*வரலாற்றின் ஏடுகளில் பெண்கள்*
-கவிதைக்காரன்.
_______________________________________________________________________________1955 திசம்பர் மாதம்...!
ஒரு மாலை நேரம்... வேலை முடிந்து சோர்வினாலும் கால்வலியினால் கொண்ட அசதியினாலும் ! அலாபாமாவின் பேரூந்தில் பயணிக்கிறார். அந்த பெண்மணி.... மனிதனுக்கு மனிதன் சமம் என்னும் போது.. நிறவேறுபாடுகள் தலைவிரித்தாடிய நகரம் அது.
பெண்ணுக்கும் சரி, கருப்பு நிறத்தவருக்கும் எந்தவித மதிப்பும் இல்லாததாகக் கருதப்பட்ட காலக்கட்டம் அது. வெள்ளை நிறத்தவர் பேரூந்தில் ஏறி விட்டால் கருப்பு நிறத்தவர்கள் எழுந்துவிடவேண்டும்... என்பது அங்கு எழுதப்படாதச் சட்டம்.
அப்படித்தான் அன்றும் ஒரு வெள்ளையர் பேருந்தில் ஏறியவுடன், கறுப்பர்கள் அனைவரும் எழுந்துவிட்டனர். அந்த ஒரு ஒர பெண் மட்டும் எழ மறுத்தார். “நீ எழ மறுத்தால், போலீசைக் கூப்பிடுவேன்” என்றார், ஓட்டுநர்.
“தாராளமாக செய்யுங்கள்” என்றார் அந்தப் பெண். போலீஸ் வந்தது. அந்தப் பெண்ணைக் கைது செய்தது. கைதி எண் 7053. என காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் அசரவில்லை, உரிமைக்குக் குரல் கொடுத்தார். வரலாற்றையே மாற்றிய ஒரு பேருந்து நிகழ்வு அது!.
விதைகள் எதுவும் செய்யாமல் விருட்சங்கள் உருவாகிவிடுவதில்லை. போராட்டங்களும் எதிர்ப்பும் இல்லாமல் உரிமைகள் சாத்தியமில்லை.
ஒரு உரிமைக்கான எதிர்ப்புக்குரல் அங்கே எழுந்தது. கறுப்பினத்தவர் என அடையாளப்படுத்தப்பட்ட சகமனிதர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு வழியமைத்தது.
யார் அந்த பெண்?. வரலாறு அவரை இப்படி அழைக்கின்றது “நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய்” -என்று. உண்மையில் அந்தப் பெண்ணின் நிஜப்பெயர் ரோசாபார்க்ஸ். [Civil rights activist Rosa Parks ].

எல்லாபக்கங்களில் இருந்தும் மிரட்டல்கள். துணிந்து நின்று போராடினார். ரோசா தொடர்ந்த போராட்டத்தின் விளைவினால் சிவில் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.

"அன்று அவர் எழ மறுத்ததால்தான், இன்று நாங்கள் எழுந்து நிற்கவும், தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது" என்ற குரல் பகிரங்கமாக...எல்லாத்திசைகளிலும் எதிரொலித்தது கருப்பினர்களால்.

எண்ணற்ற விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது.
2005-ம் ஆண்டு அக்டோபர் 24-ல் காலமான இவரால் ஒரு சரித்திரத்தை திருத்தி எழுத வைக்க முடிந்தது என்பதை நினைத்துப்பார்க்கும் போது.. பெண்மை எத்தனை மகத்துவமான சக்தி என்பதை உணரமுடிகிறது.
this diminishes fear; knowing what must be done does away with fear."
– Rosa Parks

-வரலாற்றில் நகர்வோம்...
2 comments:
பின்னூட்டமிடுவதில் இருந்த தொழிநுட்பத்தடை சரிசெய்யப்பட்டதா என அறிய ஒரு சரிபார்ப்பு : பின்னூட்டம்!
Epporattam enrum France lnadakirathu
Post a Comment