இலைகளுக்குள்ளும்
தேனெடுக்கும்
அன்பின் வனமிது
அன்பின் வனமிது
எந்த பூவில் தேன் தேட
சுற்றியுமென் நட்புக்கள்
சருகாய் ஆனபோதும்
என் பாதையின் முட்களுக்கு
மஞ்சம் செய்தவராய்..
வேரெடுத்து ஆழ
நின்ற என் நட்பிற்கு
வானமே கூரை..!
சித்தன்னவாசல்
சிற்பங்கள் தோற்கும்
இவர்களின்
அன்பின் அத்வதம்
முன்னால்
இங்கே ஒரு
பாதையில் ஓய்வெடுக்கும்!
அமர்வி நாற்காலி எப்போதும்
அன்பை சுமந்து காத்திருக்கும்
முப்பதுபேர்கூட அமரும்
ஒற்றை சதுரடியில்
இங்கே ஒரு
பாதையில் ஓய்வெடுக்கும்!
அமர்வி நாற்காலி எப்போதும்
அன்பை சுமந்து காத்திருக்கும்
முப்பதுபேர்கூட அமரும்
ஒற்றை சதுரடியில்
நண்பணாய்..!
சித்தப்பன் பெரியப்பன்
உறவெல்லாம் சீந்துவாரில்லாது
போக நட்பென்னும்
அறவு மட்டும்
அண்டங்கள் அழிந்தாலும்
அடைகாக்க
பறந்துவரும்
தாய்க்குருவியாய்..!
இங்கு மிச்சம் விட்டு செல்லும்
எம் நட்பின் அடையாளம்
தலைமுறைகளையும்
தாண்டிச்செல்லும்!
-கார்த்திக் ராஜா
—
11 comments:
Raj Kumar //முப்பதுபேர்கூட அமரும்
ஒற்றை சதுரடியில்
நண்பணாய்..!// சிவில் இன்ஜினியருன்னு நிருபிச்சுட்டாரு...ஹா ஹா ஹா....
கார்த்திக் ராஜா ராஜ் இதில் ஒற்றை சதுர அடியில் முப்பதுபேரும் அமரும்
வரிகள் உங்களுக்கே! சமர்ப்பணம் ஹஹ
Raj Kumar :என்ன ஒரு ஒற்றுமை பாருங்க ரெண்டு பேரும் ஒரே நேரம் ஒரே விஷயத்த குறிப்பிடுறோம்ன்னு...ஹா ஹா ஹா..
கார்த்திக் ராஜா : 10 செகண்ட்ல ஒரெ அலைவரிசையில் எழுதி இருக்கிறோம் ஒரே விஷயத்தை ஹாஹா ராஜ்
Raj Kumar :வீட்டுல போய் சுத்தி போடுங்க கார்த்திக் யாரு கண்ணும் பட்டுப்போகுது....என்ன ஒரு ஒற்றுமை பாருங்க.....ஹா ஹா ஹா ஹா...
சிலரோடு என் அலைவரிசை அடிக்கடி ஒத்துப்போகும் !
அத்தனைபேரும் நெருங்கிய நட்பு வட்டத்தில்
இங்கு என்னவோ சதுரத்தில் ! அஹாஹா (சதுர அடியில்)
Shanmuga Murthy ''நட்பென்னும் அறவு மட்டும் அண்டங்கள் அழிந்தாலும் அடைக்காக்கப் பறந்து வரும்...தாய்க்குருவியாய்..'' ஆஹா..அற்புதமான வரிகள்...வாழ்த்துக்கள்...கார்த்திக். :-))
Prabakaran Krishna அமர்வி நாற்காலி எப்போதும்
அன்பை சுமந்து காத்திருக்கும் ///அமர்வி நாற்காலி என்றால் என்ன?
அமர்வி நாற்காலி// இந்த பார்க்- லல்லாம் இருக்குமே பிரபா! ஹாஹா அதுதான்! கவிதை நடையில் (துக்ககலக்கத்தில் எழுதும் )எழுதும் போது ! இப்படி ஏதாவது புது பேரு வைச்சுட்றேன் ஹாஹா!
Prabakaran Krishna : அது அமர்வு நாற்காலி தானே.,,. நல்லா இருக்கு,..,,..,கவிதை கார்த்திக் நீண்ட நாட்களுக்கு பின்.,
கார்த்திக் ராஜா கவிதைக்காக எப்போதும் நிழற்படம் தேடுவேன்!
காலையில் கண்ணீல் பட்ட படத்துக்காக எழுதினேன்!
சிலரைமட்டும் ட்டேக் செய்தது தூக்க கலக்கத்தில் தான்!
அமர்வு நாற்காலிதான்! இப்படிசொன்னால் தவறில்லையென ஏ.பி.ஜே அப்துல்கலாமே சொல்லி இருக்கார்!
Post a Comment