.

அவர் திருமணத்தில் நானும் கிரியும், நானும் பிரகாசும் போய் கலந்துவிட்டுவந்தோம்... சொன்னமாதிரியே பிரியாணி போட்டு கொடுத்தவாக்கை காப்பாத்திட்டாங்க..

2012-ஜனவரியில் என் பிறந்தநாளைக்கு " என் படத்தை ஓவியமாக வரைந்து கொடுத்தார். இன்னும் அப்படியே பத்திரமா வைத்‌திருக்கிறேன். சொல்ல மறந்துட்டேனே... பிரமாதமான ஓவியர்.

2014-ஜனவரியில் கூட எனக்குப் பிறந்தநாள் வருது டாக்டர்... ஹாஹா சும்மா ஒரு நினைவுறுத்தல்...

அவரது ஒவ்வொரு பிறந்தநாளுக்கு நான் கவிதை எழுதி போஸ்ட் பண்ணிடுவேன்.

போன முறை மறந்துட்டேன். போன் போட்டு திட்டுனாங்க... ஹஹ அடிச்சுபுடிச்சு வந்து எழுதியிருந்தேன்.

எங்க அப்பா மாதிரி ஒரு அக்கறையான கண்டிப்போடு என்னை வழிநடத்துற...
எங்க ராஜி... (ஜெயராஜி என்ற ஜெயபாரதி ) டாக்டரின் அன்பினைச்சுமந்து...
இதோ 2014...ம் ஆண்டை நோக்கி...

DrJeya Bharathi

‪#‎ஆட்டோகிராஃப்_2013_5‬
copy of Ravivarma..Fruit lady -JB 
எனக்குப்பிடித்த ஓவியம் -JB 

முதல் ஓவியம்  -JB  ஓவியங்களின் ஓனர் ... 

2 comments:

காயத்ரி தேவி said...

எனக்கு முதல்ல அந்த ஓவியங்கள் தான் கண்ணுல பட்டுச்சு. என்னா அழகு.... :)

அப்புறம், என்கிட்ட ரொம்ப பயமுறுத்தி வச்சுட்டதால நான் அப்படியே தள்ளி நின்னுக்குறேன் அவ்வ்வவ்வ்


முக்கியமா, இதுல எனக்கு புடிச்ச வரி சொல்லியே ஆகணும்
///அவர் திருமணத்தில் நானும் கிரியும், நானும் பிரகாசும் போய் கலந்துவிட்டுவந்தோம்... சொன்னமாதிரியே பிரியாணி போட்டு கொடுத்தவாக்கை காப்பாத்திட்டாங்க..///

பெரு வுடையான் said...

நல்ல தோழமை

வாழ்த்துகள்