Thursday, December 1, 2011

வேப்பங்குளத்துக் கிளியே..... என் வயசை உடைச்ச உளியே...


சிட்டான பொட்டுக்காரி
சின்ன சின்னப்பார்வையால
என்னை நெற்றிப்பொட்டில்
அறைஞ்சவளே...!

பட்டான தாவணியில்
பாவி நீ..! தாவித்தாவி
நடக்கையிலே
பாலத்து கரையில் துடிக்கும்
எம்மனசு பாழாப்போகுதடி...

நேராக்க பாரு என்னை-என்று
போறப்போக்கில் சொல்லிப்போகும்
உன் தாவணி தெரப்புக்கு
தானாத்தான் நோகுதடி கண்ணு

நீலவண்ணப்பாவாடக்காரி.. என்கூட
நின்னு கொஞ்சம் பேசிப்போயேன்..
தோதானத் தோழனுங்க என்னை
தொணத்தொணன்னு அரித்தெடுக்க
நீதான பாதையில நிக்காம போறவளே
கொஞ்சம் என்ன சேதி சொல்லிப்போயேன்

ஆடகட்டி வந்த மயில் நீயும்
ஆடுபுலி ஆட்டம் போல
தாண்டிப்போயி வெட்டுறியே என்ன..

மேலோட்டப்பார்வையிலே..!
என்ன மேய்ஞ்சுபுட்டுப்போறவளே
வெள்ளோட்டம் பார்க்கத்தானே
கொஞ்சம் வெக்கம் சிந்தி போடி கண்ணே..

சுக்காகிக்காஞ்சுபோன நெஞ்சம்
மக்காச்சோளம் கதிராட்டம்
வெளைஞ்சு நிக்க கொஞ்சம்
விரசா உம்பேரச் சொல்லிப்போயேன்...

பாதக்கொலுசிட்ட பாதகத்தி நீயுந்தான்
பாரிஜாதம் பூவப்போல பூவாசம் வீசிப்போக
பட்டுப்போன என் பூமியெல்லாம்
பாட்டாகி பொழியுதடி.. கண்ணே,

பொறுத்திருந்து வெயிலில் கருத்திருந்தேன்
கண்னே நீயும் அண்ணன் தம்பி இல்லாத
பிள்ளையின்னு தனித்து நானும் தாவி வந்தேன்

தக்களை பலாக்காட்டில்
அருவா அடிக்கும் ஆறுமகண்ணே மகதான்
நீயின்னு...

அன்னைக்கே சொல்லி இருந்தா..
ஆறுமாசம் வீணாகியிருக்குமாடி..
அடுத்த பிள்ளைக்கு நூலுவிட நானும்
தோவாளைக்கு போயிருப்பேனடி... என் கண்ணு...!

- கார்த்திக் ராஜா ..

No comments: