Thursday, November 1, 2012

கூகுள் மேப்பில் மறைக்கப்படும் பத்து இடங்கள்.




        உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருந்த இடத்திலிருந்தே பார்க்கும் வசதியுடைய கூகுள் எர்த் மற்றும் கூகுல் மேப்பில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது.இதில் சில இடங்கள் வேண்டுமென்றே மங்கலாக தெரியும் படி செய்யப்பட்டுள்ளது என்பது தான் அது.வடகொரியாவில் பெரும்பாலான இடங்கள்,ராயல் பேலஸ் நெதர்லாந்து,நியூயார்க் அணுமின் நிலையம் உட்பட ஒரு சில இடங்கள் மங்கலாக தெரிவதாகச் சொல்லப்படுகிறது.
   
   ஆனால் இதைப்பற்றி கருத்து தெரிவித்த கூகுள் நிர்வாகம்,எங்களுக்கு தகவல் மற்றும் படங்கள் தரும் நிறுவனங்கள் அந்தந்த நாட்டின் பாதுகாப்பிற்கும் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு தான் படங்களை வெளியிடவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.அவர்கள் தரும் படங்களைத்தான் நாங்கள் பிரசுரிக்கிறோம்.அதில் ஒரு சில படங்கள் இது போல மங்கலாகத்தான் தெரிகிறது.
கூகுள் மேப்பில் மங்கலாக தெரிவதாகச் சொல்லப்படும் அந்த பத்து இடங்கள்...

1. The Royal Residence, The Netherlands 

2. Buffalo Niagara International Airport

3. Tantauco National Park, Chile

4. Keowee Dam, South Carolina

5. Mysterious Russian Site

6. Minami Torishima Airport, Japan

7. The Michael Aaf Building, Utah

8. Cornell University Combined Heat and Power Plant, New York

9. Babylon, Iraq

10. Vlissingen, The Netherlands

உலகம் ஒரு நிமிடம்.








நம் பூமியின் வரலாற்றை ஒற்றை நிமிடத்தில்...
சொல்ல முடியுமா சொல்லி இருக்கிறார்கள்...
காணொளியில்...

Thursday, September 27, 2012

அநாமதேய அழைப்புகள்


சற்று முன்...
***********
பெண்: ஹலோ... எப்படி இருக்கீங்க என்னை மிஸ் பண்ணுறீங்களா?

ஆண் : ஆமா!  ரொம்பவே மிஸ் பண்ணுறேன் டியர்,

பெண் : எப்படிங்க உங்களை விட்டு போவேன், உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட் நான் உங்க தனிமையில விட்டுட்டு போய்டுவேனா...

ஆண் : நீதான் எனக்கு எப்போதும் கூடவே இருக்கிற டியர்...

# நீங்களும் உங்க தனிமையை கொள்ள வேண்டுமா! ஸ்டார் மற்றும் 9-ஐ டயல் செய்து... ஃப்ரெண்ட்ஸ் சாட்- சேவையை ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். உங்கள் நம்பரைச் சொல்லாமலேயே... உங்கள் துணையை தேர்ந்தெடுங்கள்... இந்த சேவைக்கு கட்டணம் முப்பது நாட்கள்க்கு 30 ருபாய் மட்டுமே...

மீண்டும் அதே உரையாடல்...
மீண்டும் மீண்டும் என 3 முறை இந்த ஒலிபரப்பு “சேவை?!” +911400035667 - என்ற அநாமதேய [vodafone]  அழைப்பில் இருந்து ...








கலாச்சரம் பண்பாடு நாகரீகம் எல்லாம்  கிழிகிழியென கிழிந்து கொண்டிருக்கும் போதே... ஒன்னொரு மூலையில் இப்படியான [பாலியல்] அழைப்புகளை கொடுத்துக்கொண்டிருக்கும் மக்களின் அத்யாவசியத்தேவையில் இடம் பிடித்துவிட்ட தொலைப்பேசிகளின் அழிச்சாட்டியம்.






-இதை எல்லாம் தடுக்க வழியே இல்லையா...!
[சற்று முன் எனக்கு வந்த அழைப்பின் உரையாடல் இது]

கடலோரக்குருவிகள் -பாலகுமாரன்



மனிதன் தன்னை உணர புத்தகங்கள் மிக முக்கியமான காரணிகளாக அமைந்துவிடுகின்றன...!
பாலகுமரனின் - சாந்தமயமான எழுத்தில் திளைத்திட இன்னும் ஒரு வாய்ப்பாக அமைந்தது... கடந்த தினங்கள்

அவருடைய “கடலோரக் குருவிகள்” நாவலை இரண்டு தினங்கள் முன் படித்துவிட்டு...இப்போது வரைக்கும் மனதுக்குள்  ஒவ்வொரு  அத்யாயத்தினையும் மீண்டும் மீண்டும் நினைத்து மறுவிக்கிடக்கிறேன்...

வாழ்க்கையின் உணர்வுகளை வகையாய்ச் சொல்லிக்கொடுக்கும் ஆசான்களில் ஒருவராய் பாலகுமாரன் அவர்களை காண்கிறேன்...!

கடலோரக் குருவிகள்-Kadalora kuruvigalமுடிந்தால்... [நாவல் விரும்பிகள்] கடலோரக்குருவிகளை புரட்டுங்கள் நிச்சயம் உங்களை நீங்களே உணர்வீர்கள்...!

கர்பிணி-யை உதாரணப்படுத்துவதிலும் சரி... குருவிக்கதையை கருவாக எடுத்துச்சொல்வதிலும் சரி...
இன்றைய இளைஞர்களுக்கான நெம்புகோல் அவர் பேனா என்பதை மறுப்பதற்கில்லை..! முன்னுரையில் இயக்குனர் ஷங்கர் இப்படிச் சொல்லி இருக்கிறார்...

இந்த நாவலின் 30ஆவது அத்யாயம், முதல் கடைசி பக்கம் வரை அனைத்துப்பக்கங்களையும் தன் ட்ரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி மீது ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று...!


-கவிதைக்காரன்

Monday, September 17, 2012

புத்தகக்கடை


இந்த மாதந்த்தின் மிச்சமான நாட்களின் இரவு நேரம்   மிக அருமையான தருணங்களால் ஆக்கிரமிக்கப்பட இருக்கின்றன!

ஆம்...!  ஐந்து புத்தகங்கள் இப்போது இன்னும் அதிகமாய் என் அலமாரியில் இடம் பிடித்த என்ற மகிழ்ச்சியில்...! நான்.

 கடந்த மாதங்களில் கடந்து வந்த புத்தகங்களின் தாக்கம் மனசுக்குள்ளே ஒட்டிக்கிட்டே இருக்கும் போது ..நண்பர் [அண்ணன் ]  ஒருவர் வீடு மாற்றலாகி கிரஹப்பிரவேசத்திற்கு அழைத்திருந்தார்...!

விழா முடிந்து திரும்பும் போது அவரது பழைய வீட்டில் சில எலெக்ட்ரானிக் பொருட்களை எடுத்து வர நண்பருடன் சென்றேன். சென்றதும் ரொம்ப நல்லதாப்போச்சு...!

அவரது அலமாரியின் இடைவெளிகளில் கொஞ்சம் புத்தகங்கள்...காணக்கிடைக்கப்பட..

இப்போ அவர் தயவால் ....


1,என். சொக்கனின் CIA -அடாவடிக் கோட்டை 

2,கோபிநாத்தின் 2010-ல் பதிப்பாகிய ... நீயும் நானும் 


3,எம்.ஜி. தேவசகாயம் எழுதி, ஜெ.ராம்கி அவர்களால்
தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட
“எமெர்ஜென்ஸி” -ஜே.பி யின் ஜெயில் வாசம்
 [இந்திரா Vs ஜெயபிரகாஷ் நாராயண்.]














4, பா.ராகவனின் டாலர் தேசம் [அமேரிக்காவின் அரசியல் வரலாறு]












*இவர் எழுதிய  “மாவோயிஸ்ட்” அபாயங்களும் அதன் பிண்ணணியும் - புத்தகத்தை கடந்த வாரங்களில் படித்த போதே இவரது பிற புத்தகங்களின் தேடலில் டாலர் தேசத்தை முதன்மையாக தேடினேன். :) கிடைத்துவிட்டது !




இவை அனைத்துக்கும் மேலாக நான் மானசீக குருவாக நினைக்கும் அறிவியல் எழுத்தினை எனக்கு அறிமுகம் காட்டிய திரு.ரங்கராஜன் *சுஜாதா*  அவர்களின் சிறுகதைத் தொகுப்பான




5, உயிர்மை பதிப்பகத்தின்  “தேர்ந்தெடுத்த சிறுகதைகள்” முதல் தொகுதி [50 சிறுகதைகள்] புத்தகமும் இப்போது என் கையில் புரள்கிறது...!
சொல்லவும் வேண்டுமா கீழிருந்து மேல் வரிசையாக சுஜாதாவிலிருந்து வாசிப்புப்பட்டியலை துவங்கி விட்டேன்!




இதில் டாலர் தேசம் புத்தகம் மட்டும் 857-பக்கங்களை உள்ளடக்கியது கிட்டத்தட்ட பள்ளிக்கூட நாட்களில் தூக்கிச்சுமந்த பழைய ஏற்பாடு பைபிள் அளவில்...!

ஒரு நல்ல நண்பன் நூலகத்துக்குச்சமமானவன்னு சொல்லுவாங்களே...புத்தகங்களும்   நான் நண்பனா பார்க்கும் ஒரு ஜீவன் !
இன்னும் இரண்டு வார காலத்திற்கு என்னை கையில் புடிக்க முடியாது அவ்வ்வ் ஹாஹா! :)
- கார்த்திக் ராஜா.


Wednesday, September 5, 2012

சிவவாக்கியர் சித்தர்..


நண்பனிடம் சற்று முன் தொலைப்பேசி உரையாடல் போது பேச்சு அப்படியே சமீபகாலத்தில் ஊடகங்களுக்கு செய்திகளை வாரி வழங்கும் ஆன்மீகவாதி ஒருவர் பற்றி [கதவைத் திற ] பேச்சு தொடர்ந்தது..! [ 09-05-2012 ]

அப்படியே...  “சிவவாக்கியரை”  பற்றி அறிமுகப்படுத்தினால்... அக்காலச் சித்தர்களில் சிவவாக்கியரின் பாடல்களை உடனே தேடிப்படித்து தொலைப்பேசி உரையாடலினூடே.. வியந்து கலந்துரையாடினோம்!



சிவவாக்கியரை ஒரு சித்தர் எனச்சொல்லுவதை விட பெரியாரின் முன்னோடி எனச்சொல்லலாம்! அவரின் பாடல்களில் அவர்ச்சாடாத சமூக மூடநம்பிக்கைகளே இல்லை  எனச் சொல்லலாம்!


சிலை வழிபாடு பற்றி

 “நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

சமைத்த பாத்திரம் சுவையை உணருமா என்ன? உள்ளிருக்கும் கடவுளை அறியாமல் நட்டுவைத்த கல்லை நாலு புஷ்பம் சாத்தி வணங்கி நிற்கிறாயே என்கிறார்.!

ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை [?]  ஒரு கட்டுக்கோப்பிற்குள்
கொண்டுவர,  நல்வழிப்படுத்த  உருவ  வழிபாடு  தேவைப்படுகின்றது.

சட்டத்துக்கும்,  சான்றோர்  உரைகளுக்கும்  கட்டுப்படாத   சிந்தைத்
தெளிவில்லாத  மனிதர்களுக்கு,  ஒரு  வடிவத்தைக்  காட்டி இதுதான்
கடவுள்,  இவர்  உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை
தரக்  காத்திருக்கின்றார்.

ஆகவே  தவறு  செய்யாதே என்று கண்டிப்போமானால்  அந்தக்  கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில்கடவுள்  கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்; கடவுளின் கட்டளை என்று  சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்
படுகிறார்கள்.

அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில்பயனாகிறது.  பலரை  நல்வழிப்படுத்த  உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர்.

     ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.உருவ  வழிபாடு ஒரு  மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம் ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில் இருப்பதாகவும்,   மண்ணில்  இருப்பதாகவும்,    மரத்தில்   இருப்பதாகவும்,
உருவமைத்துக்    காட்டுவது    கடவுளையே   அவமதிப்பதாகும்  [ஆனாலும் கடவுளை **கடவுள்ச் சித்தாந்தத்தை** இவர்களும் விட்டுவிடவில்லை]  என்று
வாதிடுகின்றனர். சிவ வாக்கியர் சாடியதெல்லாம் மூடப்பழக்கவழக்கங்களை...

   “ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
     தேரிலே வடத்தை விட்டு செம்பை வைத்து இழுக்கின்றீர்
     ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
     பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே”

-பாடலின் அர்த்தம் அதிகம் விளக்கத்தேவையில்லை.. *ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை..!* யாரென்றறிந்திட முடியாத ஆதி சித்த நாதரை பேதை மனிதர்கள் செய்யும் கூற்றுக்களை பார் உலகமே என்கிறார்..!

எச்சில் பண்டங்கள் இறைவனுக்கில்லை என்கிறீர்களே.. உங்கள் வாய் முணுமுணுத்த வேதங்களில் எச்சில் படவில்லையா? கன்று எச்சில் பசு மடியில் கறந்து நீங்கள் அபிஷேகிக்கும் பாலில் இல்லையா?

[அவர் இன்னும் ஆழமாய் மனிதனின் பிறப்பில் கூட கை வைத்து இருக்கிறார்... விந்து எச்சில் பற்றியும்  நான் தவிர்த்தமைக்கு மன்னிக்கவும்]

மீன் இறைச்சி தின்பதில்லை என கூறும் வேதர்களே மீன்வாழும் நீரைக்குடித்துக் கொப்பளித்ததில்லையோ, மானுரித்த தோலைனை மார்பில் சூடியதில்லையோ,  ஆட்டிறைச்சி தின்னதில்லை என்போரே.. உங்கள் யாகங்களில் ஊற்றும் நெய்யில் உள்லதென்னவோ? என்கிறார்.

 “மீனிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மீனிருக்கு நீரலோ மூழ்வதுங் குடிப்பதும்
     மானிறைச்சி தின்றதில்லை யன்றுமின்றும் வேதியர்
     மானுரித்த தோலலோ மார்புநூல ணிவதும்” (159)

இவ்வளவு தூரம் வந்தவர் சாதியைச் சாடாமல் போவாரா என்ன? ம்ம்ம் அதையும் துவைத்து தொங்க விட்டிருக்கிறார்.

 “சாதியாவ தேதடா சலந்திரண்ட நீரெலோ
     பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோகாதில்வாளி காரைக்கம்பி பாடகம்பொ னொன்றலோ
     சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே” (47)

 பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
     இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்கிதோ
     பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
     பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாடு மும்முளே” (40)


ஒருவர் பலரிடத்தும்  பேசாமலிருக்கலாம், மௌனமாகவும் இருக்கலாம்,
ஞானியாகவும்   இருக்கலாம்,   யோகம்  செய்து  கொண்டும்   இருக்கலாம்,
நாட்டைத்  துறந்து  காட்டிலே போய்க்கூட வாழலாம்.  ஆனால் உள்ளத்தில்
தூய்மை யில்லாதவராய் இருந்தால் அதனால் எந்த பலன்களும் மேற்சொன்ன
விரதங்கள்  யாவும்  பாழாய்  முடியும்.  உள்ளத்திலே குற்றங்களை வைத்துக்
கொண்டு இருப்பவர்கள் உண்மையான கடவுளைக் காணமாட்டார்கள்.
     அப்படியானால்  உண்மையான  கடவுள்தான்  யார்? என்ற வினாவுக்கு
அறிவுதான்  இறைவன்  என்று  விளக்கம் தருகின்றார் சிவவாக்கியர். அறிவு
தான்  இறைவன் என்றால்  அறிவாளிகள் மட்டும்தான்  இறைவனைத் தொழ
இயலுமோ?  என்ற  வினாவும்  எழுகிறது.  இல்லை  பாமர  மக்களும்  தம்
அன்பினால்  இறைவனைத்  தரிசிக்கலாம்   என்றும்   இறைவன்   எங்கும்
நிறைந்திருக்கிறான்  என்ற  கருத்தையும்   சிவவாக்கியர்  தம்  பாடல்களில்
நிறைத்துக் காட்டுகின்றார்.



-தேடல் தந்த தளங்களில் இருந்து

கவிதைக்காரன்.

சிவகாசி...! வெடித்த உயிர்கள்




கொஞ்சம் பரிதாபமும்..!
சில கண்ணீர்த்துளிகளும்...!
நெஞ்சைக் கொல்லும் கதறல்களுமாக
சேர்த்து...

குட்டி ஜப்பானை
குலைத்துப்போட்டு
விளையாடும் கோரதாண்டவம்
மீண்டும் ஒருமுறை..
அரங்கேற்றப்பட்டுக்கிடக்கிறது.

-கவிதைக்காரன்

Tuesday, September 4, 2012

அடிப்படை அலட்சியவாதிகள்...நீங்கள்?




அலட்சிய அட்டைகள்
நம் லட்சிய
உதிரத்தை
உறிஞ்சிப்போதல் கண்டு

 எப்போது தான்
கொதித்திட்டோம்...!

நாளை
பார்த்துக்கொள்ளலாம்!

மறு நாள்
பார்த்துக்கொள்ளலாம்

அடுத்த வாரம்
பார்த்துக்கொள்ளலாம்

அடுத்த திங்கள்
பார்த்துக்கொள்ளலாம்-என

அடுத்து அடுத்து என்றே
படுத்தே கிடந்ததினால் தான்

பட்டினிக்கூட்டத்திற்கு
பஞ்சமே இல்லையோ..!

அழுது நின்ற கண்கள் கூட..!
கண்ணீரின்றி  வற்றிப்போனதற்கு
உன் அலட்சியமுமோர் விடைதானோ!

இன்று மழையில்லை..!
உனக்கோ குடைகேடானது..!

நாளை விளைநிலமில்லை
உனக்கு அடுக்குமாடி வீடானது..!

மறுநாள் விதைக்க
விதையுமில்லை..!

நீ வித் அவுட் சீஸ்
பர்க்கரை வெண்ணையில்
தொட்டு விழுங்கிக்கிடக்கிறாய்..!

நாளை விவசாயமுமில்லை
விவசாயியுமுமில்லாமல்

போன பின், நீ எங்கள் சுடுகாட்டு வீதியில்
குலசம்  விசாரிக்க வந்தென்ன பயன்.!

இங்கே புயலடித்தால் உனக்கென்ன?
பூகம்பம் வந்தால் உனக்கென்ன!?

உன் வீட்டுக் கண்ணாடிக்கோப்பை
விழுந்து உடைந்தால்
வீலென்று பதறும் நீ...

உன் கண் முன்னாடி மடிந்தே போகும்
சக மனிதனை கண்ணெடுத்தும் பாறாதது ஏனோ!

உன் அலட்சியத்திற்கும்
அவனுக்கும் சம்பந்தமில்லை
என்று மட்டும் சொல்லிவிடாதே..

அவன் வீழ்ந்து கிடப்பதின் சாரமே
உன்  அலட்சியத்தின் அஸ்திவாரத்தினால்தான்

கதவிடுக்கில் நசுக்கப்பட்ட
கைவிரல் போல்...! அவன் துடித்ததெல்லாம்;

உன் ஒற்றை விரல்
 கடமையை நீ செய்யாது போனதினால் தான்!

ஓட்டுப்போடும் சரிசையில் நீ
இல்லாது போனதினால்; ஆட்டிப்படைக்கும்
அறுகதை அற்றக்கூட்டத்தை அவையேற்ற காரணமாய்!

இயற்கைக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்
மழை இல்லாது போனதற்கும் மாண்டு உழவன் சாவதற்க்கும்
நானெப்படி பொறுப்பேவேனென்றா சிந்த்தாந்தம் பேசிடாதே...!

மண்ணை கடத்தி.. என் நிலத்தாயை
கற்பழித்தான்; மதிலைக்குடைந்து
எங்கள் கனிமத்தை கவர்ந்திட்டான்,

கன்னி வயிற்றில் கத்தியைச்சொறுகுதல்
போல- எம் நதியைக் கீறி நீரை கடத்திட்டான்..!

உரிமைப்போராட்டம் உளுத்துப்போய்
உணர்வுக் கொதிப்பலை..அடுப்பின் தீயை
அணைத்துப்போனது..

உழவுக்கு வழியில்லை.!
உணவுக்கு..  உரமில்லை..!
தானியங்கள் வீணாக்கி..!
தரணியை பாழாக்கி..!
கழநியை கட்டிடமாக்கி..!

ஊரெங்கும் மது ஊட்டி..
ஊழலில் ஊறித்திழைத்து..!
தான் மட்டும் வாழ்ந்து போகும்
தன்னாட்சி தறுதலைகளை

தனிப்பெரும்பான்மையினால்
அவையேற்ற உன் அலட்சியம் தான்
காரணமே..!

உன்னை மட்டும் கை நீட்டிச் சொல்லல்
தகுமோ! உன்னைப்போல் உணர்வுச்சோம்பேரிகள்
அலட்ச்சிய அரிதாரத்துடன்...! ஆயிரமாயிரமாய்..!

பின் நாடு பட்டுப்போகாமல்
பட்டாடைப்பொலிவாய்
திரிந்திடுமா என்ன?..!

மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும்
மக்களின் அரசில் மக்கள் பாடு மந்தை மாடாய்..!

இதுவரைக்கும் உணர்த்தியதுண்டா உனக்கு..!
ஏதேனும் உறுத்தல்கள்..!

மிச்சம் வைத்துக்கொள் நாளை ..அவ்வுறுத்துதலை..!
என் கேள்விகளுக்கு  உன் அலட்சியம் பதிலாய்..
இல்லாது போகட்டும்...!

-கவிதைக்காரன் 


ஆசிரியர் தினம் - கவிதைக்காரன்!



  • ஆண்டுகள் தோறும் ஆசிரியர் தினம்
  • வந்து போய்க்
  • கொண்டிருப்பதென்னவோ
  • வாடிக்கை..!
  • அன்றெல்லாம்
  • உங்களை தாழ்ந்து
  • பணிந்து...!
  • கவிதையில் நனைத்து
  • கண்ணீர் மொழி பேசும்
  • முரட்டுக் குழந்தைகள் நாங்கள்..!
  • இந்த முரணை
  • நினைத்துப்பார்க்கையில்
  • எங்களுக்கே வேடிக்கையாகி இருக்கும் 
  • உங்கள் பேரில் கேலிகளும்
  • நாங்கள் செய்ததுண்டு..!
  • அதனை கொஞ்சமும்
  • பொருட்படுத்திக்கொள்ளா
  • பக்குவம் உங்கள் போல
  • யாருக்குண்டு...! 
  • சொன்னதை எப்போதும் 
  • சத்தியமாய்ச் சரியாய்
  • செய்ததில்லை..! 
  • கற்றுக்கொடுக்கும் போதெல்லாம்
  • எங்கள் கவனம்..கடற்கரை
  • தக்கை போல் கவனிப்பற்றுக்
  • கிடந்ததும் உண்டு..!
  • தேர்வென்று வரும் போது
  • மட்டும் மாய்ந்து
  • மாய்ந்து படிக்கும் மேதாவிப்
  • பிள்ளைகள் நாங்கள்..!
  • இன்று மட்டுமாய்
  • மேல்பூச்சுக்காய்
  • உங்களை புகழ்ந்து
  • புகழ்மாலை சூட்டுவிக்க
  • எங்களுக்கும் விருப்பமில்லை..!
  • ஏனென்றால் நாங்கள்
  • உங்களிடம் தானே! இப்படி
  • மனதின் வார்த்தைகளை
  • உண்மையாய்ப் பேசக்
  • கற்றுக்கொண்டோம்! 
  • ஆம்!
  • உண்மையில் நாங்கள்
  • உங்களுக்கு ஒப்பாய்
  • எப்போதும் நடந்ததே
  • இல்லை..! 
  • ஆனால்!
  • வாழ்க்கையின்
  • நீரோட்டத்தில் நதி எல்லா நாளும்
  • தேக்கங்களாய் இருந்திடாதென்பதை.. 
  • சில நேரம் வெள்ளமெடுத்தது
  • போல் உணர்த்திப்போகும்
  • உங்களின் வார்த்தைகள்..! 
  • அந்த வெள்ளத்தில் விழுந்து
  • எதிர்நீச்சல் போட
  • எப்படியும் பயிற்றுவித்து
  • விடுகிறீர்கள்..! 
  • இங்கே வரும் போது
  • நாங்கள் எப்படியெல்லாமோ
  • தான் வந்திருந்தோம்! 
  • மறுத்தாலும் அதுவே
  • உண்மையென்றானது..!
  • ஆயினும் வெறுத்திடாமல்
  • பேதமின்றி அனைவருக்கும்
  • வேதம் கற்பித்தீர்கள் நீங்கள்! 
  • இது...இன்று
  • நேற்றுமட்டுமில்லை
  • நாளையும் எங்களைப்போல்
  • இன்னொருவர்..!
  • மீண்டும்  மற்றொருவரென..!
  • கடந்துகொண்டே போகிறது...! 
  • நாங்கள் உங்களின்
  • நிழலில் நீச்சல் கற்று..
  • நடந்து கொண்டே போய்விடுகிறோம்..
  • எந்த நன்றியுமில்லாமல்..! 
  • எப்போதும்
  • அதை நீங்கள்
  • எதிர்ப்பார்த்ததில்லை..!
  • என்பது இப்போது புரிந்திருந்தோம்! 
  • என்றாவது எங்களின்
  • வருங்கால வசந்தங்களில்
  • உங்கள்
  • நினைவு நாடாக்கள்..! 
  • எங்களின்
  • இசைப்பேழையினில்
  • இசைக்கப்பட்டிருக்கும்.., 
  • அன்றெங்கள் கண்களில்
  • துளிர்த்திருக்கும்
  • அந்த ஒற்றைத்துளி
  • கண்ணீர்தான் உங்களுக்கான
  • நன்றியைச்சுமந்திருக்கும்..! 
  • ஆசிரியர்களே... உங்கள் அன்பிற்கு
  • முன்னால் நாங்கள் நாணல் தான் எப்போதும்..! 

  • என் ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்!  

-கவிதைக்காரன் ! 


உலகப்புதிர்கள்!





உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத இரகசியத்தை கொண்டுள்ளது.

பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் இரகசியத்திற்கு இன்னும் விடைகிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான "கிஸா" பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது. இந்த அளவுக்கு கற்களை தோண்டி எடுத்தால் பிரமாண்டமான பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை.

இதைப் போலவே 1947 -க்கும் 1956-க்கும்இடைபட்ட காலத்தில் பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் உள்ள கும்ராம் மலைக்குகையில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 900 ஆவணங்கள் கிடைத்தன.
மெல்லிய செப்பு தகடுகளில் எழுதப்பட்ட இவை சாக்கடல் சுருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட இந்த சுருள்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகசியம். தங்கப்புதையலுக்கான தகவல்கள். புதையல் கரிசிம் மலையில் இருக்கிறது என்கிறது ஒரு சுருள். ஆனால் கரிசிம் மலை எது என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத வினா.
இலக்கியமும், சினிமா பாடல்களும், வரலாறும் அலசி காயப்போட்ட Ôபாபிலோனின் தொங்கும் தோட்டம்Õ எங்கே இருக்கிறது? என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 4 00- ல் பெரோசஸ் என்பவர்தான் முதன்முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றி எழுதினார். பாக்தாத்துக்கு பக்கத்தில் கி.மு.6 00-ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரை கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கையாக தெரிவிக்கிறார்கள்.

உலகில் உள்ள மலைகளிலேயே மிகவும் பணக்கார மலை எதுவென்றால் அது ஆல்ப்ஸ் மலைதான். காரணம் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளுக்கு பயந்து, தான் வைத்திருந்த பிளாட்டினம், தங்கம், வெள்ளி முதலியவற்றை அள்ளி ஆல்ப்ஸ் மலையில் ஒளித்து வைத்திருப்பதாக நம்பி மலையெங்கும் அலைந்து திரிந்தது அமெரிக்கப்படை. கடைசியாக ஒரு புதையலை கண்டுபிடித்தது. அதுவே பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானம் கொண்டது. அன்றிலிருந்து மக்கள் கூட்டம் எப்போதும் ஆல்ப்ஸ் மலையில் புதையல் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது.

இயேசு கிறிஸ்து இறுதியாக திராட்சை ரசம் குடித்த கோப்பை ஒன்று ஐஸ்லாந்தில் இருப்பதாக கூறுகிறார்கள். திஹோலி கிரெயில் என்று அழைக்கப்படும் இந்த கோப்பை பூமிக்கு அடியில் 15 அடி ஆழத்தில் ஒரு இரகசிய அறையில் இருப்பதாக கதைகள் உலவுகின்றன. கோப்பை இருக்கிறதா? இல்லையா? என்று மக்கள் கூட்டம் ஐஸ்லாந்து பகுதியில் பூமியை தோண்டிக்கொண்டே இருக்கிறது. இப்படி விடை கிடைக்காத இரகசியங்கள், அதிசயங்கள் பூமியில் நிறைய இருக்கின்றன.

-நன்றி தமிழால் இணைவோம்! முகநூல்

Saturday, September 1, 2012

தலைப்பில்லாத கவிதை....!


விழிகள்
உண்ணும்
பூக்களிங்கே...!

கவிதை
தின்னும்
காரிகை இங்கே..!

வதனம்
பேசும்..
வெண்ணிற விழிகள்..!

இதமாய்
இதயம் கொய்து போவதேன்..!

கொஞ்சம்
நேசமும்..!
கொஞ்சும்
சுவாசமும்..!

அள்ளிப்போனதென்..!
அந்தி நேர கவிதைகளை...!

ஒற்றைக் கீற்றோளியாய்
கணகளைச் சிமிட்டினால்..!

வெற்றுப் பாலையையும்
சோலையென்றாக்கினாய்..!

சோலையினுள்
தெரியும் இப்பூவுக்கோ பெயரில்லை..!

காலையினில் எழுதும்
இந்த கவிதைக்குமாய்...! சேர்த்து...!
தலைப்பில்லை...!

-கவிதைக்காரன்

காதல்...வைத்தேன்...!

ஒரு மாலை
நேரத்தின்
வெளிச்சப்பொழுதில்..
என் பக்கமாய் !
நீயிருந்தாய்
காதலோடு..!






















காற்றின்
இடைவெளிக்குள்
நாமிருவரும்
விலகிக்கொள்ள
காதல் வந்து -நம்மை
கட்டிப்போட்டுவிட்டு
கைகொட்டிச்சிரிக்கிறது!















யாரும் எழுதிடாத
கவிதையொன்றை
எனக்கெழுது
எனக்காதருகே
கிருகிசுத்தாய்...!

நான் மொத்தமாய்
வெட்கமாய் உனை
அணைத்து
சத்தமின்றி
ஓர் முத்தத்தை
உன்னில்
எழுதிவைத்தேன்...!














சட்டென்று
விலகி போடா பொறுக்கி !
கவிதை எழுதித்தாவென்றால்
கன்னங்களையா தின்கிறாயென..!
கள்ளமாய் புன்னகைத்தாய்..!






















இத்தனை
நாட்களும்..!
எனக்காகமட்டும்
நான் எழுதிய அத்தனைக்
கவிதையாயும்
நீ இருந்தாய்..!




























ஆனால்!
நான்
எழுதிடாத
கவிதையாய்
நம் காதல் இருந்தது..!
இறுதிவரை...!


**கவிதைக்காரன்**
    கார்த்திக் ராஜா!

தக திமி தா மழை..!


கொஞ்சமும்
சலனமில்லை...
இதற்கு முன் நிமிடம் வரை..!

எப்போது... மழைத்துளி
கன்னங்களில் விழுந்து
தட்டென்று தெறிக்கத்தொடங்கியதோ..!

அடுத்தவினாடியே...!
ஒரு ....ரெட்டைச்சுழியான!
குழந்தைத்தனம் உட்புகுந்து

குட்டிக்கரணமிடத் துவங்குகிறது..!
தகதிமிதா...மழை

-கவிதைக்காரன்.

இப்படியோர் இடத்தில்...!


திசைகள் எனக்கு வேண்டாம்...!
தினம் ...இரவு பகல்
எதுவும் வேண்டாம்..!

நீலவானுக்கும்
அலையில்லா கடலுக்கும் நடுவே பச்சையாய்ப்
பூத்திருக்கும்
சிறு மண் மேட்டில்...!

சிறகடித்துத் திரியும்..
சிட்டுக்குருவி கூட்டில்..-வாழ
ஒற்றைக்குரலில்
ஓர் வரம் வேண்டும்..!

பசி தூக்கம்
வேண்டாம்,
 பகை நட்பும்
வேண்டாம்..!

கள்ளம் வைத்துப்
பேசும் உள்ளங்கள்
எப்போதும் வேண்டாம்...!

அன்பும் ஆசையும்
வேண்டாம் ; அவையெல்லாம்
அரவணைக்கிறேன் பேர்வழி -என

என்னைப் பதம் பார்த்துப்போன
காயங்கள் இன்னும்
ரணப்பட்டே கிடக்கின்றன...!!

வேண்டியதெல்லாம் நான் பெருங்குரலெடுத்து
அழும் போது.. வழியும்
அந்த கண்ணீர்த்துளி

இந்தக் கடலுக்குள் விழுந்து
காணாமல் போவது போல்...!

என் கவலையும் எதிரொலியும்
எனக்கே கூட  கேட்காமல் போகவேண்டும்..!
இப்படியோர் இடத்தில்...!

-கவிதைக்காரன்!

வரலற்றின் ஏடுகளில் பெண்கள் -


*வரலாற்றின் ஏடுகளில் பெண்கள்*
-கவிதைக்காரன்.
_______________________________________________________________________________
1955 திசம்பர் மாதம்...!

ஒரு மாலை நேரம்... வேலை முடிந்து சோர்வினாலும் கால்வலியினால் கொண்ட அசதியினாலும் ! அலாபாமாவின் பேரூந்தில் பயணிக்கிறார். அந்த பெண்மணி.... மனிதனுக்கு மனிதன் சமம் என்னும் போது.. நிறவேறுபாடுகள் தலைவிரித்தாடிய நகரம் அது.

பெண்ணுக்கும் சரி, கருப்பு நிறத்தவருக்கும் எந்தவித மதிப்பும் இல்லாததாகக் கருதப்பட்ட காலக்கட்டம் அது. வெள்ளை நிறத்தவர் பேரூந்தில் ஏறி விட்டால் கருப்பு நிறத்தவர்கள் எழுந்துவிடவேண்டும்... என்பது அங்கு எழுதப்படாதச் சட்டம்.

அப்படித்தான் அன்றும் ஒரு வெள்ளையர் பேருந்தில் ஏறியவுடன், கறுப்பர்கள் அனைவரும் எழுந்துவிட்டனர். அந்த ஒரு  ஒர பெண் மட்டும் எழ மறுத்தார்.  “நீ எழ மறுத்தால், போலீசைக் கூப்பிடுவேன்” என்றார், ஓட்டுநர்.

“தாராளமாக செய்யுங்கள்” என்றார் அந்தப் பெண். போலீஸ் வந்தது. அந்தப் பெண்ணைக் கைது செய்தது. கைதி எண் 7053. என காவல்துறையால் அடையாளப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் அசரவில்லை, உரிமைக்குக் குரல் கொடுத்தார்.  வரலாற்றையே மாற்றிய ஒரு பேருந்து நிகழ்வு அது!.

விதைகள் எதுவும் செய்யாமல் விருட்சங்கள் உருவாகிவிடுவதில்லை. போராட்டங்களும் எதிர்ப்பும் இல்லாமல் உரிமைகள் சாத்தியமில்லை.

ஒரு உரிமைக்கான எதிர்ப்புக்குரல் அங்கே எழுந்தது. கறுப்பினத்தவர் என அடையாளப்படுத்தப்பட்ட சகமனிதர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்ப்பு போராட்டத்திற்கு வழியமைத்தது.

யார் அந்த பெண்?. வரலாறு அவரை இப்படி அழைக்கின்றது “நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய்”   -என்று. உண்மையில் அந்தப் பெண்ணின் நிஜப்பெயர் ரோசாபார்க்ஸ். [Civil rights activist Rosa Parks ].

அந்த ஒற்றைக்குரல் மக்கள் குரலாக ஓங்கி ஒலித்தது. நீதி கிடைக்கும் வரை எந்த மாநகரப் பேருந்தில் ஏறுவதில்லை, பணிகளுக்கும் செல்வதில்லையென புறக்கணிப்பு போராட்டத்தை நிகழ்த்தினார்கள் மக்கள்.

எல்லாபக்கங்களில் இருந்தும் மிரட்டல்கள். துணிந்து நின்று போராடினார். ரோசா தொடர்ந்த போராட்டத்தின் விளைவினால்  சிவில் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.

"அன்று அவர் எழ மறுத்ததால்தான், இன்று நாங்கள் எழுந்து நிற்கவும், தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது" என்ற குரல் பகிரங்கமாக...எல்லாத்திசைகளிலும் எதிரொலித்தது  கருப்பினர்களால்.


ஆம்! ஒரு சரித்திரம் மாற்றி எழுதப்பட்டது.. இன்று அவரை மேலைநாடுகளில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வாழும் வரை மக்களுக்காக சுழன்றார்.
எண்ணற்ற விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது.

மிகையாக NAACP -இன் உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது.இன்று அவர் பெயரில் “ரோசாபார்க்ஸ் மியூஸியம் ” ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்வி முதலான பல சேவைகள் அதன்மூலம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.!


2005-ம் ஆண்டு அக்டோபர் 24-ல் காலமான இவரால் ஒரு சரித்திரத்தை திருத்தி எழுத வைக்க முடிந்தது என்பதை நினைத்துப்பார்க்கும் போது.. பெண்மை எத்தனை மகத்துவமான சக்தி என்பதை உணரமுடிகிறது.


"I have learned over the years that when one's mind is made up,
this   diminishes fear; knowing what must be done does away with fear."
– Rosa Parks





-வரலாற்றில் நகர்வோம்...



Wednesday, August 29, 2012

கொஞ்சம் திமிர்....





இரவு என்னை
கொஞ்சம் கொஞ்சமாய்
நஞ்சைப்போல
விழுங்குகிறது...!

சுயமரியாதைக்காய் |
கைவிடப்பட்ட
முன்னேற்றக்கூடம்...!

கடைசியாய்
நடந்து வரும் - என்னை
பார்த்து ஏளனமாய்ச்சிரிக்கிறது..!

ஜாடி தூக்கும்
மகத்துவத்தொழில்
எனக்கு மறந்தும்
தெரியாமல் போனதால்

இறந்தும் விடைக்கும்
பிணம்போல
முறுக்கிடும் கோபம்
என்னைக் கொண்டு

சேர்த்த இடத்தில்
நான் மட்டும்
தனிமையாய்..

ஆம்! இங்கே
நான் மட்டும் தனிமையாய்.

யாரும் உடனில்லை
வேண்டுமென்றும்
ஏக்கமில்லை...!

கடைசிச்சாலையில்
நடந்து வந்தும்..
கண்ணிரண்டும் தூங்கவில்லை..!

நாளை நீயே
சொல்வாய்... அதோ
போகிறான் பார்
திமிர்பிடித்தவனென்று..!

சொல்லிவிட்டுப்போ!
ந்ன் திமிரெனக்கு வேலி
எனத் தெரியப்போவதில்லை
உனக்கு..!

நீ அப்போது
என் பின்னால்
நின்று
கொண்டிருப்பாயாவென
தெரியாது..! - ஆனால்

நான் அப்போது உனக்கு முன்னால்
சென்றுகொண்டிருப்பேன்!

-கவிதைக்காரன்

Sunday, August 26, 2012

தந்தையாய்...


கட்டிலின் மேல் காங்ரீட் கூரைகளில் பட்டு
எதிரொளிக்கும் உயிர்முனை கேவல்..!
உயிரணுவின் விளையாட்டின்
தவம் திறந்து வெளிப்படும் உயிர்ப்பூ..!

அத்தனை துடிப்பிலும் உயிர் போகும்..
வலிகளை வார்த்தைக்கு கொடுக்காமல்
மூர்ச்சைக்குள் மூழ்கிடமாட்டாமல்
நாசிகள் தடுமாற சுவாசம் தடம் மாற

அஃகென்னும் அழுந்துதலில் கட்டுப்படுத்தும்
இரட்டை நாடகம் தொடர…அடி நாதத் துடிப்பின்
முணகலிலும்: வில்லென விறைத்து
வானுக்கும் பூமிக்குமிடையே

பயணிக்கும் உணர்வின் மூன்றாவது அத்யாயம்
முற்றுப்பெறுவதற்குள் உன் முன் ஜென்மங்கள்
கண்ணில் வந்து போகும் இளவேனில் நாளில்

தொட்டிலுக்கு வரப்போகும்
நம் ஈரைந்து திங்களின் தவத்தை வரமாக்கி
பெற்றெடுத்தாய் …!
நீ….!!!

வார்த்தைகளுக்கு அடங்கமாட்டாமல்
கண்ணீர்பூத்து கரங்களில் அந்த பிஞ்சுதேகம்
ஏந்தும் வரை

நீ உணர்ந்த உன் அத்தனை வலிகளும்
அந்த நிமிடம் வரை என் நெஞ்சில்
சுமந்தவனென்பதை

என் கண்ணீர் காட்டிக்கொடுப்பதை ...
மறைக்க மறந்தவனாக தந்தையின் செறுக்கும்
கணவனின் தகிப்பும் நிறைந்துபோய் நான்..!
உன்
புன்னகை சேமித்துக்கொண்டிருந்தென்...


-கவிதைக்காரன்

என் தோழி…!


என்றோ தொலைந்து போன
என் தோழியானவளின் கனவு
சமீப நாட்களாய்
என் உறக்கம் கலைத்து..
போனது எனக்கே வியப்பாய்!

காரணம் பெரிதாக ஒன்றும்
இல்லை..! உண்மையில் உட்கார்ந்து
யோசிக்கும் வரை அவள் பெயர்கூட
எனக்கு நினைவில் இல்லை!

பள்ளி ஆண்டு விழாநாளில்
என் சகோதரியின்
மஞ்சள் வண்ணதாவணி தலைப்பை
எப்படியெல்லாமோ சுற்றி
வண்ணத்துபூச்சிபோல் வேடமணிந்து
நீயும்…!

வெள்ளை நிற அரைக்கால்
சட்டையணிந்து உச்சஸ்தாதியில்
பாட்டுப்பாடியபடியே நானும்
நம்மோடு சிலரும் ஆடிப்பாடிய
ஆண்டுவிழா புகைப்படம் மட்டுமே மிச்சமாய்..

என்னிடம் அதுவும் போன
முறை விருந்தினர் வந்தபோது
புகைப்பட ஆல்பங்களை அம்மா
எடுத்துகாட்டியபோது சிக்கியது

ஆனால் அன்றைய நாளின் கனவில் கூட
வேறொரு அவள் தானே வந்து போனாள்
இங்கே அவள் இரகசியமாக்கப்பட்டிருக்கிறாள்.

சரி நேற்றைய கனவுக்கும்
தொலைந்த தூக்கத்துக்கும்
இன்றைய கவிதைக்கும் காரணமானவள்
இவள் முதலில்
தோழி என உங்களுக்கு அறிமுகம்
செய்யப்பட்டவள்…!

பதின்ம வயதுகளை கடந்த
பருவங்களில் என்னோடு
பயின்றாள் என்பது மட்டும் அடையாளம்!

நெல்லிக்காய்க்கு கொள்ளைபிரியம்
கொள்பவள்..!
பொதுவாக பெண்பிள்ளைகள்
எல்லோருக்கும் பிடித்துபோனது தான் என்றாலும்
நான் இவளை பற்றி மட்டும் தானே பேச நினைக்கிறேன்!

அப்படியானவளுக்கும் எனக்கும்
நட்புவளையம் வளவிகள் பூட்டி
பரிமாறும்..!
(பெண்பிள்ளைகளின் வளையல்களில் அப்போது கொஞ்சம் ஆர்வம் அம்மா அக்காவுக்கு வாங்கும் வளையள்கள் என் கை சேராது பெரியதாய் இருக்கும் இன்று நிலைமை வேறு பழச ரொம்ப கிண்டப்படாது..!)

புத்தகங்கள் இடம் மாறும்!
விளையாடும் போது என்னை காப்பாற்றுவாள்!
தண்ணீர் குடிக்கும் இடங்களில்
நான் முண்டியடித்து அவளுக்கு இடம் பிடிப்பேன்!

அக்கா உடல்நலமின்றி இருந்த நாட்களில்
தனியாக நான் மட்டும் பள்ளிக்கு
செல்லும் போதெல்லாம் அவள்தான் எனக்கு
தனிமை மறக்கசெய்தவள்…
இப்படி இருந்தவளை ஏன் ?பெயர்கூட மறந்ததாக
இருக்கிறேன் என்கிறீர்களா..!

அந்த பிரிவிற்கும் காரணம் உண்டு!

அன்றோர் மாலை எப்போதும் போல
பள்ளிமுடித்து சாலைகடந்து
வீட்டிற்கு செல்லும் வழியில்
யாரென அறியாத வாகன ஓட்டியின்
கவனமின்மைக்கு இரையாகி
ஒருமாதகாலம் வகுப்புக்கு ஓய்வாய்
நாற்காலியில் சாய்வாய்..! நானிருக்க..

வலிகள் எல்லாம் வெரைந்து கரைந்து
முடிந்ததென வந்த நாளில்
மொத்த பள்ளியும் கண்ணீர்மல்க வரவேற்றது!
நானும் மல்கிப்பெருகி
அக்கூட்டத்தில் தேடினேன்!
என் தோழியானவளை!

அவள் அங்கு இல்லை!
என் தேடலை அறிந்த நண்பன்
எனக்குமட்டும் கேட்கும் சப்தத்தில்
காதில் சொல்லிபோனான்!
அவள் தந்தை சாலை விபத்தில் இறந்தாரென!

அதனால் பள்ளியைவிட்டே!
போய்விட்டாள் தாத்தாவின்
ஊருக்கு நாளை போகப்போகிறாள்
வேண்டுமானால் நாளை என்னோடு வா!
நான் அவளிடத்தில் அழைத்து செல்கிறேனென..!

மறுநாளும் விடிந்தது!
நான் வழக்கம் போல பள்ளிக்கு சென்றேன்!
நண்பனின் புரியாத பார்வைக்கு பதில் காட்டாமல்
இருந்தவனை
வம்படியாக ஒரு மதியப்பொழுதில் கேட்டான்!

ஏண்டா அவளை பார்க்க போகலை
நீ வருவேன்னு அவ எவ்ளோ நேரமா! காத்திருந்தா தெரியுமா?
என்றான்!...

நான் பதில் சொலவே இல்லை!
அவள்
எனக்கு தனிமையில் தைரியம்
சொல்லி தந்தவள், என்பதை
அவளை நீங்கிய தனிமையில்!
உணர்ந்துகொண்டேன்.

நேற்றைய கனவுக்கு காரணம்!
நான் தனிமையில் இருப்பதாய்
சொல்லி பார்த்து பத்திரம் என்று அம்மா!
பக்கத்து ஊருக்கு சென்றதாலா?

தோழியானவள் !
தைரியம் விதைத்திருக்கிறாள் என்னுள்!
நான் தைரியம் என்றால் என்னவென
அறியும் வயதை எய்தும் முன்னமே!


-கார்த்திக் ராஜா (தொலைந்த என் தோழிக்கு சமர்ப்பணம் :)

நினைவின் எச்சமாய்...


அந்த ரயில் நிலையத்தில்
இன்று நான் காத்திருக்கிறேன்...
வழக்கம் போல கிறுக்கும் போனாவை கைக்கு
கொடுத்தபடி..

முளைத்திருந்த சில காளான்கள்
நேற்றைய மழையை
மறக்கடிக்கவே இல்லை..

அந்த ரயில் நிலையத்தில்..
தேம்பி இருந்த மழைநீரில்

வானம் விழுந்துகிடப்பதை
அறியாமல்தாண்டிப்போன

ஒரு தலைப்பாகை கட்டிய
பெரியவரும் என் பார்வையில்
கவிதையாகிருக்க..

வராத ஒரு ரயிலுக்காய் நான்
காத்திருக்கிறேன்’ என நீங்கள்
அறிந்திட வாய்ப்பில்லை...

ஆம்! பாழடைந்த வீட்டுக்குள் பட்டாம்பூச்சி
சிறகசைத்தால் வரும் சந்தோசம் போல்
எனக்கு இங்கே... ஒரு ஈர்ப்பு..

மழை பெய்த மறுநாளில்
இங்குவந்து சுவர்களில்
படிந்த பாசி மணமும் ஈரம் செறிந்த
தண்டவாளங்களுக்கும்...

என் வரவு ஒன்றும் புதிதானதும் அல்ல
ஏறக்குறைய ஐந்துவருடவழக்கம்
முன்பு இந்த மார்க்கத்தில் ரயில்கள் வந்து
கொண்டுதான் இருந்தது...

மீட்டர்கேஜ்கள் மாற்றமடைந்து
பிராட்கேஜ்களாக மாறிய நாட்களில்
அடையாளம் மறுக்கப்பட்ட
அகதியின் குடிசையாய்..ஆனது...

நினைவுகலைத்தாங்கி
எச்சமாய் நின்ற இந்தமஞ்சள்
கட்டிடத்தோடான பிணைப்பிற்கும்
ஒரு மழைக்கு மறுநாள்தான்

காரணமாய் இருந்ததென்பது..
மறுக்கமுடியாது..அதை படிக்க
என் ஐந்து வருடம் முந்தைய
பழைய டைரியை புரட்டவேண்டும்...

ஜன்னல் கம்பிகளில்....! தரையில்
சொட்ட வரிசைகட்டி நிற்கும்
நீர்த்துளிபோல ஒரு அழகான ஒருதலைக்காதலுக்கு
இறையாகிப்போன நண்பனின்
உயிர்....!

இந்த தண்டவாளத்திற்கும்
இரயில் நிலையத்திற்கும் வெறுக்கத்தக்க
அடையாளத்தைகொடுக்க
அஞ்சாங்கிளாஸ் சிறுவனுக்கு இது

பேய் இருக்கும் வீடானது...
எனக்குமட்டும் நினைவிருக்கிறது..
அந்த மழைக்காளான்கள் போல
நண்பனின் நினைவுகள்...

அவ்வப்போது வந்து இப்படித்தான்
எதையாவது கிறுக்கிப்போகிறேன்
எனக்கும் கூட ஆவி பிடிப்பவன்- என
பெயர்வைத்திருக்கிறார்களாம்...

அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை
அடுத்து என்று மழைவருமெனத்தெரியும் வரை
இந்த டைரிக்கும் எனக்கும் இங்கு வேலை இல்லை...
நினைவில் நட்பு...


-கார்த்திக் ராஜா...

யாதுமாகிய என்னவளே...!


அன்றோர் நாள்
கண்ணாடி பூக்களை கைகளில்
ஏந்தி வாசமென்னவென கேட்கிறாய்!
உன்னால் நான் சிரித்திருக்கும் போது
எனக்கே தெரியாமல் விழியோரம் கோர்த்திருக்கும்
கண்ணீரை துடைதெடுத்தெடுக்கிறாய்!
என் தனிமையின்..கணங்களில் வந்து
மௌனத்தில் மழைபோல் சடசடவென
உரையாடுகிறாய்!
நான் ஆர்பரித்து மகிழும் போது
தேனெடுக்கும் தும்பிபோல்
மெதுவாய் வந்து உன்னோடு காதலில் நான்
என்று காதில் ஸ்வரமாய் இசைக்கிறாய்!
உன் நேசத்தின் ஆழம் புரியாமலே..!
மேலோட்டமாய் நீந்தி திளைத்திருக்கிறேன்!
உன் மௌனத்தின் காரணம் விளங்காமலே!
பலநாள் நீங்கிதவித்திருக்கிறேன்...!

நான் உன்னில் சொல்லும் பொய்களின்
இடைவெளியில் உன் புன்னகையை
பதியம் செய்து உண்மையென
மாற்றிடுகிறாய்....!
உன்னில் ஏற்படுத்திய என் கோபங்களில்
நீ எத்தனை உடைந்து போயிருக்கிறாய்
என்பதை உம்மென்ற உச்சரிப்பில் உணர்த்திடுகிறாய்
அந்த மௌனம் கலைக்க நான் போடும்
குறும்புத்தனங்களில் மெல்ல
சிரித்து என் தலைமுடி கலைத்து
கண்களிலே பேசுகிறாய்..!
மறந்து போன நம் முதல்நாள் சந்திப்பை
வருடம் கழித்து அத்தனை ஆவலாய்
நீ கேட்டதும் புரியாமல் விழித்த கதை
சொல்லி அவ்வப்போது விகடம் செய்கிறாய்!,
ஜேப்டியில் மறைத்து வைத்த
உன் பழைய புகைப்படத்தின்
பின்னால் எழுதியிருந்த
இருவரிகவிதையை கண்டு
இத்தனை கேலி செய்கிறாய் !
உன்னை அணு அணுவாய் காதல் செய்கிறேன்
அதை தினம் தினமும் கவிதை செய்கிறேன் !
இத்தனைக்கும் என் ஒற்றை கவிதைக்கு
கூட உன்னிலிருந்து பாராட்டுதல்கள்
கேட்டதில்லை ; நீயும் சொன்னதில்லை!
உன்னிலிருந்து கிடைப்பது
கடையிதழை சுழித்து ரிக்க்க்க்க்க்...
என்ற
ஒலியுடன் ‘’மொக்கை கவிதை’’-டா!
என்ற வார்த்தையும் பின்னே ஒரு புன்னகையும்தான்!
அட்ந்த புன்னகைக்காகவேணும்
இன்னுமோர் கவிதை! செய்திருப்பேன்!
தனித்திருக்கும் இன்றைய பொழுதுகளில்
புரட்டிபார்த்திருக்கவாவது!

Saturday, August 25, 2012

அத்த பெத்த பச்சக்கிளி...!!!





அத்தமவ..!!
முற்றத்திலே உக்கார்ந்து 
போட்ட கோலத்துக்கு 
ஊரு கண்ணே படுமுன்னு 
திருஷ்ட்டி வைச்சவன் நானுந்தாண்டி!

கத்தாளங்காட்டுக்குள்ள 
தொட்டு புடிச்சி ஆட்டத்திலே..
தொங்கட்டான தொலைச்சுப்புட்டு 
தேம்பி தேம்பி அழுத புள்ள...!!

கலங்காதே கண்ணேன்னு
எங்கக்கா தோடெடுத்து 
அறியாத வயசிலே யாரும் தெரியாம 
உனக்கு கொடுத்தவனும் நானுந்தாண்டி!

கிணத்தோரம் தேரை [தவளை] பார்த்து
கத்தி கத்தி அழுதவளே 
உன்னச் சுத்தி சுத்தி அதவிரட்டி
சூட்ச்சமமா சிரிச்சவனும் நாந்தாண்டி!!

பள்ளிக்கூட பாதையெல்லாம் 
உன் பையத்தூக்கி திரிஞ்ச
பாவிப்பயலும் நாந்தாண்டி!!
பச்சக்குத்த தேவையில்ல - அத்தமவ 
நீதான் எம்புட்டு உசுரும் கேளு புள்ள!

நேத்துவர நேராத்தான் பார்த்துபுட்டா 
எங்கைய கிள்ளி வைப்ப..! 
மாமன் எம்மாமன்னு ஊரெல்லாம் 
சொல்லி வைப்ப! 

இன்னைக்கென்ன சமைஞ்சவன்னு 
முதுகுகாட்டி திரும்பி நிக்க
என்னென்னைக்கும் உம்மாமன் 
நாந்தாண்டி 

வெக்கமென்ன ஏவ்வுசுரே!
வெளியே வாடி பச்சக்கிளி.. 
பக்கம் வந்து நீயும் நில்லு
என் அத்தபெத்த தங்கக்கிளி...

 -கவிதைக்காரன்  

[நன்றி கவிபரணி, கோவை]

Friday, August 24, 2012

கடல் கொண்ட தமிழன்..!!



இந்தியாவின் முதல் கப்பல் படையை நிறுவி, தன் மகன் தெற்காசியா வரை சோழ கொடியை நாட்ட வழிவகுத்த ராஜ ராஜா சோழனின் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம்! இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டு, "திருநெல்வேலி அருங்காட்சியகத்தில்" பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது !!

உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் உங்களுக்காக. இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படையை நிறைய குழுக்களை கொண்டிருந்தது. அனைத்து குழுவிற்கும் தலைவர் "அரசர்".


இதில் "கனம்" (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு) என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது, இதை நிர்வகிப்பவர் "கனாதிபதி". "கன்னி" (போர் நேர / சிறப்பு பணிக்காக குழுமுதல்), இதை நிர்வகிப்பவர் உயரிய "கலபதி", "கன்னி" என்பது தமிழில் "பொறி" என்று கூட பொருள் படும்.

 இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து (எலி பொறியில் சிக்குவதைப்போல) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!.

 அடுத்து "ஜதளம்" சுருக்கமாக "தளம்" (நிரந்தரப்போர் பிரிவு) இதை நிர்வகிப்பவர் "ஜலதலதிபதி", இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது. "மண்டலம்" (பாதி நிரந்தர போர்ப்பிரிவு) இதை நிர்வகிப்பவர் "மண்டலாதிபதி" இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும், இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள்.

 "கனம்" (நிரந்தர பிரிவு ) 100 முதல் 150 கப்பல்கள் கொண்ட பிரிவு, மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம்! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது! "அணி" இதை நிர்வகிப்பவர் "அணிபதி" மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது.


 "பிரிவு" மிக முக்கியமான பிரிவு இது, இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால் "கீழ்பிரிவு-அதிபதி / தேவர்" என்று அழைத்தனர். இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது, உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்று.

இந்த கப்பல் பட்டையை வைத்து தான் "இலங்கை", "இந்தோனேசியா", "ஜாவா", "மாலைதீவு", "மலேசியா", "சிங்கப்பூர்" போன்ற அனைத்து நாடுகளையும் நம் மன்னன் கைப்பற்றினான்! இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன்! இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளனவா என்பது சந்தேகம்!!

இன்னொரு ஆச்சர்யமான செய்தி, இன்று புழக்கத்தில் இருக்கும் "NAVY" என்ற ஆங்கில வார்த்தை "நாவாய்" என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும்!! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை "தமிழர்களுக்கு" தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும்? சிந்தியுங்கள்

-முகநூலில் நண்பர் சாம் மகேந்திரன். 

Monday, August 20, 2012

ஒரு புன்னகை... சில கோபங்கள்...





அக்கா மகனின்
காதுகுத்து விழாவாம்..


பழைய
கோபங்களால்
மனவருத்தங்களாலும்

இரண்டு வருடங்கள்
பேசாமலே இருந்தவள்
இப்போது  அழைக்கிறாள்.

வரமாட்டேன்.
என உரக்கச்சொல்லிவிட்டு

அழைப்பை துண்டித்துவிட்டு
கிக்கரை உதைத்து
கிளம்பினேன்..!
வேலைக்கு..



சாலையோர பேரூந்தின்
ஜன்னலோர
சிறுவனின்
சின்னப்புன்னகைகளில்
சிதறிவிடுகிறது...
என் அத்தனை கோபங்களும்..

-கவிதைக்காரன் ! 

தினசரி செய்திகள்


மீனவன் 
கொல்லப்படுவதும் 

கலைஞர்
கடிதம் எழுதுவதும் 

ஜெ.
அறிக்கை விடுவதும்

ராமதாஸ் 
வேண்டுகோள் வைப்பதும்

சீமான்
ஆவேசப்படுவதாய் கை உயர்த்துவதும்

ஃபேஸ்புக் போராளிகள் 
அரசை காரி உமிழ்வதும்...

இரவும் பகலும் போல
தினசரி நிகழ்வாய்ப்போனது 

-கவிதைக்காரன். 

Friday, August 17, 2012

தோழிக்காக....




பேசிக்கொண்டே
இருந்தோம்..
சரி சாப்பிட்டுவிட்டு வா!
நேரமாயிற்று..
நானும் சாப்பிடப்போகிறேன்.

இன்று விரதம் வேறு
என்றாள் தோழி..

அப்படியா?
இன்றென்ன விரதம்
வினவினேன் நான்...!

தெரியாதா?
இன்று அமாவாசை
என்றாள்..!!

அப்படியென்றால் நிலா
வராதா ?

வெகுளியாய்
நான் கேட்க..!!

முறைத்துக்கொண்டே
அதான் நான் வந்துவிட்டேன்ல
போய் ஒழுங்கா சாப்பிட்றா!
என தலையில்
குட்டினால்...!

எங்கோ பௌர்ணமி
பிறை விட்டிருக்கும்..!

-கவிதைக்காரன்!

ஒரு யானையின் பிளிறல்

 

காலாட்படை கூடி என்னை ஈட்டிகொண்டு 

வாட்டி நின்ற போதும் 
புறமுதுகிட்டதில்லை..!!!

எதிரவனின் வாள்முனை 
எம் மேனிதுணைத்தெடுத்த போதும் 
களைத்தே போனதில்லை...!!!

என் காயங்களின் குருதி
காலடியில் சிந்திச்
சகதியானபோதும் 
களத்தை சிதறடித்து
சாய்க்காதவரில்லை...!!!

பின்வழிக்கு 
துணிந்ததே இல்லை...
முன்சென்ற பாதை மாத்திரம்
எனக்கானது...!!!

பிளிறல்கள் மாத்திரம் எனக்குண்டு 
பிதற்றல்கள் ஏதுமில்லை 
குண்டுகள் துளைத்தெடுத்த போதும்
குப்புறச்சாய்ந்ததில்லை...!!!

கொன்றாயடா..?
எம் வீரத்தை கொடும்
பாதகக் கொடியோனே..!!!

வென்றிடும் மன்னவனின் 
கொடைக்குள் ஆளும்
பட்டத்துக் களிறென்னை
நட்டநடுக்காட்டில்...!!!

நாதரவாய் 
வெட்டிச்சாய்த்ததென்ன??

எயிற்றின் மதிப்புக்காய்
எம் குரல்வளை குதறியதென்ன?
வெண்கோட்டுக் களிறென்
சிரசை சிதைத்துப் போனதென்ன? 

அழுகுமென் பிணத்தை
அப்புறப்படுத்திடும் 
போது 

துர்வாடை எங்கென
நீ  “உணர்ந்தே கொள்வாயோ..??”
இல்லை இன்னுமின்னுமென்
இனம் “கவர்ந்தே கொல்வாயோ??”

உனக்கொன்று தெரியுமா?!?
யானையை எந்த விலங்கும் 
வேட்டையாடுவதில்லை 
மனிதனைத்தவிர...! 

-கவிதைக்காரன்.

Thursday, August 16, 2012

இப்போதே சொல்லிவிட்டுப் போ...!!!



இப்போதே அழகாய் 

ஒரு கவிதை சொல்லிவிட்டுப்போ!

என வேகமாக வேலைக்குச்செல்ல

இருப்பவனை 

சட்டை பிடித்து 

இழுத்து நிறுத்துகிறாய்..! 



அலமாரியில் 

நிறைய தபு சங்கரின் 

புத்தகங்கள் கிடக்கின்றன..! 

வாசித்துக்கொள் நேரமாயிற்று என்றேன்..! 


ஆனாலும் உன் கைப்பிடி 

என்னை விடவே இல்லாமல் இறுக்கமாய் 

பற்றிக்கொள்ள..! 


வேறு வழியே இல்லாதவனாய் 

இரண்டு வினாடிகள் 

உன்கண்களையே உற்றுப்பார்த்து 

நெருங்கி... அருகில் வந்து 

செல்லமாய் கன்னங்களை கிள்ளிவிட்டு 



“லேட் ஆகிடுச்சுடா செல்லம்” 

என்றவாறே புறப்பட்டுவிட்டேன்..! 

நீயும் அந்நிமிடம் என்னை  விட்டுவிட்டாய்..


அப்படி எந்த கவிதையை என் கண்களிலிருந்து 

வாசித்து விட்டாய் நீ..

தெரியவே இல்லை..

எனக்கு.... 

-கவிதைக்காரன்

Tuesday, August 14, 2012

நாளை எனக்கில்லை...!!!




மழையில்
குடையிருந்தும்
நனைந்து சிரிக்கும்
குழந்தையாய்..நான்!!

அறிந்தோ அறியாமலோ
எனக்கு மிச்சமிருப்பது
ஒரிருநாள் வாழ்க்கை
மட்டும்..

இன்றோ நாளையோ
எனது
கடைசி நொடி
குறிக்கப்பட்டு விடும்..!!

ஈரம் சொட்டும்
மெல்லடுக்கு
தேகத்தில்
விழுந்து சிதறும்
மழைத்துளிகளின்
உடைதலில்...!!

மகிழ்ச்சியை
தேடும் எனக்கு...
அண்டிய சுவற்றின்
அரையங்குலத்தில்
குறைவாய்
ஒட்டிக்கொள்ளும்
வசதி மட்டும்...

கடைசித்துளி
மேகத்தை ரசித்தவரையில்
எனக்கு நாளை
என்பதில் நம்பிக்கை குறைவு..

மிச்சமாகிப் போவது
நேற்றைக்கு
முளைத்த காளான் என்ற
பெயர் மட்டுமாய்...!

ஆனால் வாழ்ந்தவரைக்கும்
தலை நிமிர்ந்து வாழ்ந்தேன்
என்று நெஞ்சம் நிமிர்த்திய
குரலை
பதித்துவிடுகிறேன்
இன்றே...!





Saturday, August 11, 2012

கவிதைக்காரனாகிய நான்...!!!



கவிதைக்காரனாகிய நான்...!!!
உற்சாகமோ,சோகமோ?
மனசுக்குள்ளே பாடும்... 
மனங்கொத்தி...!!!

தோல்விகளின் காயங்களை 
ஏகமாய் சொறுகிய 
சரங்குத்தி..!!!

மிக நீண்ட  இரவின் 
முடிவுகளில் என்னையறியாமல் சாயும் வரை...
புத்தகங்களை வாசிக்கத்துடிக்கும் 
விழிகளைக் வாடகைக்கெடுத்தவன்...!!!

பள்ளிகல்வி வாசல் வரை
தாண்டியதும்..!
பட்டறையில் வாகனங்களுக்கு 
வர்ணம் பூச வார்ப்பு பிடித்த கரங்கள்...!!! 

நதி தான் ஓரிடத்தில்


நிற்காதே..?
ஓடியகால்களுக்கு
கொங்கு நகரம் 
பாதை ஒன்றை காட்டியது...!! 

அங்கே தான்
மதனும்,


மணிமகுடணும் [சுஜாதா] 
உலகத்தின் பார்வையை 
உள்வாங்கப் புகட்டினார்கள்.. 


டால்ஸ்டாயும், 
டார்வினும் அறிமுகமாகினர்...!!
ஸ்டாலினும்.. 
சே-வும் சிந்திக்க வைத்தார்கள்..!!


பாரதியிடம் வலதுகையையும்...

பாலகுமாரமிடம் இடது கையையும் 
பிடித்து தமிழ் நடை பழகிக்கொண்டேன்..!!!


இலக்கியம் தெரியாது..!!!
இலக்கணமும் புரியாது...!!! 
வெண்பாவையும் எழுதுகிறேன்..!!!
வெள்ளைச்சாமி 
பெரியப்பாவையும் எழுதுகிறேன்..!!! 
எனக்குத்தெரிந்த கோணத்தில்...!!! 


அப்போது தான்
ஆர்குட் என்ற ஆட்டுக்குட்டி 
அறிமுகமானது..!!!

அதன்
பரிணாம வளர்ச்சியில் பிறந்த 
முகநூலின் கதவுத்துவாரங்களை 
எட்டிப்பார்த்த எனக்கு 
துறவுகோலையும் தந்தது..!! 

ஷேர்லக் ஹோம்ஸ் முதல் 
ஷேர்மார்கெட் பஞ்சாயத்து வரை 
இங்கே பரவலானது..
பரவச ஆரம்பம்...! 

பால், வயது,
பாராதுபழகும் 
தோழமைகளோடு 
 “கவிதைப்பக்கம்” என 
அடையாளப்பட்டேன்...!!!

வெளிச்சத்தில்...படித்ததை 
தெருவிளக்கினிலே” 
தேடிப்பதிந்தேன்..! 
ஐயங்கள் ஆயிரம் 
அனுதினமும் தெளிந்தேன்..! 

தோழமைகள் ஆயிரம் 
தோள்கொடுக்க நெருக்கமாய்..!!
நட்புவட்டம் 
நாற்திசையிலும் 
கரம்குலுக்கி தோள்தட்டி நின்றது..! 



ஏட்டில் எழுதித்திரிந்ததை
இணையத்தில் ஏற்றினேன்.
தட்டிக்கொடுத்த கரங்களால் 
சுட்டிகாட்டப்பட்ட தவறுகளை 
திருத்தும் பக்குவங்கொண்டேன்! 

வீடுவரை வந்த சொந்தமெல்லாம் 
என்னை செம்புலப்பெயெலென்றும்...
 சேர்-தான் நானென்றும்
விலகியே சென்றிட..

நான்கரணாய் சூழ்ந்த
நல்லுடன் பிறப்புக்களினுடன் 
வாழும் வேடந்தாங்கல் 
பறவையாய் ஆனேன்  நான்...!!!



அன்று
வேற்றுமைகள் எட்டிப்பார்க்க

ஆனது போகட்டும் 
அதிகமாய்ப்போனால் 
நானிருக்கிறேன் என

என்னை மட்டும் நம்பி மீண்டும் 
தனித்திட்ட
ஒற்றைக்கால் காளான் நான்...! 

என்றாயினும்
மண்கிளறி என் வேர்களை 

அழுத்தமாய்ப் பதித்திடத் துடிக்கும் என் பெயரோ!



-கவிதைக்காரன்!