Saturday, November 12, 2011

பந்திக்கு முந்து படைக்கு பிந்து,,,


"பந்திக்கு முந்து படைக்கு பிந்து"

நமது முன்னோர் சொல்லி வைத்த சில பழமொழிகள் தற்பொழுது வேறு வடிவம் கொண்டுள்ளன.அவற்றின் உண்மை வடிவினையும் .தற்பொழுது ஒரு பழமொழியின் தற்போதைய வடிவையும் உண்மை நிலையையும் இதோ...

"பந்திக்கு முந்து படைக்கு பிந்து"

நாம் தற்பொழுது இந்த பழமொழியின் உண்மை நிலையை காண்போம்.
நமது முன்னோர்கள் வீரத்திலும்,ஈகைதிறனிலும்,விருந்தோம்பலிலும் சிறந்தவர்கள் என்பது உலகறிந்தது.அப்படி வாழ்ந்த நமது முன்னோர்கள் சொல்லி வைத்த அருமையான பலமொழிகளில் இதுவும் ஒன்று.தற்பொழுது இந்த பழமொழிக்கு உள்ள அர்த்தம் பந்தி என்று சொல்லப்படுகிற விருந்துகளுக்கு முந்திக்கொண்டு செல்ல வேண்டும் இல்லையென்றால் நமக்கு எதுவும் கிடைக்காது.பிறகு போர்களுக்கு போகும் பொழுது பின்னாடி தான் செல்ல வேண்டும் அப்பொழுது தான் நாம் காயம் படாமல் தப்பிக்கலாம்.வீரத்தில் சிறந்த நம் மூதாதையர் இப்படியா சொல்லி இருப்பார்கள்.சிந்தித்து பார்த்தால் உண்மை வேறு விதமாக இருக்கும்.உண்மை இதோ பந்திக்கு முந்து என்றால் விருந்துகளில் நம்மைப்போன்று அதிகமான ஆட்கள் வந்து இருப்பார்கள்.அவர்களுக்கும் நல்ல பசி இருக்கும்.ஆகவே நாம் அதிக நேரம் பந்தியிற் அமர்ந்து சாப்பிடாமல் முந்தி எழுந்து அடுத்தவர் சாப்பிட இடம் கொடுக்க வேண்டும்.ஆகவே பந்தியில் முந்தி எழுந்திருஎன்பதே சரியானது.படைக்கு பிந்து என்றால் நாம் எதிரியிடம் சண்டையிடும் பொழுது நமது தாய் நாட்டுக்காக நம் உயிரையும் கொடுத்து போர் புரிய வேண்டும்.நமது படையில் அனைவரும் மடிந்தாலும் வீரமுடன் கடைசி வரை போரிட வேண்டும் இது தான் நமது முன்னோர் சொன்ன வார்த்தையின் சரியான அர்த்தமாகும்.ஆகவே நண்பர்களே விருந்தென்றால் சீக்கிரம் சாப்பிட்டு எழுந்து அடுத்தவர்களுக்கு இடம் கொடுப்போம்.போர் என்றால்இறுதி வரை போர் புரிந்து நமது முன்னோர் சொன்ன பண்பாட்டினை பாதுகாப்போம்.

3 comments:

Unknown said...


"பந்திக்கு முந்து படைக்கு பிந்து,,,"

இதன் அர்த்தம் பந்திக்கு முன் தீ, படைக்கு பின் தீ என்பது தான். ஆனால் நம்ம மக்கள் பழமொழி ல கூட நம்பல சாப்பாட்டுராமன் ஆக மாற்றி விட்டார்கள்.
Refer: http://www.arusuvai.com/tamil/node/15056

So here they mention about about "Fire" not about food. please Don't pass wrong message to others. if you don't know exact meaning please shut your mouth.
Sorry to text in English.

Unknown said...

சாப்பிடுவதற்க்கு நம் கை (வலது கை)முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில்(போர் புரியும் நேரம்)இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச் செல்லும்.
இதுவே பந்திக்கு முந்து,படைக்கு பிந்து என்று பழமொழியின் அர்த்தம்.

Somebody will tell this is also exact meaning for-"பந்திக்கு முந்து படைக்கு பிந்து,,,"

Unknown said...

Atleast these two match the meaning for that proverb.