Monday, October 31, 2011

என்னதான் வேண்டும் உனக்கு.....


கற்பனைப்பஞ்சம் என்னை வாட்டுதடி.. 
தமிழ் எழுத்துக்கள் எல்லாம் எட்டாத தூரமாய்...!
  
கண்காணும் இடமெங்கும் காதலால் 
உன் நினைவே பூக்குதடி...!


வேண்டாமடாவென விலகியே சென்றாலும் 
வீம்பென சட்டைபிடித்திலுக்கும் -உனக்கு 
இரக்கமே இருக்காதா..!


போனால் போகட்டுமென நானும் பொருத்து 
பொருத்துப்பார்த்தால்  
சொல்பேச்சுக் கேளாமல் சடாரென 


அடைமழையாய் அவதாரமெடுக்கும் 
இந்த  ஆவேசமும் உனக்கேன்.. 
நனைத்துப்போட்டு நீ-போய்விட்டாய் 


பட்டுப்போயிருந்த நினைவுகள் எல்லாம் 
எட்டித்துளிர் விட்டதை எப்படி நீயும் அறிவாயோ...


இனி நீர்த் தேடியே என் வேர்கள் ஆழ நினைவுக்குள் 
நுழையும் வலிகள் கத்தி கொண்டு கண்ணில் 


சொருகும் வலியென நீ உணரப்போவதுமில்லை 
ஏன் உனக்கிந்த வீண்வேலை...!


நானுண்டு வேலையுண்டென 
நடைகொண்டு போகிறவனை  


இப்படி நடுஇரவில் புலம்பவைத்த 
புண்ணியவதியே..! 


உனைக்காணும் 
அழுததாய் நினைவில்லை 
அரற்றல்களோடு அடங்கிடும் என் 
கவலைகள்..!   என்னை கோழையாக்கிய 


கொடுங்கோலனாய் நீ! ;  கூடவே சுமக்கவும் வைத்தாய் 
ஒரு நள்ளிரவுக் காதலை..! 


இன்று வான் பார்த்தே வீணாகிப்போகிறது-என் 
உறக்கம்... கேட்டால் சிரிப்பான் எவனும்

”நிலவும் நானுமென”  நாற்பதுக்கும் மேல் 
எழுதித் தள்ளீவிட்டேன் கவிதைகளை...


இனி எனக்கு கொடுக்க நிலவினிடமும் 
மிச்சமாய் இல்லை கவிதைகள்...!


எனக்குப் பயந்து 
இப்போதெல்லாம் அது என் வீட்டு
மொட்டைமாடிப் பக்கம் வருவதே இல்லை ...


சரி காதலை ஒளித்தெடுத்து சமுதாயக் கருத்தில்  
காலெடுத்து வைத்தேன் அங்கும் விடாமல்


துரத்தும் வேதாளமாய் ஏதாவது மூலையில் 
இரண்டு ஜோடிகள் காதல் காதலென கரைந்து ஒழுக 


அடுத்த நிமிடமே மீண்டும் அடைமழை..


இப்படியே போனால் என்னதான் முடிவென 
இன்று கேட்டேவிடலாமென எழுதிவிட்டேன் 


இந்த வரிகளை ...
ஆனாலும் மெல்ல அரும்பிய
துளிர்ப்புகளை ரசிக்க கண்கள் தவறுவதே இல்லை போ!


இன்று இரவும் பாழானதா...!  பாழாய்ப்போன 
உன் நினைவுகளில்...! ஒன்றுமட்டும் புரியவே இல்லை 


நான் உன்னை திட்டுகிறேனா!இல்லை என்னைத்திட்டுகிறேனா?

-கார்த்திக் ராஜா


Saturday, October 29, 2011

அட்டவணை நகரம் நரகமாகி....



காலையில் வாக்கிங் ...
சுவையான காபி
சுடுநீர் குளியல்
சூடான இட்லி..
பத்து மணி அலுவல்..
பதினொன்னரை-க்கு தேநீர்..
இரண்டு மணி மதிய உணவு ...
அரைமணி அரட்டை ..
நாலுமணி-க்கு மறுபடியும் தேநீர்
ஐந்துமணி ...பேரூந்து..
ஆறுமணிக்கு...நண்பர்களோடு அரசியல்
எட்டு மணிக்கு...இரவு உணவு..
சீரியல் முடித்து கிடைக்கும் ரிமோட்டில்
சிறு தேடல் பட்டன்கள்...
நாலரைபால் குடித்ததோர் இரவு தூக்கம் ...
மீண்டும் காலை வாகிங்-கை
நினைத்தபடி ...விரைவே எழுப்பசொல்லி.
இருண்டு விடிகிறது எமது நகரத்தின் (நரகத்தின்)
எந்திர வாழ்க்கை...
அட்டவணை போடாமலே..

தலைமுறை எச்சங்கள்...






பாண்டியும் பல்லாங்குழியும்
ஆடிக்கொண்டிருந்த சிறுமி..
மானாட மயிலாட...விளையாடுகிறேன் என்றாள்..

பம்பரமும் உண்டிவில்லும்
விளையாடித்திரிந்த சிறுவன்
பால் ஆக்டோபஸ் இருந்தா இந்தியா-வுக்கு தான்
வோர்ல்டு கப்-னு சொல்லி இருக்கும் என்கிறான்..

கொட்டைபாக்கை மென்று துப்பும் கிழவி..
கோல்கேட் சால்ட் பேஸ்டு தான் வேணுமென்கிறாள்..
தாத்தா மட்டும் ஏனோ இன்னும்
சுருட்டைமாற்றவே இல்லாமல்...

கட்டைவண்டிஎல்லாம் கூட..காணாமல் போகிறது..
ட்ராக்டர் தடம் மட்டும்..சாலையிலே..
ஆளாளுக்கு டிவிஎஸ்..வைத்திருந்தனர் முன்பு..
இப்போது அபெச்-ம் பல்சரும்.. பெருகிப்போனது..

ஊருக்கு ஒதுக்குபுறமாய் ஊர்கூடிபார்க்கும்...
ஊராட்சி டிவி பெட்டிக்கு பதில்
வீட்டுக்கு வீடு டண்டனாடன்-னென சத்தம்

ஆலமரம் சரிந்துபோன இடம்...இன்னும்
ஆட்டுதொட்டிலாய்தான் இருக்கிறது ஆனால்
ஆடுகளைத்தான் காணவே இல்லை...

புறாகூண்டும் மைனா குஞ்சும் வைத்திருக்கும்
நண்பனின் வீட்டு பறவைகூண்டு..
ஒதுக்குபுறமாய் ஏதோ ஒருமூலையில்..

வெள்ளை வேஷ்டிகள் மட்டும் கொஞ்சமும்
குறையவில்லை ஆனால் அதன்
கரைகளில் ஏகப்பட்ட மாற்றம்..கட்சிகள் பெருகியனவாம் ...

ஏதோஒரு பெயர்கொண்ட..சாம்பல் நிற கொக்கு..
தண்ணீரே இல்லாத குளத்தில்..தேடிக்கொண்டிருக்கிறது
தொலைந்து போன தன் தலைமுறை தடயங்களை ..

இழந்துபோயிருந்த கிராமத்தின் மிச்சமான
அடையாளமாய் ..மீசை மலித்திருந்த அய்யனார் சிலை..
மாறாத ஜாதிச்சண்டையில் ரொம்பநாளாய்
திருவிழாவே கொண்டாடப்படாமல்...

இதுமட்டும் மாறவே மாறாதோ..??
---கார்த்திக் ராஜா
 — 

கல்லறைச்சிறை...!


இரவு பொழுதின்
தூரல் நிலவோடு என்
சாரல் நினைவுகளை
பகிர்ந்து கொள்கிறேன்

தூரல் நின்ற பின்பும்..
தூரம் நின்றபடி
ஈர நினைவுகளை
என் தூர நிழலோடு...

கனவு மாளிகையின்
வாயிற்கோபுரம் போல்
திறந்தேகிடக்கிறது உன் நினைவுகள்.
நிலவு அசைகையில் மட்டும்
அந்த தனிமை விழுதுகள்
வேர்களாய் மாறி
என் நினைவை துளைத்தன

நிலாக்கோலம் பூண்டவள் என்று
சொல்லிசொல்லியே...(எழுதி எழுதியே..)
தனிமையில் என்னை சுழலவிட்டு சென்றால்
அவள் நினைவுகளில்..

எப்போதும் உன்மீது வீசும் மகிழம்பூ..
வாசம்...எங்கே என..தேடிதுவளும் -என்
நாசிகள் அறியாது போனது..
இதயத்தில் நீ கிழித்து போட்டு போன
காயத்தின் வடுக்களை ....

இதோ..! தூரத்தில் தெரியும்
நிலவின் ஒளியை ரசித்து நிற்கும்
அந்த நிழல் உருவத்தின் முகம்தெரியா
இருட்டுபிரதேசத்தில்
துளிர்த்திருக்கும் கண்ணீரே ..!
என் மறித்து போன காதலுக்கான உயிருள்ள சாட்சி..

மீன் குழம்பு...!


நடந்து வரும் போது எதிரே..
விலகிசென்றவரை
இதற்குமுன் எங்கோ
கண்ட ஞாபகம் ...நினைவில்
ஒட்டிக்கொண்டு வர..

கண்டு பிடிக்கமுடியாத
வளைவுகளில் கடந்தே செல்கிறது..

யாரென்று ஒருகணம்
யோசித்திருந்தாலும்
நினைவில் வந்து விடும்
முகங்களில் அவள் இல்லை..

என்றோ எங்கோ யாரோடோ !
பழகிய மிச்சமாகி போன உறவுகள்
போன்றதொரு உணர்வு..

கடந்து போய் நாலைந்து நாட்கள்
கழித்து மீண்டும் ஒரு சந்திப்பு
சந்திப்பிழைபோல முந்திவிநாயகர்
சன்னதியில் அமைந்தது...

அட.. சிறுவயதில் என்னோடு
சிறுமேனிக்கரையோரம்
கிழுக்கு செய்துவிளையாடும்
மீன்காரக்கிளவியின் பேத்தி..!

சின்ன வயதில் அவள் வீட்டிலிருந்து
கொண்டுவரும் சிறுவள்ளிகிழங்கும்
வெங்காயமீனுக்கும் இறைஞ்சே !
சுற்றிவருவேன் அவளை...

அன்று ஒருநாளும் கொண்டுவர
சொல்லி காத்திருந்தேன்..
காத்திருந்த நேரத்தில் காதை திருகி
அடித்து இழுத்து போனால் அம்மா..

கீழத்தெருக்காரிகூட
உனக்கென்னடா விளையாட்டு என்று ..!

காதை திருகிய வழியை விட...
களத்த்துகாட்டில் கண்ணீருடன்
அவள் நின்றது மறையாத வலியாக..

இன்றும் வெங்காயமீனை...வீட்டில்
வைக்கிறபோதெல்லாம் ..வந்துவந்து போகும்
அவளின் சிறுவயது நிழல்...

நிழல் இன்றுவரை கீழதெருவிலே
சுழன்று வருகிறது மனசுக்குள்ள
மீன்குளம்போடே...!!!

கார்த்திக் ராஜா ...
 —

கிணறு....!




(இந்த கிராமம் என்னை ஏன்தான் விட மறுக்கிறதோ )
இந்தமுறை எதை கொண்டு கவிதை எழுதலாம் என்று
சுற்றிதிரிகையில் பின்னே வந்தவர்
(எத்தனை முறைதான் எதிரே வந்தவரையே வம்புக்கு இழுப்பது ?)
ஈரத்தலையுடன் வண்டிமாட்டை பத்திபோக ..என்கற்பனைக்கும்
அனுபவத்திற்கும் வெட்டான்குழி கிணறு இந்தமுறை தீனியானது ...
சரி கவிதைக்கு(?) போவோம்...!!














அரைகால்சட்டையோடு...

செவப்பு துண்டெடுத்து ..

கருத்தமேனிய காலை வெயிலுக்கு காட்டி

பயகாரனுங்க வீட்டுமுன்னே

கூவி கூவி கூப்பிடுவோம்..




வெள்ளாமைக்கு நேரமுன்னு

பெருசுக எல்லாம் போசபோசக்க

வெகுளிபசங்களாய் எல்லோரும்

செங்கல் சூளைக்கு செல்லும்

மாட்டுவண்டியை தொத்தியபடியே




வந்து சேரும் வெள்ளான்குழி கிணறுக்கு

வயது எத்தனை யாருக்கும் தெரியாது

ஆனால் நாங்களெல்லாம் வந்து விட்டால்

எங்களஊடே சேர்ந்து அதற்கும்

வாண்டுக நினைப்பு வந்தே தீரும்




அப்படி ஒரு ஆட்டமிருக்கும் அன்று...




வரும்போது பத்து பதினொன்றாய்தான்

வருவோம் ஆட்டம் கலைகட்டும் போது

கூட்டமும் ஏறிப்போய் இருக்கும்...

எல்லோருக்குமாய் நடக்கும்

தொட்டுபுடிச்சி விளையாட்டு

மறுநாள் விடிந்தாலும் நிறுத்திடதோணாது...




ஆனால் காலையில் கரையில் வைத்த

துண்டு மீண்டும் கையில் எடுக்க

மாலை மூணு மணி தாண்டி போயிருக்கும்..




என்றோ! ஒருமுறை கரகாட்டகாரன்

படம் போடுகிறான் என்று தெரிந்து

அந்த வாழைப்பழ காமடிக்காய்

விரைந்தே கரைஏறினோமேன்று நினைவில்..




மற்றெல்லா நாட்களிலும் அந்த வெள்ளைச்சட்டை

விருமாண்டியண்ணன் வந்து விரட்டும் வரை

கனஜோராய் களைகட்டும் எங்கள் குளியலாட்டம்...!




லேசாக ஆரம்பிக்கும் விளையாட்டு தீவிரம் அடைவது

பால்காரர் பையன் அவுட்-தாகும் போதுதான்

அவன் சின்ன பையன் என்பதால் யாரும்

லேசுல சிக்கமட்டோம்;அவனும் விரட்டி பிடிச்சு

தொட்டுடுவான் கடையநல்லூர்காரன் மூர்த்திய..




இப்படியே மாறி மாறி ஆடும் ஆட்டம்

மதியம் போது பசிய தூண்டும்..

வெள்ளரி காட்டில் பளுத்ததமட்டும் தேடி

எடுத்துவந்து கொடுக்கும் படப்புவீட்டு

பரிதி மட்டும் எல்லோருக்கும் அண்ணன் ஆவான்

(அன்றுமட்டும் )




எல்லாரும் கரை ஏறி தலைதுவட்டி

முடிச்சது பின்ன முதஆளா தப்பிசிரனும்

இல்ல எவனாவது நம்மள மட்டும் தண்ணியில

தள்ளிடுவான்... இந்த விஷயத்தில் மட்டும் நான்

எப்போதுமே அலர்ட்..அடிக்கடி சிக்குவது

டிராக்டர் வேலு தான்..




இப்படியே சந்தோசங்களை கண்டே இருந்திருந்த

வெள்ளான்குழி கிணறு இன்று எதோ ஒரு சில

பெருசுகளை தவிர யாரும் சீண்டாமல்..!




பூசாரிமகன் சின்னத்தம்பி தவறி விழுந்து இறந்தும்

பூங்கொடியக்காவ காதலிச்ச செல்லதுரையண்ணன்

தற்கொலை செஞ்சுட்டதுக்காகவும்

பலியாகிப்போனது அந்த கிணறு...




இப்போது கூட இரவு மத்தியான நேரம்

அதைதாண்டி போக பயப்படும் சின்னபசங்களுக்கு

தெரியாது அந்த கிணறின் சின்னகுழந்தை கதறல்கள்..

-கார்த்திக் ராஜா....


திக்கற்றவளாய்.....!






திக்கற்ற வெளியில்
திசையறியாது

தவிக்கின்றேன் தோழி
திரும்பி பார்த்தால்

உற்றவள் நீயும் இல்லை
உறவினரும் இல்லை

கண்ணில் உன்னை வைத்தால்
கண்ணீருடன் கரைந்திடுவாய்

என எண்ணி உன்னை
என் இதயத்தில் அன்றோ இருத்தினேன்
என் இதயத்தின் ஓசை கேட்டு

இதமாய் நீ உணர்வாய் என
இன்று இதயமும் ரணமானது
இதுவே நிஜமானது

செத்துவிட்ட என் மனதை இனி
சுடுகாட்டு தீயா சுட்டுவிடும்
 

எத்தனை எத்தனை பொய்களடா!


நானும் அவளுமான
நாட்களின் டைரிக்குறிப்பை
நான் புரட்டியபோழ்து....

மூங்கில் காடுகளை
புல்லாங்குழலாய்
பூக்கச் செய்திருந்தேன் ...

வெண்ணிலவின்
வெட்கக்கரையை
வெண்மேகம் கொண்டு
துடைத்திருந்தேன் ....

மினுங்கும் நட்சத்திரத்து
சினுங்கொலியை
தங்கள் நகையொலியால்
வென்றிருந்தேன் ...

எங்களை
காண அமாவாசையன்று
நிலவு எட்டிபார்த்தால்
அன்று பொளர்ணமியாகிவிட்டதாய்
அலட்டிக்கொண்டிருந்தேன் ....



இதற்கு மேல் படிக்க
இயலாததால்
எழுந்துவந்துவிட்டேன்
போங்கபா....இத்தனை பொய்யையும்..
நானா எழுதினேன் ...!
-கார்த்திக் ராஜா.....
 

விருப்ப வெறுப்பிற்கு அப்பால்...


இன்று அழகிய நந்தவனமாய் காட்சியளிக்கும்
இதே வையகம் தான் அவ்வப்போது நடுங்கி
பல்லாயிரக்கணக்கான உயிர்களை
பழிவாங்குகிறது...

அமைதியாய் ஆர்ப்பரிக்கும் இந்த ஆழிதான்
அன்று பொங்கி பிராவாகித்து
பலரை கொன்று குவித்து போனது...

நீல நிறத்தில் ரம்யமாய் மிளிரும் இவ்வானம்தான்
சில நேரங்களில் கனமழை பொழிந்து
எத்தனையோ பேரை காவுகொண்டது...

தென்றலாய் என் வாசலில் நிற்கும் குளிர்காற்று
தான் ஊழியாய் அன்று ஊரை சூறையாடியது...

ஆனால் இவை எதையும்


என்னால் வெறுக்க முடிவதில்லை...


என் மேல்..
வார்த்தைகளில் அமிலம் தோய்த்து
அக்னி மழை பொழிந்த....காதலையும்
கைவிடுத்து போன உன்னையும்......
---கார்த்திக் ராஜா ....
 

கண்ணீர் வரைந்த கவிதை


நித்திரை இழந்த இரவின்
நடு நிசிவேளை
என் அறைக்கதவு திறந்து
முற்றத்திற்கு வரம் என்
மேனி மீதினில்
மென்மையும் வேகமுமாய்
மோதிப் பிரியும் வாடைகாற்றாக
உன் நினைவு..



வாடைகாற்றின்
தீராதா ஏக்கத்தில்
தீந்தொளிந்தாலும்..!
அதே இடம்விட்டு நகராமல்
நெடு நேரம் நின்றுவிடுகிற
என்னை..காணதவாறே..!
கடந்து போய்விடுகிறாய் காற்றே..

இன்று..
உன் கனவில்கூட
நான்
காணாமல் ஆக்கப்பட்டிருப்பேன்.
என்றாலும்
நீ என்னை மறந்துவிட்டாய்
என்பதையே...!
நீ என்னை நினைத்திருந்தாய்
என்பதற்கான சாட்சியமாய்
வைத்துகொள்வேன்!...

இந்த சாட்சிகளில் ..முன்
நான் ஆயுள் கைதியாய்
கண்ணீரோடு...!
-கார்த்திக் ராஜா..
 

காத்திருப்புகளில்.....




வரவேண்டிய
ரயிலுக்காய் காத்திருந்த..
நிமிடங்கள்..
ஜன்னலோர பேருந்தின்
சாளரம்..
ஈரக்காற்றை வீசி
செல்லும்
வயவெளி..கிராமம்..
அந்த ரெட்டைவால்குருவி
அமர்ந்திருக்கும்..
வேகத்தடை பலகையின்
கிழே..நேற்றைய மழையின் மிச்சமாய்
ஒரு காளான்.. 
காத்திருக்கும் சில நிமிடங்களில்
எத்தனையோ இருக்கு
கவிதை எழுத...
என்னைசுற்றி...இயற்கை எனக்குள்
இன்னும் விரிகிறது
எழுத்துக்களால்.. 
-கார்த்திக் ராஜா.

காதல் சொல்ல வந்தேன் 2






போய்வரும் திசை பார்த்து
சட்டைப்பையில் மடலோடும்..
கரங்களில் மலரோடும்..
நெஞ்சுகுளியில் சிறு பயத்தோடும்..

கண்களில் சிறு பரிதவிப்போடும்
காதலில் சிறு விதர்ப்பத்தோடும்.
வேடிக்கை பார்ப்போரின்..
பார்வைக்கு சிருதீனியாகவும்..

நேற்றுவரை பெய்யாத மழைக்கு..
ஒரு ஏக்கத்தோடும்..
கண்சிமிட்டலையே மறக்க
தூக்கம் துறந்த..இரவோடும்...
தேடிபிடித்து விரும்பியத்தை உண்டிருந்து..
தற்போது..பசித்தல் மறுத்து..

கவிதை எழுத பழகிய கைகளோடும்.. 
கண்ணீரில்லா கண்களோடும்
யார் காதல் வென்றாலும்
விழா எடுத்து கொண்டாடும்
மனோபாவத்தோடும் 

ஏதாவது ஒரு காதல்..
நீ இருக்கும் அந்த வீதியில்...
நிச்சயமாய்
குடியிருக்கும் நெடுநாளாய்..
--கார்த்திக் ராஜா..
 

ஓர் இரவுக்கு முந்தைய பொழுது....


தெருமுனைவரைசென்ற தடமொன்று

திரும்பிவிடும் தூரத்தில்தான்..

இருக்கிறது..வீடு..

அங்காடித்தெருக்களின் ஆரவாரங்களில்

வண்ணகுமிழ் விளக்கின்

வெளிச்சங்களில்சற்றே மங்கும்

ஊரெல்லை தொட்டதும்..

பெருமூச்சொன்றுபெருகி ஓடும் என்னுள்

தனியே வீடு நோக்கி நகரும்..

நிலவொழுகும் ராத்திரியில்

ஓரிலையும் அசையாத மரத்தினடியில்

இளைப்பாறும் சாலை..மருங்குகளில்

நத்தைபோலும் பயணிக்கும்

நிலவான இரவும் நானுமாய்...

தொடுவானம் தாண்டியும்

நீண்டிருக்கும்...ஒற்றின் விளக்கொளி..

ஒரு மாலை நேர பயணம்..



-கார்த்திக் ராஜா..
 

இலைதிர்க்கும் காலம்...






ஒன்றையடுத்து ஒன்றாய்
உதிர்கிறது
பழுத்த இலைகள்.
வயதாகி விட்ட தென்கிறாய்

உலர்ந்த அம் மரத்தை
நோக்கியபடி.
நஞ்சாகிப்போன அடி மண்ணில்
தன் மூச்சை நெரிக்கிற

வேர்களின் கேவல்
கேட்கிறது எனக்கு.
மண்ணின் மகத்துவம் அறியாது..
மதிகேட்டுபோன..

மானிடனே..!
மாங்கனிப்பழமும்
மாசற்ற காற்றும்..
உன் மகன் பிள்ளைக்கு
போய்தான் சேர்ப்பாயோ !

மரம் ஒன்றை வீழ்த்தினால்
மனிதம் பத்து வீழ்வதை
மனத்திரையில் எங்கனமும்
நினைத்தாயா !

பச்சைபோர்வையாய்..
பசுமை வீசுகின்ற..
மலையரசி (உதகை)
சரிந்ததை மறந்தாயோ..

இனி பொம்மை மரங்களை..மட்டும்
காண்பாயோ...
அருங்காட்சியகத்தில் மட்டும்...!
கார்த்திக் ராஜா ..!
 

அதே நாள் அதே இடம்...



வேனில் சிந்திபோகும்

வெயில் மாலை ..

அஸ்தமனம் எதிர்பார்த்து
ஆலயகோபுரத்துக்குள்

அடைதேடும் பறவை குளாம்.
நெடுநாளைய கனவின்

நிழல் கொஞ்சமாய் படந்த
ஓர் ரம்மியமான சூழல்

எல்லோரும் தூரத்து
சொந்தக்காரன் போல் தோன்றும்

பேரூந்து நிறுத்தம்.
தமிழ்நாடு அரசு வாகனம்

எனும் பெயர் தாங்கிய
4x4 வாகனம் நிலைதடுமாறி

நிறுத்ததிற்குள்..நுழைய..
அந்தோ பரிதாபமாய்

பறிபோனது 8 உயிர்கள்..!
ஆனது இன்றோடு ஒருவருடம்

மீண்டும் அதே நிறுத்தத்தில் நிற்கிறேன்
கண்முன்னே காணாமல் போன

அந்த தூரத்து சொந்தங்கள்
நிழல் உருவங்களாய்

சாலை மருங்கில் மஞ்சள் கோடுகள்
தான் அவர்களின் அடையாளம்

என்றாகிப்போனது.

அஸ்தமனம்
ஆகாமல் பறவை தேடிசெல்லும் ஆலயம்
ஒலிக்கிறது.. ஏதோ. ஒரு இறைவனின் பாடலை

புறவழிச்சாலை





நான்கு வழிச் சாலை
ஊரையே புறமுதுகிட்டு
ஒதுக்கி வைத்திருந்த
சாலை..

நாள் கிழமை பார்த்து
நவ தானியங்கள் இட்டு
நான்கேழுதலைமுறைக்கு
நிலைத்து நிற்க நிலை வைத்து
பகல் இரவு பாராது உழைத்து

பார்த்து பார்த்து கட்டிய வீட்டை
பகலிலேயே கொள்ளை
கொண்ட புறவழிச்சாலை..


வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம்..
என்று யாரும் சொல்லும் முன்னரே!
சாலையெங்கும் சோலையாக நின்று
கையசைத்து கரியமிலம் வாங்கி
பிராணவாயு தந்த ஆலும் வேலும்
அழித்து போட்ட சாலை..

நா ஊற சுவை கூட புளி தந்து
நல்லவன் கெட்டவன் பார்க்காம நிழல் தந்து
நட்டமா நின்ன நெட்டை மரங்களை
கட்டை கட்டையா வெட்ட வச்ச சாலை..

அரச மர பிள்ளையார்
ஆடிக் கூழ் அம்மன்
கரையோர கருமாரி
தலைசாய்த்த கருப்புச்சாமி
அத்தனை பேரையும்
இடம் மாத்தி தடமான சாலை

காட்டை கொடுத்தவனுக்கும்
மேட்டை கொடுத்தவனுக்கும்
உழுத நிலத்தை கொடுத்தவனுக்கும்
ஒண்டிக் கிடந்த வீட்ட கொடுத்தவனுக்கும்
காசு தந்த கடையை விட்டுக் கொடுத்தவனுக்கும்
நன்றி கெட்டு சுத்தி சுத்தி வரவச்ச சாலை

ஊரை ரெண்டாக்கி
ஊருக்குத் தண்ணி தரும்
ஊருணியை மேடாக்கி
ஏர் உழவனின்
ஏரியை துண்டாக்கி
வாய்க்காலுக்கு வழிமறுத்து
நன்செய்யை நாசாமக்கி
புன்செய்யை பாழாக்கி
பாதைகளை வீணாக்கி
பயன் தரும் மரங்களை பிணமாக்கி
அரளிச் செடி தாங்கி
அம்சமாய் படுத்த சாலை


அரச மரத்து நிறுத்தம்
ஆல மரத்து நிறுத்தம்
பத்துப் பனை மரம் நிறுத்தம்
ஒத்தப் புளிய மரம் நிறுத்தம்
புங்கை மர நிறுத்தம்
வேங்கை மர நிறுத்தம்
மா மர நிறுத்தம்
பூ மர நிறுத்தம்
அத்தனையும் அடையாளமில்லாம ஆக்கி
உலகத் தரத்தில் ஒய்யாரமா நின்ன சாலை...

வெளியூருக்கு செல்ல வேகமாய் கிளம்புகிறேன்..
நிழலில்லா தார்சாலை நோக்கி..!
--------கார்த்திக் ராஜா !
 

கனவொன்று வேண்டும்...


வலிக்காமல்
சலிக்காமல்
நினைவுகளிலிருந்து
அற்றுப் போகாமல்
நிஜம் பூத்த மலர்களின்
வாசத்தோடும்,
வரலாறாய் மட்டும்
மிகாமலும்,
முன்னேற்றப்
படிக்கட்டுகள்
நிறைந்த
பல்லடுக்கு
மாடிகளின்
முற்றத்தில் -
மல்லிகைப் பூக்க,
ஒற்றை
நிலாத் தெரிய,
மரம் செடி கொடிகளின்
அசைவில் -
சுகந்தக் காற்று
வீசும் - தென்றல்
பொழுதுகளுக்கிடையே;
வஞ்சனையின்றி -
உயிர்கள் அனைத்தும்
வாழ
யாரையும் நோகாமல் ஒரு -
கனவேனும் வேண்டும்!!!
நித்தம் ஏங்கும்
என் இரவுகளுக்காக
மட்டுமாவது
வந்து போகட்டும்
அந்த யாரையும்
நோகாத கனவு..!
-கார்த்திக் ராஜா.!
 

நீண்ட இரவு...!




என் தனிமையின் நீண்ட
இரவுகளில் சுகம் பெற
முயலும் போது உன்னைப்
பற்றிய நினைவுகளில் நீந்தும்
போது மட்டுமே உச்சகட்டம்
அடைகிறேன்..திளைப்பில்..!!!

ராத்திரியின் படுக்கையில்
பயணப்படுகையில் நிலா
போன்ற உன் முகமே என்
நீண்ட இரவைப் பயணிக்கிறது
முகில்களுக்கிடையே..!!!

சரியாய் நித்திரை கொள்ள
முயலுகையில் என் நீண்ட
இரவின் நீளம் குறையும்
விடியல் காலையில் இரவு
தூக்கத்தின் ஆழம் அழகாகிறது..!!!

தேனுக்குக் கிளம்பும் வண்டாய்
மீண்டும் முழு முயற்சியுடன்.....
அழகிய காலையில்
உனக்காய்.....
எனக்காகிய
காதல் தேன் பருக
மீண்டும் பயணப்படுகிறேன்..!!!

கையில் மிச்சமிருப்பது
நேற்று கனவில் வந்த
உன் பிம்பம் மட்டும்
காதலாகி..!
-கார்த்திக் ராஜா
 

இன்னுமோர் இரவு...


இன்னும் ஓர் இரவு...







சலனமற்று சடலமாய் மற்றுமொரு காலை...
யாருமற்ற கூடத்தில் தனியே
உணவருந்த வேண்டும் என்கிற நினைவே....
காலை உணவை மறுதலித்து செல்ல ..


நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை
தேடி திரிந்தே தொலைந்து போகிறது
இன்றைய பகலும் சில நினைவுகளும்...


யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
காற்று மட்டும் பேசும் கடற்கரை சாலை...


இரவு நேர மயானமாய்..
இரைச்சல் நிறைந்த மனதின்
தனிமையை போக்க முயல்கிறேன்...


சில நேரம் வண்ணங்கள் கொண்டும்..
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில்
என் உதிரம் கொண்டும்...


உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...
கவிதை வார்புக்களாய்..


எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும்
குருதி பாய்ந்து வண்ணமயமான...
பக்கங்களாய்...


திடுக்கிட்டு எழுகையில் களைந்து போகிறது...
நினைவில் இல்லாத கனவு
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவை..
உதறி தள்ளிவிட்டு மீண்டும் புரட்டுகிறேன்
என் கவிதை பக்கங்களை
-கார்த்திக் ராஜா..

இன்னுமோர் இரவு...


இன்னும் ஓர் இரவு...



சலனமற்று சடலமாய் மற்றுமொரு காலை...
யாருமற்ற கூடத்தில் தனியே
உணவருந்த வேண்டும் என்கிற நினைவே....
காலை உணவை மறுதலித்து செல்ல ..

நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை
தேடி திரிந்தே தொலைந்து போகிறது
இன்றைய பகலும் சில நினைவுகளும்...

யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
காற்று மட்டும் பேசும் கடற்கரை சாலை...

இரவு நேர மயானமாய்..
இரைச்சல் நிறைந்த மனதின்
தனிமையை போக்க முயல்கிறேன்...

சில நேரம் வண்ணங்கள் கொண்டும்..
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில்
என் உதிரம் கொண்டும்...

உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...
கவிதை வார்புக்களாய்..

எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும்
குருதி பாய்ந்து வண்ணமயமான...
பக்கங்களாய்...

திடுக்கிட்டு எழுகையில் களைந்து போகிறது...
நினைவில் இல்லாத கனவு
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவை..
உதறி தள்ளிவிட்டு மீண்டும் புரட்டுகிறேன்
என் கவிதை பக்கங்களை
-கார்த்திக் ராஜா..
 

நீ மாறவே இல்லை..!!!



முகில் பூக்கும் வனம்!!!
நதி பாயும் இசை...!!!
தொட்டு செல்லும்
இடைவெளியில் மேகம்..!!!
காதின் அருகே கிசுகிசுக்கும்
தென்றல்..!!!
தென் துளிர்க்கும்
மந்தாரப்பூக்கள்
பட்டாம்பூசிகளின் அசைவுகளை
பத்திரமாய் கவனித்து ..!!!
தெள்ளென தெளிந்திடாத வானம்
அதில் சிதறிய மூக்குத்திப்பூக்களாய்
விண்மீன்களின் வெட்க்கசிந்தல்கள்
அருவி தெளித்த தூறல் போல்
புல்லெங்கும் சீராய் படிந்த பனி
எந்தபூவிலும் கிட்டாத
இயற்கைவாசம்...!!!
கையேடு கொண்டு வராமல் நானிருக்க
கவிதை ஒன்றை கண்ணில் எழுதி
வைத்து காத்திருக்கிறேன்.
நடைபாதையில் தோறும் ஆங்காங்கே
பூக்கள் ..! என்றோ நாம் நடந்திருந்த
கால்தடத்தை பத்திரப்படுத்தி..!!!
வரட்டும் தாமதமாயே..உன் வரவு
நிமிடங்களை பிரித்தெடுத்து
நான் கவிதையாக்கி
கொண்டிருக்கிறேன்..உனக்காய் அல்ல
நம் நினைவுகளுக்காய்..முன்பு
நீ சிந்திப்போன புன்னகையை
சுமந்திருந்தேன் அன்றிலிருந்து
நட்பால்
என் கரங்களில்...!!!

நீண்டதொடு இடைவேளிபின்
நாம் சந்திக்கும் இத்தருணம்
ஏதோ பத்து வரிக்கவிதைக்குள்
அடங்கிவிடுமா என்ன..
மேகம் இன்னும் பக்கமாய்
என்னை நெருங்க..
அதோ தூரமாய் உன் நிழல்...!!!
என் மௌனகவிதைகளுக்கு
இப்போது முற்றுபுள்ளி
வைக்கலாமென இருக்க...

வந்ததும் வராததுமாய்
தொடர்புள்ளி வைத்து
இத்தனை நேரத்தில் நீ
சேமித்து வைத்த எனக்கான
-கவிதையை
உன் கண்கள் காண்பித்ததை சொன்னாய்...!!!

*நீ மாறவே இல்லை...கூடவே நானும்..!*


-கார்த்திக் ராஜா..
 

நிலவோடு...!


பௌர்ணமி ஒரு புள்ளியாய்..

வான்முகில் வெள்ளை போர்வையாய்
விண்மீன்கள் வெட்கம் சிந்தும்
வான்தோட்ட மலர்களாய்!
நானிருக்கும் தனிமை
எழுப்புருக்கும் குளிரில்.
வாடை காற்று மோதி செல்ல..
வசந்த காலத்துக்கு இடம்
பெயர்ந்து வந்த பறவையின்
குரலாய் எங்கோ ஒரு கீதம்..
தனிமை என்னை இன்னும்
நெருங்குகிறது.. கைகள் கோர்த்து நடை
கொள்கிறேன் அதனோடு நானும்..!
எல்லாவற்றையும்..
குறிப்பில் எழுதி கொள்கிறேன்.
பௌர்ணமியையும் படம் பிடித்து
கொள்கிறேன் -உன்னோடு இதே நிலவில்
பகிர்வதற்காய் ...
-(சற்றுமுன் ) கார்த்திக் ராஜா..!

நிழற்படத்துக்கு சொந்தக்காரர் : அண்ணன் குமார் ரங்கராஜன்

இன்று புதிதாய் பிறந்தேன்!




தினம் சூரியன் தேடி
சிறகு கிழிய பறக்கும்
சிறுபறவை நான்
வெறுப்பாய் அல்ல..
நெருப்பாய்..! என் தேடல்

காலை உதித்திடும்
பகலவன் கண்டே
படபடக்கும் மனம்
அலையாய் குதிக்கும் கடல்
கடந்த பாதைக்கு அங்கே
துண்டு விரித்தாற்போல்
நிலமாய் !!!

எனக்கோர்.பயணம்
மிச்சமிருக்கிரதாய்
தினமும் தொடர்கிறேன்
அந்த பயணத்தை..!!!

மாலைவரை..கடந்து
மலை ஒன்றை அடைந்து
வேனில் வெயில் தாங்கி
கிளை அமரும் வரை என் சிறகு
ஒயப்போவதே இல்லை..!!!

ஓய்விற்கும்..அங்கே நிழல்
தர ஆளில்லை..
தாகம் தீர்பதும் இல்லை
எதையும் நினையாது
கடுமையாய் ஒரு பயணம்..!!

எதை தேடி அலைகிறேன்
எதை கொணர்ந்து போகப்போகிறேன்
இதோ தொட்டு விடும் தூரத்தில்
தான் சூரியன் என்றே
என் காலை விடிகிறது..

வேடர்களின் பார்வைக்கு
நான் விருந்தாய்..
மூடர்களின் பேச்சுக்கு
நான் கொழுந்தாய்..
எதையும் முதுகிலோ
மூளையிலோ ஏற்றி கொள்ளாமல்
மேற்கொள்கிறேன் என் பயணத்தை...!!!

அதோ வாழ்வென்னும் சூரிய கதிர்கள்
கரம் நீட்டி அழைக்கிறது என்னை..!!!

என் சிறகில் வலு உள்ளவரை
ஒவ்வொரு நிமிடத்தையும்
வாழ்கிறேன் எனக்காக மட்டும்
சில தேடுதல்களோடே..

ஆம்.! வாழ்ந்தேன் வீழ்ந்தேன்
என்றாகாமல் போகவாவது
நான் சிறகை அசைக்கிறேன்!

இதோ நெருங்கி விட்டது
என் வானம்! வெளிச்சமாய்...

........ ˙·٠•●♥ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥●•٠·˙.........
ஜ۩۞۩ கார்த்திக் ராஜா ۩۞۩ஜ
..... •.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.•.......
 —

காதலென...!


கண்களில் எழுதுகிறாய்
காதல் பொய் சொல்லுகிறாய்
வருகைக்காய் காத்திருப்பதாய்

காதில் பூ சூட்டுகிறாய்
ஏமாற ஆள் நானில்லை
பரிமாற்ற என்னிடமும் காதல்

மீதமில்லை அது ஒரு
விழியாளுக்கு சொந்தமாகி
அதோ ஒரு வீதியில்
வேடிக்கை பார்க்கிறார்களே
அங்கே அடிபட்டு சாககிடக்கிறது..!!

அதற்க்கு உயிர் கொடுக்க
இனி என்னிடத்தில் உதிரமில்லை..!

அவள் வீசி சென்ற புன்னகை
குத்தீட்டியாய் கோர்த்து
சென்ற பார்வைகள்-எல்லாம்
அந்த குப்பை தொட்டியில்
கிடக்கிறது பொருக்கி கொள்.

இனி என்னிடம் கவிதைகளுக்கு
மட்டும் தான் வேலை இருக்கிறது
பொய் முகவரியில் தொடங்கும்
எந்த காதலுக்கும் இடம் கொடுப்பதில்லை
நான்..

மின்னஞ்சல் பரிமாறலும் இல்லை
அரட்டையில் கேளிக்கையும் இல்லை
நான் நானாகவே இருக்க..

எனக்குபோதும் கவிதை ஒன்று!..



........ ˙·٠•●♥ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥●•٠·˙.........
ஜ۩۞۩ கார்த்திக் ராஜா ۩۞۩ஜ
..... •.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.•.......
 

ஜல்லிகட்டு...!


மைதான பந்தல் மக்கள் வெள்ளத்தில்..!!
மண்ணின் மனம் மாறாத மைந்தர்கள் .!!!
நிழல்கள் கிடைக்காமல் நெருக்கியடிக்கும் கூட்டம்
சுற்றுவட்டார மாடுபிடி படைகள் ஆங்காங்கே

மஞ்சளும் மாலையும் கட்டின மயிலைக்காளை
அடக்க பிரிபோட்டு வடமாய் நிற்க..!!!
சீறிவரும் சிவப்புக்காளை-யை அடக்க
களம் இறங்குகிறான் இந்த படைப்புக்கு
பலம்கொடுத்து கதைசொல்லிப்போகும்
மதுரை மக்களில் பாசம் தந்த சொந்தக்காரன்.

இராமநாதபுரம் சுற்றிலும் அடக்க ஆள் இல்லாமல் போன
காளை அது! யாரென்றும் பாராது வீசின பாய்ச்சலில்
தொட்டவன் தொலைவாய் போய் விழுவான் !

அரி போல கொம்புக்காளை..! களம் கண்டால்
யாருக்கும் அடங்காத காளைகளையும் !
மண்ணில் வீழ செய்யும் யுத்தமிது..!

கூட்டாளிகளைபக்கவாட்டில் மிரட்ட சொல்லி
முன்னும் பின்னும் யாரும் நிற்காமல்
துரத்த சொல்லி தான் மட்டும் பின்சாடலில்
திமில் பிடித்து அடக்கி பார்க்க துணிந்தும்
பத்துவருட பெயரை ஒத்தை நொடியில் இழந்திடும்
எந்த காளையும் இவனிடம்..!!

வந்திரிருப்பது மணப்பாறை பெரியவரின்
காளை ஏறுதளுவலில் யாரும் தொடமுடியா காளை !
வாடிவாசல் வழியாக வெளியேறும் காளையை
அடக்க ஆள் காணாது !

வேலி மஞ்சுவிரட்டு, மஞ்சுவிரட்டு...எல்லா போட்டியிலும்
புயலாய் சீரும் காளை இது..! பொதுவா அஞ்சு பேருக்கு மேல
யாரும் ஒரு காளைய அடக்க கூடாது ..ஆனா இவனுக்கு ..
மூணு பேரே போதும்..!

பேயாட்டம் போடும் காளையையும்
பசுவாட்டம் மாத்திடும் இராமநாத புற வீரம் உள்ள
சேக்காளி ரெண்டு பெரும் இவனோட கூட்டு சேர்ந்த..
மட்டு கழுத்தின் மொத்த முடிப்பும் அடுத்தநாள்
பங்காகும்!

இப்படியே திரிஞ்ச இளந்தாரி பயபுள்ள கூட்டத்துல
இன்னைக்கு ஒருத்தனும் மாடுதொடல..
குடலிறங்கி போகும்போது கூட துண்டைக்கட்டி
விளையாண்ட வீரம் இப்போது ஏனோ..!
வறுமைக்கு பயந்து வயலுக்குள்ளே!

கிட்டி வாசலில் இருந்து சீறி வரும்
காளையை அடக்கிப் பிடிக்கும்
பேரெல்லாம் அன்பாய் வளர்க்கும்
தான் வீட்டு காளைக்கு புல்லு வைப்பதோடு
நிருத்திகிடக்க...

மண்வாசம் மெல்ல கரைஞ்சு ஓடுது
கிராமியம் மெல்ல சிதைஞ்சு போகுது..
இனி பழைய பேப்பர்ல வந்த போட்டோல
மட்டும் தான். ஜல்லிக்கட்டு மிச்சமிருக்குது




(இந்த பதிப்பு நிகழ காலத்துக்கானது அல்ல..! ஒரு பிற்காலகற்பனையே ! )
........ ˙·٠•●♥ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥●•٠·˙.........
ஜ۩۞۩ கார்த்திக் ராஜா ۩۞۩ஜ
..... •.¸¸.•´¯`•.♥.•´¯`•.¸¸.•.......
 

தூதுவனின்....துடிப்பு..!





கண்களில் வழிந்தோடும் இசை..
கானாதேசம் கண்ட போர்முரசாய்..
திகிலூட்டும் ஒரு மனோபாவத்தோடு..!

யாரும் பார்க்காமல் எந்த திசைகாட்டிப்பலகையும்
அறிவிக்காத ஒரு பாதையில்..! மேற்கொள்ளும்
பயணம்..! காத தூரம் நடந்தாலே!
கால்கடுகடுத்து போகும் பயணத்தினூடே

தாகம் தீர்க்க ஆதவன் ஒன்று குதித்து குளித்தாடும்
தடாகத்தின் பரப்பாய்..! மேலெழும்பிய வானம்
அந்த குட்டை நீருக்குள் மூழ்கிப்போக..!

எல்லாம் துறந்த முனிக்கும் ஆசை வாய்க்கும்
தாகசெறிப்போடு அருந்தும் வேளை
கொஞ்சும் குரலாய் கூடவே சுமந்து
வரும் அத்தாரகையின் நினைவு

நெஞ்சை வருத்தி செல்ல..!!
குட்டை நீரும் காணாது அவள் மீதான என் தாகம்
அடக்க..!!! பாத்திரம் கொள்ளாத பார்வையும்
சூத்திரமில்லா சுகவனமுமாய் ஆன
என்னவளின் தேசத்தை அடைய...

இன்னும் சிறகில்லாமல் பறக்க
அலையும் நெஞ்சை எலும்புகூட்டுக்குள்
அடைத்துவைத்து துடிக்கவிட்ட
பாவத்தோடு பயணம் கடக்கிறது
இன்னும் இன்னும் தொலைவாய்

நெருங்குகிறது கோட்டை மதில்
கையிருக்கும் செய்தி சேர்த்தும்
கொண்டவள் முகம் காண நேர்ப்பேனோ!
முந்தி இருக்கும் கழிமுகம் கடந்ததும்
முன்னவள் தேகம் சூடேனோ!

அரியணைவாழவன் கண்மலர்ந்ததும்
என் தோட்டத்து தேன்கொய்யாத மலரவளின்
கூந்தல் காட்டுக்குள் தொலைந்து போவேனோ !

மூங்கில் இழைக்குள் முடிந்திருக்கும் செய்தி
விரைவாய் சேராவிடில் என் மாலைசூடிய -பெண்ணவளுக்கு
என் தலைதான் மிச்சமாய் இருக்கும் !

இந்த கவலைகளை அறிந்தும் அறியாதவளாய்
தூக்கம் தொலைத்து ஒற்றன் என் வரவுக்காய் காத்திருக்கும்
என் கார்முகிலை நான் காற்றாய் தழுவ விரைவே தீர்க்கிறேன்

என் தாகத்தை ...!

மெல்லிய இசை இன்னும் குடி இருக்கிறது கண்ணுக்குள்
இடையிடையே போர்முரசின் ஒலி கலந்து ..

-கார்த்திக் ராஜா..!

(ஒரு தேசத்தின் ஒற்றனின் பயணத்தில் ..!ஒட்டுக்கேட்ட இதயதுடிப்புக்கள்! இது ..!)
 

காதல் சொல்ல வந்தேன்

ஒரு பகல் ...
ஒரு மாலை..
ஒரு இரவு...
முகம் காட்ட மறுத்துவிட்டாய் !

மனதிற்குள் கலவரம்
நீ என்னைவெறுக்கின்றாயா?
நீ என்னைவிரும்புகிறாயா?

கேள்விகள் மனதை
தூக்கணாங் குருவி கூடு போல
காற்றில் அலைபாயச்செய்ய ..!!

அன்றுஇரவு முழுவதும்
விடியலுக்காகவே விழித்திருந்தேன்!!!
ஒரு வழியாக விடிந்தது...!

மீண்டும் உன்முன் உதயமானேன்,
நீ என்னை உதாசினப்படுத்தமாட்டாய் என்று !!!

சரிதான் என் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை தோற்றுப் போனது !!?

உன்னிடமே கேட்டு விட
தீர்மானம் நிறைவேற்றிவிட்டேன்.

அன்றுஉனக்கு முன்னால்
நீ போகும் பாதையை
நான் ஆக்கிரமித்துக் கொண்டேன்.

அதோ வருகிறாய் உன் பெயரை
உச்சரித்தவுடன்

திசை மாறி திரும்பிப் பார்த்தாய்.
அப்போதும் நீ பேசவில்லை

உன் உதடுகள் தான் ஒரு
புன்னகை புரிந்துவிட்டு போனது.

அதில் என்னையே மறந்துப் போனேன்

என் காதலை கேட்கவா
ஞாபகம் இருக்கப்போகிறது?
எனக்கு ..! 

--கார்த்திக் ராஜா..!