Thursday, March 3, 2011

சிறீலங்கா படையினரே மூன்று கிறிஸ்த்தவ மதகுருமார்களையும் கடத்தினர்

தென் தமிழீழத்தில் அண்மையில் மூன்று கிறிஸ்த்தவ மதகுருமார்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் சிறீலங்கா படை புலனாய்வாளர்களுக்கு தொடர்புகள் உள்ளதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் மட்டக்களப்பில் வைத்து கடத்தப்பட்ட மூன்று கிறிஸ்த்தவ மதகுருமார்கள் கொழும்பில் உள்ள சிறீலங்கா படையினரின் துன்புறுத்தல் தளமான நாலாவது மாடியில் வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னர் கடந்த 25 ஆம் நாள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பை சேர்ந்த கணேசமூர்த்தி, சிவகுமார் ஜோனத், அம்பாறையை சேர்ந்த சிவானந்தம் லூப் ஆகியோரே கடத்தப்பட்டவர்கள். தாம் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள மதகுருமார்கள் அச்சம் காரணமாக மேலதிக தகவல்களை வழங்க மறுத்துவிட்டனர்.

மட்டக்களப்பில் இயங்கிவரும் பிள்ளையான் துணை இராணுவக்குழுவின் உறுப்பினர் ரமேஸ் என்பவர் இந்த மூன்று மதகுருமாரையும் பிள்ளையானின் அலுவலகத்திற்கு வருமாறு அழைத்ததாகவும், கடந்த 22 ஆம் நாள் அவரின் அலுவலகத்திற்கு சென்ற அவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 24 ஆம் நாள் மதகுருமாரை காணவில்லை என சிறீலங்கா காவல்துறையில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு அழைத்துவரப்பட்ட அவர்களை சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் மறுநாள் (25) மட்டக்களப்பில் இறக்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்கி வந்த இந்த மதகுருமார்களுக்கு எவ்வாறு அதிகளவான நிதி கிடைத்தது என்பது தொடர்பில் சிறீலங்கா படையினர் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது
 நன்றி...
voice of tamil youths...

No comments: