Saturday, March 5, 2011

தொழிலாளர் போராட்டத்தால்

மதுரையில் தடை செய்யப்பட்ட இராசயனங்கள் தயாரிப்பு.

மதுரை நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் விமான நிலையத்திற்கு அருகே உள்ள �லேன்செஸ்� இந்தியா பிரைவேட் லிமிடெட்� மற்றும் �பெனார் ஸ்பெசாலிட்டி புரொடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்� ஆகிய இரண்டு தொழிற்சாலைகள் மிகவும் அபாயகரமான வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பல ஆண்டுகளாக சத்தமில்லாமல் ஈடுபட்டுள்ளன. 1977ஆம் ஆண்டு �சதர்ன் சின்டான்ஸ்� என்ற பெயரில் குடிசைத்தொழிலாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை இன்று 130 தொழிலாளர்களுடன் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன், பன்னாட்டு கம்பெனிகளின் கூட்டுடன் நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போது அந்த கம்பெனியை மூடுவதற்கு அதன் முதலாளிகள் முடிவெடுத்துள்ள நிலையில் அங்கு பணியிலிருக்கும் தொழிலாளர்களது போராட்டத்தால் பல்வேறு ரகசியங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. இவற்றை மூடிமறைக்க நிர்வாகம் � அரசு அதிகாரிகள் � அரசியல்வாதிகள் � போலீசு கூட்டணி அமைத்து தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். பெனார் ஸ்பெஷாலிட்டி புரொடக்ட்ஸ் பி லிட், என்கிற கம்பெனி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான கானாடுகாத்தானுக்கு (காரைக்குடி) அருகிலுள்ள கோட்டையூரைச் சேர்ந்த பி.நாராயணன் செட்டியார் என்பவருக்குச் சொந்தமானது. இவருடைய தம்பி பி.சுப்பையா செட்டியாருடன் இணைந்து 1977ல் இந்தத் தொழிலில் நுழைந்தார்.

ஆனால் இப்போது தம்பியைப் பின் தொடர்ச்சி, பாத்தியங்கள் ஏதும் அற்ற நிலையில் வெட்டி விட்டுள்ளார். இவர் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உறவினர் என்றும், அவருடைய ஆதரவுடன்தான் கம்பெனி நடைபெறுவதாகவும் சுற்றுப்புற� கிராமங்களில் செய்தி பரப்பப்பட்டுள்ளது.

பன்னாட்டு கம்பெனிக்கு பினாமி:

பெனார் கம்பெனி நாராயணன் செட்டியாருக்கு சொந்தமான�து. ஆனால் �லேன்செஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்� என்கிற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்காக இங்கே உற்பத்தி நடைபெறுகின்றது. லேன்செஸ் நிறுவனம் உற்பத்தியை நடத்தினாலும், தொழிலாளர்கள், நிலம், கட்டிடங்கள், இயந்திரங்கள் எல்லாமே பெனார் நிறுவனத்திற்குச் சொந்தமானது. குத்தகை ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி நடைபெறுகிறது. லேன்செஸ்-க்கும் தொழிலாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உற்பத்திக்கு ஏற்றவாறு ஒப்பந்தப்படி எல்லா தொகையையும் பெனார் முதலாளி வாங்கிக் கொண்டு தொழிலாளர்களுக்கு அவர்தான் சம்பளம் உள்ளிட்ட சகலமும் கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் அவர் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டும். மேலே எதுவும் கேட்க முடியாது. தொழிலாளர்கள் அனைவரும் பெனார் கம்பெனியை பொறுத்தவரையில் கொத்தடிமைகள்தான்.

தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்கள்:

இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் முதன்மையானது தோல் பதனிடும் வேதிப்பொருள்கள், பூச்சிக் கொல்லி, துணிகளுக்கு ஏற்றப்படும் சாயம், ரப்பர், பெயிண்ட் தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் ஆகியவை. தோல் தொழிற்சாலை, சாயப்பட்டறை, பூச்சிக் கொல்லி மருந்துகளினால் ஏற்படும் விளைவுகளை அனைவரும் அறிவர். இவை மூன்றும் மண், குடிநீர், காற்று ஆகியவற்றை வெகுவாக மாசுபடுத்தும் தன்மை கொண்டவை. 1984ல் 25 ஆயிரம் பேரை கொன்று குவித்த போபாலில் பூச்சிக் கொல்லி மருந்துதான் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் தடைசெய்யப்பட்டவை. ஆனால் இங்கே மலிவு விலையில் உழைப்பை உறிஞ்சி, கொத்தடிமைகளை வைத்து இவை ரகசியமாகத் தயாரிக்கப்படுகின்றன. இதிலே கேதோன் என்ற வேதிப்பொருள் மிகவும் அபாயகரமானது. இது தண்ணீர் மூலமாக வேகமாக பரவி ஆபத்து விளைவிக்கக் கூடியது என்று சொல்கிறார்கள். அதாவது வியட்நாமில் மரம், செடி கொடிகைள அழிக்க அமெரிக்கா பயன்படுத்திய ஏஜெண்ட் ஆரஞ்சு என்ற பயங்கர ரசாயன ஆயுதத்தை அடுத்து போராளிகளை அழிக்க பாஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன. அதிலிருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளில் குதித்துத் தப்பித்தார்கள். இதை அறிந்த அமெரிக்கக் கொலைகாரர்கள் தண்ணீரில் குதித்த பின்னரும் உடலெல்லாம் பரவும் ஒருவகை ரசாயன குண்டுகளைக் கண்டுபிடித்து அதனைப் பயன்படுத்தி மக்களைக் கொன்று குவித்தனர். அந்த வகையைச் சேர்ந்தது இந்த ரசாயனம் என்று தொழிலாளர்கள் சொல்கின்றனர்.

இந்த ரசாயனம் பட்ட இடத்தில் தண்ணீர் பட்டால் தோல் பலூன் போல ஊதிப்பெருத்து விடும் என்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அபாயகரமான உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தொழிற்சாலையில் செய்து தரப்படவில்லை. பல தொழிலாளர்கள் காசநோய், புற்று நோய், தோல் நோய்களால் பாதிக்கப்பட்டு அவர்களில்சிலர் இறந்தும் போயுள்ளனர். ஜே.ஐவன் என்ற தொழிலாளி தற்போது மரணப்படுக்கையில் உள்ளார்.

பன்னாட்டு நிறுவனத்தின் அபாயகரமான ரசாயனப் பொருட்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மறைமுக ஆதரவுடன் தயாரிக்கப்பட்டு வருவது தற்போது வெளிச்சமாகியுள்ளது. இவை அனைத்தும் தற்போது ஏற்பட்டுள்ள தொழிலாளர் போராட்டத்தால் வெளியாகியுள்ளது என்பதே உண்மையகும்.

நன்றி:- வினவு.

No comments: