Wednesday, February 29, 2012

பிரைவேட் நம்பர் காலிங் யூ....! நேரம் நள்ளிரவு 12:00 மணி



ஆழ்நிலை தூக்கத்தில் மிதந்துக் கொண்டிருந்தேன். ‘செல்லம்...ஐ..லவ்.... யூ’ என்று கைபேசியில் பிரகாஷ்ராஜின் குரல் என்னை எழுப்பியது. தூக்கம் கலைந்து, கண்களை மூடியவாறுப் பேசத் தொடங்கினேன்.

“வணக்கம் யார் பேசறிங்க..?”

“வணக்கம் மணி, நான்தான் தேவி பேசறேன்.”

பெயரும் குரலும் பரிட்சயமில்லாததால், தொலைபேசி எண்ணைக் கவனித்தேன், ‘ப்ரைவட் நம்பர்’ என இருந்தது.

“ம்.. நீங்க...”

“பார்த்திங்களா மறந்துட்டிங்க...என்னங்க நீங்க..”
“...................” (நான்)
அந்த குரல் மீண்டும்,

“நீங்களும் மறந்துட்டிங்களா..?” அவள் அழுதாள். அது அழுகையா சிணுங்கலா என்று தெரியவில்லை. நான், “அப்படியில்லைங்க.. எனக்கு ஞாபக சக்தி குறைவு. நீங்களே சொல்லுங்களேன்.” என்றேன்.

அவள் செல்லமாகச் சலித்துக் கொண்டாள். “ம்.. நானே சொல்றேன். நான் தேவி. ஒரு தடவை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சந்திதிருக்கோம். நீங்கதான் அறிவிப்பு செய்தீங்க...கவிதைகூட சொன்னீங்க. நான், கடைசியா உங்ககிட்ட வந்து பேசி உங்கள் கையொப்பம் கேட்டேன். நீங்களும், ‘நல்லதே நடக்கும் நம்பிக்கையுடன் நண்பன்’ ன்னு எழுதிக் கொடுந்தீங்க..”

ஏதோ ஒரு பெண்ணின் முகம் லேசாக நினைவுக்கு வந்தது. கண் திறக்காமல் சிரித்தேன்.

“ஓ, நீங்களா..? உங்களுக்கு மட்டுமில்லை நான் எல்லார்க்கும் அப்படித்தான் கையெழுத்து போடுவேன். சரி என்னங்க இந்த நேரத்தில்..?” என்றேன். “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். பேசலாமா..?” தூக்கம் ஒரு புறம் இழுத்தாலும், மறுபக்கம், அந்த தேவியின் குரல் என்னை இழுத்தது.

“ம்.. என்ன பேசப் போறிங்க..?” என்று கேட்டேன்.

“தற்கொலை செய்துக்கிறது கோழைத்தனமா..?” என்று பதில் கேள்வி கேட்டாள் தேவி.

 “ஏங்க திடிர்னு இந்த கேள்வி..?”

“பதில் சொல்லுங்களேன்..”

“தற்கொலை செய்றது தைரியமான செயல்..”

“அப்படியா..?!”

“ஆமாங்க, வாழ்க்கையை முழுமையா வாழ பயந்து சிலர் எடுக்கிற சில நிமிட தைரியமான முடிவுதான் தற்கொலை.சரிங்கா ஏன் இப்படி ஒரு கேள்வி..?”
தூக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து போய் முழு விழிப்பு நிலைக்கு வந்திருந்தேன்.

“நான் தற்கொலை செய்யலாம்னு இருந்தேன்” என்றாள் தேவி. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

“என்னங்க சொல்றிங்க..?”

“அவசரப்படாதீங்க..இன்னும் சொல்லி முடிக்கல..தற்கொலை செய்யலாம்னுதான் போனேன். அப்போ ஒரு ஆசிரமத்தின் தொலைபேசி எண் கிடைச்சது..சரி கடைசியா என் பிரச்சனைக்கு இங்க தீர்வு கிடைக்கலாம்னு நினைச்சி போன் செய்தேன். அவங்க பேசினது எனக்கு ஆறுதலா இருந்தது. தற்கொலை முடிவை கைவிட்டுட்டு, இப்போ அந்த ஆசிரமத்துலதான் இருக்கேன்.”

எங்கள் பேச்சை மேலும் தொடர விடாமல், இடையில் புகுந்தது அவன் குரல்,

“மாமா இன்னும் தூங்கலையா? மணி என்ன மாமா...?”

“போன் பேசறன்.. மணி ஒன்னாவப்போகுது. நீ தூங்குடா. நான் அப்பறம் தூங்கறேன்..”

“ச..ரி மாமா..”

வார்த்தைகளை உளறி, அந்தக் குரலின் தூக்கம் தொடர்ந்தது. அது என் அத்தை மகன். அத்தை வீட்டில் வேலை நிமித்தமாக தங்கியிருப்பதால் அவனோடு ஒரே அறையைப் பகிர்ந்துக் கொண்டிருந்தேன்.

‘அப்படியென்னங்க பிரச்சனை.?”

“அதை தெரிஞ்சி நீங்க ஒன்னும் செய்ய முடியாதே.. ஏன் கேட்கறிங்க..?..ம்..”

“என்னைப் பொறுத்தவரைக்கும், நம்மை சுற்றி நடக்கும் எல்லாவற்றுக்குமே.. ஒரு காரணம் இருக்கும்.. இப்போ நீங்க இந்த நேரத்தில் என்கிட்ட பேசறது கூட ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்னாதான் இருக்கும்னு நம்பறேன்..” என்றேன் சிரித்தவாறே.

“பரவாயில்லையே, கவிஞருக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கே.. சரி..சரி என் கதையைக் கண்டிப்பாகச் சொல்லணுமா..?”

“தேவி. அது உங்கள் விருப்பம்.. நாளைக்கு காலையில நான் அலுவலகத்தில் இருக்கணும். அதுக்குச் சீக்கிரம் படுக்கணும். நாம நாளைக்குப் பேசலாமா..?”

“ம்.. சரிங்க மணி. நாளைக்கு நானே ‘கால்’ செய்றேன். குட் நைட்..”

பேசி முடித்த பிறகு, யோசித்தபோது அன்று சந்தித்தவளின் முகம் ஞாபகத்தில் வரவில்லை. தற்கொலை செய்யும் அளவுக்குத் தேவிக்கு அப்படி என்ன பிரச்சனை..?

ஒருநாள் தானே பார்த்தோம். அதை ஏன் என்கிட்ட சொல்லனும்..? இப்படிப் பல கேள்விகளுக்கு நாளை பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தலையணையில் முகம் புதைத்தேன்..
--------------------------------------------------------------------------------
மறுநாள் காலை நாளிதழ் படித்ததும் அதிர்ச்சி. இளம் பெண் தற்கொலை என்றிருந்தது. உடனே கைபேசியை எடுத்து நேற்று இரவு பேசிய எண்ணை தேடினேன். இரவு பேசியதாக எந்த எண்ணும் இல்லை. குழப்பம் என்னைச் சூழ,

நேற்றுத் தேவியிடம் அவளது பிரச்சனையை கேட்டிருக்கலாமே என தோன்றியது. ஒரு வேளை அவளது தற்கொலைக்கு நானும் மறைமுகக் காரணமாக இருந்திருப்பேனோ..? அவள் தற்கொலைக்கு முன்தான் என்னிடம் பேசினாளோ..? ஒருவேளை போலீஸார் அந்தக் கைபேசியை பரிசோதித்தால், என் மீது சந்தேகம் திரும்புமோ..?

தற்போதுதான் எழுத்தாளனாகவேண்டும்ன்னு போராடி அச்சமயத்தில் கிடைத்த அரசு வேலையில் சேர்ந்து குடும்ப பாரத்தை குறைக்கத் தொடங்கியுள்ளேன். இந்த நேரத்தில் இப்படியோர் இடியை என் குடும்பம் தாங்காது. இன்றைய தினம் சீக்கிரமே வீடு திரும்பிவிட்டேன். சீக்கிரம் என்பது எங்களைப் பொருத்தவரை இரவு மணி 10.00.

இரவும் எனக்குப் பகல் போலத்தான் தோன்றியது. ஏனெனில் காலையில் ஏற்பட்ட குழப்பம் என்னை யோசிக்கவிடாமல் தடுத்தது. நள்ளிரவு மணி 12.00.

“செல்லம்..ஐ..லவ்.............................”

கைபேசியைத் தொடர்ந்து கத்தவிடாமல் உடனே எடுத்தேன். மறுமுனையில் அவள்தான்..

“என்ன மணி பயத்தில் இருக்கிங்களா...?”

“என்ன...எ...ன்...ன... சொல்றிங்க..?”
 
“இல்ல..அமைதியா இருக்கிங்க அதான் கேட்டேன்”

 பெருமூச்சுடன் ஆரம்பித்தேன்,“இப்போதாவது உங்கள் பிரச்சனை என்னன்னு சொல்லுங்களேன் ப்லீஸ்” அவள் சிரித்தாள்.

அவள் இன்னும் உயிரோடு இருப்பது எனக்கே என் உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது. எப்படியும் இன்று அவளது பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுத்தேயாக வேண்டும் என முடிவெடுத்தேன்.

“எல்லாத்தையும் ‘போன்ல’ சொல்ல முடியாது மணி. வேணும்னா நான் தங்கியிருக்கும் ஆசிரமத்துக்கு வாங்களேன்....”

 “அதுக்குள்ள நீங்க ஏதும் செய்துக்க மாட்டிங்களே.?”

“ச்சே..ச்சே.. முகவரி கொடுக்கறேன் எடுத்துக்கோங்க...”

தேவி சொன்ன முகவரியைக் குறித்துக் கொண்டேன்.

 “மணி நீங்க வந்து நான் நெறைய பேசனும். ஏன்னு தெரியலை உங்ககிட்ட சொன்னால் மனசுக்கு நிம்மதி கிடைக்கும்னு தோணுது அதான்.. தப்பா எடுத்துக்காதிங்க.. நான் தப்பான பொண்ணு கிடையாது..!”

என்றவாறே அவள் மெல்ல கலங்கினாள்.

“தேவி. நான் அப்படி நினைக்கலை, கவலைப்படாதிங்க. உங்கள் பிரச்சனைக்கு என்னால தீர்வு கிடைக்கும்னு நீங்க நம்பறீங்க. நிம்மதியா இருங்க நாளைக்குச் சந்திப்போம்.”

 இவ்வாறு பேசி முடிக்கவும், என் அத்தை மகன் படம் பார்த்துவிட்டு படுக்க என் அறைக்கு வரவும் சரியாக இருந்தது.

“என்ன மாமா.. இப்போல்லாம் ராத்திரி அடிக்கடி ஏதோ பொண்ணுகிட்ட பேசறிங்க.. இதெல்லாம் நல்லாயில்லை..”

“ஏன் ரவி..?”

 “இல்ல..! எனக்கும் ஒரு நம்பரைக் கொடுத்தா நாங்களும் பேசுவோல..”

 “அடப்பாவி .. அதான் மாமான்னு கூப்ட்றியா என நக்கலடித்தேன் ..?”

படுத்துத் தூங்குடா..என பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டேன் .” - மாமா என்ற ,மரியாதையை இழந்துகொள்ள துணியவில்லை.

மறுநாள் அதிக சிரம்மில்லாமல் தேவியின் வீட்டை அடைந்தேன், இல்லை... அது, ஆசிரமம்தான் ஆனால் பார்ப்பதற்கு வீடு போல் இருந்தது.

இப்போது பல இடங்களில் வீட்டை வாங்கிச் சில பிள்ளைகளை வைத்து இது ஆசிரமம் என்று சொல்லி பணம் வசூலிக்கும் கூட்டம் பெருகி வருவது என நினைவுக்கு வந்தது.

ஆசிரமத்தின் வெளியே நின்றேன். “தேவி” என அழைத்தேன்.

 “பரவாயில்லையே , சொன்ன மாதிரி வந்துட்டிங்களே..?” தேவியின் குரல்தான் அது. என் பின்னால் இருந்து கேட்டது.

திரும்பி, “என்னங்க உள்ளே இருந்து வருவிங்கன்னு பார்த்தா என் பின்னால இருந்து வரிங்க...! ” என்றேன். அவள் சிரித்தாள்.

 ஓ! இவளா? அன்று பார்த்தவள் தான் என சமாதானப்படுத்திக்கொண்டேன் மனதை . அவள், “கொஞ்சம் வெளியே போயிருந்தேன். நல்லவேளை சீக்கிரமா வந்துட்டேன்... வாங்களேன்... நடந்துகிட்டே பேசலாம்... ”என்றாள்.

நடக்கத் தொடங்கினோம், பல நாட்கள் பழகியவள் போல் அவளது அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ளத் தொடங்கினாள்

“ஏன்னு தெரியலை மணி..! உங்ககிட்ட என் சோகத்தை சொன்னாக்கா... எனக்கு ஆறுதல் கிடைக்கும்னு தோணுது, அதான் சொல்றேன்.. நான் உயிருக்கு உயிரா காதலிச்சவன் என்னை ஆபாசமா படமெடுத்து என்னையே பயமுறுத்தினான்.

எனக்கு வேற வழி தெரியலை..அதான் தற்கொலைக்குத் தயாரானேன்..ம்... ஆனால் அது முடியலை.... இப்போ இந்த ஆசிரமத்தில் இருக்கேன் .அதும் எவ்வளவு நாள்னு தெரியலை..” பேசிக்கொண்டே வந்தவள் திடீரென அமைதியானாள்.

நடந்துக் கொண்டே அவளுக்கு ஆறுதலாகப் பேச ஆரம்பித்தேன்.


“தேவி, இப்போ இந்த மாதிரி ரொம்ப நடக்குது. காதலிக்கறதா சொல்லி பொண்ணுங்களை இப்படி படமெடுத்து அந்த பொண்ணுங்க வாழ்கையையே நாசமாக்கிடறாங்க.. அவங்களை..”

என நான் முடிப்பதற்குள், ஆவேசமாக, அவள் சொல்கிறாள் “கொல்லணும்... கொல்லணும்... நிச்சயம் கொல்லணும்..”

தேவியின் குரல் மட்டும் கேட்கின்றது. சட்டென்று திரும்பிப் பார்க்கிறேன். இதுவரை என்னுடன் நடந்து வந்தவளைக் காணவில்லை. சுற்றிலும் தேடுகிறேன். அவளைக் காணவேயில்லை. எனக்கு உடம்பெல்லாம் வியர்க்கத் துவங்குகிறது. இது எப்படிச் சாத்தியம்...! என் கழுத்தில் இருக்கும் முருகனின் படத்தைப் பிடித்தவாறே மீண்டும் ஆசிரமத்தின் வாசலில் நிற்கின்றேன்.

ஒருவர் உள்ளிருந்து வந்து என்னை விசாரித்துவிட்டு , “அப்படி யாரும் இங்க இல்லைங்க தம்பி. இங்க சின்ன பிள்ளைங்கதான் இருக்காங்க..” என்று சொல்லி, என் பயத்திற்கு அணைவெட்டுகிறார். பயம் என் உடலில் பரவி இன்னும் கூடுதலாக வியர்க்க ஆரம்பித்தது.

தேவியின் முகத்தை வேறேங்கோ பார்த்ததுபோல் தோன்றுகிறது. மூளையைக் கசக்கி யோசிக்கிறேன்.

ஆமாம்...ஆமாம்... ஒரு முறை அத்தை மகன் ரவியின் கைபேசி விடியோ ரெக்கார்டரில் ஏதோ ஒரு பெண்ணின் நிர்வாணப்படம் இருந்தது. அன்று அவனை திட்டியதும் புத்திமதி சொன்னதும் நினைவு வந்தது.... அது..அது.. தேவியின் முகம்தான். அன்று இளம் பெண்ணின் தற்கொலை என பத்திரிக்கையில் வந்த படமும் இவளுடையதுதான்.

அப்படியென்றால் ரவிதான் அவனா.....! குழப்பத்துடன் வீடு திரும்பினேன்.

இரவு மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருக்க, அத்தை புலம்பினார், “என்ன புள்ளயோ எப்பப் பார்த்தாலும்... விடிஞ்ச பிறகுதான் வீட்டுக்கே வரான்..என்னதான் செய்யறதோ தெரியலை..”

ரவி இன்னும் வீடு திரும்பவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை. முதல்நாள் நள்ளிரவு இருந்து நடந்தவை எல்லாம் என் மனதில் இன்னொருமுறை திரைப்படம்போல் ஓடியது.

தேவியின் அழைப்பு
பத்திரிக்கைச் செய்தி,
தேவியின் மறு அழைப்பு,
ஆசிரமப் பயணம்
கொல்லணும் நிச்சயம் கொல்லணும்
மாயமாகும் அவள்
அந்தப் பேருல யாருமில்லைங்க தம்பி.

அப்படியென்றால், அவள் கொன்றது...

 நள்ளிரவு மணி 12.00.

தூக்கிவாரிப்போட்டது எனக்கு... என் கட்டிலுக்குப் பக்கத்தில் ரவியின் கைபேசி அலறியது. முன்பு நான் பல முறை முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியாத அதே கைபேசி.


அலறிக் கொண்டிருக்கும் கைபேசியில், அழைப்பவரின் பெயரை அதிர்ந்து போய் பார்க்கிறேன்.


அது ‘பிரைவட் நம்பர்' என்று பளிச்சிடுகிறது!

Wednesday, February 22, 2012

எதிர்வினை..





நிசப்த அலைவரிசையில்
அவன் என் முன் அமர்ந்துகொண்டு
பார்வையால் என்னை ஆக்கிரமிப்பதை
தடுக்க முடிவதே இல்லை..!


அவன் கேட்கும்  கேள்விகளுக்கு
பதிலைச்சொல்லி முடிப்பதற்குள்
அடுத்த கேள்வியை
எடுத்து என்  முன்வைக்கிறான்..


எப்படி சாத்தியமாகிறது இவனால்
என்று நான் சிந்திக்கும் முன்னரே
அடுத்தடுத்த கேள்விகள்
எடுத்து வைக்கப்பட்டன


ஆனால்...!
ஒரு ஒற்றுமை என்னவெனில்


அவன் கேட்க்கும் அத்தனைக்கேள்விகளும்
என் அன்றைய நாளின் செயல்களையே
உடனிருந்து வேவுபார்த்ததாக இருக்கிறது..!


முதல் கேள்வி இப்படியாக இருந்தது
ஏன் தேவை இல்லாத இடங்களிலும்
உன் சுபாவம் தெரியாதவரிடத்தும்
வார்த்தைகள் விதைக்கிறாய் என..!


அடுத்த கேள்வி உனக்கான அடையாளத்தை
ஏன் இத்தனை மட்டமாக்கிக்கொள்கிறாய்? என!


அடுத்த கேள்வி பொறுமையில்லாமல்
உன் கோவத்தையும் வெளிப்படுத்தி
பொதுஇடத்தில் மேலும் இழுக்கு சுமந்து
அவப்பெயரைத்தேடிக்கொள்வானேன்?


அதன்பின்னராக.... உனக்கு அறிவென்பதே இல்லையா!?
என்றும்... கேள்விகள் தீர்வதாகவே தெரியவில்லை


இப்படி நான் பதிலகளைத்தேடும் முன்னரே
அவன் கேள்விகள் என் மனதின்
எல்லையைத்தொட்டு கடந்து போய் விடுகிறது,...


அதன் பின் நான் அவனுக்கு
பதில்களைச்சொல்லாமல்
மனதின் எண்ணங்களை பரிசீலித்த்துக்
கொண்டிருந்தமையால்
அவன் அங்கிருந்து கிளம்பிப்போனதை
கவனிக்கவே இல்லை ...!


அவனுக்கும் என் பதில்கள் தேவையாக இல்லை
என்னை சிந்திக்க வைப்பதே
அவன் வந்ததன் காரணமாக
இருந்தது...! தினமும்...


அவனைப்பற்றி விசாரிப்பதும்
எனக்கு தேவையாகப்படவில்லை...


அதோ அதோ தொலைவில்
அவன் கடந்து போகிறான்
நான் உரத்தகுரலில் அவன் பெயரைக்கேட்டேன் !
பதில் வரவில்லை...மீண்டும் கேட்டேன்
“மனசாட்சி” என்றொரு எதிரொளி வந்தது...!


-கவிதைக்காரன்

Sunday, February 19, 2012

எதிரிகளிடம் ஜாக்கிரதை....








நேற்றைய கனவில்
எனக்கும் என் எதிரிக்குமான
வாய்த்தகராறு...!

சற்று நேரத்தில் வார்த்தை
பெற்றுப்போட்ட சண்டைக்குழந்தைகள்
உடனுக்குடன் நாகரீகம் பாராமல்
நடுரோட்டில் கைசரசங்களாக வளர்ந்திடுகிறது..

ஓங்கு குத்தப்பட்ட கைகள் அவன் நாசியை
பதம்பார்க்க..  மீள்வதற்குள்
அடுத்த குத்து அடி வயிற்றில் என
ஆக்ரோசமாகிப்போனது அச்சண்டை..!

சண்டை அன்று எனக்கு பிடித்தமான
பொருளாகி இருந்தது...
எதைப்பற்றியும் எவன் பற்றியும்
சிந்திக்காமல் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ள

வெளிநாட்டில் இருந்து வரும் மாமன்
வாங்கி கொடுத்த விளையாட்டு பொம்மை
போல அதன் மீது அத்தனை
ஆர்வமாகத்தோன்றியது...அந்தச்சண்டைகள் எனக்கு...

அதுவும் எதிரிக்கு முதலில்
இரத்தம் கொட்டிப்போனால்
நாம் தான் மோதலில் ஆக்கிரமிப்பில்
இருக்கிறோம் என்ற ஆணவம்
தலை மேல் ஏறி அமர்ந்து கொள்ளும்!

அது அடுத்த அடியைக்கொடுக்க
கொஞ்சமும் யோசிப்பதில்லை..
அது சண்டைக்குப்பின்வரும்
நிகழ்வுகளைப்பற்றி சிந்திக்க விடுவதே இல்லை!

மூளை மரத்துப்போய் முன்கோபம்
நரம்புகளை முறுக்கேறச்செய்ய !
சுற்றி வேடிக்கைபார்ப்போரின் முகபாவனைகள்
நம்மை ஒரு இரக்கமில்லாதவன் மேல்
செலுத்தும் பார்வையோடு அதேநேரம்
மிரட்சியாக பார்க்கும் போது

கிடைக்கும் பெருமித உணர்வு
எதிரியை நிலைகுலையச்செய்யும்
அளவுக்கு தாக்க வைக்கிறது...!
அநேகமாக இன்னும் இரண்டு அடி
கொடுத்தால் எதிரி வீழ்ந்திடுவான்

என் கனிப்பு தப்பவில்லை
அடுத்த இரண்டு அடிகளுக்குள்ளாகவே
அவன் வீழ்ந்தான்..
இனி அவன் எழுந்து வந்து அடிக்கப்போவதில்லை
அடிவாங்கவும் திராணி இல்லாதவனானான்!

அங்கிருந்து கிளம்பும் முன் அச்சத்தால்
எவனும் அவனைக்காப்பாற்றவோ என்னை
தாக்கவோ முனைவதாகப்படவில்லை!

எதற்கும் அவர்களை இன்னும் பலவீனப்படுத்தலாமென்ற
எண்ணத்தில் நான்கைந்து வன்சொற்களை
ஏகவசனாமாக வீசிவிட்டு விரைந்து கடந்து போகிறேன்
அந்த இடத்திலிருந்து... !

நான்
சிறுவயது முதல் இதுபோலான
சண்டைகளுக்கு தலைபடுவதில்லை,
 ஏன் கெட்டவார்த்தை
பேசுவோருடனோ கூட நட்பு பாராட்டியதே இல்லை

அதைவிட பள்ளியில் எனக்கு இருந்த
நல்லபெயரை காப்பாற்றிக்கொள்ள
இருக்கும் இடம் தெரியாமலே வளர்ந்துவிட்டவன்..!

ஆனால் இன்று ஒருவனை இரத்தம் வரும்
அளவுக்கு காயப்படுத்த நான் குரூரமானவனாகிப்போக
யார் காரணம் !? வேடிக்கை பார்த்தவனில் ஒருவன் வந்து
விலக்கி இருப்பானேயானால்..!

வார்த்தைச்சண்டை கைநீட்டும் முன்
அவ்விடத்தை நான் கடந்திருப்பேனேயானால்!

இந்த நிகழ்வு நடந்தே இருக்காதே
என எனக்கு நானே என்னை நல்லவனாகச்சித்தரிக்க
சமாதானப்படுத்திக்கொண்டிருக்கையில்

கனவு முடிந்தது... காலை புலர்ந்தது
 கவனமாக எதிரிகளைத் தவிர்த்து வருகிறேன்..!

-கவிதைக்காரன்
[கார்த்திக் ராஜா] 

Saturday, February 18, 2012

நடிகை





அவள் திரை ஊடகத்தில்
தவிர்க்க முடியாத நாயகி
ஆகி இருந்தாள்;

கவர்ச்சிக்கு பெயர்போன
அவளுக்கு அத்தகையதோர் வேடம்
ஒதுக்கப்பட்டுக்கிடந்தது
கிட்டத்தட்ட எல்லா படங்களிலும்

அறிமுகம் செய்த ஒரு
இயக்குனரோடு காதலென்றும்

நடிகர் ஒருவரோடு தொடர்பென்றும்
பத்திரிக்கைகள் அவளை
எழுதி தள்ளிக்கொண்டு இருந்தது

அதையெல்லாம் அவள்
கண்டு கொள்வதாகவே இல்லை..
அது இன்னும் அவளைப்பற்றி
விளம்பரமாக்கி இருந்தது...

புதியதாய் ஒரு இயக்குனர் ஒருவரின்
திகில் கதையொன்றில்
நடிக்க ஒப்பந்தமாகி இருந்தாள்.

மலைப்பிரதேசமொன்றில்
படப்பிடிப்புக்காக வந்திருந்தபொழுது
மாலை ஒப்பனை வேளையின் போது

அந்த காட்சியை முதலாவதாக
ஒரு புரொடக்‌ஷன் மேனேஜர்
கண்டிருந்தான்.

தான் தனிமையில் ரசித்து
சிலிர்த்த நாயகி கயிற்றின் பிடி
கழுத்தில் மாட்டப்பட்ட நிலையில்

கொஞ்சம் கொஞ்சமாய் இறந்து
கொண்டிருந்தாள் - என
அவன் அறிய வந்த போது

படமாக்க
தயாராகிக்கொண்டிருந்த
அத்தனை டெக்னீஷியன்களின்
காதுகளுக்கும் அச்செய்தி
அறியப்பெற்றிருந்தது.

ஊடகங்களெல்லாம் “உச்” கொட்டின..
மஞ்சள் பத்திரிக்கைகளெல்லாம்
வாயடைத்துப்போயின..

அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்த
தயாரிப்பாளர்களெல்லாம் நெஞ்சுவலி
சிகிச்சையென
அனுமதிக்கப்பட்டிருந்தனர்..

 “யாரென்றறியப்படாத
பிரபல” இயக்குனரின்
போன் ஒலிக்கிறது..!
மறுமுனைக்குரலில்
ஒரு மெல்லிய வனமம்
குடியிருக்கும் புன்னகையோடு

காரியம் முடிந்ததாய்
சொல்லிச்செல்கிறது..


அத்தோடு மூடி மறைக்கப்படுகிறது
கவர்சியான அவள் பிணம்

விற்பனைக்கு தயாராகின்றன
அவளது எச்சில் ஆப்பிள்களும்
அவள் எழுதிய காகித வஸ்துக்களும்!
சில வஸ்திரங்களும் கூடவே...!


-கவிதைக்காரன்...

யாரிவனென்றறிய...





சற்றுமுன் தண்டவாளங்களுக்கருகே
 வேகமாய் என்னை
கடந்து போன ஒருவன் சற்று
தூரத்திலிருந்து முறைத்துப்
பார்க்கிறான்.

கொஞ்சமும் அவன் பார்வை
என்னை விட்டு அகலாமல்
வெறித்துப்பார்ப்பதால் அவன்
என்னைத்தான் பார்க்கிறான்

என்பதை உறுதி செய்துகொண்டேன்  
மேலும் யாரவன் என்பதை
சிந்திக்க தொடங்க அந்த நேரம்
சரியாக இருக்குமென ஆரம்பித்தேன்.

இதுவரைக்கும் சண்டைகள் போடாதவனாக
இருக்க வேண்டும்...
இதுவரைக்கும் என்னால் தூற்றப்படாதவனாக
இருக்க வேண்டும்...
இதுவரைக்கும் நான் புறக்கணித்தவர்களில் ஒருவனாக
இல்லாமலிருக்க வேண்டும்...

ஏனெனில் இவையெதிழும் அவன் முகச்சாயல் தாங்கியவனைக்கண்டதில்லை..

இப்போது என்னை ஒரு பயம்
அப்பிக்கொண்டது கொஞ்சம்
இருள் படர்ந்தது போல
இருந்த அவன் முகம் வெளிச்சம் மெல்ல
படர்ந்ததாய் என் பார்வைக்குப்புலப்பட!

கொஞ்சம் திகிலுறும் போது அது நடந்திருந்தது..
ஆளில்லாத அந்த இரும்புப்பாதை தடத்தை
கடக்க வேகமாய் சென்று இரயிலடிபட்டு
இறந்து போனான்...

கழிவு மீனுக்கு காத்திருக்கும்
காகக்கூட்டம் போலவும்
மாலை நேர இறைச்சிக்கடையில்
வாலாட்டி நிற்கும் நாய்கள் போலவும்

கூட்டம் அவனைச்சூழ்ந்து கொள்ள
இடைவெளிகிடைக்காத இடங்களில்
மெல்ல நிழைந்து அவனை அருகினேன்

வெள்ளைச்சட்டை அணிந்திருந்த
அவன் இரத்தச்சகதியில்
சிவந்து போயிருந்த ஆடைக்குள்
இறந்துகிடந்தான் .!!

அருகாமையிலிருந்ததால்
இப்போது அவன் முகம்
இன்னும் தெளிவாய்ப்பட்டது
ஆம் அது நானாக  இருந்தது...!


எண்ணம் & எழுத்து
-கவிதைக்காரன்

Friday, February 17, 2012




பின் தொழுவத்தில் கறவை மாடு பால்
கறக்கப்படுவதாய் உணர்த்தும்
தூக்குவாளி கைப்பிடி சத்தம்
பொழுது புலர்ந்ததையும்  கொம்பையன்
வந்துவிட்டான் என்பதையும் உணர்த்தியது..

பாம்பு தீண்டி இறந்து போன கன்றுக்குட்டியின்
நினைவாலேயே மாண்டு போன
செவளப்பசு போனதும் ஏர்வாடி சந்தையில்
வாங்கி வந்த பசு இது ..  அதன் தேஜஸான
உடற்கட்டும் குரலும் அதன் செழுமையான நிறமும்
விரைவிலேயே வீட்டில் உள்ள எல்லோருக்கும் பிடித்துப்போனது..

மணி நான்கை தொட்டிருக்கும் போது
ரேடியோவுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருக்கும் ஜீவன் ஒன்று
நினைவேற்றம் செய்தது..  அன்று ஞாயிற்றுக்கிழமைதானென்று
வழக்கமாக ஞாயிறென்றால் வீடே கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ளும்

நான் வெள்ளனே எழுந்து முன்வாசல் கடந்து மொபட்டை உதைத்து
மூலமடை வழியாக வயலுக்கு போகும் வழியிலே
கூலியாள் வீட்டைச்சத்தம் கொடுத்தேன். பதில் இல்லாததால்
இரண்டு முரை ஹாரனை அழுத்த அவன் பெஞ்சாதி அய்யா போங்க பொறத்தாலே அனுப்பி வைக்குறேன் வயலுக்கு என்று மென்று முழுங்கினாள்.

நேரே வயலுக்கு போய் கொத்திப்போட்டிருந்த நஞ்சைக்கு இன்று நீர் பாத்தி அடிக்கலாம் ஞாயிற்றுகிழமை என்பதால் வேறு எவனும் முன்னேறப்போவதில்லை என்பதால் தாழ்மட்ட வயலை முன்னே நிரப்பலாமென்ற சிந்தையில் இருந்தேன்.  

நேரங்கடக்க கூலியாள் கருப்பன் வருவது போல தெரியாததால் பஞ்சாயத்து கூடத்தில் வைத்திருந்த மண்வெட்டி எடுத்து நானே பாத்தி திருப்பி விட்டுக்கொண்டிருக்கையில் தன் லொட லொட சைக்கிளில் வந்து குதித்தான் கருப்பன்.  ஏலேய்... மண்ணாங்கட்டி உண்ட என்னாலே சொன்னே காலையில திருப்பி விட்டா இளவெயில் சுடுறதுக்குள்ளே நீரெரங்கும்ன்னு தானலே வெரசலா வரச்சொன்னேன் என கொஞ்சம் காட்டம் காண்பித்தேன்.  அந்த காட்டமான குடல் அந்நாள் முழுவதும் அவன் மூச்சுவிடாமல் வேலையை முடித்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

வயலை கவனிக்கச்சொல்லிவிட்டு வரப்பிலேறி மடையில் ஆழமில்லாத இடத்தி கால் கழுவி விட்டு அண்ணாரும் போது சூரியன் கொஞ்சம் இளஞ்சூடாக எட்டிப்பார்க்க தயாராக இருந்தது அந்த குளிர்காலைக்கு கொஞ்சம் இதமாகவே இருக்க வீட்டிற்கு விரைந்தேன் அந்நாளைய தினத்தந்தி கையில் புரளும் போது அஞ்சுகம் காபி கம்பேனி - வாசனை மணக்கும் காபி நாவுக்கு ருசியாக கொஞ்சம் சாய்வு நாற்காலிக்கு முதுகு கொடுக்கும் போது அவன் கண்ணுக்கு தென்பட்டான்.

தன்னை ஒரு கூத்துக்கலைஞன் என அறிமுகம் செய்து கொண்டான்.

எனக்கு அதன் உள்ளார்ந்த அர்த்தம்
புரியாமலே தலையாட்டி விட்டு
என்ன சேதி என்றேன்.

ஊரூரா போய் கூத்து கட்டுவோம் இப்போ வழி முடிஞ்சிபோச்சி வயிறும் காய்ஞ்சி போச்சி அய்யா பார்த்து ஏதாவது என்று இளுக்க ....

காசு ஏதும் வேணுமாடே இல்ல நெல்லு துணிமணி ஏதும் தரச்சொல்லவா என்க...

அதெல்லாம் அய்யா தாராளமுங்க ஏதாவது வேலை இருந்தால்
கொடுங்க சனத்த்க்கு அண்டிப்பொழைச்சுப்போமுங்க  என்றான்,

கலைஞன்னு சொன்னவன் கல்வயித்துக்கு வழி இல்லாம வந்து நிக்குறானேன்னு கொஞ்சம் மனக்குடைச்சல் இருந்தாலும் உழைக்கிறேன்னு நிக்குறான் பிச்சைகேட்காமல் அந்த கர்வம் புடிச்சதால


ஏதாவது செய்யச்சொல்லலாமுன்னு நினைக்கும் போது யோசனைக்கு வந்தது
வெள்ளக்கோவில் பக்கமா ஏலத்தில் வாங்கிப்போட்ட கருவேலமரக்காட்டின்
அபரிமித வளர்ச்சி விறகுக்கடைக்கு வெட்டி அனுப்பப்பட வேண்டிய சூழலில்
இருப்பது நினைச்சாலும் அசலூர் காரனுக்கு கொடுத்தா தப்பாயிடுமோன்னு மனசுக்கு பட கொஞ்சம் தயங்கி  நாகரத்தினத்துக்குட்ட ஒரு வார்த்த கேட்டேன்.

நாகரத்தினம், எனக்கு மணப்படையிலிருந்து வாக்கப்பட்ட பெஞ்சாதி என் முன்ன பேச பயந்தாலும் வேலைக்காரவங்களை கணக்கா நடத்துறதும் காரியமுன்னா கொடுக்குறதுமா படித்தறியாத அனுபவஸ்தி... அதனாலதான் அவகிட்ட கேட்டேன்.

அனுசரனையா நாலுவார்த்தை கேட்டுட்டு அட்சரம் பிசகாமல் அவனுக்கான வேலையைச்சொன்னாள் அவனும் சரிங்கம்மா என கேட்டுக்கொண்டான்.
நானும் கூடவே கிளம்பி அவனை மொபட்டின் பின்னால் அமர வைத்து புறப்படத்தயாடானேன். வீட்டுக்குள்ளிருந்து ஒரு சொம்பு நீச்ச தண்ணீர் வந்தது வெளிய போறீக குடிச்சுட்டு போங்கவென..! பின்னாடியே அவனுக்குமொன்றாய்... கொஞ்சம் இதமாக இருக்க மணி 6:30 என தெரியவந்தது....

-contiue...

கொள்ளை போகும் கனவுகள்





என் கனவுகள்
கொள்ளையடிக்கப்படுகின்றன!
வேண்டி விரும்பி யாராலென
கண்டுபிடிக்க நினைத்து
தூக்கம் வராமல் காத்து
தவிக்கிறேன்...!

அது ஒரு இளமையான முகமாக
இருக்கக்கூடும்  நான் ஆணென்பதால்
அது அநேகமாக பெண்ணொருவளாக
இருக்குமென நினைக்கிறேன்.
அப்படி இல்லாமல்
போனாலும் கூட மனம் அதையே
விரும்புகிறது...

கொஞ்சம் ஆழமாய் யோசித்தால்
யாரோ பழக்கப்பட்ட வீட்டின்
வரவேற்பறையின்  அமர்ந்திருக்கிறேன்.
சம்பிரதாயக்குரல்க்கள்
வழக்கத்துக்குமாறாய் துள்ளலாக
ஒலிக்கிறது...

சற்று தள்ளி இருளான அறைக்கு
வாயில்நிலையில் தொங்கவிடப்பட்ட
சங்குதோரணங்களுக்கு பின்னால்
தெரியும் ஓரு ஜீவனின் தவிப்பை
சப்தமேயில்லாமலும் சம்பந்தமே
இல்லாமலும் நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

இந்த தருணம் சுகமானதாய் இருந்தாலும்
மனம் அதை ஏற்க மறுத்து பின்வாங்க
விருட்டென எழுந்து வெளியேறுகிறேன்.
இன்னும் கனவுகள் களவு போய்க்கொண்டே இருக்கின்றன!

-கவிதைக்காரன்..

கொள்ளை போகும் கனவுகள்








என் கனவுகள்
கொள்ளையடிக்கப்படுகின்றன!
வேண்டி விரும்பி யாராலென
கண்டுபிடிக்க நினைத்து
தூக்கம் வராமல் காத்து
தவிக்கிறேன்...!


அது ஒரு இளமையான முகமாக
இருக்கக்கூடும் நான் ஆணென்பதால்
அது அநேகமாக பெண்ணொருவளாக
இருக்குமென நினைக்கிறேன்.
அப்படி இல்லாமல்
போனாலும் கூட மனம் அதையே
விரும்புகிறது...


கொஞ்சம் ஆழமாய் யோசித்தால்
யாரோ பழக்கப்பட்ட வீட்டின்
வரவேற்பறையின் அமர்ந்திருக்கிறேன்.
சம்பிரதாயக்குரல்க்கள்
வழக்கத்துக்குமாறாய் துள்ளலாக
ஒலிக்கிறது...


சற்று தள்ளி இருளான அறைக்கு
வாயில்நிலையில் தொங்கவிடப்பட்ட
சங்குதோரணங்களுக்கு பின்னால்
தெரியும் ஓரு ஜீவனின் தவிப்பை
சப்தமேயில்லாமலும் சம்பந்தமே
இல்லாமலும் நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.


இந்த தருணம் சுகமானதாய் இருந்தாலும்
மனம் அதை ஏற்க மறுத்து பின்வாங்க
விருட்டென எழுந்து வெளியேறுகிறேன்.
இன்னும் கனவுகள்
களவு போய்க்கொண்டே இருக்கின்றன!



-கவிதைக்காரன்..

Thursday, February 16, 2012

யுகம் யுகமாய்






ஆதியின் கூட்டில்
நடந்து நடந்து
சுமந்து சுமந்து
கடந்து கடந்து
அடைந்த நதிக்கரை மீதினில்
அமைந்த நாகரீகம்...

கற்களை
பெயர்த்து கரும்பாறை
இடுக்கில் மரவேரை
சொறுகி மழைகாலம்
பாறை பெயர்த்து வழி
அமைத்த நாகரீகம்

தீயின் காலம்
சருகுகள் கரிய
கரும்புகை படர
வளர்ந்த நாகரீகம்

பறவை எச்சிலில்
துளிர்த்த இலையில்
பாங்காய் வளர்ந்த
பயிர்களில் பசித்தீர்த்த நாகரீகம்

கல்லில் குடைந்த
கூர்வெட்டோத்தியின்
குருதிநாற்றத்தில் கொன்று
மலத்திய செந்நரி
மாமிசங்கொண்ட நாகரீகம்

 வட்டுகல் விற்கள்
வீசி ஏய்தி வீழ்த்திய
களிறும் விரட்டிய
அரிமாவையும் புரட்டிய
நாகரீகம்

மண்சுடல் சிற்பம்
மதில் கரி உருவமென
குடைந்து குழைத்த
குறுமலை நாகரீகம்

நூறாண்டு வாழும்
ஆமை கொன்று
நீராடும் மீனை
குதறிக்கிழித்து
களித்த பொழுதின்
எச்ச நாகரீகம்






மண்ணையும் மழையையும்
விண்ணையும் பொன்னையும்
அளந்த சேற்றில் ஊறிய
சபிக்கப்பட்டவனின் மிச்சத்தடங்களாய்

தூக்கைச் சுமக்கும்
நாகரீகம்


சைவ வைணவ பட்சிகளென
தவிட்டு போதனைக்குள்
சாஸ்ட்ராங்கமாய் கால் நீட்டி
படுத்துக்கிடக்கும்
நாம்

குரங்குகளின் புணரல்
கற்றோமென்றால் முகஞ்சுளிக்கவும்
நாய்களையும் அதன் உப்பு
நாக்குகளையும் அறிந்த படியால்

உள் வீட்டுக்கு காவல் வைத்தோமென்றால்
அறிவுஜீவியெனக் கொள்ளவும் தயங்கியதில்லை...

வெப்பம் படிந்த
அண்ணாச்சி பழங்களைப்போல
வெளிக்கசடுகள்
நீங்காமல் திரிகிறோம் யுகம் யுகமாய் !


-கவிதைக்காரன்

நட்புக்காலம் நண்பர்கள் சந்திப்பு...!


      ஞாயிறு அதிகாலை மணி 6:00 டிஜிட்டல் எழுத்துக்களில் அலார ஒலியெழும்ப உறங்கிக்கொண்டிருந்த கண்களை மறைக்க  அணிந்திருந்த கண்ணாடியைக்கழட்டிக்கொண்டே கைகளிலிருந்த புதிய தலைமுறை வார இதழின் அவ்வாரத்தின் பதிப்பை அப்புறப்படுத்தினேன். பயணித்துக்கொண்டிருந்த பேரூந்தின்  புஸ்பேக் சீட்டை நேராக நிமிர்த்தி பக்கவாட்டு ஸ்லைடு டைப் ஜன்னலைத் அன்னிச்சையாக திறந்தன கைகள் .
         புறநகர் தார்ச்சாலையில் மித வேகத்தில் பயணிக்கும் ஓர் அரசு விரைவுப்பேரூந்தின் ஜன்னலோர இருக்கை வழியே..எட்டிப்பார்க்கிறேன் நான்.
            கும்மிருட்டும் வெளிச்சமுமில்லாத புலரும் வெளிச்சத்தோடு சில்லென்று முகம் முழுதும் வியாபித்துக்கொண்டிருக்கும் வடக்குக்காற்றை மெல்ல நாசிகள் சுவாசித்து அனுபவிக்க கண்சிமிட்டிய படியே பயணமாகிறேன் சென்னைக்கு..
        இளம்பச்சை நிற பலகை  ஒன்று சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தில் வரவேற்கத்தயாராக இருந்தது. என்னை,,,! இந்த ஞாயிறு நாளின் விடியல் எனக்கு தலை நகரத்தில் தானென்பது 7 நாட்களுக்கு முன்னே உறுதிப்படுத்தப்பட்டு விட்டது..!
      ஒரு சிறு ரிவர்ஸ் கியர்…!
இன்று சனிக்கிழமை:-
       இரவு மணி 7:00 திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வாசல் இருட்டுக்கடையில் அல்வா தீர்ந்தது என்பதை அங்கே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஊழியர்கள் ஓய்வாக அமர்ந்து இருந்ததிலே கணித்துவிட்டாலும், மனம் உணர்ந்ததை சில வேலைகளில் கேட்காமல் போகும் வார்த்தைகள் “அல்வா இல்லையா பாஸ்“ என்க –
 “முடிஞ்சதுங்க”.. எனப்புன்சிரிப்புடன் வெளிப்பட...
            அடுத்த “வெளிச்சக்கடை”யான சாந்தி ஸ்வீட்ஸில் அல்வா பார்சல்களை வாங்கிக்கொண்டு பைக்கை உதைக்க ரயில் நிலையம் நோக்கி விரைகிறேன். செந்தூர் எக்ஸ்ப்ரஸில் 9:20க்கு சென்னை செல்ல டிக்கெட் வாங்கிவிட்டு ப்ளாட்பாரத்தில் காத்திருக்க செல்போனில் நண்பனிடமிருந்து அழைப்பு..கடந்த ”பொங்கல் அன்று செந்தூர் எக்ஸ்ப்ரஸில் வந்தேன். மதியம் தான் சென்னை வந்தேன்: என்றான்.  
           அடடா! நாளை ஒர் நாள் சந்திப்பிற்காக சென்னை செல்ல இருக்கிறேன் அதில் பாதிநாளை இரயிலிலேயே கழிக்கவா! அவ்வ்வ் யோசனையின் முடிவில் மீண்டும் க்யூவில் நின்று உடனே! டிக்கெட்டை கேன்சல் செய்து வண்ணார்பேட்டை பைபாஸ் சாலைக்கு வந்து மதுரை பேரூந்தை பிடித்து மதுரையிலிருந்து சென்னை விரைவுப்பேரூந்துக்குத் தாவி… ஒரு சிறிய முன்னெச்சரிக்கையற்ற பயண ஏற்பாடுகளின்  பெயரில் இப்போது சென்னை விரைந்து கொண்டிருக்கிறேன்…!   
     இதனை வாசிப்போர் கேட்கலாம் முன்னாடியே டிக்கெட் போட்டு தயாராக இருந்தால் இதெல்லாம் தேவையா என்று, அடப்போங்க பாஸ் அதெல்லாம் செய்துட்டு தான் வந்தேன் அந்த அல்வா வாங்கிய கேப்பில் ஒரு ட்ராபிக் சிக்கலில் சின்னாபின்னமானது...என் அத்தனை ப்ளான்களும்…
 
   சென்னை நெருங்க இன்னும் நேரம் பிடிக்கும் ஏற்கனவே மதுரையில் மிகத்தாமதமாக பேரூந்து ஏறியதால் அதுதான் சாத்யமென்பது முன்னாடியே தெரிந்ததால் இன்னும் கொஞ்சம் கூட உறங்கலாம்.. ஆனால் மடிக்கணிணியில் கொஞ்சம் மேய்ந்துவிட்டு.. மீண்டும் புஸ்பேக்கை தாழ்த்தி உறங்கச் சென்றேன்.
     கொஞ்சம் நினைவுகளை பின்னோக்கி அசைபோடத்துணிந்தேன்… பயப்படாதீங்க ரொம்ப ரம்பமால்லாம் இருக்காது…!
          FACEBOOK – ஒரு மாயவலை மந்திரக்குகை அப்படி இப்படின்னு திட்டுவோர் ஆயிரம் பேர் இருக்க [ லட்சம்,கோடிகளில் இருக்கிறார்கள் நம்ம லிஸ்ட்ல இல்லாதவங்களைபற்றி நமக்கென்ன பேச்சு ஹிஹி அதான் ஆயிரத்தில் முடிச்சுக்கிட்டேன்.]


      முத்தான நண்பர்களா எனக்கு கிடைத்தவர்களில் பலரில் ஒரு குழுவினர் சென்னையில் குழுமுவதன் சந்திப்பே  இந்த ஞாயிறின் நிகழ்ச்சி [நாள் 22/01/2012 ].
   ஆமாங்க… முகநூலில் என் மதிப்பிற்குரிய நண்பர் ஹமீதண்ணா என்றழைக்கப்படும் பட்டுக்கோட்டைக்காரர் திரு,ஷேர்கான் ஹமீது அவர்கள் விடுமுறையில் தாயகம் திரும்பி இருந்த படியால் நட்பின் நிமித்தம் அவரை நான் சந்திக்க ஏற்பாடு. அவர் இருப்பதோ சென்னையில் நான் இருப்பதோ நெல்லையில் பின் சென்னைக்கு ஏனப்பா போறீங்க என கடுப்பாகாதீங்க…. சாதாரணமா நாங்கமட்டும் சந்திக்கவேண்டிய நிகழ்ச்சியை ஏன் முகநூல் வட்டத்தில் ஒன்றி இருக்கும் நண்பர்களோடு நிகழ்த்திவிடக்கூடாதென்று ஒரு சின்னப்பொறி கிளம்ப படைகள் தயாரானது.. எல்லோரும் குழும ஒரு சரியான இடமாக சென்னை தேர்வானது… நகர சந்தடிகளுக்கு மத்த்யிலும் நட்பு வளர்க்கும் சென்னைவாசிகளின் நட்பு முகத்தை ஏற்கனவே சென்னையில் உப்புக்காற்றுக்கு மத்தியில் மனம்குளிர அனுபவித்த முன்னோர் நிகழ்வும் அங்கேயே அமைந்திட்டதால்… பயணம் வணக்கம் வாழ வைக்கும் சென்னைக்கு…!
     வாடா மச்சான் சென்னைக்குன்னதும் என்ன விசயம் என்று கூட கேட்காமல் வண்டி ஏறும் நண்பன் 2 பேர் இருந்தார்கள் என் லிஸ்ட்டில்… அந்த அளவுக்கு உரிமையும் நட்பும் ஒருங்கே சேர்ந்த இரட்டை நண்பன்கள்  தமிழரசனும்,ரமணாவும் பாண்டிச்சேரியில் எம்.ஜி.ஆர் மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் இழுத்து போர்த்தி தூங்கும் [அடடா உண்மைய சொல்லிட்டேனோ?] முழித்துப் படித்துக்கொண்டிருந்த எம்.பி.பி.,எஸ் புக்கை பரண் மேல் போட்டுட்டு இரவோடு இரவா பஸ் ஏறினார்கள் சென்னைக்கு.. பயபுள்ளைங்க ரெண்டு பேரில் தமிழுக்கு காலில் அடிபட்டு ஃப்ராக்சர்.. ஆனாலும் அதைகாட்டிக்காமல் சந்திக்கப்போற சந்தோஷத்தில் வழக்கம் போல எதோ ஒரு பொய் சொல்லிட்டு ஹாஸ்ட்டலைவிட்டு [அநேகமா பாட்டியை கொன்னுறுப்பானுங்க ] கிளம்பிச் சென்னைக்கு வந்தே விட்டார்கள் நடுஇரவு 2 மணிக்கு….

        இந்த சந்திப்பில் மூளையாக செயல் பட்ட மாஸ்ட்டர் ஆஃப் பூஸ்டர் பேக் எங்க கிரி மாமா.!  சும்மா சொல்லக்கூடாது சந்தோஷத்தில் தலைகால் புரியாம மொட்டைத்தலையில் சந்தனம் வைச்சது போல உச்சிக்குளிர்ந்துபோனான். வருவோர் அனைவருக்கும் சென்னையின் பிரம்மாண்டமான வாட்டர் டாங்க் எல்லோருக்கும் தெரியுமே கலைஞரின் புதிய செக்கரட்ரியேட்.. அதன் பின்புறம் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலான  “ஹோட்டல் பிரியதர்ஸிணி இண்டர் நேஷனல்” –ல [ஸ்டாப் ஸ்டாப் பொய் சொல்லுங்கடா ஆனா ஏக்கர் கணக்குல சொல்லாதீங்கன்னு யாரோ திட்றது கேக்குது மச்சான் கதைய உண்மையான ரூட்டுக்கு மாத்து…]  அவ்வ்வ் கண்டு பிடிச்சுட்டீங்களா!


      சரி சரி உண்மைய சொல்லிட்றோம் அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பின்னாடி இருக்கும் மேன்ஷன்ல ரூம் புக் பண்ணி எல்லோரையும் ஒருசேர இணைத்து சந்திப்பில் எந்த பிசிறுமில்லாமல் ப்ளான் போட்டமாதிரி [ஆமா தங்க மலைய கொள்ளை அடிக்கப்போறோம் ப்ளான் போட்றதுக்கு… ] நல்லபடியா நடக்க துணையா நின்னான் கிரி என்கின்ற கிரிதரன்.
     அடுத்ததா முக்கியதளபதி இவரைச்சொல்லலைன்னா எப்படி இவருதான் இவருதான் அவரு.,, ஹாஹா! சென்னை அசோக் நகரில் சாதுவா முகத்தை வைச்சுக்கிட்டு திரியும் அம்பி அந்நியன் ரெமோ… எல்லாருமே ஒரூ ரூபத்தில் வந்தவன் …திருநெல்வேலிக்காரன் என் உடன்பிறப்பு.. பேரு சதீஷு…! ஆள் பார்க்க களையா இருக்கான்னு இவன்கிட்ட  “ஸ்பான்ஸர்” என்னும் பெரிய பொறுப்பைக்கொடுக்கலாம்ன்னு பார்த்தோம்… சிரிச்சே மழுப்பிட்டான் பயபுள்ள!

.
            அடுத்த மாஸ்டர் ப்ளாஸ்டர் கோவை சிறுத்தைகுட்டி.. பவர் ஸ்டாரின் க்ளோனிங் எங்க  ஆருயிர் நண்பன் அன்புடன் சரண்  என்றழைக்கப்படும் சரண்ராஜ். கோடி ரூபா கொடுத்தாலும் இப்படி ஒரு நண்பன் கிடைக்க மட்டான்.. நாம் புரிஞ்சுக்க ஆயிரம் பேர் சுற்றி இருந்தாலும் நம்மை புரிஞ்சுக்க ஒரு ஜீவனைத்தான் நிதம் தேடுகிறோம் … இவன் அப்படிப்பட்ட நல்ல நண்பன்.. ஆனா தன் கஸ்டத்தையோ கவலையையோ முகத்தில் 000.0009 % கூட காட்டமாட்டான். அவனுக்கு சனிக்கிழமை சாயங்காலம் போன் போட்டு வர்ரியா மச்சான்னது… எங்க இஸ்கூல்ல லீவெல்லாம் தரமாட்டாங்கன்னு எல்.கே.ஜி பையன் ரைம்ஸ் சொன்னமாதிரி சொன்னவனை கொன்னேபோடுவோம் என்று அன்பு மிரட்டல் விட்டதும் அன்புடன் சரண் அட்டண்டென்ஸில்..

       மேலே சொன்ன ஹிட் லிஸ்ட்டில் சரண்,கிரி, சதீஷ்,நானும் [அதாங்க கார்த்திக் ராஜா-வாகிய நானும் …ஒரு விளம்பரம் தான் ] முன்பே கடந்த மே-யில் சென்னையில் சந்தித்திருந்தோம்…! தமிழ் ரமணா அப்போது வர முடியாததால் இப்போ ஆஜர். சரி நம்ம பார்த்த முகங்களையே பார்த்து சென்னையில் மிரண்டது போதும் புதுஷா யாரையாவது பார்த்து கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கலாம்ன்னு நண்பன் பிரகாஷ் [prakash sona] –க்கு டயல் பண்ணதும் … தலைவர் அண்ணன் கல்யாணம்ன்னு சரணை விட மோஷமா பிஞ்சுக்குழந்தை போல காரணம் சொல்றாரு,.. [ ஆனா பாருங்க இந்த சந்திப்பில் முதல் ஆளா வந்து அவன் தான் காத்துக்கிடக்கப்போறான்னு பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் எனக்கு அது வரை தெரியவே இல்லை ] சிம்புளா ஃபேஸ்புக் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வர்ராங்கன்னு ஒரு பிட்டு போட்டேன்.. அண்ணாச்சி ஆஜர்.
     [ஆனா பாருங்க புதுஷா யாரையாவது பார்த்து சந்தோசப்படலாமேன்ற எண்ணத்தில் மறுபடியும் ஏமாற்றம்… தான் மிச்சம் பயபுள்ள மிசையும் தாடியுமா டி.ஆர் யூத்தா இருந்தது போல எண்ட்ரி கொடுத்தாருன்னு நான் இங்க ஏதும் சொல்லல மச்சான் ]   

                 
      அடுத்ததா… கோயம்புத்தூர்ல இருந்து கிளம்பிய இன்னோர் புயல் சுரேஷ்.. முக்கியப்பெரும்புள்ளி சென்னைக்கு வரமுடியுமா சண்டேன்னு சொல்லுறதுக்காக  சென்னைன்னுதான் சொன்னோம். அதுக்குள்ள சென்னை வந்துட்டு என்ன மேட்டர்ன்றார்… நண்பர்கள் சந்திக்கிறோம் என்றதும் ரொம்பவே சந்தோஷப்பட்ட பெரிய மனுஷர் இவர்.. சந்தோஷங்களின் போது எப்போதும் உடன் இருக்க வேண்டியவர் ஆனால் பலமுறை மிஸ் ஆனதால் இந்த முறை முன்கூட்டியே ஆஜர். இன்னோரு உப செய்தி என்னான்னா இவரு என் மூத்த உடன்பிறப்பு..!
    சரி ….. தொண்டர் படை ரெடி ஆகிட்டு தலைவரை எங்க இன்னும் காணும்ன்னு யாரோ காசு கொடுத்தமாதிரியே கூவுறாப்ல போல அட யாருப்பா அது… [நானில்லீங்கோ நானில்லீங்கோ] அட ஆமால்ல தலைவர் காலை ஆறு மணிக்கு கோயம்பேடு வந்து இறங்கிவிட்டார் ஷேர்கான் ஹமீது. அங்கிருந்து ஒரு மினி பயணம் ஆட்டோவில் தொடர [இன்றைய நாள் முழுதும் ஆட்டோ பயணமாகவே அமையுமென அவர் நினைத்துப்பார்த்திருப்பாரான்னு தெரியலை.. ஹஹ] வாட்டர் டேங்க் [சென்னையின் புதிய[?]  தலைமைச்செயலகம் அமைந்த ஏரியா பெயர் சிம்ஸன் –ன்னு யாரோ சொன்னாங்க ஆனாலும் எனக்கு அதை வாட்டர்டாங்க் என்று சொல்வதே பிடிச்சிருக்கு..ஹிஹி ]  அருகமைந்த சந்துகளில் பிரயாணப்பட்டு காலை களேபரங்களில் இடம் புடிச்சிக்கிடார்.. அவ்வ்வ் இனி நான் மட்டும் தான் மிஸ்ஸீங்….!

         இதுவரை இல்லாத உணர்விது இதயத்தை துண்டாக்கும் நினைவிது மனதினை மண்ணோடு புதைத்திடும் பெண்ணை நம்பாதே….! யுவனில் இசையில் என் மொபைல் இசைக்க… நினைவுகளிலிருந்து விழித்து கால் அட்டண் செய்தால் சதீஷ் “எங்க மக்களே வந்துகிட்டு இருக்க திண்டிவனம் தாண்டிட்டியா”.
 “தெரியலை சிட்டி அவுட்டர்ல தான் இருக்கேன்னு நினைக்குறேன்”.
 “மருவத்தூர் தாண்டினதும் அப்போ போன் செய்”.
 “ம்ம்ம்”. எல்லாரும் வந்துட்டாங்களா?”.
ஹமீதண்ணா,ரமணா தமிழ்-லாம் வந்துட்டாங்க நானும் கிரியும் நைட்டே ரூம்க்கு வந்துட்டோம். தமிழ் ரமணா வரமாட்டானுங்கன்னு நினைச்சேன். நைட் 2 மணிக்கு வந்து ஒரே ஆட்டம் ஸ்கைப்பில் எல்லாருக்கும் பேசினோம். [அயல்நாட்டு பட்டாளம்].
“சரண்,சுரேஷ் வந்தாச்சா?”.
“ரெண்டுபேரும் கோயம்பேடு வந்துட்டான்க.. இப்போ வந்துடுவாங்க”.
“அடப்பாவிகளா எல்லாரும் முந்திக்கிட்டீங்களேடா அவ்வ்வ் சரி சரி நான் சீக்கிரம் வர்ரேன்”.
“சீக்கிரம் வாடா கர்ர்ர்ர்ர்ர் ” மைல்டா கடுப்புடன் போன் கட் ஆகிறது.
     மெல்ல மெல்ல அப்படி இப்படின்னு சென்னைக்குள் நுழைந்துவிட்டேன். கோயம்பேடு வளாகம் பழைய எனது அலுவல் பயணங்களின் நாட்கள் கொடுத்த தைரியத்தில் புதியவன் என்ற அடையாளம் கொடுத்து என்னிடம் வாலாட்ட பயந்து அதே கம்பீரமாக வரவேற்கிறது…     
         ஆட்டோ பிடித்துச்செல்லலாம் என்ற நினைவு அப்போது எழவே இல்லை. அக்வாஃபினாவில் [?] (வெளியூர்பயணங்களில் இந்த அக்வாஃபினா அக்கப்போர் தவிர்க்க முடியாததாகிறது குடிநீரை வீணாக்காதீர்! என எங்கேயோ வாசித்த எழுத்து கண்முன் வந்து போகிறது) முகத்தை கழுவி கொஞ்சம் ஃப்ரெஷ் ஆனது வாட்டர் டேங்கிற்கு அடுத்த பஸ் ஏறும் போது டிஜிட்டல் டைம் 11 – ஆகி இருந்தது… 
     அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் வேதாகமப்புத்தகங்களைச்சுமந்த சென்னை வாசிகளைக்காண முடிந்தது.. பேரூந்தில்… வழக்கமாக பள்ளிக்கூட கல்லூரி இளையோர்களால் பிரசவ காலபெண்ணாகும் பேரூந்து கொஞ்சம் பேப்பர் மூட்டைகல் இல்லாமல் மெல்ல ஊர்ந்து அரையடிக்கு ஒருமுறை வரும் சிக்னல்களை கடந்து என் பொறுமையையும் போன்கால் களையும் சோதிக்க… கடுப்பின் உச்சத்தில் நேரா செம்மொழிப்பூங்காவிற்கே வந்து விடு என்று நண்பர்கள் சொல்ல..
     மச்சான் இன்னும் குளிக்கலைடா எப்டிடா!?  என பஸ்ஸில் பக்கத்தில் இருப்பவரைக்கூட கவனிக்காமல் நானும் சொல்ல [கடுப்பேத்துறார் மை லாற்ட்] சரி நான் வெயிட் பண்ணுறேன் பசங்க போகட்டும் என கிரி சொல்ல எனக்கும் அதுவே சரியாகப்பட்டது…!

    இன்னும் ஐந்து நிமிடங்களில் நிறுத்தம். அதைக்கடந்து சுரங்க நடை பாதையில் சில நிமிடங்களை செலவழிக்க நான் கிரி அலுவலகம் முன்னே
ஒரு சின்ன தொலைப்பேசி உரையாடலுக்குப்பின்… அவசர அவசரமாக கிளம்பி கிரி ஸ்ப்ளெண்டரை உதைக்க அடுத்த சில நிமிடங்களில் சென்னை செம்மொழிப்பூங்கா இன்னும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளினால் வீழ்த்தப்படாமல்… வலுக்கட்டாயமாக காங்ரீட் காட்டுக்குள் இயற்கையின் வேர்களை இறுகப்பிடித்தபடி வரவேற்கிறது… கண்ணாடி கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஆறறிவு ஜீவராசி ஒன்று எத்தனை பேர் என்று குரைத்தது.
    இரண்டு பேர் என நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ல காமிரா இருக்கா? என எக்ஸ்ட்ரா குரைத்தலுக்கு இல்லை என ஹாண்டிக்காமை மறைத்தபடி அரிச்சந்திர அரிதாரம் பூச.. வள்வள் வழிவிட்டது..!
     சென்னை வீதிகளில் சுற்றித்திரிந்த காலத்தில் அதிக பசுமையடர்ந்த சில இடங்களில் வீசும் அதே இளஞ்சூரிய ஒளி இலைதழைகளோடு ஒளிச்சேர்க்கையில் ஈடுபடும் ஓர் வாசம் … சற்று அதிகமாகவே வீச.. [என்னாப்பா ஓவரா ரைமிங்கா பேசிக்கிட்டே போற-ன்னு சத்தம் கேக்குது என்னங்க பண்ண கவிதை எழுதுவான்னு ஃபார்ம் ஆகிட்டோம் பின்ன இப்படில்லாம் எழுதலைன்னா நம்பித்தொலைய மாட்டாங்களே  கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்க ப்ளீஸ் ].  ஒரு இனம்புரியாத உற்சாகத்தில் நானும் கிரியும் கருப்புச்சட்டைகளோடு  கண்களால் நண்பர்க்கூட்டங்களை துலாவ… வழக்கமாக [Chennai chellamz meeting] சந்திப்பு நிகழும் இடத்திலே
மனிதர்களின் முன்னோர்கள் அனைவரும் ரொம்பச்சாந்தமாக அமர்ந்திருக்கிறார்கள்.

           அவ்வளவு அமைதியாக அமர்ந்திருந்ததன் சூட்சமம் அதற்கு முந்தைய நிமிடங்களில் நடத்திய ஏதாவது களிப்பாட்டத்தில் முடிவாக இருக்கலாம் என்பதை நான் கணித்திராமல் இல்லை. தூரத்தில் வரும்போதே அடையாளங்கண்டுகொண்டனர்.  உற்சாகக்குரலெலுப்ப… ஆரம்பமானது எங்களின் சந்திப்பு.
    அடுத்தடுத்து அறிமுகம் கைகுலுக்கள் ஹாய், ஹலோக்கள் … நலம் விசாரிப்புகள் என்று ஆரம்பிக்கும் வழக்கமான ஆட்கள் இல்லையே நாம். ஹாஹா?
         ஆம்.. ஆட்டத்தின் தொடக்கமே கமல் வகையறாக்கள் போல கட்டிப்புடி வைத்தியங்கள். எல்லோரும் ஒருவரை ஒருவர் தளுவி அன்பின் அறிமுகங்களும்  முகநூல் கம்மெண்டுகளும் போலவே அதே அராத்து கேரக்டரை கொஞ்சமும் குறைக்காமல் ஆனந்த கூத்தாடினோம்… ! அந்த மகிழ்ச்சி காமிரா கண்களின் க்ளிக்குகளில் பரிசுத்தமாக படம்பிடிக்கப்பட்டது…
        நான் வரும் முன்பே ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகி இருந்ததால் என் வரவுக்காக காத்திருந்த பொழுதுகளும் அத்துடன் கரையேற… சிரித்து மகிழ்ந்து. செல்போன் சிணுங்கல்கள் துறந்து.. அத்தனை அன்யோன்யமாகிப்போனோம்… ஒன்பது பேரும் அமந்திருக்கும் போடு இடைவெளிகள் எல்லாம் நட்பாலும் பாசத்தாலும் சகோதரத்துவத்தாலும் நிரப்பப்பட்டிருந்தது…


     முகநூல்:-  அந்த கற்பனை மிகுந்த ஜனசந்தடி வீதிகளில் தனியாளாக கணிணி முன் அமர்ந்து கொண்டு எங்கெங்கோ யார்யாரோவாக பிறந்து ஓர் மின்னஞ்சல் முகவரியில் அடையாளப்பட்டுக்கொள்ளும் புரொஃபைல் பிக்சர் மனிதர்களுக்குள் இருந்த உணர்வுகளான நட்பு, பாசம், இன்பம், துன்பம், பகிர்தல், கோபம், வருத்தம், வாடாபோடா-க்கள் எல்லாம்
வெறும் வார்த்தைகளாகவே மரித்துச்சாகாமல் அதற்கு உயிர் கொடுக்க அமைந்த இந்த சந்திப்பினால் என்ன நல்லது நாட்டுக்கு நிகழ்ந்தது என்று யாரும் க்ராஸ் கொஸ்டினோடு படித்துக்கொண்டிருந்தீர்களானால் கண்டிப்பா இது உங்களோடு பகிர்ந்துக்குற, அல்லது நீங்க எதிர்பார்க்கும் விஷயங்கள் அடங்கிய சந்திப்பு குறிப்புகள் அல்ல..
 

        காலை நேரம் மதியம் என அழைக்கப்பட வேண்டிய நிர்பந்தத்தை தொட.. வெயில் இன்னும் கொஞ்சம் மெறுகேற்றி வேனில் ஐந்த ஆரம்பிக்க அனைவரையும் அறிமுகப்படலம் செய்யும் வீடியோ எடுக்கலாம் என்ற எண்ணம் மேலெழும்ப நான் ஒவ்வொருவரையும் முன்னிறுத்தி அவர்களைப்பற்றி ஜாலியா ஒரு விமர்சனம். []அந்த வீடியோ எதிர்பார்த்த அளவு ஒலித்தரமானதாக இல்லாமல் போனதால் பகிரமுடியாமல் போனது [] திருவாளர் ஹமீது ஒரு தேஜஸ் –ஆன மனிதர் இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது இருக்கும் அதே கௌரவமும் மதிப்பும் அவர்மீது எப்போதும் உண்டு. அவரைப்பற்றி ஆரம்பித்து.. அடுத்து ரேபான் கூலரோடு திரியும் கிரி … கோவை சரண் வால்பாறை கருஞ்சிறுத்தை- ஆஸ்ரம சாமியார் தமிழரசன் – சேட்டு வீட்டுப்பையன் சதீஸ்-  வயசுல மூத்தவன் சுரேஸ்- காதல் மன்னன் ப்ரகாஷ் சோனா – டாக்டர் வசூல்ராஜா ரமணா எம்,பி.பி.எஸ் – என வரிசையாக கலாய்த்து தள்ளி பின் என் நேரம் [எல்லாம் நேரம்….டா இந்த மாடுலேஷனில் படிக்கவும் ]. சதீஷால் கலாய்க்கப்பட்டு… செம்மொழிப்பூங்காவே கைகொட்டும் ஆரவாரத்துடன் இளமைக்கூட்டத்தில் கேலிகளும் கலாட்டாக்களுக்குமா பஞ்சம் வரப்ப்போகிறது … [இந்த இளமை கூட்டம் என்ற வார்த்தையை பொத்தாம்பொதுவாக எடுத்துக்கிட்டா அது என் தப்பில்ல ] அங்கிருந்து அடுத்த பயணம் .

        கிரியின் ஸ்ப்ளெண்டரில் நான் அமர்ந்துகொள்ள மற்றவர்கள் இரு ஆட்டோ பிடித்து EA [EXPRESS AVENUE] –வாசலைச்சென்றடைந்தோம். நகரத்தின் பரபரப்பில் அவசர மனிதர்களின் எந்திர வாழ்க்கை இயந்திரங்களை கட்டிக்கொண்டு சந்தோஷமடையும் இடமாக பசுத்தோல் போர்த்திய வானளாவிய அகலக்கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு எதிரே வரிசையாக நிறுத்தப்படும் பைக்குகளின் எண்ணிக்கையில் ஒன்றை அதிகப்படுத்திவிட்டு எல்லோருமாக ஈஏ-வில் குழுமினோம்…!
     சத்தியமா பத்து பைசாவுக்கு ஏதும் வாங்கப்போறதில்லைன்னு எங்களுக்கே தெரிந்தாலும் அத்தனைக்கடைகளுக்கும் ஏறி இறங்கினோம்.  
                     நகரத்தின் பல பரிமாணங்களையும் அடையாளமாக ஏற்றுக்கொண்ட இன்னோர் விசயம். இங்கே காண நேர்வதை தவிர்க்கவே முடிவதில்லை. சென்னை உலகமயமாக்கலால் எவ்வளவு முன்னேறியும் சகமனித நேசத்தில் எவ்வளவு பின்தங்கியும் இருக்கிறது என்பதை பறைசாற்றும் விதத்தில் அத்தனை பேரும் தத்தம் விளையாட்டு, கேளிக்கை, உணவுத்தேவை, விருப்பங்கள், தெரிவுகள் என தன் சார்ந்த மக்களினூடாக மட்டும் சிரித்துப்பேசி மகிழ்ந்து கொண்டார்களே தவிர ஃபுட் கோர்ட்டில் பக்கத்து ப்ளேட் உணவை வாங்கும் நபர்களுக்கிடையேயான பரஸ்பர புன்சிரிப்புகளைக்கூட காசுகொடுத்தால் கார்டில் தேய்த்துக் கொடுப்பார்கள் போல நடந்த் கொண்ட இடமாகப்பட்டது..!
     நமக்கு வந்த வேலைய மட்டும் பார்க்கும் பழக்கம் இல்லாததால் இதையெல்லாம் கூட நோட் பண்ணிக்கிட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்…! எங்களுக்கும் அடுத்த தேவை உணவு என்றாகப்பட… ரமணாவின் EA ப்ளாஸ்ட்டிக் கார்டுகள் ஸ்பான்ஸரின் காகிதநோட்டுக்களால் நிரப்பப்பட.. கொல்லப்பட்ட கோழிகள் விதவிதமாக ஆர்டர் செய்யப்பட்டது… 
      அவசர யுகத்தில் நிகழ்ந்த அருமையான சந்திப்பில் முக்கியத்துவம் வாய்ந்த நேரம் இந்த உணவுப்பறிமாறல் நேரம்…! ஆம் ! உங்கள் ப்ளேட் அன்பானவர்களால் நிரப்பப்படும். உங்கள் கண்களால் பக்கத்திலிருப்பவருடன் நல்லா சாப்பிடுங்க என பேசிக்கொள்வீர்கள். சொந்த பந்தங்கள் திருமணங்களில் முறைப்பெண் இருக்கும் வீட்டில் நம்மை விழுந்து விழுந்து கவனிப்பார்களே அது போல [அதான் வட போச்சே பின்ன என்ன பேட்டா சாங்கு…! அவ்வ்வ் புரியுறவங்களுக்கு புரியும்பா! ஹாஹா]    ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்வோம்! இவையெல்லாம் அந்த ராஜ்தானி ப்ளாக் முன்னிறுந்த டைனிங் டேபிளில் அரங்கேறியது…
[இதை எழுதும் போது மணி மதியம் 1.00 அவ்வ்வ் பசிக்குது :’( ] இந்த நாளின் பாதின் நேரம் இத்தனை விரைவாக கடந்து போகுமென்பதை நினைக்கையில் ஒரு பக்கம் வருத்தம் மேலோங்க அட..! இருக்கும் நேரத்தில் இன்னும் சந்தோசமாக இருக்கனும் என்ற எண்ணம் அதை மேலோங்க சாப்பாடு முடித்து. ஒரு ரவுண்ட் அடித்தோம்.


        ஒரு சுற்று முடிக்கும் தருவாயில் ரமணாவின் நண்பர்கள் இருவர் EA-வில் எங்களோடு ஐக்கியமாகிட எஸ்கேப் –அவென்யூவில் அடுத்தகட்டமாக போட்டோக்ளிக்ஸ் முடித்து…! EA- விட்டு வெளியேற.. மாலை நெருங்கி இருந்தது.. மீண்டும் அறைக்கு திரும்பவும் கொஞ்சம் ஓய்வும் [பிரயாணத்தினால் கூட்] தேவையாகி இருந்தது… அட பழமொழில்லாம் மறந்து போகுதே…! ஆங்…உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டாமெ..! ஹஹ்
     இந்த சந்திப்புகளில் மிகவும் முக்கியப்புள்ளி ஒருவர் இல்லாமல் போனது கூட எங்களுக்கு பெருத்த பின்னடைவே…


ஆம் ! நண்பர் பிரபாகரன் கிருஷ்ணா..
     மிக அதீதமாக இந்த சந்திப்பின் பின்புலமாக இருந்தவர் இவர் என்றும்சொல்லலாம்! அடுத்தமுறை ஜமாய்ச்சுடலாம் நாட்ஸ் @நாட்டாமை
      அவரைப்பற்றிய பேச்சுக்களும் இடையிடையே இல்லாமலில்லை.
இன்னுமோர் முக்கியஸ்தன் இருந்தான் ஆனால் இல்லாமல் இருந்தான் எங்களோரு பிரவீன் ராஜா.. எங்கள் அனைவரின் ஆறுயிர் நண்பனென்றவன். வீட்டுக்கு மூத்தபிள்ளைபோல் எங்களுக்கு இவன்..


          பின் ஆட்டோ நகரத்துவங்கியது இம்முறை சதீஸ் கிரியுடன் தொற்றிக்கொள்ள நாங்கள் [நான் ஹமீதண்ணா, சுரேஷ் – ரமணா.சரண்,சோனா,தமிழ்   ] மூன்றுச்சக்கரவாகனத்தில்… முகநூலின் சந்தோசமான பொழுதுகளை அசைபோட்டபடி அறையை அடைந்தோம்..
      அன்று 22-01-21012 நாள் ஞாயிறு மறுநாள் திங்கள் எனக்கு பிறந்த நாளாக அமைந்தது எதேச்சையானது என்பதே உண்மை ஆனால் திட்டமிட்டபடி கொண்டாட்ட களேபரங்களை நிகழ்த்திவிட்டார்கள்… அவ்வ்வ்வ்வ்…
       நண்பர்கள் நாங்கள் கடந்த வருடங்களாக இளைப்பாறும் குழுவான FRIENDZHOOD.CLUB – சார்பாக பிறந்த நாள் கேக் வெட்ட வைத்து ஜமாய்ச்சுட்டாங்க… கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு அண்ணன் தம்பிகளோடு மட்டுமில்லாமல் நண்பன்களோடு இணைந்திருந்த ஆனந்த கண்ணீர் வராமல் சுய கௌரவம் காக்க போராடிய பொழுது அது.. ஹஹ ஆனால் வார்த்தை உடைந்து ஆரத்தளுவிக்கொண்டது உச்சம்.. !
   வாழ்த்துப்பாடலின் சப்ததோடு இருள் சூழந்த அறையில் ஒளி சிந்திக்கொண்டிருந்த மெழுகு தீபங்கள் அணைக்கப்பட அறைமுழுதும் அன்பு நிரம்பியிருந்தது. ஒருவருகொருவர் கேக் ஊட்டிக்கொள்ள ஆரம்பமானது. பயபுள்ளைகளின் வில்லத்தனம் …


         எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒருவருக்கொருவர் கேக்,க்ரீம்கள் பூசிய முகத்துடன் காமிரா கண்களில் சமத்துவமாகினோம்…! ஹமீதண்ணாவையும் விட்டு வைக்கவில்லை என்பது உச்சகட்டம்.
        அடித்து பிடித்து எல்லோரும் ரீஃப்ரெஷ் ஆக நண்பர்கூட்டம் மெல்ல இருப்பிடம் திரும்பும் வேடந்தாங்கல் பறவைகளானோம். கிரி அன்று போட்டொ ஷூட் இருப்பதால் அதோடு விடைபெற திருநெல்வேலி ஷ்பெசல் சமாச்சாரம் பரிமாறப்பட்டது. சரண் நானும் கிளம்புறேன் மாப்ள என்க ஆரத்தளுவி அவனுக்கும் ஒரு டாட்டா..போட்டுவிட்டு … அடுத்ததாக கழண்டுக்கவிருந்த பிரகாஷை மீண்டும் கடத்தி சென்னையின் அடையாளமான மெரினாவிற்கு கூட்டிச்சென்றோம்.
 
    மெரினா… என் அலுவல்சார்ந்த பயண நாட்களிலும் கண்டிப்பாக நேரம் செலவழிக்கும் இடமாக இருப்பதை தவிர்க்க முடிவதே இல்லை… சிறுவயதில் சென்னை என்றதும் கடற்கரையும் ஜார்ஜ்கோட்டையும் தான் தெரிய வந்தது…  மெரினா இருளுக்குள் விட்டில் புச்சிகளின் அணிவகுப்பாய் வெளிச்சம் சிந்திக்கிடக்க… உள்நுழைந்தோம் நாங்கள் நாங்கள் என்றால் இப்போது எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. நான் ஹமீதண்ணா சதீஷ் சுரேஷ் ரமணா தமிழ் பிரகாஷ் என…!
     முதல் எண்ட்ரியிலே ஒரு வினோதமான எண்ணம் அனைவருக்கும் கிளிஜோஸியம் பார்க்க ஏற்பாடு … சில கிளிஜோஸியக்காரர்களை பேரம் பேசுகிறேன் பேர்வழி என வம்பிழுக்கும் சேஷ்டைகளும்  நடந்தது [கிளி பேரு என்னாங்க ? “ஸ்நேகா” அது என்னாங்க எல்லா கிளிக்கும் ஸ்நேகான்னு பேரு வைக்குறீங்க ? என்பது போல ]. எல்லாவற்றையும் தன் குறுஞ்சிரிப்புக்குள் ரசித்தவாரே ஹமீதண்ணா உடனிருந்தார்.,
 இப்படியே நேரம் மெல்ல கரைந்து கொண்டிருக்க மெரினாவின் முக்கிய அடையாளம் மீன் உணவு அதையும் ஒருகை பார்த்துவிட்டு…! [இடையிடையே கலாய்ப்புகளுக்கும் விளையாட்டுகளுக்கும் குறைவெ வைக்கவில்லை] இருளுக்குள் சென்னை மூழ்க அதை வெளிச்சப்படுத்தும் திட்டத்தில்  விளக்கொளி இருளோடு போட்டியிட.. பிரகாஸ் விட்டாபோதும் சாமி என்ற நிலைக்கு வர… நட்புசந்திப்பின் அடையாளமாக அந்த நாளை பதித்த ஒரு அடையாள கீசெயின் பகிரப்பட்டது அனைவருக்கும்..  ரமணாவும் தமிழும் பிரகாசும் கிளம்ப…! இப்போது நான் ஹமீதண்னா சுரேஷ் சதீஸ்…!.
   நேரே அறைக்குச்சென்று ஆயத்தமாகினோம்… அவரவர் ஊருக்குச்செல்லவும் அந்த நாளின் நினைவுகளை சுமந்து கொண்டும்…! மிச்சமிருந்த அந்த இடைவெளி நேரத்தில் இரவு உணவை நால்வரும் சேர்ந்தே ரூஃப்டாஃப் உணவகத்தில் அமர்ந்திருக்க செல்போன் மெல்ல ஒளிர்ந்து இசைக்கிறது…! பிரபாவின் அழைப்பு,… ! அவரோடான உரையாடல்கள் நிகழ்வுப்பகிரலுக்குப்பின்… நால்வர் மூவராக …சதீஸ் சென்னையிலிருக்க நாங்கள் மூவரும்… கோயம்பேடு சென்றடைந்தோம்..!
      புறநகர் பேரூந்து நிலையத்தைன் அமைதியான இருள் வெளியில் உயர்ந்த கூரையின் கீழ் ஒரு மௌனமான அமைதியும் கூச்சலான இரைச்சலும் மனதை கவ்விப்பிடிக்க… எல்லா நண்பர்களுக்கும் போன் போட்டு மீண்டும் விடை கொடுக்க… ஹமீதண்ணா பட்டுக்கோட்டை பஸ்ஸிலும் … நானும் சுரேஷ் அண்ணாவும் கன்னியாகுமரி பேரூந்தில் திருநெல்வேலி பயணிக்க…!
   அந்த குதுகலமான நாள் மெல்ல முடிவுக்கு வந்தது,…! இனி இது போல் ஒரு நாளை மீண்டும் அனுபவிக்க வேண்டும்… இன்னும் கொஞ்சம் அதிகமான கால இடைவெளிக்குள் என உள்ளக்கிடக்கை அடித்துக்கொண்டது…!

 -தொடரும் என்ற நம்பிக்கையில்………..!
       -கார்த்திக் ராஜா 

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் : ஈரான் ??

ஈரான், தனது அணுசக்தி வல்லமையை பகிரங்கமாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் நெருக்கடியையும் மீறி, ஈரான் தன்னை அணுசக்தி நாடாக பிரகடனப்படுத்தி இருப்பது உலக அரசியல் அரங்கில் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய அதிபர் அகமதிநிஜாத், மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது என்றார். ஆக்கப்பூர்வமான அணுசக்திப் பாதையில் ஈரான் தொடர்ந்து நடைபோடும் என்றும் அவர் கூறினார். ஈரான் அணுசக்தி நாடாவதை என்ன விலைகொடுத்தேனும் தடுத்தே தீருவது என்ற நிலைப்பாட்டில் உள்ள இஸ்ரேல், ஈரானை தடுத்து நிறுத்தாவிட்டால் மற்ற நாடுகளும் இதனைப் பின்பற்றக் கூடும் என்று எச்சரித்துள்ளது. பயங்கரவாதத்தின் தாயகமாக ஈரான் திகழ்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.

“உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஈரான் ஏற்றுமதி செய்கிறது. அதன் பயங்கரவாத நடவடிக்கைகள் அனைவருக்கும் தற்போது கண்கூடாகத் தெரிகிறது. உலகின் ஸ்திரத்தன்மையை ஈரான் குலைத்துவிட்டது”, என்று இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்தார்.

அதேநேரத்தில், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 6 ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தப் போவதாக வெளியான செய்தியை ஈரான் மறுத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தடைபட்டுள்ள பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும் ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் கடிதம் அனுப்பி இருப்பதை ஐரோப்பிய யூனியன் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை வரவேற்றுள்ள ரஷ்யா, சர்வதேச அணுசக்தி முகமையின் சந்தேகங்களுக்கு ஈரான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

“அணுசக்தி விவகாரத்தை எல்லாமே சர்வதேச அணுசக்தி முகமையின் கட்டுப்பாட்டில் வர வேண்டும். சர்வதேச அணுசக்தி முகமைக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒத்துழைப்பைச் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்”, என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர், செர்ஜிய் லெவ்ரோவ் தெரிவித்தார்.

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா உள்பட பல நாடுகள் நிராகரித்துள்ளன. ஐ.நா. தடை விதித்தால் ஒழிய, தனிப்பட்ட நாடுகளின் தடையை கண்டுகொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ள இந்தியா, ஈரானுக்கு வணிகக் குழுவை அனுப்பும் முடிவில் மாற்றம் இல்லை என்றும் அறிவித்துள்ளது. இதனிடையே, அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானந்தாங்கி போர்க் கப்பலான யு.எஸ்.எஸ்.ஆப்ரஹாம் லிங்கன், ஹோர்முஸ் நீரிணை பகுதிக்கு விரைந்துள்ளது. ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரேல் உறுதியாக இருப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Wednesday, February 15, 2012

கடல் இரயில் யானை...!


நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு குறைந்த கால அவகாச இரயில் பயணம் அமையும் வாய்ப்பு கிட்டியது...! வசதியாகப்பட்டபோதும் நேரங்கடந்த சில காத்திருப்புகளைத்தவிர்ப்பதற்காக ரயில் பயணங்களை தவிர்த்து வந்தேன்..!
ஆனால் இன்று எதிர்பாராவிதமாக அமைந்தே விட்டது ..!
 ஓர் “இரயில் பயணம்”

 “கடல்  இரயில்  யானை”  -மூன்றும் ரசனையின் சலிப்புகளுக்கு அப்பாற்பட்டவையென கவியொருவன் வரிகள்  கண்முன் நிழலாடுகின்றது.

                          


     
                         


      
இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு இரயிலில் பயணம்..!  





கடல் இரயில் யானை  - மூன்று சங்கதிகளும் ஒரே நாளில் கிட்டிய  சுகானுபவம்..
சிறுவயதில் யானை பார்த்து சிலிர்த்தவருக்கும் மிரண்டவருக்கும் உள்ளுக்குள் இன்றும்  ஒரு மிரட்சி  தோன்றத்தான் செய்கிறது, கடலிடமும் இருக்கலாம்..! ஆனால் கடல், ரயில் அடிக்கடிப்பார்த்து பழகி  நெருங்கிய அளவுக்கு அவைகள் நெருக்கம் இல்லாமல் போனதால் அஃறிணைகள் கண்டால் அம்மிரட்சி ஆர்வமாய் தலை தூக்குகிறது..!

இந்தவாரம் அமைந்த இரண்டாவது பயணமிது..! ஆம் இருநாள் முன் தென்பொதிகைச்சாரல் இறங்கும் நாகர்கோவில் நகர்வலம்,
சக்கரங்களை காலில் கட்டிப்பறக்கும் மக்களுக்கு இடையே ஓர் அமைதியான பிரதேசம் நாகர்கோவிலுக்கருகே அமைந்துள்ள இயற்கை வளம் சூழ்ந்த விவசாய கிராமம்..அது!..
என்ன இருந்த போதும் பயணங்கள் எனக்கு சலிப்பதே இல்லை!

The Hindu : Columns / Harsh Mander : Barefoot - The other side of life

“Let us try to understand an ‘average Indian', by living on an ‘average income'.”


The Hindu : Columns / Harsh Mander : Barefoot - The other side of life

Friday, February 10, 2012

லவ்வர்ஸ் டே,,,!

காதலர் தின ஸ்பெஷலா அழகா ஸ்வீட்டா சிம்பிலா ஒரு காதலை எழுதினா என்ன? என்ற ஒரு சின்ன பொறி தோன்றிய அரை மணி நேரங்கழித்து
 தோன்றிய சின்ன சங்கதியே..! இப்போதைக்கு எழுதி இருக்கேன்!


பரத் நம்ம காதல் பரத் இல்லைங்க ! காதல்ன்னதும் சின்னதா புன்னகைச்சுட்டு
தலையை சிலிர்த்து ஜீன்ஸுக்குள் கையை விட்டு தோள்பட்டையை உயர்த்தி
ஆள் இல்லாத ரோட்டில் அலைபாயுதே தீம் மியூஸிக்கை கற்பனை பண்ணீக்கிட்டு அழகா போட்டோஸ்க்கு ஸ்டில் கொடுக்குற பசங்க லிஸ்ட்டில் ஒருத்தன் தான் நம்ம பரத்..!

இவனுக்கு சரியான ஜோடியா எந்த படத்து ஹீரோயின்களையும் கமிட்பண்ண மும்பை கேரளான்னு போனா செலவு ஆகும்ன்றதால அதே ஏரியா பொண்ணு எதாவது தேறும்ன்னா அவளை இவனுக்கு அனார்க்கலியாக்க ட்ரைப்பண்ணும் போது..  வழக்கமான பஸ் ஸ்டாண்ட், கோவில்வாசல் பக்கமா பார்வைய அலைய விட்டேன். கூடவே வந்த நாயகன் பரத் பதட்டமாகி
“அய்யயோ இவரு எனக்கு பிச்சைக்காரிய ஹீரோயின் ஆக்கிடுவாரு போலையே! என்னை காப்பாத்துங்க “

“டேய் அப்படில்லாம் உனக்கு துரோகம் பண்ணூவேணாடா..!”

“அதெல்லாம் முடியாது பார்க்குறதே பார்க்குறீங்க நல்ல காலேஜ் பொண்ணா பாருங்க வேலண்டைன்ஸ் டே அதுமா ப்ரப்போஸ் பண்ணனும் கொஞ்சம் சீக்கிரம் ”
பார்த்தீங்களா வாசகப்பெருமக்களே ஒரு கதைல ஹீரோன்னு சொன்னதுக்கே இவ்ளோ படுத்துறான்.. நல்ல வேல நான் இளைய தளபதியயும், அல்டிமேட் நட்சத்திரத்தையும் வைச்சு எழுதலை...

சரி சரி கதைக்கு வருவோம்... ஸ்வீட்டான பொண்ணுங்க ஸ்கூட்டில சிட்டா பறக்க்கும்  சென்னைமா நகரத்திலே... ஷால் மூடிய தேகத்திலும் க்ளௌஸ்போர்த்திய கரங்களுக்குள்ளும் ஒழிந்திருக்கும் ஒரு தேவதையை
கண்டுபிடிக்க அசோக்பில்லர் சரியான இடமாக இருக்கும்ன்னு அப்போ நினைக்கலை ஆனா இப்போ நினைக்குறேன்.!

அட ஆமாங்க நம்ம பரத்துக்கு ஏத்த மாதிரியும் நம்ம வாசகர்கள் ஏற்றுக்குற மாதிரியும் கெத்தா ஒரு பொண்ணு.. ஹாட் சிப் வாசல்ல நிற்கும் ஸ்கூட்டியை
செல்ஃப் ஸ்ட்ராட் செய்ய முடியாமல் போனதால் உதைத்துக்கொண்டுருக்கும் அந்த ஹிப்ஹாப் மார்டன் தேவதையை நெருங்கி “மே ஐ ஹெல்ப் யூ ”-வென
கதைக்குள் கொண்டு வர முயற்சிக்க..

முதுகுப்பக்கமாக ஒரு கை தொட்டது.. திரும்பி பார்த்தால் நம்ம நாயகன்!

 “ஹலோ பாஸு ஓரமா உக்கார்ந்து சம்பவத்தை எழுதுங்க ஆக்‌ஷன் எண்ட்ரி ரொமான்ஸ்,பஞ்ச் டயலாக் பேசுறது இந்த ரோல்லாம் நான் பண்ணிக்குறேன்! ஒகே--”-இது பரத்

 “டேய் இன்னும் கமிட்டே ஆகலை அதுக்குள்ள இவ்ளோ அராத்தாடா”.. -இது நான்

சென்னையிலே நலிந்த சினிமாக்கலைஞர்களுக்கு மத்தியில் ஓட்டைப்பாயில் ஒருக்களித்துப்படுத்துக்கிடந்து எழுத்தாளனாகப்போராடும் -இதை சரியாக வாசிக்கனும் நீங்க எழுத்தாளனாக ஆகப் போராடும் -ன்னு ;

எனக்கு வேலண்டைண்ஸ் டே-க்கு போட்ற மாதிரி ஒரு கதை ரெடி பண்ணிட்டு வா பார்ப்போன் என்ற இரண்டாம் கட்ட பத்திரிக்கை நண்பர் ஒருவர் கொடுத்த உற்சாகத்தில் ஒரு காதல் கதை எழுதலாம்ன்னு வந்தால் இவன் நம்மளையே இந்த வாரு வாருரானேன்னு ஒரு மைல்டான கடுப்புடன்...!

“ஹலோ மிஸ்டர் ஹீரோ ஆக்‌ஷன் எண்ட்ரியா ? டேய் இது லவ் சப்ஜெக்ட்டா! இதுல எங்க இருந்து ஆக்‌ஷன் , பஞ்ச் டயலாக்கெல்லாம் யாருப்பா சேர்த்தது”...

“அட என்ன மாஸ்டர் இப்போல்லாம் டிவி சீரியல்லயே ஃபைட் பஞ்ச் எல்லாம் வைச்சுட்டாங்க நீங்க கதைல வைக்க இவ்ளோ யோசிக்குறீங்க”

“தம்பி நீ டைரைக்டரா நான் டைரைக்டரா? ”

“ரெண்டு பேரும் இல்லை இது என்ன ஃபிலிம் ஷூட்டிங் ஸ்பாட்-ன்னு நினைச்சீங்களா நல்ல சீனை கெடுக்காதீங்க மாஸ்டர்”

அது சரி என்னதான் பரத் மாஸ்டர் மாஸ்டர் என்றாலும் அவன் பெரிய இடத்துப்பையன்...

ஒரு கிரிக்கெட் மாட்ச் நாளில் ஆப்போஸிட் டீமில் இருந்த அவன் எங்க டீம் பீபன் ஒருவன் போட்ட பௌண்ஸரில் அடித்த சிக்ஸர் பார்த்து கொஞ்சம் மிரட்சியோடு மேட்ச் கடைசியில் கை குலுக்கிக்கொண்டேன்.

சென்னையில் பெயர் சொன்னதும் புரிந்துவிடும் ஒரு கிராணைட் பிஸ்னெஸ் மேனின் பி எம் டபிள் யூ பைக் வைத்திருக்கும் மகன் தான் நம்ம பரத்...! எத்தனையோ கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்து லவ் பண்ணா ஒரு ஹீரோயினைத்தான் பண்ணனும்ன்ற வழக்கமான தொழிலதிபர் ஆசையோடு

 என் கதையில் ஸ்ட்ரேய்ட்டா ஹீரோ ஆகுற ஆசையில ஒட்டிக்கிட்டான்.. சொல்லப்போனா நான் திரும்பி ரூமுக்கு போகவே அவன் டொனேஷன் தான்..!

அய்யய்யோ என் புராணமாகவே போய்க்கிட்டு இருக்கு..!
 “பரத் எங்க அந்த பொண்ணு...??

“அது எப்பவோ போய்டுச்சி ”
“அடட்டா வண்டி நம்பர்கூட நோட் பண்ணலையே இனி எப்படி கண்டு பிடிப்பேன் ”
“அவ செல்போன் நம்பரே இருக்கும் போது வண்டி நம்பர் எதுக்கு மாஸ்டர்”
“செல்நம்பரா எப்படி...?”
“இதோ அவகூட தான் எஸ் எம் எஸ் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் என்ன டவுட்”
“அடப்பாவி இது எப்போடா நடந்தது”
“நீங்க ஓட்டப்பாய்-ல உறங்கும் கதை சொல்லும் போதே ”
“ஆஹா இனி உன்னை இன்ச் பை இன்ச் வாட்ச் பண்ணனும் போலயே இல்லன்னா நிறைய சீன்ஸ் மிஸ் ஆகிடுதேடா”
“அடப்போங்க மாஸ்டர் நீங்க இன்னும் ஓல்ட் டான் ஆகவே இருக்கீங்க இன்னும் வண்டி நம்பர் நோட் பண்ணனும்றீங்க ஹாஹா நான் தப்பான கதையில ஹீரோ ஆகிட்டேனோ! ”
”நோ நோ அப்படில்லாம் இல்ல எதோ நீ கரெக்டா இருக்கியான்னு செக் பண்ணேன்”
“ஏதோ ஃபர்ஸ்ட் இண்ட்ரோல மின்னலே தீம் அது இதுன்னு சொன்னீங்களேன்னு நம்பிட்டேன் அப்படியே கொத்தா போகட்டும் மாஸ்டர் இல்ல ரெண்டுபேர் ஃப்யூட்சரும் அந்தர் தான் உங்களுக்கு மொக்கையா ஒரு கதை எழுதுனதுக்கு எனக்கு மொக்கையான படத்தில் என் நேம் வந்ததுக்கு...”
என்றவாரே ரேபானை ஒற்றைக்கையால் கண்ணூக்கு கொடுத்தான்.

சரி இன்னைக்கு சீன்ஸ் மிஸ் ஆகிட்டு நாளைக்கு என்ன நடக்குன்னு இவனை வாட்ச் பண்ணாதான் எழுத முடியும்.. வ்ரைட்டர்ன்னு ஃபார்மாகிடோம்  வேற வழி இல்ல இனி கதைக்காக செக்யூரிட்டி கார்ட் வேலை பார்த்தாவது மிச்சம் மீதிய முடிச்சுடனும்... என நினைத்துக்கொண்டே அன்றைய நோட்ஸை எடிட்டிங் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் சரி செய்து மூடிவைத்து தூங்கினேன்...

மறுநாள்:

 காலை ஏழு மணிக்கு பரத்தின் கால் ..
நோக்கியா 3310classic -ல் ஒலிக்க தூக்கம் கலைந்து ஹாய் ஹீரோ குட் மர்னிங் என்றேன்.

மண்ணாங்கட்டி மாஸ்டர்  இன்னும் என்ன பண்றீங்க கீழ வாங்க நான் உங்க மேன்ஷனில் வெயிட் பண்ணுறேன் என்றான்..

அட அதுக்குள்ள என்னடா இவனுக்கு ஆச்சு என்று அடித்து புடித்து 3 டம்ளர் தண்ணீரில் ஃப்ரெஸ் ஆகி சக இயக்குனரின் ப்ரூட் ஸ்ப்ரேயின் மிச்சத்தை அழுத்தி பதட்டமாக மாடிப்படிகளை  கடந்து கீழே வந்தால்

இரவு முழுதும் தூங்காத கண்களை ஏமாற்ற கூலர்ஸை அணிந்து கொண்டு காசு கொடுத்து வாங்கியமாதிரியே ஒரு அனாவசியப்புன்னகையை ஏளனமாக ஒரு பிச்சைக்காரனுக்கு கடுப்பில் 2 ருபா போடுவோமே அது போல போட்டான்.

பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமென்று அதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் என்ன பரத் காலையிலே என்றென்.

அது ஒண்ணும் இல்ல மாஸ் -மாஸ்டர் இப்போ மாஸ் ஆகி இருந்தது -
ஹனிக்கு கவிதைன்னா ரொம்ப பிடிக்குமாம் கொஞ்சம் நல்ல கலெக்‌ஷன்ஸை இன்னைக்கு பிரஸண்ட் பண்ணனும் அப்படியே இன்னைக்கு சாக்லேட் டே ஆச்சே சோ. அவளுக்கு பிடிச்ச சாக்கோ ஃப்ளேவர் சாக்கிஸ் வாங்கனும் சரி நீங்க ஃப்ரீயா இருந்தா உங்களையும் கூட்டிட்டு போலாம்ன்னு வந்தேன் என்றான்.

எனக்கு கிர்ரென்று இருந்தது... யாருப்பா அது ஹனி நீ யாரையும் இதுவரைக்கும் காதலிக்கலேன்னு சொன்னதால் தானே ஒரு ஃப்ரெஸ்ஸர் வேணும் கதைக்குன்னு உன்னை செலக்ட் பண்ணேன், இப்போ வந்து ஹனி-ன்னு யாரையோ சொல்ற என கிலி ஆக...

மாஸ்ட்ட்ட்ட்டர்ர்ர் (கிழிச்சுட்டான்) நாம நேத்து ஹாட்சிப்ல பார்த்தோமே அந்த பொண்ணுதான் ஹனி .....அனிதா.... நிக் நேம் ஹனின்னு கூப்பிடுவேன்.
அவளுக்குத்தான் ப்ரஸண்ட் பண்ண நல்ல கவிதை புக்ஸ் வேணும்.. அதான் உங்களுக்கு எதாவது தெரியுமேன்னு.... என இழுத்தான்.

ஒரு கதாசிரியர் பண்ணுற உட்சபட்ச வேலையை இப்போ நான் பண்ணிக்கிட்டு இருக்கேன்னு பைக்கில் அவன் பின்னாடி அமர்ந்து மனசுக்குள் திங்க் பண்ணிக்கொண்டிருந்தேன்...

 “போன் நம்பர் வாங்குன சரி அதுக்குள்ள இவ்ளோ தூடம் வளர்ந்துட்டுதே உங்க ல.................வ் எப்படி ... ”-அதை லவ் என்று சொல்லும் போது எதுவோ ஒன்று என்னை தடுத்தது போல இருந்தது.

மாஸ்டர் போன்ல அவகூட பேசினேன். விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் அல்ட்ரா மார்டன் தேவதைக்கு அப்பா ராஜஸ்தான். மதர் மட்ராஸ்தான். ஒரே சிஸ்டர் கனடால செட்டில்ட்.. ரெண்டு பொண்ணுங்க வீட்டில் ஆடி கார் இருந்தாலும் ஸ்கூட்டில வலம் வரும் ஷகிரா மியூஸிக்காக உயிரைக்கொடுக்கும் ப்யூட்டி..

இவ்ளோ மேட்டரையும் ஒரே நாள்ல எப்படி கரந்தீங்க - கொஞ்சம் வியப்புடன் மரியாதை கொடுக்கவேண்டும் என்று தோன்றாமலே ஒரு “ங்க” ஆட் ஆகி இருந்தது... பரத்திடம்..

ஆரம்பத்தில் அந்த “ங்க” இருந்தாலும் பேர் சொல்லும் நட்புக்கு பீரழகுன்னுற யூத்தத்துவத்தின் ஓர் இரவில் நான் மாஸ்டராகவும் அவன் ஜூனியராகவும் மப்படித்தோம்.

