Saturday, December 14, 2013

ஆட்டோகிராஃப் 2013 @Prakash Sona (3)_

அது ஒரு முகநூல்குழு... சிற்சில விவாதங்களில் அறிமுகமானோம்.

பொருள் பொதிந்த பேச்சு... யாரிவன் என்று கவனிக்கத்தக்க கண்ணியம்.

பெரும் இடைவெளிக்குப்பின் அரட்டையில் பேசிக்கொடோம். அழைப்பு எண்களை பரிமாறிக்கொண்டோம்.

ஒருநாள் திரு.ஷேர்கான் ஹமீது அவர்களோடு சென்னையில் எங்கள் நண்பர்கள் எல்லாருமாய்ச் சந்திப்பதாக திட்டமிட்டுக் கொண்டோம்.

சென்னையில் வசிக்கும் நண்பர்களையும் அழைக்கலாம் என்றதும் முதலில் சுழற்றியது பிரகாஷின் எண்ணைத்தான்.
நட்புவட்டத்தில் என்னோடு மட்டும் அறிமுகமாகி இருந்தவன். (பேச்சளவில்) சந்திப்புக்கு நான் வரும்முன்னே... வந்து கலந்து எல்லோரோடும் ஐக்கியமாகிவிட... வழக்கம் போல நான் லேட்.

அதன் பின் அதிரிபுதிரியான அந்த கலாய்ப்பும்,சந்திப்பும்
எங்களை பிணைத்துவிட... இதோ இன்னும் தொடர்கிறது...

எங்க ஊர்க்காரன் .  (திலி)
பெரும் தமிழ்ச்செருக்கு பிடித்தவன். இலக்கியம் இலக்கணம் எல்லாம் பேசுவோம். முன்பெல்லாம் எந்த புத்தகத்தைப் படித்து முடித்ததும் அதைப்பற்றிய நீண்டதொரு உரையாடல் இருவருக்குமிருக்கும்...

ஒரே தடத்தில் சிந்திப்பவர்களாதலால் இவன் வாதங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும்.

இன்றைக்குவரைக்கும் பெரும் மதிப்புடைய நட்பினுக்கு உரியவன்...

வேறென்ன சொல்ல பிரகதீஷ்வரன்... பெரியகோவில் போல என் நண்பன் பிரகாஷின் உள்ளமும் பெரிது...

இவன் சோகப்பட்டு ஒரே ஒருநாள் மட்டும் உடனிருந்து பார்த்திருந்திருக்கிறேன்.
இனியெப்போதும் அதுபோலொருதருணம் வாய்க்காது நண்பா...

என்றென்றும் நட்புடன்..

பிரகாஷ் சோனா

#ஆட்டோகிராஃப்_2013








ஆதி மற்றும் பிரகதிஷ்வரன் @பிரகாஷ் 


அத்திப்பழம் சிவப்பா? தன்  அத்தமக சிவப்பா? -ஆராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட படம்.




சின்னதா ஒரு ஹைக்கூ...


5 comments:

ஜீவா said...

பிரகாஷ் அண்ணா

இவங்க அதிகமா இலக்கியம் இலக்கணம் பேசி தான் நானும் கேட்ருக்கேன். நம்மோட எழுத்துகளுக்கு இவங்க கமன்ட் வேணும்னு எதிர்பாக்க வைக்குற ஆள்.

சூப்பர் அண்ணன்

chandra sekar said...

Nice

அடுத்து யாரு !.♪

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது நண்பா...

வாழ்த்துக்கள்...

Unknown said...

எய்யா என்னய்யா இப்டி சொல்லிபுட்ட...

என் மேல இம்புட்டு மருவாதையா...

நான் இவ்ளோ நாளா என்னைய மானாவாரி பயிருன்னுல்ல நினச்சிட்டுருந்தேன்....

நீ பாசதாலும் மருவாதையாலும் வளத்த பயிரு நானுங்கறத எப்புடிடே மறந்தே...

இன்னும் உம்மேல எனக்கு அதிகமா மருவாதை கூடிட்டுடே

கடைசியா ஒரு வார்த்தை சொல்லி என்னை சாச்சிபுட்டடே...

உனக்காக தாய்யா என் செல்போன் காலர் டோனே மாத்தின

எம்புட்டு வசவு என் வூட்ல

மனசு ஜில்லுனு இருக்குடே மக்கா

Unknown said...

காயத்ரி தேவி : அம்மணி அவ்ளோ பெரிய ஆளெல்லா இல்லிங் அம்மணி

உங்கள விட கார்த்திக்க விட நமக்கு கற்பனா அறிவும், படிப்பறிவும்,பட்டறிவும் கம்மிதானுங் அம்மணி

வரேனுங் அம்மணி

கற்றது கைமண்ணளவுன்னு பெரியவுங்க சொல்வாங் அம்மணி