மனிதன் தன்னை உணர புத்தகங்கள் மிக முக்கியமான காரணிகளாக அமைந்துவிடுகின்றன...!
பாலகுமரனின் - சாந்தமயமான எழுத்தில் திளைத்திட இன்னும் ஒரு வாய்ப்பாக அமைந்தது... கடந்த தினங்கள்
அவருடைய “கடலோரக் குருவிகள்” நாவலை இரண்டு தினங்கள் முன் படித்துவிட்டு...இப்போது வரைக்கும் மனதுக்குள் ஒவ்வொரு அத்யாயத்தினையும் மீண்டும் மீண்டும் நினைத்து மறுவிக்கிடக்கிறேன்...
வாழ்க்கையின் உணர்வுகளை வகையாய்ச் சொல்லிக்கொடுக்கும் ஆசான்களில் ஒருவராய் பாலகுமாரன் அவர்களை காண்கிறேன்...!
முடிந்தால்... [நாவல் விரும்பிகள்] கடலோரக்குருவிகளை புரட்டுங்கள் நிச்சயம் உங்களை நீங்களே உணர்வீர்கள்...!
கர்பிணி-யை உதாரணப்படுத்துவதிலும் சரி... குருவிக்கதையை கருவாக எடுத்துச்சொல்வதிலும் சரி...
இன்றைய இளைஞர்களுக்கான நெம்புகோல் அவர் பேனா என்பதை மறுப்பதற்கில்லை..! முன்னுரையில் இயக்குனர் ஷங்கர் இப்படிச் சொல்லி இருக்கிறார்...
இந்த நாவலின் 30ஆவது அத்யாயம், முதல் கடைசி பக்கம் வரை அனைத்துப்பக்கங்களையும் தன் ட்ரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி மீது ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று...!
-கவிதைக்காரன்
1 comment:
உன்னை எப்படி என்னால் குட்டு வைக்க இயலும்.. அன்பு மட்டுமே செலுத்த இயலும்.... அருமை. நீ நன்றாக உயர் வேண்டும் வாழ்வின் என் பிரார்தனைகள் எப்போதும், அன்புடன்....
Post a Comment