Thursday, March 10, 2011

ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு கண்ணாடி.
அந்தக் காலத்தில், அந்தக் கண்ணாடிதான் கூகுள், விக்கிபீடியா, நேஷனல் ஜியாக்ரஃபிக் சானல் எல்லாமே. அதற்குத் தெரியாத விஷயமே கிடையாது. எந்தக் கேள்வி கேட்டாலும் சட்டென்று பதில் சொல்லிவிடும்.
பொதுஅறிவு சமாசாரங்கள்மட்டுமில்லை. தத்துவார்த்தமான கேள்விகளைக்கூட அந்தக் கண்ணாடியிடம் கேட்கலாம். பல மதங்களைச் சேர்ந்த பேருண்மைகளை எல்லோருக்கும் புரியும்படி பொழிந்து தள்ளும்.
இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்த நாட்டு அரசன் கண்ணாடியைப் பார்க்க வந்தான். அதன் முன்னே நின்று ஒரு கேள்வி கேட்டான். ‘இந்த நாட்டிலேயே மிகப் பெரிய புத்திசாலி யார்?’
கண்ணாடி ஒரு நிமிடமும் யோசிக்கவில்லை. படாரென்று பதில் சொன்னது. ‘எவன் தனக்கு எதுவும் தெரியாது என்று நம்புகிறானோ அவன்தான் மிகப் பெரிய புத்திசாலி!’
அரசனுக்குப் புரியவில்லை. ‘எதுவும் தெரியாதவன் எப்படிப் புத்திசாலியாகமுடியும்!’
கண்ணாடி சிரித்தது. அந்தப் பிரபலமான ஜென் மொழியைச் சொன்னது. ‘அரசே, காலிக் குவளையில்தான் தேநீர் ஊற்றமுடியும்!’

No comments: