Friday, April 15, 2011

மரணம்..!

எதிர் வீட்டுக்காரன் இதுவரை
சண்டையிடாத நாளே இல்லை என்னிடம்

ஆனால் அவன் வீட்டு சுவரில்

கட்டப்பட்டிருக்கிறது என் வீட்டு..

பந்தலின் ஒரு முனைக்கயிறு..

காடேரிக்கும்(செத்தாலும்)

உன் முகம் பார்க்க மாட்டேன்

என சண்டையிட்டு போன..

சித்தப்பா வாயிற்படியில் நின்று

இரங்கல் தெரிவித்திருக்க..

என் மனைவி வளர்த்து வந்த

மஞ்சள் கிரேந்திபூ போன்றே..

கூடை கூடையாய் பூக்களை எடுத்து

பின்னறையில் வைக்கிறான்

அண்ணியின் தம்பி..

அப்பாவின் வேஷ்டிகளை நான் உடுத்தி இருக்கிறேன்

இதுவரை வேஷ்டியே கட்டதெரியாத எனக்கு

அண்ணன்தான் கட்டி விட்டான்.

பெண்கள் கூட்டம் கூட்டமாய்

அமர்ந்து அலுத்து பிதற்ற

காதை பொத்திக்கொள்ளாமல்

அலுத்துக்கொண்டேன்..

ஊரெல்லாம் வந்து சேர

மாலை வரை சாப்பிட ஏதுமில்லாமல்

பட்டினியை நான் இருக்க ..எல்லாரும்

தேநீர்மட்டும் குடித்தவர்களாய்

இடுகாட்டுக்கு பயணமானோம்..

வழியெல்லாம் பூத்தூவி

மேளம்பறை முழங்க..மூச்சுமுட்டி

பசங்கல்லாம் அழ..அவர்களை என் தம்பி

தேற்றிகொண்டிருக்க..

எல்லாம் முடித்து

கருக்கலில் கிளம்பி விட்டோம் வீட்டுக்கு..

வரும்போது வண்டியில் வந்தேன்

திரும்பி போகும் போது வண்டிக்காரன் இல்லை

சரி நடந்தே போகலாமென நினைக்கையில்

உரைத்தது ...எதிரே உள்ள சுவற்றின்

மீது ஒட்டிஉள்ள இரங்கல் சுவரொட்டியில் என் படம்..!


(இப்படியாக இருக்குமோ என் மரணம்..! )

கார்த்திக் ராஜா...

1 comment:

SathyaSudha said...

En eapdi lam yosikkuringa but kavithaai arumai ninaithu parka vaikirathu ungal kavithai...... dear