“ஒரே பாட்ல சிவா மின்சார வாரியத்தையே வாங்கும் போது [தமிழ்ப்படம்] நான் சம்சாரமா வரப்போற ஏஞ்சலோட பயோகிராபிய ஒரே நாள்-ல வாங்கலைன்னா எப்படி ” -பரத்

என்னது சம்சாரமா அட அது கதைக்குத்தானே ஹிரோயி....... என முடிக்கும் முன்னே.,

“நோ மாஸ் நான் நைட் 2 மணிக்கே ஃபிக்ஸ் பண்ணிட்டேன் அவதான் இனி என் வைஃப் ” என்றவாரே -ஒரு பல்ஸர் பையனை நூலிழை இடைவெளீயில் ஓவர்டேக்கினான்.

ஓஹ் அவ்ளோ தூரம் போய்டுச்சா! நேற்றுத்தானப்பா பார்த்த அதும் முகமெல்லாம் மூடி இஸ்தான்புல் ராஜகுமாரி மாதிரி இருந்த பொண்ணை ஒரு பத்து நிமிட ராஜராஜசோழன் வரலாற்றை சொல்லி முடிக்கும் கேப்பில் அதுக்குள்ள எப்படி அவ உன் ஹார்டில் இடம்புடிச்சா?

இல்ல மாஸ் அவ FB- ID -ஷேர் பண்ணா.. நைட் ஃபுல்லா சாட் பண்ணோம்.
என்னைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டா..
நான் அவளை புரிஞ்சுக்கிட்டேன். We are Made For Each Other Maas... என்றான்.

எனக்கு மேன்ஷனில் சுற்ற ஆரம்பித்த தலை இன்னும் சுற்றி முடிக்கவில்லை.
மீண்டும் கேட்டேன் சரி எல்லாம் ஒகே... இப்போ எங்க போய்க்கிட்டு இருக்கோம்!

 “ம்ம்ம்... ஸ்கைவால்க்-தான் .. ”

“அடப்பாவி முன்னாடியே சொல்லிருந்தா குளிச்ச்ச்ச்... சாமிகும்பிட்டாவது வந்திருப்பேனேன்னு மென்று முழுங்கினேன். ., அழகழகா அம்சமா கேர்ள்ஸ் வருவாங்களேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் ஹிஹி [நல்ல எண்ணம்]

“அட வாங்க மாஸ் உங்களுக்கு அவளை இண்ட்ரோ பண்ணூறேன்”
“அடப்பாவி அந்த பொண்ணும் வருதா?”
“ம்ம்ம்”
“அய்யய்யோ என்னப்பா இது எங்க ஊர்காதல் எல்லாம் முழுஷா கண்ணூக்கு கண்ணு பார்க்கவே மூணுமாசம் ஆகும் இது போற வேகத்தை பார்த்தா மெட்ரோ ட்ரெயினே சென்னைக்கு வேணாம் போலயே!?”
“மாஸ் அவகிட்ட ஐ லவ் யூ நேர்ல தான் சொல்லுவேன்னு சொல்லி இருக்கேன் .. அவ ட்வெல் ஓ க்ளாக் தான் வருவா அதுக்குள்ள எனக்கு ப்ரப்போஷல் ஐடியாஸ அள்ளி வழங்கத்தன் உங்களை கூட்டிட்டு வந்திருக்கேன்.”

“கதைய்ய்ய்ய்ய்...”
“மாஸ்டர் உங்க கதைய தூக்கி தூரப்போடுங்க எனக்கு என் ஏஞ்சல் கூட வாழனும் அது போதும் இந்த ஹீரோ ஆகுற சப்ஜெக்ட் ஹீரோயின் லவ்வெல்லாம் வேணாம்”

மனசுக்குள் அடப்பாவி அவனுக்கு பிக் அப் ஆனதும் என் ஃப்யூச்சரை இப்படி ஃப்யூஸ் போக வைச்சுட்டானேன்னு மனசு அடிச்சுக்கிட்டது.
சரி இவனால கதையுமில்ல கதாசிரியர் அந்தஸ்துமில்ல ..வந்த வரைக்கும்
திருப்தியா சாபிட்டு இன்னைக்கு கதைய ஓட்டிட வேண்டியது தான்.. என்று எண்ணிகொண்டே வாட்ச் பார்த்தேன் ...மணி 10 - இன்னும் ரெண்டு மணி நேரம்..
மரண மொக்கையாப்போகும் என்று எண்ணிக்கொண்டிருக்கையில்

அண்மையில் அமர்ந்த மாடன் காதலர்களின் சேஷ்டைகளை
நோட்பண்ணிக்கொள்ள ஆரம்பித்தேன்.

“அவளுக்கு என்ன பிடிக்கும் மாஸ்டர்”
“ஆங்”
“இல்ல அவளுக்கு என்னைப்பிடிக்குமான்னு தெரியலை அதான் கேட்டேன்”
“ஹீரோ காதல் என்பது மனுஷனுக்கு ஒரு தலைவலிமாதிரி அது அடுத்தவனுக்கு வரும் போது கலாய்ப்போம் ஆனா தனக்கு வரும் போது தான் மாத்திரை போட்டுப்போம்... இப்போ உனக்கு வந்திருக்கு நீ தான் மாத்திரை போட்டுக்கனும்... ”
“உங்க கிட்டப்போய் கேட்டேன் பாருங்க என்ன சொல்லனும்”
“ஹஹஹ்”
“சரி நல்ல பொயட்ரிக் கலெக்‌ஷன் யாராச்சும் சொல்லுங்க”
“நட்புல ஆரம்பிச்சு காதல்ல முடிக்கனும்ன்னா அறிவுமதி
காதல்ல ஆரம்பிச்சு கவிதைல முடியனும்ன்னா தபு ”
“ஓஹ் திருக்குறள் மாதிரி ரெண்டே வரில சொல்லிட்டிங்க இதுக்குதான் மாஸ் வேணும்ன்றது”
“சரி பசிக்குது ”
"நல்லவேலை நியாபகப்படுத்துனீங்க ஹனிக்கு சாக்லேட் வாங்கனும்"
“அடகிராதகா 7 மணிக்கே எழுப்பிக்கூட்டிட்டு வந்துட்டு டிபன் கூட வாங்கித்தரலைடா நீ”

Thursday, February 9, 2012

ஒரு விபத்தின் மறுபக்கத்தில்...!? கேள்விகள்


நேற்று இரவு வீட்டுக்குப்போகும் போதே அண்ணன் கொஞ்சம் சோகமாக டி.வி முன் அமர்ந்திருக்க என்ன வழக்கமாக கனாகாணும் காலங்கள் பார்த்துக்கொண்டிருப்பாரென.. கடந்துபோக நினைத்தவனை அந்த செய்திச்சானலின் முதல் ஒளிக்காட்ச்சி கவர்ந்தது...

ஆம் அது ஒரு துயரச்செய்தி..!

தமிழ்நாடு: தூத்துக்குடி டீச்சர்ஸ் காலனியைச்சேர்ந்த சித்திரைவேல் என்ற நபருடைய மகளுக்கு தேனிமாவட்டம் அருகே மணம் செய்து முடித்து மறுநாள் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தன் உறவினர் அக்கம் பக்கம் உள்ளவர்களோடு தூத்துக்குடியில் இருந்து வேன் அமர்த்தி தேனி அருகே உள்ள தேவாரம் சென்று நேற்று மாலை 5 மணியளவில் தூத்துக்குடி திரும்பிக்கொண்டிருக்கும் போது ...

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நக்கலக்கோட்டை கிராமம் அருகே 30 அடி அகலச்சாலையில் வேன் வந்து கொண்டிருக்கும் போது “அடையாளம் இல்லாத” ஸ்பீட் ப்ரேக்கரால் சாலையிலிருந்து நிலை தடுமாறிய வேன் அருகே இருந்த முட்புதருக்குள் பாய்ந்திருந்ததாகத் தெரிகிறது...




தூரதிஸ்டவசமாக அந்த முட்புதர் ஒரு கைப்பிடி இல்லாத “60 அடி ஆழக்கிணற்றுவெளி”... அதிர்வில் தூக்கி எறியப்பட்ட 3 ஆண்கள் மட்டும் தண்ணீரில் தத்தளிக்க.. சம்பவத்தை நேரில் கண்டோர் உடனடியாக 108 -க்கு அழைக்க அவசர அவசரமாக குவிந்தனர் மாவட்டத்தின் அனைத்து தரப்பு அதிகாரிகளும் ... கூடவே “புதிய தலைமுறை” செய்திச்சானலும் நேரடி ஒளிபரப்போடு..! அந்த மூன்று பேரை காப்பாற்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க... செய்தியாளர் இராமானுஜம் நேரடியாக நிகழ்வுகளை தொகுத்து தந்து கொண்டிருக்க செய்தியாளர் மதி விவரங்களைச்சேகரிக்க கேள்விக்கணைகளை முடுக்கிவிட்டுக்கொண்டிருக்க சானலை கண்டவர்கள் தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்தன்ர்.



மூன்று மணிநேர போராட்டத்திற்குப்பின் இரண்டு கிரேன் மூலம் வேன் கட்டி தூக்கப்பட்டது எஞ்சியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் கிராம மக்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சகாயம், காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் ஆகியோர் நேரில் வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.

இரவு 11 மணி அளவில் கிணற்றுக்குள் இருந்து வேன் எடுக்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டன. இதில் மணமகளின் தந்தை, தாய், சகோதரன், மூத்த சகோதரி, அவரது குழந்தைகள் உட்பட 10 பேர் உயிர் இழந்தனர்.

இந்த துக்கமான செய்தியின் போது கவனிக்கத்தகுந்த செயல்பாடுகள் .. செய்திச்சானலான புதிய தலைமுறையின் அதிவேக செயல்பாடுகள்.. நேரடியாக மக்களுக்கு விசயங்களை கொண்டுசேர்க்கும் முயற்சியின் போதும் ...
ஒரு நடுநிலையான செய்தி தொலைக்காட்சியாக அவர்களது கேள்விகளை கொண்டு சேர்த்த விதம் உண்மையில் மற்ற சுயலாப சுயவிளம்பர சானல்கள் கற்றுக்கொள்ள வேண்டியது

I.சாலை ஓரம் கைப்பிடி சுவரில்லாமல் இருக்கும் கிணற்றை கிராம நிர்வாக அதிகாரி கவனிக்காமல் விட்டது ஏன்? II.வாகனங்கள் இல்லாவிட்டாலும் அந்த பகுதி குழந்தைகள் தவறி விழுந்தால் என்ன செய்வது சுற்றுச்சுவர் இருக்கவேண்டும் என்ற குறைந்த பட்ச விதியைக்கூட கடைபிடிக்காதது ஏன் ?

III.விபத்துப்பகுதி என்ற அடையாள போர்டுகள் வைக்கப்படாதது ஏன் ?

IV. மாவட்ட நிர்வாகம் இந்த அஜாக்கிரதையான மெத்தனப்போக்கை இனியும் தொடருமா?

இப்படி மக்களின் கேள்விகளை சரியான விதத்தில் சரியான இடத்தில் கொண்டு சேர்க்கும் புதிய தலைமுறையின் நகர்வுகள் கவனிக்கப்பட வேண்டியன...!

சலை வரி செலுத்தாத வாகனங்கள், பர்மிட் இல்லாத வாகனம் , இன்ஸ்யூரன்ஸ் இல்லாத வாகனம் , ஹெல்மெட், லைஸன்ஸ், விதிமுறை பின்பற்றாதது, அளவுக்கு அதிகமான ஆட்கள் கேபினில் என விதிக்கும் அத்தனை அபராதங்களுக்குமாக

ஆளாய்ப்பறக்கும் கேஸ் பிடிக்கும் காவல்துறைக்கும் பொதுமக்களாய் எழும் கேள்வி விபத்துக்கு ஆதாரமான சூழல்களை கண்டு கொள்ளாதது.. ஏன்? சாலைகளின் மேம்பாடு குறித்து அரசுத்திட்டங்கள் நடைமுறைக்கு வர காலதாமதப்படுத்துதல் இவையெல்லாம் பலிவாங்கும் உயிர்களின் எண்ணிக்கைக்கு நீங்கள் கொடுக்கும் லட்சங்களை கொண்டு ஈடு செய்துக்கொளவது தானா உங்களால் இயன்றது..!

“அந்த விபத்துக்காலத்தில் பக்க பலமாக இருந்து உதவிய அத்தனைநல் உள்ளங்களுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் எனது மனதார்ந்த நன்றிகள் ..!”


-கார்த்திக் ராஜா..!

அகர முதல என்போம் ... அடிமைத்தனம் கொல்வோம்..!


உயிர்மெய் ஆய்தம்
உயிரளபடை ஒற்றளபடை
குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஐகார குறுக்கம் ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கமென
எம் வாழ்க்கை
சார்பு எழுத்துக்கள் போல எவரையேனும்
சார்ந்தே போய்விடுமா!

குறிலும் நெடிலுமாய்
குன்றலினும் நெஞ்சம் நிமிர்த்தி
களத்தில் ஆயுதமாய்

உயிரெழுத்தாய் துடித்த
பொங்கியெழு தமிழ்க்கூட்டம்

மென்மை மறந்து
வன்மமேறிய
இடையினர் துரோகத்தால்

முதன்மையிழந்த தமிழ் யாம்! ...!

விடிந்தெழுமென...!
ஏக்கமாய்...! வேலிக்குள்
விட்டிலாய்..!

-கவிதைக்காரன்..

பள்ளி ஆசிரியர் கொலை...!? எங்கே செல்கிறது இளைய சமுதாயம்


சென்னை பாரி முனையில் பள்ளி  வகுப்பறையிலே ஆசிரியர் உமா மஹேஸ்வரி படுகொலை மாணவன் வெறிச்செயல்...!


# அன்று டாக்டரை கொன்னாங்க? இன்று ஆசிரியரை கொல்றாங்க
சட்டம் ஒழுங்கு சீர் குலைவுன்னி எதிர்கட்சியும்
வகுப்பறையிலும் , மருத்துவ மனையிலும் நடந்த கொலைக்கு சட்டம் ஒழுங்கு எவ்விதத்தில் பொறுப்பாகும்ன்னு ஆளுங்கட்சியும் ...


அடிச்சுக்கும்..! ஆசிரியர்கள் போராட்டம் கிளம்பும்...
ஸ்டரைக் நடக்கும் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படும்... பள்ளிக்கு வரும் ஆசிரியர் உயிருக்கே உத்திரவாதம் இல்லை மாணவச்செல்வங்களை எப்படி பள்ளிக்கு அனுப்ப என பெற்றோர்கள் தயக்கத்துக்கும்  ஆளாக தொடர்ச்சங்கிலி போல பாதிக்கப்பட்டுக்கிடக்கிறது...! சமுதாயம்


 சிந்தித்து பார்க்கையில் எங்கே போகிறது இளைய சமுதாயம்..! கொலைகள் இவ்வளவு எளிய விசயமாகவும்.,.. உயிர்கள் கிள்ளூக்கீரையாகவும் கிள்ளி எறியப்பட்டுக்கொண்டிருக்கிறதன் விடிவுகாலம் தான் என்ன?


காம்பஸ் பிடிக்க வேண்டிய கரங்கள் கத்தியைப்பிடிக்கின்றது..
கைகட்டி வேடிக்கை பார்ப்பதினாலோ மறதிகளினாலோ சீர்பட்டுவிடுமா இச்சமுதாயம்!