Tuesday, March 1, 2011

ஒரு ராஜா வின் மந்திரி ரொம்ப அறிவாளி. எல்லாவற்றிற்கும் நல்ல தீர்வை சீக்கிரமே கொடுத்துவிடுவார். இராஜா இவரை சோதிக்க ஒரு சோதனை வைத்தார்..
அவர் அந்த மந்திரையை அழைத்து இவ்வாறு சொன்னார்
"எனக்கு ஒரு மந்திர மோதிரம் வேண்டும். அது நான் மகிழ்ச்சியாக இருக்கும் போது அதை பார்த்தால் எனக்கு துக்கம் வந்துவிட வேண்டும். வருத்தமாக இருக்கும் போது அதை பார்த்தால் மகிழ்ச்சியாகிவிட வேண்டும்"
அமைச்சர் குழம்பிப்போனார்..
அமைச்சருக்கு ஆறு மாத கால அவகாசம் கொடுத்து அனுப்பி வைத்தார் அரசர்..
அமைச்சர் தேடித்தேடி அலைந்து போனார். காலக்கெடு முடிவடையும் தருவாயில் அமைச்சர் அசரனிடம் வந்தார்.
அவர் கையில் ஒரு சாதாரண மோதிரம் இருந்தது.
அமைச்சர் "அரசே இதோ நீங்கள் கேட்ட மோதிரம்: என அசரிடம் அம்மோதிரத்தை கையளித்தார்.
அரசருக்கு வியப்பு. அப்படி என்ன அதில் இருக்கிறது எனப்பார்க்க அதில்
"இதுவும் கடந்து போகும்" என எழுதப்பட்டிருந்தது."
அதிக மகிழ்ச்சியையும் அதிக கவலையையும் தடுக்ககூடிய இது ஒரு பிரபலமான தாரக மந்திரம்.
இவ்வாசகத்தை நாம் மகிழ்ச்சியில் நினைத்துக்கொண்டால் மகிழ்ச்சியால் மதிமயங்காமல் இருக்கவும், தலைக்கனம் வராமல் இருக்கவும் உதவும்.
இதே மந்திரத்தை கவலையாக இருக்கும் போது நினைத்தால் கவலை மாறும் என்ற தன்னம்பிக்கை வந்துவிடும்.
எனவே இம்மந்திரத்தை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

No comments: