Saturday, December 14, 2013

ஆட்டோகிராஃப்_ 2013 @Subasree Mohan (4)

அது ஒரு பின் மாலைப்பொழுது...
உன் நம்பர் கொடுடா கண்ணா என்ற குறுஞ்செய்தியைப் பார்த்ததும்...  
தயக்கமே இல்லாமல் கொடுத்துவிட்டேன்.  அடுத்த அரை வினாடியில் அழைத்திருந்தார். 

எடுத்துப்பேசிய குரலில் தான் எத்தனை வாஞ்சை...
அன்றைக்கு முன்மாலையில் எழுதியிருந்த ஒரு கவிதை பற்றிய
என்னுடைய கருத்தில் முரண்பட்டு அதை தெளிவுபடுத்தவும்... பின்னே அன்பும் அக்கறையுமான  விசாரிப்புகளையும் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு... இதெல்லாம் நடந்து 

சில மாதங்கள் கழித்து சென்னை வந்திருக்கிறேன் என்றும்... நீயும் வா கார்த்திக் என்றும் அழைப்பு விட்டிருந்தார். என்னால் அவரைச் சந்திக்க முடியாததின் காரணமாக சென்னையிலிருந்த அண்ணனை அவரைச் சந்தித்துவரச்செய்தேன். 

அதன் பின் நாட்களின் அந்த சந்திப்பை தவறவிட்டதன் வருத்தங்களை பூர்த்தி சேயும் விதமாக இதுவரைக்கும் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் அவரோடு நாங்களெல்லாம் நேரம் செலவிடாமல் இருந்ததில்லை... 

அன்புத்தம்பிகளாய் எங்களை அரவணைத்து அன்புசெய்யும் அந்த நல்லுள்ளம் சுபஸ்ரீ அக்கா.. (சிபி மாம்ஸை... இங்கே பிரித்தெழுதத தேவையில்லை என்றே நினைக்கிறேன்}.

 சில நாட்கள் முன் உடல்நலமின்மையால் அவதியுற்ற பொது அவர்களுக்கு ஒரு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அந்த கடிதத்தின் பதில் ஒற்றை வார்த்தையில் முடிந்துவிட்டதுதான் அதனுள் எத்தனை அன்பை புதைத்து வைத்திருப்பார் என்பது எனக்கு மட்டும் வெளிச்சம்...    

அந்த கடிதம்
    
"கடந்த சில நாட்களாகவே கவனித்து வருகிறேன். உடல் நலக்குறைவின் தீவிரத்தில் ரொம்பவும் வருந்திப் போய் காணப்பட்டிருக்கும் உங்களை... அதே நேரத்தில் உங்களைச் சுற்றிஇருப்பவர்கள் எத்தனை பிரயர்த்தனமாய், அன்பினோடு உங்களை கவனித்துக் கொள்கிறார்கள் என்பதையும் கூட உடல் நலம் என்பது பெரிதாய் ஒன்றுமில்லை அக்கா... மனதை இலகுவாக வைத்துக்கொள்ளுங்கள்.
மருந்துகள் செய்யாததை மனிதர்களின் அன்பு சாதித்துவிடும்தானே...
ஒரு மனிதன் மீது எல்லோரும் அன்பு பாராட்டுவதென்பது அத்தனை எளிதாய் சாத்தியமில்லாதது.. நீங்கள் அத்தகைய மனிதர். உள்ளத்தின் பேரில் பொங்கும் அன்பின் ஆர்ப்பரிப்பால் எத்தனை மனிதர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறீர்கள்... 
எளிதில் அன்பை பகிரும் உங்கள் குணம் இங்கு யாருக்கு தாராளம். விரல்விட்டு எண்ணத்தொடங்கினாலும். சுபாவினைப் போல் சுபா ஒருவர்தான்.
உங்களுக்கு கொஞ்சமும் மாற்றில்லாதவர் மோகன் மாமா... அவரைப் பிரித்துப்பார்த்தலரிது.. 
மங்கோலியா சென்று வந்தது முதல் மிகுந்த களைப்பினோடும், வீசிங் தாக்கத்தினோடும்இருக்கும் உங்களை குழந்தைபோலத் தாங்கும்... பலரையும் அப்படித்தான் பார்க்கிறேன். இவர்களை நீங்கள் அடையப் பெற்றதும் அவர்கள் உங்களை அடையாளங்கண்டதும் வரம்... 
இந்த ஓய்வு உங்களுக்கு தேவையானதாக இருக்கட்டும் . அவ்வாறே நானும் நினைக்கிறேன். நதி கிளைகளோடு சங்கமித்து பெரும் ஓட்டமெடுக்கும் போதும் அணைபோட்டுக் கொஞ்சம் தடுப்போமில்லையா..அத்தகையது இந்த ஓய்வு.. 
இந்நேரத்தில் எத்தனை அன்பானவர்களை நீக்கள் பெற்றிருக்கிறீர் எனப் பெருமை பட்டுக்கொள்ளுங்கள் உங்களோடு சேர்ந்து நானும் அதையே சிந்திக்கிறேன்.
மீண்டும் சொல்கிறேன் ஒரு மனிதன் மீது எல்லோரும் அன்பு பாராட்டுவதென்பது அத்தனை எளிதாய் சாத்தியமில்லாதது. நீங்கள் அற்புதமான அன்பின் குழந்தை ...
இச்சிறு உடல் களைப்பு உங்களை ஒன்றும் செய்திடாது...
மதகுகள் திறக்கும் போதுசீறிப்பாயும் வெள்ளமாய் பிரவாகமெடுத்து வாருங்கள்...
அணைக்கு மறுபுறம் கிடக்கும் களைகள் எல்லாம் வெள்ளத்தின் வேகத்தில் காணாது போகும் .
எப்போதும் உங்கள்  தம்பி..."

      எங்கள் எல்லோரின் மேடைகளையும் எங்களுக்கு முன்னே கட்டமைக்க வலியுறுத்தும் அன்பும், பரிவும்தான் உங்களோடு எங்களை சேர்த்து கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது..  காலத்தின் சுழற்சியில் ஆண்டுகள் நீங்கிபோனாலும் உங்கள் அன்பின் சரணாலயத்தைத் தேடி வரும் வேடந்தாங்கல் பறவைகள் நாங்கள்....

Subasree Mohan

#ஆட்டோகிராஃப்_ 2013

அன்பிற்குண்டோ அடைக்குந் தாழ் 

ஆனந்த தாண்டவம்பி.சி.ஸ்ரீராம் -கேமிராவை எடை பார்த்த பொழுது க்ளிக்கியது 
சியர்ஸ்.... அக்க்ஸ் 


சீனாவில் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்கும் போது... க்ளிக்
(விசிறி சின்னம் )

3 comments:

காயத்ரி தேவி said...

அதிகமா நான் சுபா அக்கா கிட்ட பேசினதில்ல, ஆனா கார்த்திக் பேசி கேட்ருக்கேன். நிறைய பேர் அவங்கள கொண்டாடுறத பாத்துருக்கேன். தள்ளியே நின்னு ரசிச்சுட்டு இருக்கேன்... <3 <3 <3

Sandhiya Nandhakumar said...

என்னா பாசம் !!!!

பெரு வுடையான் said...

எழுத்துக்களை குறுக்கும் நெடுக்குமாய் அடுக்கி, எவ்வளவோ வர்ணனை மிகு வார்த்தைகளை கோர்த்தெடுத்தாலும், இவளுக்கு நிகராய் இதுவரை ஒரு வார்த்தையையும் என்னால் கோர்த்தெடுக்க இயலவில்லை, அன்பின் மொழிக்கு ஏது வார்த்தைகள். அவனின்றி உலகில்லை என்பது போல், இவளின்றி அன்பில்லை,

கண்ணதாசன் அவர்களின் தமக்கைகான விளக்கம் :

தமக்கே தமக்கே என்று எண்ணுபவள் தான் தமக்கை என்பது அவரது விளக்கம் ஹஹஹ உண்மையிலே தம்பிமார்களின் ஒட்டு மொத்த அன்பும் தமக்கே தமக்கே என்று சொந்தம் கொண்டாடும் தமக்கை இவள், நண்பர் கார்த்திக். சொன்னது போல் அவள் குரலில் தான் எத்துனை வாஞ்சை...... அவளது வாஞ்சைக்காகவே நாங்கள் வாஞ்சையாய் இருப்பவர்கள்...அவள் இவள் என்று ஒருமையில் பேசும் நாகரீகமற்றவன், என்று நீங்கள் கருதலாம் அவ்வாறில்லை அது, எங்களை ஒரு கூட்டிற்க்குள் அணைத்து அன்பின் ஒருமைபாட்டினை பயிற்றுவித்தவள், இதை அவளது கூட்டில் தஞ்சம் புகுந்துள்ள யாரும் மறுப்பாரில்லை,

நண்பா உனது நினைவாரவாரங்களை கண்டதும் எனது இதய தாழ் தானாய் திறந்ததன் வெளிப்பாடே இது நண்பா..... அக்ஸ்க்கான கிரீடம் என்னிடத்துலும் , எனக்கான சிம்மாசனம் அக்ஸ்ஸிடத்திலும் நிச்சயம் என்றே நம்புகிறேன். இத்தருணத்தில் உன்னோடு சேர்ந்து நானும் அகமகிழ்ந்தேன் ஐயா....