Saturday, August 11, 2012

கவிதைக்காரனாகிய நான்...!!!



கவிதைக்காரனாகிய நான்...!!!
உற்சாகமோ,சோகமோ?
மனசுக்குள்ளே பாடும்... 
மனங்கொத்தி...!!!

தோல்விகளின் காயங்களை 
ஏகமாய் சொறுகிய 
சரங்குத்தி..!!!

மிக நீண்ட  இரவின் 
முடிவுகளில் என்னையறியாமல் சாயும் வரை...
புத்தகங்களை வாசிக்கத்துடிக்கும் 
விழிகளைக் வாடகைக்கெடுத்தவன்...!!!

பள்ளிகல்வி வாசல் வரை
தாண்டியதும்..!
பட்டறையில் வாகனங்களுக்கு 
வர்ணம் பூச வார்ப்பு பிடித்த கரங்கள்...!!! 

நதி தான் ஓரிடத்தில்


நிற்காதே..?
ஓடியகால்களுக்கு
கொங்கு நகரம் 
பாதை ஒன்றை காட்டியது...!! 

அங்கே தான்
மதனும்,


மணிமகுடணும் [சுஜாதா] 
உலகத்தின் பார்வையை 
உள்வாங்கப் புகட்டினார்கள்.. 


டால்ஸ்டாயும், 
டார்வினும் அறிமுகமாகினர்...!!
ஸ்டாலினும்.. 
சே-வும் சிந்திக்க வைத்தார்கள்..!!


பாரதியிடம் வலதுகையையும்...

பாலகுமாரமிடம் இடது கையையும் 
பிடித்து தமிழ் நடை பழகிக்கொண்டேன்..!!!


இலக்கியம் தெரியாது..!!!
இலக்கணமும் புரியாது...!!! 
வெண்பாவையும் எழுதுகிறேன்..!!!
வெள்ளைச்சாமி 
பெரியப்பாவையும் எழுதுகிறேன்..!!! 
எனக்குத்தெரிந்த கோணத்தில்...!!! 


அப்போது தான்
ஆர்குட் என்ற ஆட்டுக்குட்டி 
அறிமுகமானது..!!!

அதன்
பரிணாம வளர்ச்சியில் பிறந்த 
முகநூலின் கதவுத்துவாரங்களை 
எட்டிப்பார்த்த எனக்கு 
துறவுகோலையும் தந்தது..!! 

ஷேர்லக் ஹோம்ஸ் முதல் 
ஷேர்மார்கெட் பஞ்சாயத்து வரை 
இங்கே பரவலானது..
பரவச ஆரம்பம்...! 

பால், வயது,
பாராதுபழகும் 
தோழமைகளோடு 
 “கவிதைப்பக்கம்” என 
அடையாளப்பட்டேன்...!!!

வெளிச்சத்தில்...படித்ததை 
தெருவிளக்கினிலே” 
தேடிப்பதிந்தேன்..! 
ஐயங்கள் ஆயிரம் 
அனுதினமும் தெளிந்தேன்..! 

தோழமைகள் ஆயிரம் 
தோள்கொடுக்க நெருக்கமாய்..!!
நட்புவட்டம் 
நாற்திசையிலும் 
கரம்குலுக்கி தோள்தட்டி நின்றது..! 



ஏட்டில் எழுதித்திரிந்ததை
இணையத்தில் ஏற்றினேன்.
தட்டிக்கொடுத்த கரங்களால் 
சுட்டிகாட்டப்பட்ட தவறுகளை 
திருத்தும் பக்குவங்கொண்டேன்! 

வீடுவரை வந்த சொந்தமெல்லாம் 
என்னை செம்புலப்பெயெலென்றும்...
 சேர்-தான் நானென்றும்
விலகியே சென்றிட..

நான்கரணாய் சூழ்ந்த
நல்லுடன் பிறப்புக்களினுடன் 
வாழும் வேடந்தாங்கல் 
பறவையாய் ஆனேன்  நான்...!!!



அன்று
வேற்றுமைகள் எட்டிப்பார்க்க

ஆனது போகட்டும் 
அதிகமாய்ப்போனால் 
நானிருக்கிறேன் என

என்னை மட்டும் நம்பி மீண்டும் 
தனித்திட்ட
ஒற்றைக்கால் காளான் நான்...! 

என்றாயினும்
மண்கிளறி என் வேர்களை 

அழுத்தமாய்ப் பதித்திடத் துடிக்கும் என் பெயரோ!



-கவிதைக்காரன்!
   



6 comments:

Subasree Mohan said...

Excellent..

ஜீவா said...

//என்னை மட்டும் நம்பி மீண்டும்
தனித்திட்ட
ஒற்றைக்கால் காளான் நான்...! // நம்பிக்கை விருட்சமாய் தழைக்கட்டும்... திறமைகள் விழலுக்கு வீணாகாமல் உரமாய் உங்களுக்கே பயன்படட்டும்

Unknown said...

பசும் வண்ண துவக்கத்திலேயே மனம் இலயித்து விடுகிறது நீவீர் உதிர்த்த கவிகளும் சேர்ந்தே....மலர் புன்னகையான் மலரோடு புன்னகிக்க உம் பக்க வரவேற்பினால் வலி நிறைந்த வரிகளும் செழுமாய் பல்லிளிக்கிறது,மன்னித்து விடு சகோ...
கடந்த பாதை கரடு முரடானாலும் -உன்
கவி கடக்கும் பாதை மனதில் கல கல தான்
துரு இரும்பும் உன் கரங்களால்வண்ண மயமாக
கவிதைகாரனால் எண்ணங்களெல்லாம் வண்ணமாகுதோ
வாழ்க எம் தமிழ் வளர்க உம் ஆக்கம்

Unknown said...

‎:) அன்பிற்கு நன்றியுரைக்கலாம் ! நட்பிற்குரைப்பது சரியல்ல! ஆக்கமும் ஊக்கமும் தந்தருளும் நட்பே...
என்னாளும் எம்பாதையில் உன் நிழலும் வேண்டி...

Unknown said...

குளுமை வேண்டி செழுமை தமிழில் .....உம் எழுத்துலக நளினத்தில் நான் நனைவேன் தமிழ் தோழமைகளின் பயணத்தில் நான் திளைப்பேன் சராமாரியாக கவிதைகாரரே

Maanu Paris said...

Miga arumai thozare